onsdag 12. mars 2014

நாவாயின் விழுதுகளின் உருவாக்கம்.


முன்னுரை


                                                                                     இன்றைய சமுதாய நிலையை எண்ணி கவலைப்படுவோர் யாருமில்லை. எமது சமுதாய பின்னடைவுகளையும் கலை ஆர்வம் கலைந்து போனதையும், கலாச்சார சீர்கேடுகளையும் எமது மாணவ சமுதாயத்தின் தவறான போக்குகளையும், பெற்றோரின் அக்கறை பிள்ளைகள் மட்டில் அற்றுப் போனதையும் சமய அறிவில் பெயர் பெற்ற எமது சமூகம் தற்போது ஆன்மீக வீழ்ச்சி பெற்று செய்வினை, சூனியம், போன்ற மூட நம்பிக்கைகளில் மூழ்கிப் போனதையும் இளையோர் குடிவெறியில் குந்துகளில் குந்தியிருந்து குத்தாட்டம் போடும் நிலைகளையும் சண்டை சச்சரவு கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் என திசை மாறிச் செல்வதையும் கண்ணூடாக கண்டுணர்ந்தும் மனம் குமிறிப் போனோன்.

       இந்நிலையில் எமது சமூகம் முன்னேற ஊக்குவிப்புக்களும் விழிப்புணர்வுகளும் ஆதரவுகளும் நல்வழிப்படுத்தலும் அவசியம் தேவைப்படுகின்றது. அதுமட்டுமல்ல புலம் பெயர் வாழ் மக்கள் தங்களுடைய கிராமத்தின் வளர்ச்சியையும் நாளாந்த நிகள்வுகளையும் அறிந்து கொள்ள ஆவலோடு உள்ளனா.; அவர்கள் உளைப்பின் விளைச்சல் கிராமத்தின் வளர்ச்சியே. அந்த வகையில் நாவாயின் விழுதுகள் என்ற பெயரில் இவ்வாறான விடையங்களை கருத்தில் கொண்டு செயற்பட முன்வந்திருக்கிறேன் என்னுடைய செயற்பாடுகளுக்கு பலரிடம் உதவிகளை கேட்டிருந்தேன் எமது பெரியவர்கள் நன்பர்கள் கூட நீ சிறியவன் உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என உதறித் தள்ளினர் சழூகத் தலைவர்களிடம் பேசினேன் இது சரி வராது இந்த பேச்சை விட்டு விடு என்றார்கள் ஏன் அவ்வாறு சொன்னார்கள் என்பது எனக்குப் புரியவில்லை . இதுபற்றி பேசி பலரால் ஒதுக்கப்பட்டும் உள்ளேன் இருப்பினும் நான் ஓயவில்லை தாங்கும் விழுதுகளாய் நன் இருப்பேன். என்னுடன் இணைந்து நாவாயின் விழுதுகளாய் செயற்பட சழூக ஆர்வலர்களாகிய உங்களையும் அன்போடு அழைத்து நிற்கின்றேன்.கீழ் குறிப்பிடப் பட்டிருக்கும் செயற்திட்டத்தை நான் உருவாக்கி அதனை நாவாய் இளையோர் சமூக அபிவிருத்திக் கழகம் என்ற பெயரிலே செயற்படுத்த 2 வருடங்களாக பலருடன் பேசியும் பலனற்று போனது அது மட்டுமல்ல பலரால் நிந்திக்கப்பட்டும் பல பேச்சுகளுக்கும் ஆளானேன் இதில் தவறுகள் இருப்பின் பெரியவர்களாகிய உங்களை மனம் நெகிழ்ந்து மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்நன்றி. எழுத்துருவாக்கம் அ.கமிலஸ

;

செயற்றிட்ட தொடர்பான தற்போதைய சமூக கண்ணோட்டம்

       நமது முன்னோர்கள் எங்கு சென்றாலும் நாவாந்துறையின் புகழ்பாடி வந்தவர்கள். கலைகளிலும், விளையாட்டுக்களிலும், சமய நிகழ்வுகளிலும் முன்நின்று ஒன்றிணைந்து முரண்பாடற்ற சமூகமாக எல்லாவற்றிலும் வெற்றியீட்டுவதிலே கரைகண்ட காலமது. ஒழுக்கத்திலே சிறந்தவர்கள் என்ற பெயர் பெற்ற சமூகம் இது. தற்போது நாவாந்துறையிலே முன்னேற்பாடான செயற்பாட்டின்மையால் அற்றுப்போன நிலையில் கலைந்து போன கலைமான் கூட்டம் போல் சிதறுண்டு சீரழிந்த நிலையில் காணப்படுகின்றது.

       எமது கிராமத்தின் தற்போதைய நிலையை நோக்குவொமானால் குழந்தைகள், இளையவர்கள், மாணவர்கள், பெரியவர்கள், பெற்றார் என எல்லா வகையினரும் ஏதோ ஒரு வகையில் அபிவிருத்தி என்ற பெயரில் தவறான சிந்தனைகள், தவறான போக்குகள், ஆடம்பரங்கள் என அபரீதமான போலி வாழ்க்கையினையே வாழ்ந்து வருகின்றனர்.

       சிறுவர்கள் என்று பார்த்தோமானால் அவர்களுடைய எண்ணங்கள் சிந்தனைகள் அனைத்துமே தவறான பாதையிலேயே செல்கின்றன. நவீன மயமாக்கல் என்ற பெயரில் எமது சமூகத்தை ஆட்டிப்படைக்கும் ஊடகங்கள் என்ற பெயரில் மாணவ சமுதாயத்தையே சீர்குலைத்து விட்டது. நாளாந்தம் எமது அயலவர் பேசுகின்ற பேச்சு

உ –ம்

Ø  இன்னாருடைய பிள்ளை அவளுடைய பெடியனை காதலிக்குறாளாம்

Ø  அந்த பெட்ட இந்தப் பெடியனோட அந்த உடைஞ்ச வீட்டுக்க கதைச்சு கொண்டு இருந்ததாம்

Ø  இப்படியான ஒரு நிலைதான் மாணவ சமுதாயம் எதிர் நோக்குகிறது

Ø  இணையத்தளம்,வுஏஇ கைத்தொலைபேசி அவை தவிர னுஏனு Pடயலநசள போன்ற ஊடகங்கள் வாயிலாக நீலத்திரைப்படங்கள் பார்த்தல்

Ø  எதிர்பாலாருடன் கைத்தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தன் இச்சையான செயற்பாடுகளில் ஈடுபடல். அதன் விளைவாக செயற்படல்

Ø  இளவயது காதல்

Ø  இளவயது திருமணங்கள்

Ø  சிறுவயதில் கல்வியை விட்டுவிட்டு வேலைக்கு செல்லுதல்

Ø  சாட்டி, கசூர்ணா பீச், குருசடி தீவு போன்ற தனிமையான இடங்களுக்கு சென்று சிகரட், மது, போதைப்பொருள் பாவணை மேற்கொள்ளல்

Ø  சிறுவர் மட்டுமன்றி இளையோர்களும் தவறான உறவுகளைத் தேடிச்செல்லுதல்

Ø  சிறுசிறு குழுக்களாக இணைந்து சந்திகளிலும் வீதிகளிலும் குந்தியிருந்து பெண்களுக்கு இடையூறாக இருத்தல், சண்டை கருத்து முரண்பாடுகள் போன்றவற்றையும் மேற்கொண்டு வருகின்றனர்

இவ்வாறு எமது மாணவ சமுதாயம் தவறான பாதையில் செல்வதை தட்டிக் கேட்கவோ விழிப்புணர்வுகளை வழங்கவோ யாரும் முன்வரவில்லை. இந்நிலையில் நேர்மயமான ஆரோக்கியமான மாணவ சமுதாயத்தை உருவாக்க

Ø  வாழ்க்கை தொடர்பான கல்வியூட்டல்களும்;   

Ø  விழிப்புணர்வு கருத்தரங்குகளும்

Ø  ஆலோசனைகள், ஆதரவுகளும் ஊக்குவிப்புக்களும், நல்வழிப்படுத்தலும் தேவைப் படுகின்றது.

சிறியோர், பெரியோர் என்றில்லாமல் அனைவருமே திருவிழா என்றதுமே குடித்துவிட்டு வீதியில் நின்று ஆடுகின்ற கலாச்சாரமே தற்போது நிலவி வருகின்றது.

ஆரம்ப காலத்திலே திருவிழா என்றதும் கலைவிழாக்கள், கௌரவிப்பு நிகழ்வுகள் எனப் பல வகையான செயற்பாடுகள் மூலம் மக்களை ஒன்று திரட்டியது. தற்போது இவ்வாறான நிலைமாறி அசாதாரண நிலையே எமது மக்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

க.பொ.த சாதாரணம் ஃ உயர்தரம் படித்து விட்டு என்ன செய்வதென்று தெரியாமல் வேலை வாய்ப்பின்றி ஒன்றிணைந்து கும்பலாக குடித்து விட்டு பெண்களை கிண்டல் செய்வதும் பெரியவர்களை காறி உமிழ்வதும் நாம் அறிந்த உண்மையே. பெற்றோர் கூட இந்நிலையை கண்டும் காணாதவர் போல் உள்ள நிலையை எமது சமூகம் எதிர்நோக்கி வருகின்றது.

எமது முன்னோரின் துயிலும் இல்லம் கூட மதுப்பிரியர்களின் இடமாகி விட்டன. இவ்வாறான நிலைமைகள் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் அதிகரித்து வருவதனாலேயே நிலவுகின்றது என்பதை யாரும் அறிவதற்கில்லை.

பெற்றோர், பெண்களை பொறுத்தவரை சின்னத் திரைப்படங்களிற்குள் புகுந்தும் விதவிதமான ஆடைகள் தங்க நகைகள், ஆடம்பரங்கள், அழகுபடுத்தல் சாதனங்களிலுமே அக்கறை செலுத்துகின்றார்கள்.

பிள்ளைகள் பாடசாலை முடித்து வீடுவந்து உணவு கேட்டால் 'நாடகம் பார்க்கிறேன், தெரியவில்லையா போய் போட்டுச் சாப்பிடு' இப்படிக் கூறினால் பிள்ளைகள் வீதியில் குடித்து விட்டு கும்மாளம் போடுவார்களே தவிர படித்து விட்டு வைத்தியம் பார்க்க மாட்டார்கள். இப்படி வீட்டிற்குள் கூட உறவுகள் மட்டில் சரியான தொடர்புகள் அற்ற நிலை குடும்பங்களில் காணப்படுகின்றன. பெற்றோர் பிள்ளைகள் மட்டில் கவனமின்மை, தகப்பன்மார் குடித்துவிட்டு வீதியில் விழுந்து கிடக்கின்றார்கள்.

எங்கு பார்த்தாலும் அன்னையர் கூடி சின்ன மருமகள், நானும் ஒரு பெண், தங்கம், இப்படி பல சின்னத் திரைப்படங்களைப் பற்றியே பேசுகிறார்கள். ஆனால் பிள்ளை படிக்கிறதா? பாடசாலை செல்கிறதா? நல்ல புள்ளி பெறுகிறதா என்று     ஆர்வமுடன் ஊக்கமளிக்கும் பெற்றோர் வெகுவாக குறைந்து விட்டனர்.

எனவே இவ்வாறு தவறான பாதைக்கு சென்று கொண்டிருக்கும் எமது சமுதாயத்தை நேரான பாதைக்கு கொண்டு வர முற்பட வேண்டும்.

எம் நாவாந்துறை கலை, கலாச்சாரம், பண்பாடு போற்றப்படும் சமூகமாகும். அவை அழிந்துபோய் எங்களுடைய கலாச்சாரம் என்ன என்று கேட்கப்படுகின்ற நிலைக்கு எமது சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது. இவ்வாறான நிலையே எமது சமூகத்தில் நிலவி வருகின்றது.

இளைஞர்களாகிய நாங்கள் ஒன்றிணைந்து எமது சமுதாயத்தில் எதிர் மறையான சிந்தனைகள், எண்ணங்களை திசை திருப்பி பெறுமதி வாய்ந்த கலாச்சாரக் கட்டமைப்பை பேண வேண்டும் என்ற நல்மனதுடன் முன்வந்து செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றேன். மேலும் சில செயற்திட்டங்களை திட்டமிட்டுமிருக்கின்றேன்.


அவை பின்வருமாறு,

செயற் திட்டம்

1.   கல்வி

Ø  பெற்றோருக்கான விழிப்புணர்வுகளை நடாத்துதல்

Ø  மாணவர்களுக்கான முன்னேற்றகரமான செயற்பாடுகள் (பரீட்சைகள்)

Ø  போட்டி நிகழ்வுகள் செய்தல்

Ø  எழுத்தாக்கம் தொடர்பான விரிவுரைகள் (எப்படி ஃ எவ்வாறு எழுதுவது)

Ø  மாணவர்களுக்கான விழிப்புணர்வு, கருத்தரங்குகளை வழங்கல்

எமது செயற்றிட்டத்தின் ஆரம்பப்பகுதி முன்பள்ளி மாணவர்கள் முதல் ஏனைய மாணவர்கள் வரையிலான விழிப்புணர்வு மற்றும் மகிழ்வூட்டும் நிகழ்வுகளை நடாத்துதல்

பயன்கள் - எதிர்பார்ப்புக்கள்

Ø  மாணவர்களை கல்வியில் ஆர்வமூட்டுவதாக இவை அமையும்

Ø  போட்டி நிகழ்வுகள் கல்வியை ஊக்கப்படுத்தும் ஊக்கிகளாக அமையும்

Ø  எழுத்தாக்கம் தொடர்பான முன்னேற்றங்கள் போன்றன கல்வி தொடர்பான வளர்ச்சியில் பெரிதும் பங்காற்றும். கல்வியறிவுடைய எதிர்கால சமூகத்தை உருவாக்கலாம்

2.   கலை

Ø  கலை நிகழ்வுகளை நடாத்துதல்

Ø  கலை ஆர்வம் உள்ளவர்களை இனம் கண்டு அவர்களை ஊக்குவித்தல்

Ø  கலை வகுப்புக்களை நடாத்துதல்

Ø  வளர்ந்து வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக வெளியீடுகள், கௌரவிப்பு நிகழ்வுகளை நடாத்துதல்

Ø  இளையோர் மத்தியிலும் கலை தொடர்பாக விழிப்புணர்வுகள், நாடகம், நடனம், சித்திரம், பாடல் போட்டிகள் நடாத்துதல்

Ø  முன்னோர்களின் கலை தொடர்பாக பதிவுகளை மேற்கொள்ளல்

பயன்கள் - எதிர்பார்ப்புக்கள்

Ø  வௌ;வேறு சிந்தனைகளில் இருந்து விடுபட்டு கலைகளில் ஆர்வம் செலுத்துவதால் ஏனைய தவறான பொழுதுபோக்குகளை குறைக்கலாம். இவ்வாறு செய்வதால் மக்களுக்கும் சமூகத்திற்குமான இடைத்தொடர்புகள் அதிகரிக்கும். எனவே கலையில் சிறந்து விளங்கக்கூடிய எதிர்கால சந்ததியை கட்டியெழுப்பலாம்3.   சமயம்

Ø  வினாவிடைப் போட்டிகளை பங்குமட்டத்தில் நடாத்துதல்

Ø  விவிலிய குறுக்கெழுத்துப் போட்டி ஃ மனனம் செய்தல்

Ø  திருவிவிலியம் திரைக்கதைகளை மாணவர்களை காண்பித்தலும் வினாக்களை வழங்குதலும்

Ø  கருத்தரங்குகள், விரிவுரைகளை வழங்குதல்

Ø  வேறு பங்குகளுடனான நட்புறவு அமர்வுகளை ஏற்பாடு செய்தல்

Ø  தவக்காலம், திருவிழாக்காலங்களில் சிந்தனைகளை வழங்கும்முகமாக குறுந்திரைப்படங்கள் அவை தொடர்பான கலந்துரையாடல்களை மேற் கொள்ளல்

Ø  முன்னுரை, மன்றாட்டு, பாடல்கள் எழுதுதல் போட்டிகளை நடாத்துதல்

பயன்கள் - எதிர்பார்ப்புக்கள்

Ø  சின்னத் திரைப்படங்களிலும், பொய்யான நம்பிக்கைகளிலும் குறுகிப்போன எமது சமுதாயத்தை மீண்டும் ஆன்மீக ரீதியில் வலுப்படுத்தல் இதன் மூலம் மக்களின் ஆன்மீக ரீதியான செயற்பாடுகள் அதிகரித்தல்

4.   விளையாட்டுக்கள்

Ø  ஐனெழழச பயஅநள உள்ளக விளையாட்டுக்கள் தொடர்பான கற்கை நெறியை வழங்குதல், போட்டிகளை நடாத்துதலும்

உ:ம் :- கரம், செஸ்

Ø  ஏனைய விளையாட்டுக்களை பயிற்றுவித்தல்

Ø  ஏனைய சமூகத்துடனான நட்புறவு முறையிலான போட்டிகளை நடாத்துதல்

Ø  குழந்தைகள் மத்தியிலும் பொதுவான விளையாட்டு நிகழ்வுகளை நடாத்துதல்

(பொருட்களை அடையாளம் காணல் ஃ பாகுபடுத்தல்)

Ø  விளையாட்டு வீரர்களுக்கான (சட்ட திட்டங்கள் தொடர்பான கல்வியூட்டல்)

பயன்கள் - எதிர்பார்ப்புக்கள்

Ø  எமது தற்போதைய நிலை எங்கு சென்றாலும் விளையாட்டில் கலவரம், அடிதடி போன்றனவே. எமது சமூகத்தை சார்ந்ததாக உள்ளது. வெற்றி பெறுவதாக அமைவதில்லை. இவ்வாறான நிலைமாறி மகிழ்ச்சியான நட்பு ரீதியிலான சமூகத்தை ஒற்றுமை, விட்டுக்கொடுப்பு போன்ற மனநிலையுடைய வீரர்களை உருவாக்கல்

5.   சுகாதாரம்

Ø  மாநகர சபையினருடனான தொடர்புகளின் வாயிலாக எமது பிரதேச சுத்திகரிப்பை மேற்கொள்ளல்

Ø  இளைஞர்களை ஒன்றிணைத்து சிரமதான நிகழ்வுகளை மேற்கொள்ளல்

Ø  சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வுகளை, கருத்தரங்குகளை நடாத்துதல்

Ø  சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பவர்களுக்கு என போட்டிகளை நடாத்தி ஊக்குவித்தல்

பயன்கள் - எதிர்பார்ப்புக்கள்

Ø  நோய் நொடியற்ற மகிழ்ச்சியான வாழ்க்கையை மக்கள் வாழ வழிவகுக்கப்படுகின்றது.

Ø  சுகாதாரமான பிரதேசமாக எமது பிரதேசமும் விளங்கும்

6.   கலாச்சாரம்

Ø  இளமைப் பருவத்தினருக்கான கல்வியூட்டல்

Ø  கருத்தமர்வுகள்

Ø  நல்ல சிந்தனைகளை ஏற்படுத்தும் முகமாக இளைஞர்களுக்கான, பொறுப்புக்களையும், கடமைகளையும் பகிர்ந்தளித்தல்

Ø  மரபு ரீதியான எமது சமூகம் கொண்டுள்ள தவறான நம்பிக்கைகளை சமூகத்திற்கு எடுத்துக்காட்டல்

Ø  விழிப்புணர்வு நாடகங்கள், கருத்தரங்குகளை மேற்கொள்ளல்

Ø  முதியோர் கௌரவிப்பு நிகழ்வுகளை நடாத்துதல்

பயன்கள் - எதிர்பார்ப்புக்கள்

Ø  தெளிவான எதிர்கால சமூகத்தையும் எமது பண்பாடுகளை தொடர்ந்தும் பேணிப் பாதுகாக்கும் ஆரோக்கியமான சமூகம் உருவாகும் பெறுமதி வாய்ந்த கலாச்சாரக் கட்டமைப்பு உருவாக்கல்

7.   வேலை வாய்ப்பு

Ø  துறைசார் கற்றல் ஆர்வமூட்டல்

Ø  வேலை வாய்ப்பு தொடர்பான விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொடுத்தல்

Ø  துறைசார் கற்கை நெறிகளை வழங்குதலும் அவை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொடுத்தலும்

Ø  தொழில்பயிற்சிகளை கற்பதற்கான ஆதரவுகள், உதவிகளை வழங்குதல்

மேற்படி எமது செயற்றிட்டத்தை செயற்படுத்த உங்களுடைய ஆதரவுகளையும் உதவிகளையும் அங்கீகாரத்தையும் பணிவன்புடன் நாடி நிற்கின்றேன்.

நுவாய் இளையோர் சமூக அபிவிருத்திக் கழகம் நாவாந்துறை

எமது செயற்றிட்டத்துக்கு

       புலம் பெயர்வாழ் மக்களின் ஆதரவும் வரவேற்பையும் பலர் வழங்கியுள்ளனர். எனவே உங்களுடைய ஆதரவுகளும் அங்கீகாரமும் உதவிகளும் எங்களை மென்மேலும் செயற்பட ஊக்குவிக்கும்.


 எழுத்துருவாக்கம். அ.கமிலஸ்  

Ingen kommentarer:

Legg inn en kommentar