lørdag 2. juni 2018

நாவாந்துறை சென் மேரிஸ் சர்வதேச அபிவிருத்தி அமைப்பும், பொறுப்பு வாய்த பதவிகளும் அதன் செயற்பாடுகளும். என் நோக்கு

நாவாந்துறை சென் மேரிஸ் சர்வதேச அபிவிருத்தி அமைப்பும், பொறுப்பு வாய்த பதவிகளும் அதன் செயற்பாடுகளும். என் நோக்கு

வணக்கம் என் பாசமிகு மக்களுக்கு!
"பேந்து என்பதும் பின்பு என்பதும் இல்லை என்பதற்கு சமம்" என்ற பழமொழிக்கு வலுச்சோ்ப்பதாகவே 2017 ஆவணி மாதம் வரை மேற்கூறிய அமைப்பு செயலிழந்து கிடந்தது. இதற்கான காரணங்களை நானன் எழுதிய பல கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளேன். இவைகளையெல்லாம் 2017 ஆவணி மாதம் தாயகத்தில் நடைபெற்ற சர்வதேச கூட்டததை நமது ச.ச.நிலைய முயற்சியால் கூடி புதிய சர்வதேச அமைப்பு உருவாக்கப்பட்டது மட்டுமல்ல யாழ் ஆயரில் தலமையில் 16 ஆண்டுகால கனவுக்கு ஆரம்ப புள்ளி வைக்கப்ட்ட செய்தியறிந்து சமூக ஆவலர்கள் பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இவ்நிகழ்வு நடந்து 10 மாதங்கள் ஆகின்றன. இதற்கான எந்த அடுத்த கட்ட பணிகளையும் பொறுப்பு வாய்ந்த பதவியிலுள்ளவர்கள் செய்கின்றார்களா என்ற கேள்விகளுக்கூடாக கிடைத்த பதில்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
இதற்கு முதல் 2010 ஆண்டிலிருந்து இன்று வரை எமது சமூக மக்கள் சார்ந்த நிகழ்வுகளை ஓர் மீள் பார்வை காண்பது நல்லது என்று எண்ணுகின்றேன். மேலே குறிப்பிட்ட ஆண்டுக்கால வரையை பார்ப்போமானால் எத்தனை திருமணங்கள், எத்தனை பூப்புனித நீராட்டு விழா, எத்தனை பிறந்த நாள் இப்படி எத்தனை, எத்தனையோ நிகழ்வுகள் கொண்டாடப்பட்ட ஆதாரங்கள் இருக்கின்றன். இவ் நிகழ்வுகளை கொண்டாடுவதற்கு எத்தனை ஆயரம், ஆயிரம் ரூபாக்களை எம் மக்கள் செலவு செய்து, யாரோ ஒருவனை பெரும் பணக்காறனாக உருவாக்கி விட்டதனை யாரும் சிந்தித்தாக தெரியவில்லை. அல்லது இது எமது பிரச்சனை இல்லை என்ற மக்களாக வாழ்கின்றீர்களா? சிந்தித்துப்பாருங்கள்..
முலே குறிப்பிட்ட கலாச்சார மண்டப கட்டிட வேலையை முன்னெடுத்து செல்வதற்காக ஒரு நீண்டகால திட்ட அமைப்பாளர் என்னும் பதவி உருவாக்கப்பட்டு உள்ளது. இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் அத்திவாரக் கல் வைத்ததோடு தன் பொறுப்பு முடிந்து விட்டதாக எண்ணிக்கொண்டார் போல் தெரிகிறது. காரணம் பழைய குறுடி கதவைத்திற என்ற கதைபோல் தன் நாட்டுக்கு வந்ததும், முன்பு சிலர் கையில் வைத்து இத்திட்டத்தை செயற்பட விடாமல் குழப்பியது போல் அதே கொப்பியை தற்போதைய நீட்ட கால திட்ட இணைப்பாளரிடம் கொடுத்து குழப்பம் செய்ய நினைத்தமை தோல்வியில் முடிந்தமையை யாவரும் அறிவீர்கள். 
இவரின் ஒட்டுமொத்த மக்கள் விருப்பானது கலாசார மண்டபம் கட்டுவதற்கு மட்டும் தான். அவர்களின் நாடுகளில் சந்தா கொடுக்காதவர்கள் சங்கங்களில் வரவு, செலவு கணக்கு காட்டுறீஙகள் இல்லை என்று கேட்டால் நீங்கள் சந்தா கட்டாத காரணத்தால் உங்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை இல்லையென்று சொல்பவர்கள் எப்படி சங்கங்களில் அங்கத்துவம் இல்லாதவர்களிடம் அபிப்பிராயம் கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்பார். மக்களே புரிகிறதா? இவர் சொந்த
புத்தியில் சிந்திப்பவர் இல்லை என்பது? யாருடைய சிந்தனைக்கு கூலிவேலை செய்பவர் என்பதனை புரிந்துகொளள்ளுங்கள்.
உண்மையாகவே நீ நோ்மையானவனாக இருந்திருந்தால் என்னால் இந்த பாரிய பொறுப்பிலிருந்து செயற்பட முடியாது என்று சொல்லி பொறு்பபை ஏற்றிருக்க கூடாது. உன் முழு சிந்தனையும் பதவியை பெற்று செயற்படாமல் இருந்தால் எப்படி இத்திட்டம் நிறைவேறும் என்பதே இவரின் உண்மையான சிந்தனை. கடந்த காலங்களில் தன்னை அறிமுகம் செய்யால் (அதாவது முதுகெலும்பு இல்லாதவராக) வேறு ஒரு பெயரில் நாகரிகம் இல்லாமல் செயற்பட்டமை உலக வெளிச்சத்திற்கு வந்தும் நோ்மைக்கு நிற்காதவர் என்றால் எப்படி இவரால் மக்கள் பணி செய்ய முடியும் என்பதனை மக்களே உணருங்கள்.
சமூக அக்கறையாளன்
ஆசீர் அன்ரனி
கனடா


ஒரு நிர்வாக அமைப்பின் முக்கிய பதவிகளில் மிக முக்கிய பதவி பொருளாளர் பதவியாகும். சர்வதேச பொருளாளர் பதவியை பெருமைக்காக ஏற்றுக்கொண்டவர் போல சர்வதேச பொருளாளர் நடந்து கொள்வது அவர் குறித்த அந்த நாட்டு மக்களின் நோ்மை சார்ந்த கேள்வியை உறுதி செய்வதாக அமைகிறது.. கடந்த 10 மாதங்களாகியும் நிதி சோ்ப்பதற்கான எந்த வேலைத்திட்டத்திலும் ஈடுபட்டதாக தெரியவில்லை. காரணம் கலாச்சார மண்டபத்தி்ன் மேல் அவ்வளவு கோவம். அந்த மண்டபவம் அப்படி என்ன செய்தது என்று தான் எனக்கும் புரியவில்லை.?
சர்வதேச பொருளாளத்ஃ. இந்த பதவியை புரிந்து கொண்டு பொறுப்பெடுப்பவர்கள் இல்லை என்று தான் தோன்றுகின்றது. அல்லது இவருக்கு சுதந்திரமாக செயற்படும் ஆளுமையில்லையோ என எண்ண தோன்றுகிறது. செயற்பட முடியாவிட்டால் பதவியை விட்டு விலகுங்கள். அதுவும் செய்யாமல் பதவியை துஷ்பிரயோகம் செய்வது நல்லதல்ல. மேலே எழுதிய 3 பதவிகளிலும் இருப்பவர்களுக்கு பணிவாக ஒரு உண்மையை சொல்ல விரும்புகின்றேன். "நோ்மையற்ற செயற்பாடுகள் வெற்றி பெறுவது போன்ற தோற்றப்பாட்டை காட்டுமே தவிர வெற்றி பெறாது என்பது தான் உண்மை. இறுதியில் நோ்மையே வெல்லும்" என்று நினைவுறுத்தி நிறைவு செய்கிறேன்..

torsdag 3. mai 2018

டானியல் பெலிக்கான் --------நினைவில் பெருகும் தொடரியக்கம்

- கருணாகரன்
நாவாந்துறை என்றால் பலருக்கு அருமையான நண்டு அல்லது இறால் வாங்கலாம் என்ற எண்ணம் வரும். சிலருக்கு நெரிசலான குடியிருப்புக் காட்சி நினைவில் எழலாம். சிலருக்கு கடல் வாசனை மூக்கிலே மலரும். சிலருக்கு ‘யாழ்ப்பாண மாநகர எல்லைக்குள்ளிருக்கும் கடலோரப் பேரூரை ஏன் இன்னும் இப்படிச் சேறும் நீருமாக வைத்திருக்கிறார்கள்?’ என்ற கேள்வி எழக் கூடும். நாவாந்துறைக்குப் போனால் அங்கே உள்ள முஸ்லிம்களின் கடைகளில் “அந்த மாதிரிக் கொத்து ரொட்டி” சாப்பிடலாம் என்று சொல்லுவார்கள் சிலர். யாழ்ப்பாணத்தில் உதை பந்தாட்டத்துக்குப் பேர் பற்ற நாவாந்துறை சென் மேரீஸ் விளையாட்டுக்கழகத்தைச் சிலர் நினைவு கூருவார்கள். கழங்கட்டியில் பிடிக்கப்படும் ஒட்டி, ஓரா மீனுக்காக நாவாந்துறைக்கு போகிற ஆட்களும் இருக்கிறார்கள்.
எனக்கு நாவாந்துறை என்றால் இரண்டு விசயங்கள் நினைவில் வரும். ஒன்று, டானியல் அன்ரனியின் குடும்பம். இன்னொன்று அங்கிருந்து “நம்மவர்கள்” படகேறி இந்தியப் பயிற்சிக்குப் போய் வருவது. நாவாந்துறையிலிருந்தே ஈரோஸின் வண்டிகள் (படகுகள்) அந்த நாட்களில் (1980 களின் முற்பகுதியில்) தமிழகத்துக்குப் போய் வருவதுண்டு. மைக்கல், வீரகுமார், சின்ராசா, மோகன், கறோ, சீனன், ஜோன், ஜீவா, அன்ரனி என்று பல தோழர்கள் அங்கே போராளிகளாக இருந்தார்கள். இதில் வீரகுமார், மோகன், சின்ராசா ஓட்டிமாராக வேறு இருந்தனர்.
டானியல் அன்ரனி நாவாந்துறையிலிருந்தார். அங்கிருந்தே அவருடைய “சமர்” என்ற சிற்றிலக்கிய இதழை நடத்தினார். சமரை எவ்வளவு ஆர்வமாக நடத்தினாரோ அதற்குச் சற்றும் குறையாத ஈடுபாடு அவருக்கு உதைபந்தாட்டத்திலும் இருந்தது. சென் மேரீஸ் விளையாட்டுக்கழகத்தில் அன்ரனி பொறுப்பான பதவியிலிருந்து கழகத்தை வழிப்படுத்தினார். கழகத்தின் வெற்றி வரலாற்றை அறிந்தவர்களுக்கு இது தெரியும். ஏறக்குறைய இரண்டும் ஒரு வகையில் சமரோடு சம்மந்தப்பட்டதே. ஒன்று இலக்கியச் சமர். மற்றது விளையாட்டுக்கான சமர். அன்ரனியின் வாழ்க்கையும் அடையாளமும் இந்தச் “சமர்”தான். இறுதிவரை அன்ரனி சமரசங்களைத் தவிர்த்து வந்தார். பெரும்பாலும் நியாயத்துக்கான சமர்க் குணத்தோடும் ஓயாத செயற்பாட்டோடுமே வாழ்ந்தார் அன்ரனி.
அன்ரனியும் நானும் இலக்கிய வழியே நண்பர்களாகினோம். மட்டுமல்ல, அன்ரனியின் தம்பிமார் டானியல் ஜீவாவும் டானியல் சவுந்திரமும் நண்பர்களாகினர். இருவரும் எழுத்திலும் வாசிப்பிலும் ஈடுபாடுள்ளவர்கள். ஜீவா நம்மோடு இயக்கத்திலுமிருந்தார். ஆனால், ஜவாவை விட அன்ரனியும் சவுந்திரமுமே எனக்கு நெருக்கம். பின்னாளில்தான் ஜீவா நெருக்கமானார்.
இலக்கியம், இயக்கம் என்ற விசயங்கள் இவர்களோடு நெருக்கமாக்கியதைப்போல, இவர்களுடைய தந்தையார் டானியல் பெலிக்கானின் கூத்து ஈடுபாடும் இன்னொரு விதத்தில் பிடிப்பை உண்டாக்கியது.
பெலிக்கான் பெரிய கூத்துக் கலைஞர். அந்த வட்டாரத்தில் கூத்தினாலும் வாழ்க்கை ஒழுங்கினாலும் புகழடைந்தவர். நான் அறிந்தவரையில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கூத்தோடு கலந்து வாழ்ந்திருக்கிறார். நாவாந்துறையிலிருந்து மெலிஞ்சிமுனைவரை அவருடைய கூத்தைப் பார்த்துக் களித்தவர்கள் ஆயிரக்கணக்கானோர். பல தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பெலிக்கானுக்கு ரசிகர்கள்.
பெலிக்கானுடைய பிள்ளைகளின் இலக்கிய ஆர்வம், பொதுப்பணி ஈடுபாடு, விளையாட்டுச் சாதனைகள் போன்ற நற்காரியங்கள் எல்லாமே பெலிக்கானின் கலை ஈடுபாட்டின் தொடர்ச்சி அல்லது பிரதிபலிப்பே. அதோடு எப்போதும் பிறரைத் தம்முடைய குடும்பத்தினராகக் கருதி நேசித்து, உறவாடும் அவருடைய மேலான பண்பும் என எண்ணுகிறேன். இப்படி உருவாகிய அவருடைய ஆளுமை வெளிப்பாட்டையே பிள்ளைகள் பின்னாளில் பிரதிபலித்தார்கள்.
பெலிக்கானைப் போல கூத்தில் சோபிக்காது விட்டாலும் இலக்கியத்தில் டானியல் அன்ரனி தீவிரமாகச் செயற்பட்டார். “வலை” என்ற சிறுகதைத் தொகுப்பும் “சமர்” சிற்றிலக்கிய இதழும் டானியல் அன்ரனியின் சிறப்பு அடையாளங்கள்.
இப்பொழுது டானியல் அன்ரனியின் மகன் – பெலிக்கானின் பேரன் - கதைகள் எழுதுகிறார். புலம்பெயர் இலக்கியத்தில் தீவிரமாகச் செயற்படத் தொடங்கியுள்ளார். பிரான்ஸில் மொழி, கலை, இலக்கியம் என்ற ஈடுபாட்டுடன் அவருடைய வாழ்க்கை நகர்கிறது. அதாவது பெலிக்கானின் உள்ளோட்டம் தலைமுறைகளின் வழியே தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
இப்படித்தான் டானியல் ஜீவாவும். இலக்கியத்திலேயே ஜீவாவுக்கு அதிக ஆர்வம். ஆனால், கூத்திலும் பிடிப்புண்டு. கனடாவில் ஜீவா ஆடும் களங்களில் பெலிக்கானே உயிர்கொண்டெழுவார் என்று நம்புகிறேன்.
சவுந்திரம், பெலிக்கானின் இன்னொரு வெளிப்பாடு. மென்போக்குடன் எல்லாத் தரப்போடும் ஊடாடிச் செல்லும் பயணியாக இருப்பது சவுந்திரத்தின் இயல்பும் அழகும். ஊரில் பெலிக்கானுக்கு வலது கரமாக நீண்டகாலம் இருந்ததும் சவுந்திரமே.
இப்படியெல்லாம் இருந்தாலும் அன்றைய நாட்களில் நாங்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடியிருந்து பேசிப் பறைந்து கொண்டாட வாய்த்ததில்லை. அவ்வப்போது சந்தித்துச் செல்வதோடு சரி. அநேகமாக எல்லாமே அவசரச் சந்திப்புகள். அவசரப் பயணங்கள். குறுகிய நேர உரையாடல்கள். பணியும் நோக்கமும் வேறாக – அதில் குறியாக – முனைப்பாக இருந்ததால் கலை பற்றிக் கதைப்பது குறைவு. விருப்பமிருந்தாலும் அதற்கான அவகாசமில்லை.
ஆனாலும் டானியல் அன்ரனியும் நானும் அங்கங்கே மணிக்கணக்கில், பேசிக்கொள்வோம். அன்ரனியின் தீவிரம் இதற்குக் காரணமாக இருக்கலாம். 1990 க்குப் பிறகு தினமும் நானும் சவுந்திரமும் சந்திப்போம். 1995 ஒக்ரோபர் இடப்பெயர்வோடு அதுவும் நின்று போனது. பிறகு 2002 இல் மீளச் சவுந்திரததைச் சந்தித்தேன். கண்டதும் கொண்டாடினார். அதுக்குப் பிறகொரு அஞ்ஞானவாச காலம். 2009 க்குப் பிறகு மீண்டும் சந்தித்தேன். இப்பொழுது யாழ்ப்பாணத்துக்குப் போகும்போதெல்லாம் சவுந்திரத்தை அவருடைய கடைக்குச் சென்று பார்த்துப் பேசுவதுண்டு.
மற்றும்படி எங்களுடைய அன்றைய வாழ்க்கை ஒரு இடத்தில் அமைதி கொள்ளவோ, தரித்து நிற்கவோ முடியாத தத்தளிப்போடும் அலைச்சல்களோடுமிருந்தது. ஒரு கூத்தை ஆற, அமர இருந்து பார்ப்பதற்கான வாழ்க்கை இல்லாமல் போய் விட்டது. அடிக்கடி நாவாந்துறைக்குப் போனாலும் அங்கே யாரோடும் தங்கி நிற்க வாய்த்ததில்லை. மனசுக்குள்ளே கொள்ளையாக அதற்கு விருப்பமுண்டு. நல்ல தோழர்கள் அங்கே இருக்கிறார்கள். ஆனால், பொழுதுதான் வாய்க்குதில்லை.
என்றாலும் பெலிக்கான் வீட்டுக்கு போனால் போதும். ஆளை விடவே மாட்டார். “என்னப்பா அவசரம். சாப்பிட்டு விட்டுப்போங்க. இந்த வயித்துக்குத்தானே எல்லாப் பாடும்.. கொஞ்ச நேரம் இருந்து ஆறி விட்டுப் போங்கள்” என்று அன்போடு கேட்பார். அதற்குள் வற்புறுத்தலும் ஆதரவும் நிறைந்திருக்கும்.
பெலிக்கானிடமிருந்த இந்தக் குணமே பிள்ளைகளிடம் வற்றாத ஈரமாக, பெருகும் ஊற்றாக இருந்து வருகிறது. அன்பைப் பகிர்வதும் உறவாடுவதும் நெகிழ்ந்து கரைவதுமான இயல்பு. வற்றாத கடல் அது.
பெலிக்கானை அவருடைய பிள்ளைகளின் வழியாகவே எப்போதும் பார்க்கிறேன். அப்படிப் பார்ப்பதே என் பொறுத்துச் சரியானது. அவர்களும் (பிள்ளைகளும்) தந்தையாரின் மீது அளவற்ற பாசமும் மதிப்பும் வைத்திருந்தனர். எப்போதும் தங்கள் தந்தையாரைக் குறித்து அவர்களுக்கு பெருமையும் நிறைவுமே உண்டு. அவரைப் பற்றிய பேச்சுகள் வரும்போது சவுந்திரத்தின் முகம் மலர்ந்து ஒளிரும். ஜீவாவின் குரலில் பெருமிதம் தொனிக்கும். பெண்களிடத்திலும் அப்படித்தான்.
பெலிக்கான் நான்கு தலைமுறையினருடன் கூத்தில் வாழ்ந்திருக்கிறார். அவராடிய கூத்துகள் “வீரத்தளபதி செபஸ்தியான்”, “அலசு”, “சங்கிலியன்”, “பண்டாரவன்னியன்”, “கிளியோபட்ரா”, “ஜெனோவா” என ஐம்பதுக்கு மேற்பட்ட கூத்துகளில் ஆடியிருக்கிறார். முதன்முதலில் ஒன்பது வயதில் “ஏழு பிள்ளை நல்லதங்காள்” என்ற கூத்தில் மேடையேறினார் பெலிக்கான். பிறகு “கிளியோபட்ரா”, “வீரத்தளபதி செபஸ்தியான்”, “அலசு”, போன்ற பல கூத்துகளுக்கு அண்ணாவியராக இருந்து பழக்கி மேடையேற்றியிருக்கிறார்.
அன்று கூத்துகளுக்கிருந்த முக்கியத்துவத்தை உணர்வோருக்கே அண்ணாவிகளின் கனதியும் கூத்துக் கலைஞர்களின் மதிப்பும் புரியும். அன்றைய சமூக நிலையில் (1980 களுக்கு முன்னான காலத்தில்) ஊர்களில் அண்ணாவிகளுக்கும் பரியாரியார்களுக்கும் (நாட்டு வைத்தியர்கள்) பெருமதிப்பிருந்தது. ஒவ்வொரு ஊரிலும் அண்ணாவிமாரும் பரியாரிமாரும் இருப்பார்கள். பரியாரிமார் உடலின் உயிரின் காவலர்கள் என்றால், அவற்றின் பராமரிப்பாளர்கள் என்றால், அண்ணாவிமார் கலையின் காவலர்கள், அவற்றின் பராமரிப்பாளர்களாக இருந்தார்கள்.
ஊர்களில் கூத்துக் கலை செழித்திருந்தது. வாழ்வோடு ஒன்றாகக்கலந்திருந்தது. எந்தக் குடும்பத்திலும் யாராவது ஒருத்தராவது கூத்துக் கலையோடு சம்மந்தப்பட்டே இருப்பார்கள். அந்தளவுக்கு ஊரெல்லாம் கூத்துக் கலைஞர்கள் பெருகிக் கிடந்தனர். அவ்வளவு கூத்துக் கலைஞர்களுக்கும் மதிப்புமிருந்தது. எல்லோரும் “பெரிய ஆட்களாக“ கருதப்பட்டனர். அவரவர் ஆடுகின்ற பாத்திரத்தின் பெயரிலேயே அவர்கள் அடையாளம் காணப்பட்டனர், அறியப்பட்டனர். தொழிலும் கலையுமாக அமைந்த வாழ்க்கை அது. அதில் ஆடிக் களித்த கலையாளுமைகளில் பெலிக்கானும் ஒருவர். அவராடிய பாத்திரங்கள் பல.
இன்று பெலிக்கான் இல்லை. ஆனால், அவருடைய நினைவுகள் யாழ்ப்பாணத்துக் கூத்துக் கலை வரலாற்றிலும் எப்போதுமிருக்கும்.
டானியல் பெலிக்கான், டானியல் அன்ரனி, டானியல் சவுந்திரம், டானியல் ஜீவா, டானியல் ஜெயந்தன் என்று ஒரு தொடரிழை தலைமுறைகளைக் கடந்து, நிலப்பரப்புகளைக் கடந்து, காலவெளியினூடே ஓடிக் கொண்டிருக்கிறது. இது சிறப்பே. பெலிக்கானின் ஈடுபாட்டுணர்வு பெருகிப் பரந்துள்ளது.
00
LikeShow More Reactions
Comment

tirsdag 1. mai 2018

ஆவலுடன் எதிர்பார்த்த 2018 ஆண்டுக்கான சென்.மேரிஸ் சனசமுக நிலைய புதிய நிர்வாக தெரிவு.

ஆவலுடன் எதிர்பார்த்த 2018 ஆண்டுக்கான சென்.மேரிஸ் சனசமுக நிலைய புதிய நிர்வாக தெரிவு.

பிரசுரிக்கபட்ட திகதி: 29/04/2018 (ஞாயிற்றுக்கிழமை)
இன்று நடைபெற்றது 2018 ஆண்டுக்கான சென்.மேரிஸ் சனசமுக நிலைய புதிய நிர்வாக தெரிவு நடை பெற்றது இவ் நிகழ்வில் பெரும் திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களுடைய ஆதரவை வழங்கி எதிர்கால தமது தலைமைகளை தெரிவு செய்துள்ளனர்.
புதிய நிர்வாக விபரம்
தலைவர்- சிமியோன் நொலஸ்கோ
செயலாளர்- செ.அலன் பேக்கர்
பொருளாளர்- ம.நிரோஜன்
உப தலைவர் - அனற்
உப செயலாளர் - அ. சிலுவை
விளையாட்டுத் தலைவர் - பவுலிஸ்
கல்வி பொறுப்பாளர் - ச.டெனிக்சன்
கலை- அன்ரனிதாஸ் (சின்னவன்)
சுகாதாரம்- அன்ரோ
ஆன்மீகம் - எ. ஜெனாத்
நிலைய பொறுப்பாளர்- சுமன்
நிர்வாக உறுப்பினர்கள்- வின்சன் ,மகேந்திரன்,றெக்மன், ராசா. கொலு, மணி
சிறப்பான முறையில் செயற்பட்டு எமது கிராமத்தின் முன்னேற்றத்துக்காக ஒற்றுமையையுடன் செயற்பட அனைத்து மக்கள் சார்பாக வாழ்த்தி நிற்கின்றது நாவாய்மண் .

நாச்சிக்குடா அன்னை வேளாங்கண்ணி இரவுப் பாடசாலைக்கான கட்ட அத்திவாரக்கல் இடும் நிகழ்வு இன்று நடைபெற்ற போது...

நாச்சிக்குடா அன்னை வேளாங்கண்ணி இரவுப் பாடசாலைக்கான கட்ட அத்திவாரக்கல் இடும் நிகழ்வு இன்று நடைபெற்ற போது...
நாவாந்துறையினைச் சேர்ந்த திரு. இசிதோர் மொன்மொலின் ஜெராட் அவர்களினால் 2002ம் ஆண்டு இந்த இரவுப் பாடசாலை அமைப்பதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு ஆலய வளாகத்தில் இதற்கான கட்டம் அமைக்க தூண்கள் இடப்பட்ட போதும் உள்நாட்டுப்போரினால் அம் முயற்சிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு மீண்டும் புதியதொரு இடத்தில் இப்பாடசாலைக்கான முயற்சிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ரூபா 3 மில்லியன் பெருமதியான திட்டமாக இத்திட்டம் அமைந்துள்ளது. மிகவும் பெறுமதியான திட்டத்தினை எமது கிராமத்திற்கு வழங்கும் இவருக்கு எம் நன்றிகளும் செபங்களும்..

இன்று நாவந்துறை புனித நீக்கிலாஸ் ஆலைய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி திறந்து வைப்பு

நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி திறந்து வைப்பு

பிரசுரிக்கபட்ட திகதி: 30/04/2018 (திங்கட்கிழமை)
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் வடிவமைக்கப்பட்ட சிலுவைப்பாடுகள் சிற்பதொகுதி இன்று(29.04.2018) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேவாலய சூழலில் 14 சிற்பங்கள்  அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது ஒரு சில சிலைகளின் வேலைகள் முழுமையடைந்துள்ள நிலையில் இன்று திறந்து வைக்கப்பட்டது. ஏனையவையை விரைவில் மிகவும் அழகுற நேர்த்தியான முறையில் வர்ணம் பூசப்பட்டு வேலைகள் நிறைவடையவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.

onsdag 21. februar 2018

புத்தர்புத்தர்
புத்தர் பனிரெண்டு வருடங்கள் கழித்து அவர் தனது அரண்மனைக்கு வருகிறார்.
தந்தை மிக மிககோபமாக இருப்பார் என்பது அவருக்கு மிக நன்றாக தெரியும்.
தந்தைக்கு மிகவும்வயதானபின் பிறந்த மகன், ஒரே மகன்,தந்தையின் நம்பிக்கைகள் எல்லாம்இவரைசார்ந்துதான் இருந்தது.
அவர் மிகவும் சக்தியிழந்து போய் விட்டார், ஓய்வெடுக்கவிரும்பினார்.
தனது மகன் ராஜீய பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளவதற்காககாத்திருந்தார்.
அதற்கு முன்னதாக கௌதம புத்தர் அரண்மனையிலிருந்து சென்றுவிட்டார்.
இந்த கதையில் மனித மனம் மிக அழகாக வெளிப்பட்டிருக்கும்.
கௌதம புத்தர்கிளம்புவதற்கு முன்தினம்தான் அவருக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தது.
தனது வாரிசை,தனது துணைவிக்கும் தனக்கும் உள்ள அன்பின் வெளிப்பாட்டை, கிளம்புவதற்குமுன் ஒருமுறைகாண விரும்பினார். அதனால் அவர் தனது மனைவியின் அறைக்கு சென்றார். அவள் தூங்கிக்கொண்டிருந்தாள், குழந்தை போர்வைக்குள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. அவர்போர்வையை விலக்கி குழந்தையின் முகத்தை ஒரு முறை காண நினைத்தார். ஏனெனில் அவர்திரும்ப வராமலும் போகலாம்.
அவர் புரிபடாத யாத்திரைக்குச் செல்கிறார். அவருக்கு என்ன நடக்கும் என்றுஅவருக்கே தெரியாது.
அவர் தனது நாடு, மனைவி, குழந்தை, தன்னை, எல்லாவற்றையும்ஞானவிழிப்படைய பணயம் வைக்கிறார்.
அதற்காகவே அலைந்து திரிந்து ஞானமடைந்த வெகுசிலரிடமிருந்து கேள்விப்பட்ட ஒரு சாத்தியக்கூறாக மட்டுமே உள்ள ஒன்றை தேடிசெல்கிறார்.
உங்களைப் போலவே அவருக்கும் ஏகப்பட்ட குழப்பங்கள், கேள்விகள். ஆயினும் ஒரு முறைமுடிவு பெற்று விட்டால்……. அவர் மரணத்தை, முதுமையை, நோயை, பார்த்த அந்த நாள்,அவர் தனது வாழ்வில் முதன்முறையாக ஒரு சந்நியாசியை பார்த்த அந்த நாள்…… அவருள்,“மரணம் உறுதி எனும்போது பின் அரண்மனையில் காலத்தை செலவிடுவதுஆபத்தானது.
மரணம்வருவதற்கு முன் இறப்பை கடந்தும்இருப்பதை கண்டடைந்தேயாக வேண்டும்”. என்ற இறுதி நிலைப்பாட்டுக்கான கேள்வி எழுந்தது.அவர் செல்ல முடிவெடுத்துவிட்டார்.
ஆனாலும் மனித மனம், மனித இயல்பு…… தனதுகுழந்தையின் முகத்தை ஒரு முறை பார்க்க விரும்பினார் – அவர் இன்னும் குழந்தையை பார்க்கவேயில்லை.
ஆனால் போர்வையை விலக்கும்போது யசோதரா – அவரது மனைவி – விழித்துவிட்டால், அவள் எழுந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அவள் எழுந்துவிட்டால், “இந்தஇரவில் என் அறையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள், நீங்கள் எங்கோ செல்ல தயாராகிஇருப்பதுபோல தோன்றுகிறதே?” எனக்கேட்பாள்.
தேர் வாசலில் தயாராக இருக்கிறது,எல்லாமும் ரெடி, அவர் கிளம்ப வேண்டியதுதான்பாக்கி. அவர் தனது தேரோட்டியிடம், “ஒரு நிமிடம் பொறு, நான் எனது குழந்தையின் முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன். ஏனெனில் நான் திரும்ப வராமலும் போகலாம்”. என்று கூறியிருந்தார்.
ஆனால் அவர் தனது குழந்தையின் முகத்தை பார்க்கவில்லை, ஏனெனில் யசோதரா எழுந்துஅழுது, நீங்கள் என்ன செய்கிறீர்கள்?, எதற்கு இந்த துறவறம்?,நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?, ஞானமடைதல் என்பது என்ன?என்று கதற தொடங்கிவிட்டால்…. என்று பயப்பட்டார்.
ஒரு பெண்ணைப் பற்றி யாருக்கும்ஒன்றும் தெரியாது – அவள் முழு அரண்மனையையும் விழிக்க வைத்துவிடக் கூடும்.
தந்தைவந்துவிடுவார், எல்லாமும் முடிந்துவிடும். அதனால் அவர் நழுவி சென்றுவிட்டார்.
பனிரெண்டு வருடங்களுக்குப் பிறகு, ஞானமடைந்தபின் அவர் செய்தமுதல் வேலை,தந்தையிடம், மனவியிடம், பனிரெண்டு வயதடைந்த மகனிடம் மன்னிப்பு கேட்க திரும்பிவந்ததுதான்.
அவர்கள் கோபமாக இருப்பார்கள் என்பதை அவர் அறிவார்.
தந்தை மிகவும்ஆத்திரமாக இருந்தார். புத்தரை பார்த்தவுடன், அரைமணி நேரம் திட்டி தீர்த்தார்.
பின்திடீரென தான் கூறிய எந்த விஷயமும் தன் மகனை தொடவில்லை, அவன் ஒரு பளிங்குச்சிலை போலநிற்கிறான் என்பதை உணர்ந்தார்.
தந்தை தன்னை கவனித்தவுடன் புத்தர், “இதைத்தான் நான் விரும்பினேன். கண்ணீரை துடைத்துக்கொள்ளுங்கள். என்னைப் பாருங்கள். அரண்மனையை விட்டு சென்றபோது இருந்தவன் அல்ல நான்.உங்களது மகன் முன்னரே இறந்து விட்டான். நான் தோற்றத்தில் உங்களது மகன்போலஇருக்கலாம். ஆனால் எனது இருப்பு மிகவும் வேறுபட்டது. என்னைப் பாருங்கள்”. என்றார்.
“நான் பார்த்துக் கொண்டிருந்தேன், அரைமணி நேரம் நான் உன்னைத் திட்டிக் கொண்டிருந்தேன்,நீ எதுவுமே பேசவில்லை. நீ எவ்வளவு ஆத்திரக்காரன் என்று எனக்குத் தெரியும். உன்னால்அமைதியாக இருந்திருக்க முடியாது. இப்படி அமைதியாக இருந்தவிதமே நீ மாறிவிட்டாய்என்பதை காட்டுகிறது. உனக்கு என்ன நிகழ்ந்தது?” என்று கேட்டார்.
புத்தர், “சொல்கிறேன். அதற்குமுன் நான் போய் என் மனைவியையும் மகனையும் பார்த்துவிட்டு வருகிறேன்.
நான்வந்திருக்கிறேன் என்பதை அவர்கள்கேள்விப்பட்டிருப்பார்கள். அவர்கள் எனக்காக காத்திருப்பார்கள்.”என்றார்.
அவரை பார்த்தவுடன் அவர் மனைவி, “நீங்கள் மாறியிருப்பதை என்னால்பார்க்க முடிகிறது. இந்த பனிரெண்டு வருடங்கள் மிகவும் துன்பமான காலங்கள். நீங்கள் சென்று விட்டதல்ல காரணம், நீங்கள் என்னிடம் எதுவும் சொல்லாமல் சென்றதே காரணம். நான் உண்மையை தேட செல்கிறேன் என என்னிடம் கூறியிருந்தால் நான் உங்களை தடுத்து நிறுத்தியிருப்பேன் என நினைத்தீர்களா? நீங்கள் என்னை கேவலப் படுத்தி விட்டீர்கள். இந்த பனிரெண்டு வருடங்களும் என்னை வருத்திய விஷயம் இதுதான்.
நீங்கள் உண்மையை தேட சென்றது வருத்தப்பட வைக்க வில்லை,அது சந்தோஷமான விஷயம்தான். நீங்கள் ஞானத்தை தேடி சென்றது குற்றமல்ல. நான் உங்களை தடுத்து நிறுத்தியிருக்க மாட்டேன். நானும் ஷத்திரிய குலத்தை சேர்ந்தவள்தான். கத்தி கதறி அழுது உங்களை தடுக்கும் அளவு பலவீனமானவளாகவா என்னை நினைத்தீர்கள்?,நீங்கள் என்னை நம்பவில்லையே என்பதுதான் இந்த பனிரெண்டு வருடங்களும் என்னைவேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறது.
நான் நீங்கள் செல்ல அனுமதித்திருப்பேன், நான்உங்களுக்கு விடை கொடுத்திருப்பேன், தேர் வரை வந்து வழியனுப்பி வைத்திருப்பேன்.நீங்கள் அடைந்திருப்பது எதுவோ அதை இங்கிருந்தே அடைந்திருக்க முடியாதா என்பதுதான்இந்த பனிரெண்டு வருடங்களும் உங்களை நான் கேட்க துடித்துக் கொண்டிருந்த கேள்வி.
நீங்கள் எதையோ அடைந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது……..இந்த அரண்மனையிலிருந்த சென்ற நபர் அல்ல நீங்கள். நீங்கள் வேறுவிதமாகஜொலிக்கிறீர்கள், உங்களது இருப்பு முற்றிலும் புதிதாக, புத்துணர்வோடு இருக்கிறது.உங்களது கண்கள் மேகமற்ற வானம் போல தெளிவாகவும் தூய்மையாகவும் இருக்கிறது. நீங்கள்மிகவும் அழகாக இருக்கிறீர்கள். நீங்கள் எப்போதும் அழகுதான், ஆனால் இந்த அழகுபுறஅழகல்ல, அகஅழகு உங்களுக்குள் பூத்திருக்கிறது.
உங்களுக்கு கிடைத்தது என்னவோ அதுஇங்கே நீங்கள் இருந்தால் கிடைத்திருக்காதா? இந்த அரண்மனைநீங்கள் ஞானம் பெறுவதை தடுத்து நிறுத்தி விடுமா?” என்று கேட்டாள்.
இது மிக புத்திசாலித்தனமான கேள்வி.
இதை கௌதம புத்தர் ஏற்றுக் கொள்ள வேண்டிவந்தது. “நான் இங்கிருந்தே அடைந்திருக்கலாம். ஆனால் அப்போது எனக்கு எதுவும் தெரியாது.
இப்போதுஎன்னால் ‘இங்கிருந்தே அடைய முடியும், எந்த மலைகளுக்கும் செல்ல வேண்டியதில்லை, எங்கேயும் செல்லவேண்டியதில்லை’ என சொல்ல முடியும். நான் என்னுள் சென்றாலே போதும், நான் எங்கே இருந்தாலும் அதுநிகழும். வெளியே வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை. இந்த அரண்மனையும் மற்றஇடங்களைப் போன்றதே.
ஆனால் என்னால் இதை இப்போது சொல்ல முடியும், அப்போது இதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதே.நான் உன்னைப் பற்றியோ உன் தைரியத்தைப் பற்றியோ சந்தேகபடவில்லை. உண்மையில் நான்என்னைப் பற்றித்தான் சந்தேகப்பட்டேன். அதனால் என்னை மன்னித்துவிடு.
நீஎழுந்துவிட்டாலோ, நம் குழந்தையை நான் பார்த்துவிட்டாலோ, “நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்?,என்னுடைய அழகான மனைவியை, இந்த முழுமையான அன்பை, என்னிடம் அவள் கொண்டிருக்கும்முழுமையான அர்ப்பணிப்பை விட்டு விலகுவதா?, இந்த ஒரு நாளே ஆன குழந்தை என்ன செய்தது?,நான் அவனை விட்டு போகிறேன் என்றால் ஏன் இவனை பெற்றெடுத்தேன்?, நான் என்னுடைய பொறுப்புகளிலிருந்து தப்பிப் போவதா? என்று நான் யோசிக்க ஆரம்பித்து விடுவேன்.
என்னுடைய தந்தை விழித்துக் கொண்டு விட்டாலோ என்னால் போகவே முடியாது. நான்உன்னை நம்பவில்லை என்பதல்ல, நான்என்னைத்தான் நம்பவில்லை. நான் முழுமையாகதுறக்கவில்லை, அங்கு ஒரு அலைபாய்தல் இருக்கிறது என்று எனக்குத் தெரியும். என்னுள்ஒரு பாகம், ‘ஏய், நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?என்றது. மற்றொரு பாகம், ‘செல்வதற்கு இதுதான் சரியான சந்தர்ப்பம், இதை நீ விட்டுவிட்டால் போவது மேலும் மேலும் கடினமானதாகி விடும். உனக்கு முடி சூட்டுவதற்கு உனது தந்தை ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார். முடி சூட்டிக் கொண்டு அரசனாகி விட்டால் பின் செல்வது மிகவும்கடினம்’. என்றது.” என்று கூறினார்.
யசோதரா, “நான் உங்களிடம் கேட்க நினைத்த ஒரே ஒரு கேள்வி இதுதான்.அதை எங்கிருந்தாலும் அடைய முடியும், இங்கிருந்தாலும் அடைந்திருக்க கூடும் என நீங்கள்கூறிய பதிலின் உண்மை தன்மையில்என் உள்ளம் குளிர்ந்தது.
இதோ உங்கள் மகன், இவன் உங்களைப் பற்றிக் கேட்கும்போதெல்லாம் நான், “பொறு, அவர் திரும்பி வருவார். அவரால் மனிததன்மையற்று, கருணையின்றி, கொடூரமாக நடந்து கொள்ள முடியாது. ஒரு நாள் அவர் திரும்பி வருவார். அவர் எதை உணர சென்றிருக்கிறாரோ அதற்கு நாள் பிடிக்கும். ஆனால் அதை உணர்ந்த உடனே அவர் செய்யும் முதல் விஷயம் இங்கே திரும்பி வருவதுதான்.” என பதில் கூறுவேன்.
உங்களது மகனுக்கு நீங்கள் தரப் போகும் சொத்து என்ன?, அவனுக்குத்தர நீங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள்?, அவனுக்குஉயிர் கொடுத்திருக்கிறீர்கள், வேறு என்ன அவனுக்கு கொடுக்கப்போகிறீர்கள்?”என்று கேட்டாள்.புத்தரிடம் பிச்சைப் பாத்திரத்தை தவிர வேறு எதுவும் இல்லை. அவர் தனது மகனை –அவன் பெயர் ராகுல். ஏன் அவன் பெயர் ராகுல் என்பதை நான் பிறகு சொல்கிறேன் அந்தபெயர் கௌதம புத்தர் அவனுக்கு கொடுத்தது – அருகில் அழைத்தார்.
ராகுலை அருகில் அழைத்து பிச்சைப் பாத்திரத்தை அவன் கையில் கொடுத்தார். “என்னிடம் வேறு எதுவும் இல்லை. இதுதான் என்னிடமுள்ள ஒரே விஷயம். இனிமேல் நான்என் கைகளையே பிச்சைப் பாத்திரமாக உபயோகப் படுத்தி பிச்சை எடுத்துக் கொள்வேன். இந்தபிச்சைப் பாத்திரத்தை உனக்கு கொடுத்ததன் மூலமாக நான் உனக்கு சந்நியாசம்கொடுத்துவிட்டேன். நான் கண்டறிந்த மிகப் பெரிய அரிதான விஷயம் இதுதான். நீயும் இதைகண்டறிய வேண்டும் என நான் விரும்புகிறேன்.” என்றார்.
அவர் தனது மனைவியிடம், “நீயும் எனது சந்நியாசிகளின் கூட்டத்தில் ஒரு பாகமாக தயாராகு,” என்றார். தனது மனைவிக்கும் தீட்சையளித்தார். புத்தரின் தந்தை வந்துஇவையனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். “ஏன் என்னை மட்டும் விட்டு விட்டாய்?,நீ கண்டறிந்ததை உன் வயதான தந்தையுடன் பகிர்ந்து கொள்ள உனக்கு விருப்பமில்லையா?, என்னுடைய மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது…… எனக்கும் தீட்சை கொடு” என்று அவர் கேட்டார்.புத்தர், “உங்கள் எல்லோரையும் என்னுடன் கூட்டிச் செல்லத்தான் நான் இங்கு வந்தேன்.
ஏனெனில் அழியாத,யாராலும் பறித்துக் கொள்ள முடியாத, முற்றிலும் பெரியதான சாம்ராஜ்யத்தை நான்அறிந்தேன். நான் இங்கே வந்தால் என்னுடைய இருப்பை, என்னுடைய தெளிவை, உங்களால் உணரமுடியும் என்றே நான் இங்கே வந்தேன். என்னை பின் தொடர்ந்து வாருங்கள் என நான்உங்களை அழைக்க முடியும்.” எனக் கூறி அவர்கள் மூவருக்கும் தீட்சையளித்தார்.
இந்திய புராணங்களில் சந்திர கிரகணம் என்பது சந்திரனுக்கு உள்ள இரண்டுஎதிரிகளான ராகுவும் கேதுவும் சந்திரனை பிடித்து கொல்ல முயற்சி செய்கின்றனர்.ஒவ்வொரு முறையும் சந்திரன் அவர்கள் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்கிறான். என்பதைதான் சந்திரகிரகணம் என்று கூறப்படுகிறது.
கௌதம புத்தர், “இந்த மகன்தான் எனக்கு மிகப் பெரும் தடையாக இருக்கப் போகிறான், இவன்தான் என்னுடைய எதிரியாக இருக்கப் போகிறான், இமயமலைக்கு நான் செல்வதை தடுக்கப் போவது இவன்தான். இவன்மேல் நான் வைக்கும் அன்பு, இவனுடன் நான் கொண்டுள்ள நேசம், பாசம். இவைதான்என்னுடைய விலங்குகளாக இருக்கப் போகின்றன.” என்று நினைத்ததால் அவர் தன் மகனுக்கு ராகுல் என பெயர் வைத்தார்.
அவர்கள் எல்லா சந்நியாசிகளும் தங்கியிருந்த, ஊரை விட்டு வெளியேதள்ளியுள்ளகாட்டுக்கு வந்தனர். அன்று மாலை அவர் சந்நியாசிகளிடையே உரை நிகழ்த்துகையில், “எனது மனைவி யசோதரா என்னை ஒரு கேள்வி கேட்டாள். அது மிக முக்கியத்துவம் வாய்ந்தகேள்வி.
ஒரு அரசராக வாழ்ந்து கொண்டே ஞானம் பெறுவது சாத்தியமில்லையா என்றுகேட்டாள். ‘இடத்தைப் பற்றியோ, நேரத்தைப் பற்றியோ கேள்வியே கிடையாது. ஒருவர் எங்கேயிருந்தாலும் சரி ஞானம் பெற முடியும் – ஆனால் அந்த நேரம் இதை சொல்வதற்கு எனக்கு யாருமில்லை.
எங்கேஇதை பெற முடியும், யாரிடம் இதை கேட்பது, எங்கே போவது என்று எனக்கு எந்த யோசனையும்இல்லை. நான் அறியாததற்க்குள் குதித்து விட்டேன்.’ என்று உண்மையை கூறினேன்.
ஆனால் இப்போது, நீ எங்கே இருந்தாலும் கவனத்தோடும் விழிப்போடும் இருப்பதற்காக எதை வேண்டுமானாலும் பணயம் வைக்க கூடிய தைரியம் உன்னிடம் இருக்குமானால் ஞானமடைதல் நிகழும் என்று என்னால் கூற முடியும்.” என்றார்.
ஓஷோ
*******&******

lørdag 3. februar 2018

கிறிஸ்தவமும் அறிவியலும்!

கிறிஸ்தவமும் அறிவியலும்! பேசாலைதாஸ் B.A (Hones) M.A dip London.

(தேன் என்ற வலைப்பதிவில் வெளிவந்த இந்த கட்டுரை சில திருத்தங்களுடன் எழுதப்படுகின்றது.)
                                                     கிறிஸ்தவ இறையியல், கிரேக்க தத்துவத்தில் இருந்து கட்டப்பட்டது என்றால் அது மிகையாகாது!. பைபிள் தீர்க்கமான அறிவியல் எதையும் முன்வைக்கவில்லை.  மாறக கிறிஸ்தவம் பிற்போ க்கானது, அறிவியலுக்கு எதிரானது என்று வாதிடப்பட்டது. கிறிஸ்தவ மதத்தின் பெரும் பிரிவான கத்தோலிக்கத்துக்கு எதிராக, புரட்டஸ்தாந்து பிரிவினர் கடும் தாக்கத்தையும், இஸ்லாமியரின் வளர்ச்சிக்கு எதிராக, புதிய அறிவியல் கோட்பாடுகளுக்கு தடை போடவேண்டிய சூழல் அதற்கு இருந்தபடியால், அறிவியல் கோட்பாடுகளை எதிர்க்கவேண்டியதாயி ற்று, இருந்தபொதும், விவிலியத்தின் கதைகளிலிருந்தும் பாடல்கள்/கவிதைகளிலிருந்தும் எடுக்கப்பட்ட வரிகளிலிருந்து, அவை அரிஸ்டா ட்டிலின் அறிவியலுடன் இயைந்தவையாக இருந்தமையால், புவிமையக் கொள்கை (Geocentirc Model) கிறீத்துவ அறிவியல் கொள்கையாக உருவா க்கப்பட்டது. அந்த காலத்துக்கு அது பெரும் புரட்சிகர கோட்பாடாக இருந்தது. அன்றைய அறிவியலையும் பொது நம்பிக்கைகளையும் மத நம்பிக்கைகளையும் அது புரட்டிப்போட்டது. .

                                        கிறீத்துவத்தின் ஆரம்ப காலத்திலேயே அது அன்றைய அறிவியக்கத்தின் உச்சகட்ட கோட்பாடுகளை உள்வாங்கிக்கொண்டது. பிளேட்டோவும் அரிஸ்டாட்டிலும் அதன் அறிவுச்செயல்பாட்டின் பிரதான ஆதாரங்களாகினர். அலெக்ஸாண்ட்ரியாவின் கிளெமென்ட் , துவங்கி ,அகஸ்டின் , தாமஸ் அக்குவினாஸ்  போன்றவர்கள் கிரேக்க தத்துவ த்தின் மீது கிறீத்துவ இறையியல் உருவாக்கினார்கள்.. கிரேக்க தத்துவ த்தையும் இலக்கியத்தையும் ஏற்பதிலும் மறுப்பதிலும் வெவ்வேறு போ ப்புகளுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன. சிலர் கிரேக்க இலக்கிய புத்தகங்களை நூலகங்களிலிருந்து அகற்றினர். ஆயினும் கிரேக்க இல க்கியத்தையும் தத்துவத்தையும் நவீன மேற்குக்கு கொண்டு சேர்த்ததில் கிறீத்துவம் முதன்மையான இடத்தை பெறுகிறது.

                                                                                இன்றுவரைக்கும் மேற்கின் தத்துவம் கிரேக்க தத்துவத்தின் நீட்சியாகவே அடையாளம்காணப்படுகிறது. மேற்குலகில் கிறீத்துவம் அக்காலங்களில் மிக முக்கிய, கிட்டத்தட்ட ஒரே, அறிவியக்கமாக இருந்துவந்தது. . சூரிய மைய வானியல் கொள்கையை (Heliocentrism) முன்வைத்த கோப்பர்நிக்கஸ் ஒரு கத்தோலிக்க மதப்ப ணியாளர். அவரின் கோட்பாடு கிறிஸ்தவத்திற்கு, பெரும் சவாலாக் மாறியது.  அதற்காக, கத்தோலிக்க சபை, இவர் விதிமீது  தீர்ப்பெழுதி யது. இவரது கோட்பாட்டை ஆதரித்த, கோபர்நிகஸ் மற்றும்
ஜியாடர்டொனோ புரூனோ, கோப்பர்நிக்கஸின், பல அடிப்படையான கத்தோலிக்க நம்பிக்கைகளையும் கடுமையாக விமர்சித்தார், மறுத்தார். ஏற்கனவே பிரிவினையின் மத்தியில் பதட்டமடைந்திருந்த கத்தோலிக்க த்தின் ‘இன்குயிசிஷனின்’ கரங்களில் சிக்கி இவர்கள்  சிதையேற்ற ப்பட்டனர். 
                                                           இதுபோலவே. கலிலேயோ ஒரு அற்புதமான அறிவியல் வல்லுனார்  ஆரம்பத்திலிருந்தே அவருக்குப் பல எதிரிகள். அவர் அரிஸ்டாட்டிலின் அறிவியல் கொள்கைகள் பலவற்றையும் நிரா கரித்தார். அரிஸ்டாட்டிலை பின்பற்றிய அறிஞர்களுடன் நேரடியாக மோதினார். மிகப் புகழ்பெற்ற பைசா நகரக் கோபுர பரிசோதனையை செய்து கனமான பொருட்கள் பூமியை நோக்கி விரைவாகச் செல்கி ன்றன எனும் அரிஸ்டாட்டிலின் கொள்கையை பொய்யாக்கினார். அதை மறுத்த அறிஞர்களை எள்ளி நகையாடினார்.. கலிலியோ கோப்பர்நி கஸின் கொள்கையை ஆதரித்தார். சூரிய மையக் கொள்கையும் கலிலேயோ அதற்கு ஆதரவாக முன்வைத்த வாதங்களும் அன்றைய அறிவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படாததாய் இருந்தது. அதற்கு கலிலேயோவின் தனிப்பட்ட ஆளுமையும் ஒரு காரணமாய் இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். அவரது கருத்துக்களை மறுத்தவர்கள் எவரும் எளிதில் அவரது எதிரியிகளாயினர். கத்தோலிக்கம் அன்றைய அறிவியக்கத்தின் மையத்தில் இருந்தது என்பதற்கு ‘கலிலேயோ விவகாரம்’ ஒரு ஆதாரம்.
                                                                                கடந்த நூற்றாண்டில் போப் இரண்டாம் அருள் சின்னப்பர் சிலுவைப்போர்கள், அடிமை வியாபாரம், யூத இன அழிப்பு போன்ற கத்தோலிக்கத்தின் பல்வேறு வரலாற்றுப் பிழைகளுக்கும் பல தருணங்களில் வெளிப்படையாய் வருத்தம் தெரிவித்துள்ளார். அவற்றில் முக்கியமானது கலிலேயோவிற்கு கிறீத்துவம் வழங்கிய தீர்ப்புக்கானது. கத்தோலிக்க கிறீத்துவமும், பாரம்பரிய பிரிவினை கிறீத்துவ சபைகளும் பைபிளை அறிவியல் நூலாக பாவிப்பதையும் அதிலுள்ள எல்லாவற்றையும் நேரடிப் பொருள் கொள்வதையும் பல நூற்றாண்டுகளாக கைவிட்டுவிட்டன. இதற்கான விதைகள் ஆரம்பகால இறையியலர்களான அகஸ்டினிடமிருந்தும், அக்குவினாஸிடமிருந்தும் பெறப்பட்டன எனபதுவும் குறிப்பிடத் தகுந்தது.

                                                                         நவீன மரபணுவியலை உருவாக்கிய கிரெகர் மென்டேல் (Gregor Mendel) ஒரு கத்தோலிக்க பாதிரியார். அறிவுச்செயல்பாட்டிற்கு புகழ்பெற்ற பிர்னோ(Brno) ஆசிரமத்தில் வளர்ந்த பீன்ஸ் செடிகளை ஆராய்ந்து அவர் மரபணு கோட்பாடுகளை உருவாக்கினார் சார்லஸ் டார்வின் இவரது ஆய்வைக் குறித்து அறிந்திருந்தார் என்பது பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

                                                நிக்கோலஸ் ஸ்டெனோ (Nicolas Steno) எனும் பிஷப் புவியமைப்பியலை (Geology ) உருவாக்கினார். பெல்ஜியத்தை சார்ந்த பாதிரியார் ஜியார்ஜ் லெமாத்ர் (Georges Lemaître ) நவீன வானியற்பியலின் முக்கிய கோட்பாடான ‘பெரும்வெடிப்பை’ (Big Bang) முதன் முதலில் முன்வைத்தவர். இயேசுசபை பாதிரியார்கள் (Jesuits) தொடர்ந்து பல அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்துவந்தனர். ஐசக் நியூட்டன் தன்னுடன் தனிப்பட்ட தொடர்புகளில் முக்கியமானவர்களாக இயேசுசபை பாதிரியார்களை குறிப்பிடுகிறார். 

                                                                    நிலநடுக்கம் குறித்த அறிவியல் (Seismology) இயேசு சபை அறிவியல் (The Jesuit science) என அழைக்கப்படுகிறது. லாஸரோ ஸ்பலன்ஸனி (Lazzaro Spallanzani) எனும் பாதிரியாரின் மனித உடல் செயல்பாடுகள் குறித்த கண்டுபிடிப்புகள் லூயிஸ் பாஸ்டியரின் (Louis Pasteur)புகழ்பெற்ற உயிரியல் கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டன. பல நூற்றுக்கணக்கான அறிவியல் வல்லுநர்கள் கிறீத்துவத்தின் நான்கு சுவர்களுக்குள்ளிருந்தும் வெளியே பொதுக் கிறீத்துவர்களிடமிருந்தும் உருவாகி வந்துள்ளனர்.  இவர்களில் பலரும் கிறீத்துவத்திடமிருந்து நேரடியாக நிதியும், ஆதரவும் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத் தகுந்தது. 
                                                                இந்த அறிவியல் இயக்கத்தின் நீட்சியாக இந்தியாவில் யூஜின் லெஃபான்ட் (Eugene Lafont) எனும் இயேசுசபை பாதிரியார் 1869ல் அறிவியல் வளர்ச்சிக்கான இந்திய கூட்டமைப்பை மகேந்திரலால் சர்க்காருடன் இணைந்து துவங்கினார். அவரது அறிவியல் உரைகள் இந்திய இளைஞர்கள் பலரையும் அறிவியலின் மின்னீர்ப்புக்குள் இழுத்துவந்தது. இந்தியாவின் பெருமைக்குரிய அறிவியல் அறிஞர்களான சர் சி.வி இராமன், கெ. எஸ் கிருஷ்ணன் மற்றும் ஜகதீஷ் சந்திரபோஸ் போன்றொர் தந்தை. லெஃபாண்டின் மாணவர்கள் என்பது குறிப்பிடத் தகுந்தது. இந்திய நவீன அறிவியல் இயக்கத்தின் உச்சம் அதுவாகத்தான் இருந்திருக்கும்.

                                             யோசித்துப் பார்த்தால் கலிலேயோ தீர்ப்பைப் போன்றதொரு வேறொரு பிழையை கத்தோலிக்கம் செய்ததாக நாம் வரலாற்றில் காணவில்லை. இரண்டாயிரம் வருடப் பாரம்பரியம் கொண்ட ஒரு அமைப்பு அது நானூறு வருடங்களுக்கு முன்பு செய்த ஒரு தவற்றிற்காக இன்றும் தீர்ப்பிடப்படுகிறது. கலிலேயோவிற்கு 200ஆண்டு களுக்குப் பின் கிறீத்துவம் வரலாற்றின் வேறொரு சவாலை சந்திக்க நேர்ந்தது. 1859ல் சார்லஸ் டார்வின் பரிணாமக் கொள்கையை முன்வை த்தார். அவருக்கு முன்னரே முழுமையடையாத வடிவங்களில் பரிணாமக் கொள்கை முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டுவந்தது. கிறீத்துவ பாதிரி யார் கிரெகர் மென்டேல் மரபணு அறிவியலின் முன்னோடியாக கருதப்படுகிறார். டார்வினின் முன்னோடி லமார்க் ஒரு கத்தோலிக்கர். டார்வினின் கொள்கைகள் பிரபலமானபோது  பல படித்த கிறீத்தவர்க ளும் கிறீத்துவ அறிவியல் வல்லுநர்களும் டார்வினை ஆதரித்தனர். அமெரிக்காவில் அசா கிரே(Asa Grey – https://en.wikipedia.org/wiki/Asa_Gray) எனும் கிறீத்துவ தாவரவியலாளர் பரிணாமம் கடவுளின் திட்டம் என்பதை முன்வைத்ததோடில்லாமல் டார்வினின் ‘ஆரிஜின்’ புத்தகத்தை அமெரிக்காவில் பதிப்பிக்கும் முயற்சியிலும் இறங்கினார். அதிகாரபூர்வமாக ஆங்கிலிக்கன் சபை அதை எதிர்த்தது. அவருக்கு இங்கிலாந்தின் அரசி வழங்கவிருந்த அங்கிகாரத்தை தடுத்தது.. ஆனால் சில பத்தாண்டுகளுக்குள்ளேயே நிலைமை மாறியது. 1884ல் பிரெடெரிக் டெம்பிள் (FrederickTemple – https://en.wikipedia.org/wiki/Frederick_Temple ) ‘மதத்துக்கும் அறிவியலுக்குமான உறவு’ எனும் தலைப்பில் ஆற்றிய பேருரையில் பரிணாமக் கொள்கை கிறீத்துவ நம்பிக்கைக்கு எதிரானதல்ல என்பதை முன்வைத்து பேசினார். 1896ல் அவர் ஆங்கி லிக்கன் சபையின் தலைமை மதகுருவாக நியமிக்கப்பட்டார். டார்வின் இறந்து 126 வருடங்களுக்குப் பிறகு 2008ஆம் ஆண்டு டார்வினிடம் மன்னிப்புக் கோரியது இங்கிலாந்து சபை.

                                                                     கத்தோலிக்கம் மிக மிக மெதுவாகவே எதிர்வினையாற்றியது. நூறு ஆண்டுகளுக்குப் பின் 1950ல் ஹியூமனி ஜெனரிஸ் (Humani Generis ) எனும் தலைப்பிட்ட கடிதத்தில் போப் பன்னி ரண்டாம் பயஸ் மனித உடல் பரிணாமவளர்ச்சியின்படி வருவதென்றும் ஆன்மாவை கடவுள் படைக்கிறார் என்றும் நம்புகையில் கிறீத்துவ நம்பி க்கைக்கும் பரிணாமக் கொள்கைக்கும் முரண்கள் இருக்க முடியாது என அறிவித்தார். மனிதனை வெறும் விலங்காக மட்டும் காணும் அறிவி யலை மதம் ஒருபோதும் ஏற்க முடியாது அல்லவா? டார்வின் தான் தொகுத்தெழுதிய உண்மையின் கனத்தை நன்குணர்ந்திருந்தார். அதை முற்றிலும் புரிந்துகொள்ள சிரமப்பட்டார். அவர் மனதின் ஆழத்தில் ஒரு முழுமையின்மை எஞ்சி நின்றது ‘இந்தக் கொள்கை மனித மனம் சென்றடைய முடியாத அளவுக்கு ஆழமானது. (அதை முழுதாய் புரிந்து கொள்வது) ஒரு நாய் நியூட்டனின் மூளையை யூகிப்பதுபோன்ற செயல் அது.’ என்றார் அவர். அந்த வெற்றிடத்தை மதம் நிரப்பியிருக்கக்கூடும்.

                                                                  இன்றைய அறிவியலை எதிர்கொள்ளும் கிறீத்துவம் அடிப்படையில் இரு வகையானது. ஒன்று நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொண்டு அவற்றின் வழியே இறையியலை யும் ஆன்மிகத்தையும் புதுப்பித்துக்கொள்ளும் அமைப்பு. இவற்றில் சிறந்த உதாரணமாக கத்தோலிக்க கிறீத்துவத்தை சுட்டிக்காட்ட முடியும். மேற்சொன்ன பல வரலாற்று உதாரணங்களிலும் திருச்சபை அறிவி யலை உள்வாங்கும் ஒரு அமைப்பாக மட்டும் இல்லாமல் புதிய அறிவுத்து றைகளை உருவாக்கிய அமைப்பாகவே இருந்துள்ளது என்பது தெளி வாகும். இன்றும் அதே பணி தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ‘போன்டிஃபிக்கல் அக்காடமி ஆஃப் சயின்ஸ்’ (The Pontifical Academy of Sciences) அதற்கான நேரடி உதாரணம். 

                                       ஸ்டிபன் ஹாக்கிங் (Stephen Hawking) போன்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த அறிவியல் நிறுவனம் வத்திக்கா னின் நேரடி முதலீட்டிலும் பிற நன்கொடைகளின் மூலமும் செயல்படு கிறது. அதன் தலைவரை போப் முன்மொழிகிறார். 1603ல் உலகிலேயே முதன்முதலில் முற்றிலும் நவீன அறிவியலுக்கென்று மட்டுமே நிறுவப்ப ட்ட Academy of the Lynxesன் வழியொட்டி பின் வந்த பல்வேறு போப்புகளால் புனரமைப்பு செய்யப்பட்டு 1936 முதல் சீராக இயங்கிவருகிறது. அதன் இன்றைய தலைவர், நோபல்பரிசுபெற்ற வெர்னர் ஆர்பர் (Werner Arber) கத்தோலிக்கமல்லாத ‘பிரிவினை கிறீத்துவ’ சபையை சார்ந்தவர். அதன் முக்கிய உறுப்பினர்களாக இந்துக்களும், இஸ்லாமியர்களும், யூதர்களும் உட்பட பல மதத்தினரும், நோபல் பரிசு பெற்ற அறிவியல் வல்லுனர்க ளும் உள்ளனர்.
                                      தூய அறிவியல் ஆய்வுக்காகச் செயல்படும் வேறெந்த மதசார்பற்ற அமைப்புகளையும் போலவே போப்பின் அறிவியல் அக்கா டமியும் செயல்படுகிறது. இதைப்போல வத்திக்கான் விண்ணாய்வ கத்தையும் (Vatican Observatory) சொல்லலாம். அதன் தலைவர் பிரதர். கீ கொன்சால்மங்கோ (Guy Consolmagno) ஒரு ஏசு சபை துறவியும் 2014க்கான கார்ல் சாகன் விருதுபெற்றவருமாவார். இன்றைய அறிவியக்கத்தில் தூய அறிவியல் ஆராய்ச்சிக்க்த் தன்னை அர்ப்பணித்திருக்கும் வேறொரு மத அமைப்பை காண்பது அரிது.

                                                                  இன்னொருபுறம் கத்தோலிக்கம் உட்பட்ட கிறீத்துவ சபைகளின் உறுப்பினர்கள் பலரும் பல கிறீத்துவ சபைகளும் இன்றும் பைபிள் முழுமுற்றாக உண்மையானது எபதை நம்பி வருகின்ற னர். அமெரிக்காவில் இவர்கள் ஒரு இயக்கமாகவே செயல்படுகின்றனர். படைப்புவாதத்தை (Creationism) பரிணாமக் கொள்கைக்கு மாற்றாக இவர்கள் முன்வைக்கிறார்கள். புவி வெப்பமாதலை (Global Warming) அறி வியல் அல்ல என மறுக்கிறார்கள், பூமி சுமார் ஆறாயிரம் வருடங்களுக்கு முன்பு பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல படைக்கப்பட்டது என நம்புகிறார்கள், சில கிறீத்துவ சபைகள் நவீன மருத்துவத்தையே மறு க்கிறார்கள். உயிர்போகும் நிலையில்கூட மருத்துவத்தை இவர்கள் நாடுவதில்லை. இதுவும் கிறீத்துவத்தின் இன்னொரு முகமே. 

                                    நிரூபணவாத அறிவியல் கண்டிருக்கும் உச்சங்களை கணக்கில் கொண்டால் இவை அனைத்துமே மூட நம்பிக்கைகள் என்றே வரையறுக்க முடியும். ஆயினும் இவர்கள் அரசியல் மற்றும் பணபலம் கொண்ட அமைப்புகளாக இருப்பதால் இவர்களும் ஒரு தவிர்க்கமுடியாத தரப்பாக இருந்துவருகின்றனர். கிறீத்துவ இறையியலின் பிதாமக ன்களில் ஒருவரான அகஸ்டின் நான்காம் நூற்றாண்டிலேயே துவக்க நூலில் (ஜெனஸிஸ்) வரும் படைப்பு கதை உண்மையானதல்ல என குறிப்பிடுகிறார். – அவரின் நோக்கில் கடவுள் அனைத்தையும் ஒரே கணத்தில் உருவாக்கினார்.-

                                          அறச்சிக்கல்கள் கொண்ட ஆய்வுகளை அறிவியல் கைகொள்ளும்போது கிறீத்துவம் அதனுடன் நேரடியாக மோதுகிறது. தன்னை ஒரு அறிவார்ந்த அதேநேரம் அறம் பேணும் ஒரு நிறுவன மாகவும் அது அமைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு மதமாக அது அறத்தை காப்பதையே முதன்மையான பணியாக கொள்ளமுடியும். உதாரணமாய் செயற்கையாக ஆய்வகத்தில் கருத்தரிக்கச்செய்து அதைக் கொன்று குருத்தணுவை அறுவடை செய்யும் ஆய்வுகளை கிறீத்துவம் கடுமையாக எதிர்க்கிறது. அதே சமயம் பிற அறவழிகளில் செய்யப்படும் குருத்தணு ஆய்வுகளை கிறீத்துவம் கொள்கை ரீதியாக ஆதரிப்பது மட்டுமல்ல அதற்கு பண உதவியும் செய்துள்ளது. 

                                                  பெண்ணின் முட்டையும் ஆணின் விந்தணுவும் சேர்கையிலேயே ஒரு மனித உயிரும் ஆன்மாவும் உருவாகிவிடுகிறது என்பதை கிறீத்துவம் நம்புகிறது. ஒரு மனித கருத்தரிப்பு எப்போது நடக்கிறது என்பதில் அறிவியலும் இதையே நம்புகிறது. எனவே ஆய்வ கத்திலே உருவானாலும் அக்கரு மானுட இனத்தின் ஒரு பிரதிநிதி என்றே அதைக் காண்கிறது கிறீத்துவம். இதே காரணத்திற்காக கருக்கலைப்பும் தீவிரமாக எதிர்க்கப்படுகிறது. கருத்தடைகூட அறம் சார்ந்த காரணங்க ளுக்காகவே கிறீத்துவத்தால் மறுக்கப்படுகிறது. மிகக் குறைந்த விலக ல்களே கருக்கலைப்பிற்க்கு வழங்கப்படுகிறது.  அறிவியலை ஆதரிப்ப தற்கும் இவற்றிற்கும் தொடர்பில்லை. உதாரணமாய் இந்தியாவில் குழந்தை ஆணா பெண்ணா என்று அறிவதை அரசு தடை செய்துள்ளது. இது ஒரு அறம் சார்ந்த சட்டம். அது அறிவியலுக்குப் புறம்பானதல்ல மாறாக கருவின், குழந்தையின் உரிமையை பாதுகாக்கும் அறம் சார்ந்தது.

                                                     கிறீத்துவத்திற்கு இன்னொரு பக்கமும் உண்டு, அது வெறும் வழிபாட்டு மதமாக மட்டுமே இயங்கும் தன்மையும் கொண்டது. பரவலாக அறிவியல் சூழல் இல்லாத சமூகங்களில் செயல்படும் கிறீத்துவம் இப்படியானது. சமகால இந்திய கிறீத்துவத்தை இப்படி ஒன்றாக வகையறை செய்ய முடியும். அதன் அறிவுச்செயல்பாடு என்பது கல்வி நிறுவனங்களை நடத்துவதும் சில கலாச்சார ஆய்வுகளை செய்வதிலும் நின்றுவிடுகிறது.

                                                                       ‘இறைநம்பிக்கையும், அறிவும் (Reason) உண்மையை தியானிக்கும் பொருட்டு மனித ஆன்மா உயர்ந்தெழ உதவும் சிறகுகள்’ என போப் இரண்டாம் ஜான் பால் (John Paul II) கூறுகிறார். (Fides et Ratio: On the Relationship Between Faith and Reason) கடவுள்நம்பிக்கை அறிவுக்குப் புறம்பானதாய் இருக்கத் தேவையில்லை மேலும் அறிவியல் மட்டுமே நம் வாழ்வின் எல்லா பக்கங்களையும் நிரப்பிவிடுவதுமில்லை.


                                                     ஷசாம் எனும் ஒரு குறுஞ்செயலி(App) உள்ளது. நீங்கள் ஒரு பாடல் துண்டை அதற்கு போட்டுக் காட்டினால் அது அந்தப் பாடலை அடையாளம் கண்டுகொள்ளும். அப்பாடல் குறித்த எல்லா தக வல்களையும் பாடல் வரிகளையும் உங்களுக்குக் காண்பிக்கும். ஆனால் அந்தச் செயலியால் ஒருபோதும் அந்தப் பாடலை அனுபவிக்கவோ உணரவோ முடியாது. எந்த அழகிய காட்சியையும் படம்பிடிக்கும் ஒரு கருவியால் அதன் ரம்மியத்தை மதிப்பிட முடியாது. கவிதையை ஒரு இயந்திரம் பகுத்தாய்ந்து அதன் பல்வேறு கூறுகளைச் சொல்ல முடியும். அதை அசைபிரிந்த்து அர்த்தம் சொல்லலாம், அதன் வகைமை என்ன என்று கண்டுபிடிக்கலாம். அதன் மொழிபெர்யர்ப்பை, ஏன் அர்த்தத்தைக் கூட சொல்ல லாம் ஆனால் அந்தக் கவிதையை உணர முடியாது. அறிதலும் உணர்தலும் மனிதனுக்கு இரு பெரும் அனுபவங்கள். அறிதலும் உணர்தலும் ஒன்றை ஒன்று நிறைவு செய்கின்றன. அறிவற்ற உணர்தலும் உணர்வற்ற அறிதலும் முழுமையடையாதவை. தன் தாய் யார் என அறிவியலின் துணை கொண்டு ஒரு மனிதன் அறிய முடியும் ஆனால் அதை அவன் உளமாற உணரும்போதே அந்த உண்மை மழுமைபெறுகிறது. 

                                                            மதமும் அறிவியலும் உண்மையைத் தேடும் மனித ஆன்மாவின் இரண்டு சிறகுகளாய் செயல்பட முடியும் என்பது இதை முன்வைத்துதான். மனித உணர்வென்பது வெறும் நரம்புக்கூட்டு த்தொகையின் எதிர்வினைகள் என்று அறிவியல் சொல்லுமானால் அதை இயக்கும் மென்பொருளாக வரலாறும் கலாச்சாரமும், மொழியும், சிந்த னைப்போக்குகளும் உள்ளன என்பதை ஆன்மிகம் கூறும். அவற்றை தொகுக்கவும் நெறிப்படுத்தவும் மதம் செயல்படுகிறது. அறிவியலையும் ஆன்மிகத்தையும் இணைக்கும் சாத்தியங்களை கிறீத்துவம் கொண்டி ருந்தாலும் நடைமுறையில் அந்த ஒருங்கிணைவிற்கான ஒரு உலக சக்தியாக அது இன்னும் முழுமையடையவில்லை என்பதே உண்மை.