mandag 5. mai 2014

பனியில் விழுந்த மனிதர்கள் நாவாந்துறை டானியல் ஜீவா

பனியில் விழுந்த மனிதர்கள்

 நாவாந்துறை டானியல் ஜீவா

நிலவு பார்த்து நீண்ட நாளாயின. இயந்திர இருப்பில் இறுக்கப்பட்ட வாழ்நிலையில் நித்திரையற்றுஇ நிதானமிழந்து ஈழத்துக்காற்றுக்
காவி வரும் கதையோடு பொழுதெல்லாம் போகும். விடிகாலை     விரகம் எழுந்து என்னைச் சினக்க வைக்கும். என்னுயிர் மீட்கும்   
என் மார்போடு ஏதேனும் அணைக்க வேண்டும் போல் இருக்கும். முறிந்துபோன காதல் நிகழ்வு வந்து மனதில் மோதிச் செல்லும்
போது விழிப்பொய்கையின் தீர்த்தத்தால் என்னைக் கழுவிக்கொள்
வேன். நீட்சியான தொடர் சோக வலையத்திற்குள் கனேடிய வாழ்
வும் கசந்து போயிற்றே என்று கவலையோடு இருந்த எனக்கு இர
ண்டு மாதத்திற்கு முன்தான் மனதிற்குப் பிடித்தமான வாழ்விடம் வாய்த்துக் கொண்டது.

பத்திரிகை விளம்பரம் ஒன்றில் வித்தியாவின் அப்பார்ட்மென்டில் 
று}ம் வாடகைக்கு இருப்பதை அறிந்து தொலைபேசியில் வித்தியா
விடம் கதைத்துவிட்டுஇ வித்தியா இருக்கின்ற பில்டிங்குக்குப் 
போனேன். அவள் கதவைத் திறந்து என்னை வரவேற்றாள். அந்த வரவேற்பின் தன்மையில் உள்ளத்தூய்மை ஒளி வீசியது. கள்ளங் கபடமில்லாத மனசு. சுமார் முப்பத்தாறு வயது மதிக்கலாம். சிவப்
பில் மஞ்சள் விழுந்த ரோஜாப்பூ போட்ட இந்ேதூனேசியன் கவுண் போட்டிருந்தாள். உள்ளே அழைத்துச் சென்று று}மைக் காட்டினாள். பின்னர் சோபாவில் இருக்கச் சொன்னாள்.
 குசினிப்பக்கமாகப் போன வித்தியா;
 'என்ன குடிக்கிறீங்கள் ? கோப்பியா ? ரீயா ?' என்று கேட்க
 'உங்களுக்கு ஏன் வீண் சிரமத்தை'
 'பரவாயில்லைஸ இதில் என்ன சிரமம்'
 'எதுவென்றாலும் பரவாயில்லை' என்றேன். கணப்பொழுதில் ரீ 
போட்டுக் கொண்டு வந்தாள். 'று}ம் பிடித்திருக்கா ?'
 'ஓமுங்கஇ எவ்வளவுங்க சாப்பாட்டோட. . ?'
 'முன்னு}ற்றைம்பது டொலர்' என்று உடைந்த குரலில் சொன்னாள்.
 'பிரச்சியைில்லை. நான் அடுத்த மாதம் முதலாம் திகதி வாறேனு
ங்க' என்று சொல்லஇ அவள் சம்மதம் முகத்தால் தெரிவித்தாள்.

ஏதோ அவளிடம் கேட்க வேண்டும் போல் என் மனதில் அரித்துக் கொண்டிருந்தது. கேட்டால் ஏதேனும் தவறான புரிதல் நிகழ்ந்துவி
டுமோ? கேட்காமல் போனாலும் மனம் நிம்மதியாக இருக்காது. சரி எதற்கும் கேட்டுவிடு என்று மனம் கட்டளையிட்டது முடிவாக
 'ரெலிபோனில் நான் கதைக்கும் போது ஒரு குழந்தையின் சத்தம் 
கேட்டது போல் இருந்தது அவங்கலக்காணல... ?'
 'அது என் செல்விஇ அவள் நித்திரையாய்க் கிடக்கிறாள்.'
 'உங்கடை அவர் வேலைக்குப் போல. . . ?' அவள் மெளனித்து நின்
றாள். எனக்கு ஏன்னென்று விளங்கலை. முகம் கறுத்து ஒருவித 
சோகம் அவளில் உறைந்தது.

'ஏதேனும் தவறாய்க் கேட்டிருந்தால் மன்னிக்கவும்.' என்று மிகவும் உடைந்த குரலில் சொன்னேன். 'அதெல்லாம் ஒன்றுமில்லை. அந்தக் கன்றாவிக் கதையைச் சொல்வதென்றால் இப்ப நேரம் போதாது. அது 
ஒரு சோகக் கதைஸ.' என்றாள். நான் சோபாவை விட்டு எழுந்து 
கதவை நோக்கி நடந்தேன். ஏதோ சோகம் முகத்தில் என்னில் படர்ந்து
என் நெஞ்சை அழுத்தியது. கதவைத் திறந்து வழியனுப்பினாள்.

முதல் சந்திப்பிலேயே என் மனதுக்குப் பிடித்துவிட்டது அளந்து பேசு
கின்ற வார்த்தைகள் அடக்கமான குரலில் எதையும் தெளிவாச் சொல் லுதல் அடிக்கடி அலட்டிக் கொள்ளாத தன்மைஇ மற்றவர்களை மதிக்
கின்ற தன்மையாயினும் அவளுக்குள் ஒரு சோகம் குடியிருக்கிறதை வீட்டிற்கு வந்த பின்னர்தான் அறிந்தேன்.

வித்தியா ஊரில் இருந்தபோது கல்யாணம் நிச்சயமானது. கனடா மாப்பிள்ளை என்ற காரணத்திற்காகவே அவளுடைய பெற்றோர் 
செய்து வைத்தார்கள். பின்னர் வித்தியாவின் கணவர் 'ஸ்பொன்சர்ஸ செய்ய இங்கு வந்துவிட்டாள். இங்கு வந்து மூன்று நான்கு மாதங்கள் மட்டுமே அவனோடு வாழ முடிந்தது. வித்தியாவின் கணவனுக்கு ஏற்கனவே ஒரு பெண்ணோடு தொடர்பிருந்தது. அதனால் அவர் அடி
க்கடி வீட்டிற்கு லேட்டாக வருவதை வித்தியா அவதானித்துக் கொண்டிருந்தாள். ஒரு நாள் காரசாரமானஇ விவாதத்தின் பின் கண
வர் வீட்டிற்கு வரவேயில்லை. ஒரு நாள்இ இரண்டு நாள் என்று காத்திருந்து வருடங்கள் பல போயின. வித்தியா கல்யாணம் செய்யும் போது சொல்லிய வாக்குறுதியெல்லாம் உலர்ந்து பேயின.. அவள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மனதால் நொறுங்கினாள். காலம் அவள் 
மீது கருணை காட்டவில்லை. வித்தியா கர்ப்பமாகி செல்வியை பெற்றெடுத்தாள். இப்போது 'விவாகார ரத்துக்கு' விண்ணப்பித்திருந்தாள்.
 ஞாயிறு வேலையில்லாததால் சொஞ்சம் தாமதமாகவே எழும்புவது எனக்கு விருப்பம். ஆனால் அப்படி நிகழ்வதில்லை. என் அறையின் 
கதவு தட்டப்பட்டது. நிச்சயம் செல்வியாகத்தான் இருக்க வேண்டும்.
 'உள்ளே வரலாம்ஸ'' என்று குரல் கொடுத்தேன். கதவைத் திறந்து 
செல்வி வந்தாள்.
 'மாமா குட்மோனிங்.. அம்மா உங்களை ேதுத்தண்ணி குடிக்க வரட்
டாம்'' என்றாள். 'பத்து நிமிடத்தில் வர்றன் என்று சொல்லு'.
 செல்வி 'சரி மாமா' என்று சொல்லிக்கொண்டு கதவைச் சாத்திவிட்
டுப் போனாள். என் மனம் கடந்த கால நிகழ்வுக்குள் சென்றது. தமிழ கத்தில் நான் இருந்த காலம் அது. ஒரு வசந்த காலம்தான். அரசியல் இலக்கியம் என்று விரிந்த வாழ்வுலகம். எப்போதும் நள்ளிரவு இரண்டு மணிவரை ஏதேனும் படித்துக் கொண்டிருப்போன். நான் ஒரு நண்ப
னின் வீட்டில்தான் இருந்தேன். அவ்வப்போது எனக்குள் எழுகின்ற உணர்வுகளையெல்லாம் வார்த்தைகளால் ஒரு நாட்குறிப்பில் எழுதி வைப்பேன். மனதில் சோகம் அப்பிக் கொண்டாலும் அதன் வடிகாலாய் 
அந் நாட்குறிப்பிலேயே பதிவாகும். என் நண்பனுக்கு ஒரு தங்கை
அவள் பெயர் சீதா. கொஞ்சம் கறுப்பாயிருப்பாள். அவளின் கூந்தலுக்
குள் சிலவேளை காணாமல் போய்விடுவேன். கருமையும்இ நீளமும் அடர்த்தியும் கொண்ட தலைமுடியான எந்தப் பெண்களைப் பார்த்தா
லும் அவற்றை ரசிக்க வேண்டும்போல் என் மனம் சொல்லும். சீதா ஏற்கனவே ஒரு பையனைக் காதலித்துக் கொண்டிருக்கிறாள். ஏதே
னும் சிக்கலென்றால் கூட என்னிடம்தான் ஆலோசனை கேட்பாள். 
நானும் மனம் திறந்து கதைப்பேன். என் நாட்குறிப்பை நான் வீட்டில் இல்லாத வேளை அவள் வாசித்திருக்க வேண்டுமென்று நினைக்கின்
றேன். ஒரு நாள் கண்கள் கலங்கியவாறுஇ என்மீது இரக்கபட்டு நாட்
குறிப்பிலிருக்கின்ற விடயத்தைப்பற்றி என்னோடு பகிர்ந்தாள். அதில் எழுதியிருந்த விடயத்தில் சிலவற்றை நினைவில் வைத்து என்னிடம் அவள் சொல்கிறாள்...
 'இன்றிரவு தூங்குவதற்கு முன் நாட்குறிப்பின் பக்கத்தைத் திருப்புகி
றேன். இன்று மாசி பத்தாம் திகதி. என் இனியவளின் பிறந்தநாள். 
அவள் இவ்வேளை கனடாவில் என்ன செய்கிறாளோ தெரியலை. 
ஆனால் எனக்குள் அவளின் நினைவைச் சுமக்கின்றேன். தொடர்பு 
கொள்ள முடியாத சூழலில் எப்படி அவளுக்கு விருப்பமில்லை என்று முடிவெடுப்பது. அதுமுதல் காதல் என்பதால் என்னில் நெடிய வலியை ஏற்படுத்தி விட்டது. அன்றொரு நாள் மார்கழியின் முன்னிரவில் அவளிடமிருந்து விடை பெற்று தமிழகம் வந்தேன் கண்ணீர் கசிவோடு தவிர்க்க முடியாமல் பிரிவாயிற்று. அதன் பின்னர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள முடியாத வேளையில் இருந்தபோதுதான் அவள் 
கனடா சென்றதாக அறிந்தேன்ஸ.'சீதா மனப்பாடம் செய்திருந்த எனது நாட்குறிப்பில் ஒருநாள் பதிவை எனக்கு சீதா சொன்னபோதுளூ கலாவின் நினைவுதான் மீண்டும் எழுந்தது.

காதல் ஆண்களைக் கொல்வதைப்போல் பெண்களிலும் நிகழ்வதுண்டா ? அப்படி நிகழ்ந்திருந்தால் ஏன் இன்னும் தொடர்பு கொள்ளாமல் அவளால் இருக்க முடியும். . . ? சில வேளை என் முகவரி அவளுக்குக் கிடைக் காமல் இருக்கலாம்தானே என்று மனதுக்கு ஆறுதல் கூறிவிட்டு சீதா
வை நிமிர்ந்து பார்த்தேன். அவளின் முகம் ஏனோ சோகத்தில் வாடிக்கி டந்தது.
 'ஏன் ராஜா எப்போதோ காதலித்தீர்; என்பதற்காக இப்போதும் அதையே நினைத்து மனதால் நொந்து கொண்டிருக்கிறீரே இளமையின் துடிப்பில் எழுச்சியில் எழுந்த உணர்வால் அவளிடம் உமது மனதை பறிகொடுத்
தீர் இல்லையென்னவில்லை. எப்போ வாய்ப்பு வருமென்று சில ஆண்
கள் வாழ்ந்து கொண்டிருக்கும்போது நீர் மட்டும் அந்தக் காதலுக்காய் நினைவால் அழுது கொண்டிருக்கிறீர். அதுதான் தவறென்கிறேன்.
என்றாள்.
 'என்னைப் பொறுத்தவரையில் அது முதல் காதல்... காதல் என்றால் 
என்ன என்று அறியமுன் எழுந்திருக்கலாம். ஆனால் என்னுள் அது ஏற்படுத்திய மாறுதல்கள் எண்ணிக்கையற்றவை. அவளோடு நெருங்
கிப் பழகவில்லையென்றாலும் அவளை ரசித்தேன். அவளின் பார்வை
யின் தெறிப்பில் என்னையிழந்தேன். எனக்குள் அவள் நினைவுகள் அத் தனையும் பதிவாய்யுள்ளன. அவளோடு வாழ்ந்தாக நினைத்து இன்று
வரை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நினைவு உறங்காது. விழித்துக் கொண்டிருக்கின்றது'
 'சொறி ராஜா உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் என்னை மன் னிக்வும். ஆனால் என்னைப் பாருங்கள். நானும் ஒருத்தரை காதலிக்கி றேன். அவரோடு நிறையவே கதைக்கின்றேன். வாழ்ககையின் புரிதல் நோக்கு போன்றவற்றைப் பற்றியெல்லம் கதைப்பதுண்டு. ஆனால் 
அவன் அதைப்பற்றி எதுவுமே கவலைப்படுவதில்லை. அதேபோல் 
நானும் பொரிதாக அன்பு வைத்து பழகமுடியாத நிலையில் தாமரைத் தடாகத்தில் நிற்கும் நீர்போல் என் நிலை. ஆனால் ஒரு வேளை பிரிதல் என்று நிகழ்ந்தால் கூட நாங்கள் கவலைப்படப் போவதில்லை. நடந்த வற்றை ஒரு கனவாய் நினைத்து மறந்து விடுவோம். ஆனால் நீங்கள் அப்படியில்லை. அதுக்காக வாழ்ந்துளூ அதற்காகவே அழிந்து போவீர்கள் போல் தெரிகின்றது. அதனால் தான் உங்களை நினைக்க கவலையாக இருக்குது'' என்று சீதா சொல்லிக் கொண்டிருக்கும் போதே நண்பன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான்.
 'என்னம் தூங்கலையெ' என்று கேட்டான்.
 'இலலை சாப்பிட்டபின் சாப்பாடு செமிப்பதற்காக இருவரும் கதைத்துக் கொண்டிருந்து விட்டோம். நேரம் போனது கூட தெரியல்லை' என்று சிரித்துக் கொண்டு சொன்னேன்.
 'திருச்சிக்குப் போக வேண்டியதை மறந்திட்டாய்..? நாளைக்கு வேளை
க்கு எழும்ப வேண்டும்.காலையில் பஸ் எடுத்தால்தான் பின்னேரம் இலக்கியக் கூட்டத்திற்குப் போகலாம் அப்படியே உச்சிப்பிள்ளையார் கோயில்இ ஸ்ரீரங்கம் திருவானைக் கோயில் எல்லாம் பார்க்கலாம். 
இரவு கே.கே. நகரில் சுந்தர் வீட்டில் தங்கியிருந்து மறுநாள் காலை சென்னைக்குத் திரும்பலாம்' என்றான்.
 நான் பேசாமல் தலையை அசைத்தேன்.
 சென்னையில் வாழ்ந்து கொண்டிருந்த வேளையில்தான் ஒரு நாள் நானும் சீதாவும் வீட்டில் இருந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்வி
ட்டு மத்தியான வெயிலின் வெக்கை கண்ணை மசக்கி தூக்கத்திற்கு கொண்டுபோனது. நான் கட்டிலில் கொஞ்சம் அசதியாகிவிட்டேன். சீதா கட்டிலுக்கு பக்கமாக இருந்த மேசையின்மேல் தலையை வைத்தபடி கட்டிலில் இருந்தாள். திடாரென.... என்னை சீதா எழுப்பினாள். நான் திடுக்கிட்டு விழித்தேன்.
 'ராஜா என்னை விட்டுட்டா தூங்கிறாய்ஸ. ?' என்றாள். எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் மெளனித்தேன். கணப்பொழுதில்...
 'ஏன் சீதா நீ தூங்கலயா... ?'
 'மேசையில் தலையை வைத்துக்கொண்டிருந்தேன்இ ஆனால் தூங்கல'
 'ஏன்... ?' 'உன் நினைவு என்னைக் கொல்லுது.'
 'என்ன சொல்ற...உனக்கென்ன பயித்தமா பிடிச்சிட்டுதுஸ.'
 ' என் காதல் வாழ்வு முறிந்து விட்டது.' நான் விக்கித்துப் போனேன்.
 'என்ன நடந்தது ?'
 'அவன் வேறும் சுகம் தேடும் காமுகன். அதனால் எனக்கு பிடிக்கலேள நேற்றையோடு அவனை கை கழுவி விட்டேன்'. நான் எதையோ இழந்
தது போல் நினைக்க...
 'அவள் என்னைப் பார்த்து இதையெல்லாம் நானே பெரிதாக எடுக்கல
 நீ ஏன் அதைப்பற்றி யோசிக்கிறாய் ? ராஜா உனக்குப் பிடித்தமான 
'பிளேன் ரீ'' போட்டுக்கொண்டு வரட்டா... ?'
 'சரி போட்டுக்கொண்டு வா..' என்றேன். இரண்டு கப்பில் தேநீர் போட்
டுக் கொண்டு வந்து எனக்கு ஒன்றை தந்தாள். நான் சொஞ்சம் கண்
களை மேலே உயர்த்தி அவள் கையில் வைத்திருந்த தேனீர்; கோப்
பையை எட்டிப்ப பார்த்தேன். அந்தக் கோப்பையிலும் வெறும் தேனீர்தான்ஸ.
 'ஏன் சீதா நீ பிளேன் ரீ குடிக்கிறதில்லையே ? இப்ப திடாரென.. ?'
 ' ராஜா இனிமேல் உங்களுக்கு எது பிடிக்கிறதோ... அதெல்லாம் என
க்குப் பிடிக்கும்.' ' என்னில் உனக்கு எதுவெல்லாம் பிடிக்கும் ?' 'குஞ்சு 
முகம் பிடிக்கும்இ குறுந்தாடி பிடிக்கும். உன் கவிதை பிடிக்கும். மொத்தத்தில் உன்னையே பிடிக்கும்ஸ.'என்று சொல்லிக் கொண்டு 
என்னை தன் நெஞ்சோடு அணைத்து முத்தமிட முயன்றாள். அவ
ளின் பேச்சில் என்னை மறந்திருந்த எனக்கு நெஞ்சோடு அணைத்த
வுடன் கோபம் வந்தது... 'சீதா இதை என்னோடு வைத்துக்கொள்ளாதே. 
நீ நினைக்கிற நிலையில் நான் இல்லை. இண்டையோட இந்தச் 
சேட்டை யெல்லாத்தையும் நிறுத்து! ஒரு மனிதன்மீது அன்பு செலுத்து வதற்குப் பதிலாக ஆதிக்கம் செலுத்துகிறாய். இவ்வளவு நாளும் உன்
னை என் சகோதரியாக நினைத்துத்தான் பழகினேன். நீ இப்படி நடந்து கொள்வாய் என்று கனவில்கூட நான் நினைக்கல....

'ராஜா இப்பவும் சொலெ;றன்இ எப்போதே நிகழ்ந்த ஒன்றுக்காய் வாழ் றாயோ அதுதான் தவறு. நான் உன்னை இன்று விரும்பினதாக நீ நினைக்காதே உன்னுடைய ஒவ்வொரு செயலும் என்னைப் பாதித்தது எனக்குள் மாறுதல்களை உண்டு பண்ணியது. இன்று சொல்லாவிட்டா
லும் உன் பதிலுக்காக காத்திருப்பேன்..'என்றாள்.

எப்படியோ மூன்று வருடம் ஒடிவிட்டது. நான் மீண்டும் யாழ்ப்பாணம் போய்விட்டேன். சீதாவும் வெளிநாட்டு விடயம் சரிவராமல் மன்னாரு
க்கு திரும்பி வந்து விட்டாள். சீதாவை அவள் வீட்டுக்கார் திரமணம் செய்ய வற்புறுத்தினார்கள். அவள் விரும்பவில்லை. எனக்கும் அவளு
க்கும் மட்டும்தான் காரணம் தெரியும். பின் அவளுடைய நண்பியிடம் 
ஒரு கடிதம் மன்னாரிலிருந்து கொடுத்து அனுப்பினாள். அக்கடிதத்தில்..
 எனக்குப் பிரியமானவரே!
 நான் நலம்இ நலம் அறிய ஆவல். என்னைத் திருமணம் செய்யும்படி எனது வீட்டார் வற்புறுத்துகின்றார்கள். நான் என்ன முடிவு எடுப்பதென்று புரியாத நிலையிலுள்ளேன். நீ எனக்குள் வாழ்கிறாய்.. அப்படி இருக்கும் போது இன்னொருவனுக்குச் சொந்தமாவது எப்படி ? என் இதயம் உன்
னைச் சுமந்து நெடுநாளாய் வாழ்கின்றது. தமிழகத்தில் வாழ்ந்த வாழ்வே இன்னும் எனது இருப்பை இனிமையாக்கிக் கொண்டிருக்கின்றது. எப்படி யாயினும் உனது பதிலை கொடுத்தனுப்பி விடவும். அப்படி அனுப்ப வில்லையாயின் நீ இன்னும் என்னை விரும்பவில்லையென்றே முடிவெடுக்கலாமென்று நினைக்கிறேன்.என்றும் உன்னை நேசிக்கும்
 சீதா
 நான் கடிதத்தை வாசித்து முடித்ததும் என் கண்கள் கலங்கியது. ஏன் இன்னும் என் மனம் கனடாவில் வாழ்கின்ற கலாவைப் பற்றியே நினை த்துக் கொண்டிருக்கிறது..? சீதா வேறு ஒருவனை காதலித்து கைவிட்ட தாலா....சீதாவை விரும்ப மறுக்குது மனசு. என் மனம் ஒரு கணம் சஞ் சலப்பட்டது. சீதாவின் அண்ணன் என்னை கவனித்த விதம் எல்லாம் 
என் மனதில் தோண்றி மறைகிறது. நான் பதில் கடிதம் கொடுத்து விட
வில்லை. சீதா இன்னொருவனின் மனைவியாகிவிட்டாள்!
 நான் யாழ்ப்பாணத்திலிருந்த போதுதான் இந்திய இராணுவம் ஈழத்தின் மீது போர் தொடுத்தது. அதன் பின்னர் ஊர் ஊராய் அகதியானேன். யுத்
தம் முடிவுக்கு வருவதற்குள் கொழும்பு வந்து விட்டேன். கொழும்பிலி
ருந்து ஒரு வெளிநாட்டு முகவர் நிலையத்தினுடாக கனடா வந்தபொ
ழுது கலாவைத் தேடினேன். கண்டுபிடிக்க முடியலை. ஒரு நாள் வோர்டன் அன் பின்ஞ்சிலுள்ள கே. மாட் கடைக்குள் எதிர்பாராத வித
மாகச் சந்தித்தேன். தள்ளுவண்டியில் ஒரு குழந்தையோடு..விக்கித்துப் போனேன். இருவரும் பேச முடியாத அமைதி. ஏதோ போன ஜென்மத்
தில் எங்களுக்குள் ஒரு உறவு படர்ந்தது போல் பார்வையின் தெறிப்பு....
 'என்ன கலா எப்படி இருக்கிறீர்... ?
 'எப்படியோ இருக்கிறேன்ஸ..' அவளின் பதிலில் ஒருவித விரக்தி தென்பட்டது.
 'குழந்தை உன்னைப் போலவே இருக்குதல்லஸ'. மெளனவிரதம். 
அவள் கண்கள் கலங்கின. ஏதோ சொல்ல முனைவதுபோல் அவள் எத்தனித்தாள். 'ராஜா உங்களுக்கு எத்தனை பிள்ளைகள். ?'
 'இன்னும் கல்யாணமே செய்யல....' கண்களிலிருந்த கண்ணீர்த் துளிகள் மெதுவாக கன்னத்தில் படிந்தது. 'ஏன் அழுகிறீர்... ?'
 'அழாமல் என்ன செய்ய..! எல்லாம் முடிந்து போனது என் வாழ்வும்தான்.
 'என்ன நடந்தது... ?'
 'இந்தக் குழந்தை கல்யாணத்தின் விளைபொருள். ஆனால் கல்யாண வாழ்வு அஸ்தமித்துவிட்டது.' 'என்ன சொல்றீங்க கலா...'
 'நான் 'தனித்தாய்' வாழ்க்கை' என்று சொல்லியபடி விழிகளைத் துடைத்துக் கொண்டாள். நான் வேலைக்குப் போறதற்கு நேரமாகுது என்று சொல்லிக்கொண்டு நடக்கத் தொடங்க
 'ராஜா உங்கட ரெலிபோன் நம்பரைத் தாங்ங்களென் ?' என்று கேட்டாள். எனக்கு விசர்க் கோபம் வந்தது. ஏதேனும் அவளுக்குச் சூடான பதில் சொல்லணும் போல் தோன்றியது.
 'முற்றுப்புள்ளி வைத்த கதையை இனி தொடர விரும்பவில்லை'' என்று சொல்லிக் கொண்டு கடைக்கு வெளியே நடந்தேன்.
 'மாமா.. மாமா..' என்று மீண்டும் செல்வி கதவைத் தட்டினாள். என் கட
ந்த கால நினைவிலிருந்து மீண்டேன்.
 'செல்வி கதவைத் திறந்து வாங்களென் உள்ளே''என்று குரல் கொடுக்க செல்வி உள்ளே வந்தாள். 'மாமா உங்களுக்கு ரெலிபோன்ஸ. ரெலி போனை கதைச்சுப் போட்டு மம்மி உங்களை வெளியில வரட்டாம். தேத்தண்ணி குடிக்க..' என்று சொல்லிக் கொண்டு கதவைச் சாத்தி
விட்டுப் போனாள்.
 'ஹலோ...!'மறு முனையில் நண்பன் சக்தி. 'என்ன வெள்ளணத்தோட..?'
 'இண்டைக்கு பின்னேரம் என்ர பிள்ளையின்ர பிறந்த நாள். ஒருத்தரு
க்கும் சொல்லல. என்ர பிரண்டுகளுக்கு மட்டும்தான் சொல்றன். நீ 
உன்ர வீட்டுக்கார அக்காவையும் பிள்ளையையும் கூட்டிக்கொண்டு வாவன்..' 'இல்ல நான் மட்டும் வாறேன்''
 'ஓ.கே. பாய்' என்று தொலைபேசியை துண்டித்தேன். என்னைக் கூப்பிட்
டது சரி. ஆனால் ஏன் என் வீட்டுக்கார அக்காவை அழைத்துக்கொண்டு வரச் சொன்வது எந்த வகையில் நியயாம்... ? போன கிழமை சக்தி வீட்டுக்குச் சென்றபோது சக்தியோடு ஒரு கணம் கதைத்தவை என் நினைவுக்கு வந்தது. 'மச்சான் நீ நினைக்கிற மாதிரி வாழ்க்கையில்லை. நீண்ட விரக்தியில் இன்னும் கல்யாணம் செய்யாமல் இருக்கிறாய். 
அது பிழையான விடயம். ஒரு பெண் செய்கின்ற தவறுக்காக எல்லாப் பெண்களையும் அதே நிலையில் வைத்துப் பார்ப்பதுதான் தவறு. உதார ணத்துக்கு வித்தியாவை எடுத்துககொள். தன் கணவனைத் தெய்வமாக நினைத்தவள். ஆனால் இன்னொரு பெண்ணுக்குக் கணவனாய் இருந்
தான் அவன். அதனால் அவள் அவனை வெறுத்தாள். இப்போ விவாகார ரத்திற்கு விண்ணப்பித்திருக்கிறாள்;;''.
 'சக்தி இப்ப நான் என்ன செய்ய வேண்டுமென்று நீ நினைக்கிறாய் ?'
 'வித்தியா நல்லவள். உன்னால் முடிந்தால் அவளுக்கு வாழ்வு கொடுக் கலாம்ஸ.'. சக்தி சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்டு 'வித்தியாவிற்கு ஆட்சேபணையில்லையென்றால் நான் அவளைத் திருமணம் செய்கி
றேன'; என்றேன். சக்தி மீண்டும் மெல்லிய குரலில் மகிழ்வோடு... 
நான் ஏற்கனவே வித்தியாவிடம் கேட்டுவிட்டேன். அவளுக்கு விருப்
பம் என்று என்னிடம் சொன்னவள்.நீ யோசித்து முடிவொன்றுக்கு வா இப்படியே எத்தனை நாளுக்கெண்டு இருக்கப் போற'.ஒரு கணம்தான் நினைவிலிருந்து நான் மீண்டேன்.கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தேன்.

(முற்றும்)



ஒரு தேசம் முகமிழந்து....
-நாவாந்துறைடானியல்ஜீவா-


மனோரம்மியமான மாலை வேளை பால் நிலவின் ஒளியை பண்ணை வீதியில் நடைப் பயணத்தில் அனுபவித்தோம். மதியின் அழகில் வாசமி  ழந்தோம். காற்றின் சுகந்தம் கண்களை மூடவைத்தது. வாடை பெயர்ந்து போக மகிழ்ச்சியின் வரவில் சோளகம்.உதிரப் புனல் ஓடும் வீதியில் கடந் துபோன வருடங்களில் அவ்வப்போது ஒரு இடைவெளியும், சிறுமாற்ற மும் வைகறையாய் எட்டிப் பார்த்தபோதும் நிரந்தர வெளிச்சம் இன்னும் நெடுந்தூரம்தான். வசந்த காலம் வாசலில் வந்ததாக மக்கள் மகிழ்ந்திருந்த வேளையில்தான் அந்த யுத்தம் தொடங்கியது.

அந்தக் கிராமத்திலிருந்து குடும்பம் குடும்பமாக இடம் பெயர்ந்து வேல ணைக்கும், யாழ்ப்பாண இந்துக் கல்லூpக்கும் போய்விட்டார்கள். சில குடும்பங்கள் மட்டும் ''நீக்கிலாரே'' தஞ்சம் என்று கோயிலுக்குள் இருந்து விட்டனர். கோட்டையை பிடிப்பதற்காக காக்கை தீவுப்பாதையால் வந்த இந்திய இராணுவம் கடற்கரை வீதியால் முன்னேறிச் சென்றபோது கோயி லுக்குள் இருந்தவர்கள் சிறைக் கைதிகளானார்கள். காலையில் குறிப்பிட்ட நேரம் வரை வீட்டைப் பார்ப்பதற்காக வெளியில் விடுவார்கள். மிகுதி நேரம் முழுவதும் கோயில் வளவைச் சுற்றியே வாழ்க்கை. கோயிலின் முன்பாக சீக்கிய இராணுவம் எந்நேரமும் காவலில் நிற்கும். சீக்கிய இரா ணுவம் என்றதும் சின்ராசாவுக்கு மதுரையில் கூடல்நகர் அகதி முகாமில் 85ம் ஆண்டு இருந்தபோது நடந்த நிகழ்வுகள்தான் அவன் நினைவுக்கு வரு கின்றன. அங்கு வாழ்ந்த காலத்தில் பல கசப்பான அனுபவங்களை உள் வாங்கினான். அவற்றில் இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது கிடைத்த அனுபவம் அவனுக்கு ஒரு வகையானது. ஒரு சீக்கிய இராணுவம் சுட்ட தற்காக அப்பாவி சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போதெல்லாம் கவலைப்படான், கண்ணீர் வடித்தான் இப்போது இந்தச் சீக்கிய இரானுவ த்தின் அடாவடித்தனத்தை நினைத்து ஆத்திரம் கொண்டான். குப்பென்று வந்த கோபத்தில் உடல் உறைந்தது.

சின்ராசாவுக்கு மனைவியின் இழப்பால் மனசு சிதிலமடைந்து போனது. முறுக்கிய மீசையும் தேர்வடம் போல் கழுத்தைச் சுற்றியபடி கிடக்கும் தங்கச் சங்கிலியும், மோதிரம் நிறைந்த விரல்களும், கம்பீர நடையும், நெடும்பனை உயரமும் கொண்ட, அந்த கிராமத்து மக்களால் அதிகம் நேசிக்கப்படுகின்ற மனிதன்தான் சின்ராசா. அவனுடைய பெயருக்கு பொருத்தம்போல் அவன் ஒரு ''சின்ன''ராசாவாகத்தான் ஒருகாலத்தில் இருந்தான். விடுவலை வள்ளத்திலும் ஒருதரும் அவனை குறைசொல்வது கிடையாது. தொழிலை நடத்துவதே அவனது தனித் திறமையால்தான்.

இப்போது சின்ராசா என்ன செய்வதென்ற புரியாத நிலமையில்..மெலிந்து போன உடல் தோற்றமும், கிழிந்து போன வலையைப் போல் அவனது உடலை ஒட்டிக் கொண்டிருக்கும் பெனியனும் முகமே வெண்மை வேளா ண்மை விதைத்தது போல். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற ஏக்கப் பெருமூச்சோடு காற்று காவிவரும் கொடுமையை கன்னத்தில் இரு கைக ளையும் ''மரக்கினுக்கா'' முண்டு கொடுத்தபடி உதட்டில் ஒட்டு பீடியை குடித்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்தான்.

'இந்த மனுசனுக்கு சொன்னாலும் கேக்காது.... காலையிலிருந்து சொல்லிக் கொண்டுதான் இருக்கிறன் அவங்களுக்கு ஆக்கள் இல்லையென்டதற்காக இந்தாலை பிடிச்ச பிடியாக நிற்கிறாங்க..... என்னன ஜயா சொல்லனன நான் வரமாட்டேனென்டு' சின்ராசாவைப் பார்த்தபடி இளைய மகள் சொன்னாள். 'எல்லாமே போய்ச்சுது உயிரத்தானும் காக்க சாப்பி வேண் டாமா.......? நேற்றுக் குடித்த தேத்தண்ணீயோடு நீயும் குழந்ததைகளும், நான்தான் கட்டையிலே பொறவன் இந்தப் பிஞ்சு குழந்தைகள் என்ன பாவம் செய்ததுகள் இப்படி உத்தரிப்பதற்கு......'என்றான் சின்ராசா.

சின்ராசாவுக்கு இரண்டு பெண்கள். மூத்தவள் முத்துமணியை கரையூரில் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டான். இளையவள் சின்னமணியை ஊரோடு மாப்பிளையாக இருக்க வேண்டுமென்பதற்காக யோசேப்பின்ர மகனுக்கு கல்யாணம் செய்து வைத்தான். சின்ராசாவின் மனைவி இறந்த நாளிலிருந்து சின்னமணியோடுதான் சாப்பாடும், இருப்பும். தொழிலுக்கு போவதும் பேரப் பிள்ளைகளோடு விளையாடுவதிலும் நேரம் போய்விடும். சின்னமணியின் மூத்த மகன் ஏழாம் வகுப்பு படிக்கிறான். இரண்டு வருட ங்களுக்கு முன்தான் தன் கணவனை இழந்தாள் சின்னமணி. வறுமையில் அனுபவிக்கிற வேதனையை விட அவளுடைய கணவனை இழந்த துயர் தான் அவளுக்கு இன்னும் மறக்க முடியாமல் இருக்கிறது. அவள் கண் முன்னே அவன் நினைவு தோன்றியது. மனசு ஒரு கணம் சஞ்சலப்பட்டது. மனசை சரி செய்து ஒரு நிலைக்குக் கொணடு;வர முடியாமல் அவன் நினைவே மீண்டும் மீண்டும் வந்தது.நெஞ்சு சோகத்தால் முட்டியது. கண் முன்னே அவன் தோன்றினான்.
ஒரு நாள் கடலுக்கு போயற்று வந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் மூத்தவனின் அழுகைச் சத்தம் கேட்டது.
'என்னடி சின்னமணி புள்ளே ஏன் அழுகுதென்டு கேளன்' என்றான்.
'இன்டைக்கு காலையிலே பள்ளிக் கூடத்திலே ''தமிழ்ப் புத்தகம்'' வாங்கிக் கொண்டு வரலேயென்டு அடிச்சிட்டாராம் வாத்தி அதான் அழுது கொண்டு நிற்கிறான். நான் சொன்னாலும் கேட்கிறான் இல்லை'
'அழ வேண்டாமென்டு சொல்லு. நான் சாப்பிட்டுப்போட்டு ரவுனுக்கு போய் வாங்கிக் கொண்டு வாறன்....' என்றான். சாப்பிட்டது அரையும் குறையுமாக கடல் வெக்கையோடு பூபாலசிங்கம் புத்தகசாலைக்கு போனவன்தான் இன்றுவரை வீடு திரும்பவில்லை. யாரோ அவனை மறித்து மினிவானில் ஏற்றிக் கொண்டு போனவங்களாம் அவளும் இன்றுவரை அவனுக்காக கசிந்து, உருகி... கடலுக்குள் கரைந்து போன மீனவனுக்காக எங்க ஊர்ப் பெண்கள் காத்திருப்பது போல் காத்திருக்கிறாள்.
சின்னமணி கடவுள் பக்தி அதிகம் உள்ளவள.; அகதி வாழ்வில் கூடுதலான நேரத்தை கோயிலுக்குள்ளேயே செலவு செய்வாள். ஓவ்வொரு செவ்வா யும் பாசையூர் அந்தோனியார் கோயிலுக்கு தவறாமல் போய் வருவாள். இப்ப எப்படித்தான் அவளால் போக முடியும்.....கந்தப்பு சம்மாட்டியும் சின்ராசாவை விட்டபாடில்லை. 'சின்ராசா மேவலைக்கு ஒருத்தர்தான் குறையுது நீ வந்தால் சரியாய் போய்விடும்' என்றான.; சின்ராசாவின் குடும்பத்தின் மேலுள்ள அன்பினால் அல்ல தன்னுடைய தொழிலை நன்றாக நடத்தக் கூடியவன் என்ற ஒரே நோக்கத்திற்காகவே 'நாங்கள் பாஸ் எடுக்க எவ்வளவு பாடுப்படனாங்கள் தெரியுமோ சின்ராசா.? மூன்று மணித்தியாளங்கள் தந்தவங்க....அதுவும் கொண்டிசனோட.... முனங்குக்கு அங்காலே கொட்டடி பக்கம் போகாமலும் இங்கால காக்கை தீவுப்பக்க
மும் போகாமல் துறைக்குள்ளேயே விடு வலையை வைக்க வேண் டுமாம்....ஐஞ்சு ரூபா பங்குக்கு கிடைச்சாலும் ஆருதரப் போறாங்க.....'  கெஞ்சும் குரலில் சம்மாட்டி கேட்டான். சின்ராசாவிற்கு கோபம் கலந்த பெருமூச்சை விட்டுக் கொண்டுளூ 'இவங்கள ஆரு வரச்சொன்னது..... எங்கட சனத்தை ஏன் சுட வேண்டும்....?' கந்தையா குறுக்கிட்டு 'எங்கட பொடியன்கள் சுட்டதால்;த்தான் அவங்களும் சுடத் தொடங்கினாங்க....' என்றான்.
'ம்.. அதற்கு சுட்டவங்கள பார்த்து சுடவேண்டியதுதானே.... அப்பாவிச் சனங்கள் என்ன செய்ததுகள்...? அவையட நாட்டிலேயே இமயம் முதல் குமரிவரை ஆயிரத்தெட்டு பிரச்சனை அந்தப் பிரச்சனைகளை தீர்க்க வழியக்காணல....இங்க வந்திருக்கினமாம் எங்கட பிரச்சினை தீர்க்க....என்று சொல்லிக் கொண்டே இடுப்பில் செருகி வைத்திருந்த மடிப்பெட்டியை எடுத்தான் சின்ராசா.
சம்மாட்டி சரியென்று ஏற்றுக் கொள்வதுபோல் மௌனமாக நின்றான்.
'சின்ராசாவின் விசர்க் கதையை பாரேன்... அங்காலே அவங்க நிற்கிறா ன்கள் கேட்டாலும் கொண்டாலும்'என்றாள் கந்தையாவின் மனைவி. இவர்கள் கதைத்துக் கொண்டிருந்தவை எல்லாவற்றையும் கோயிலி;ன் முகப்பை சுற்றி போடப்பட்டிருந்த கம்பியை பிடித்துக் கொண்டிருந்த ஆனந்தன் அவதானமாக கேட்டுக் கொண்டிருந்தான்.இந்த விவாதங்கள் சூடுதணிய எல்லோரும் கடலுக்கு போவதற்கு ஆயத்தமானர்கள்.
சின்ராசாவின் மடுப்பெட்டிக்குள் வெ;றிலை, பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை, ஆர்.வி.ஜி பீடி போன்றவற்றை வைத்து கடல் தண்ணீரில் நனையாதவாறு பொலித்தீன் பையினால் மூடி வைத்திருப்பது வழக்கம்.ஆயினும் இப்போது பீடியைத் தவிர வேறு ஒன்றுமில்லை. பீடியை எடுத்து வாயில் வைத்த படி.... 'கந்தையாண்ணே கடலுக்கு போவமா?' என்றான் சின்ராசா.
'அம்மையா' என்று அழுதபடி சின்னமணியின் இளையவள் ஓடிவந்தாள். சின்ராசா தன் உடலோடு அனைத்து இரண்டு கன்னத்திலுமிருந்து வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு அவளது கன்னத்தில் மெல்ல முத்தமிட்டான். அவளது அழுகை நின்றுவிட்டது.
குண்டுகள் துளைக்காதபடி கடல் தொழிலாளர் வள்ளத்தை கடலுக்குள் அமுக்கி விட்டிருந்தார்கள்.விடுவலைக்கு பெரிய வள்ளம் ஒன்றும், தொடு வைக்கென்று சிறிய வள்ளமும் பாவிப்பது வழக்கம். பெரிய வள்ளத்திற் குள் நிறைந்து கிடந்த தண்ணீரை பட்டையாலும், வாளியாலும் அள்ளி ஊத்திக் கொண்டிருந்தார்கள்.சின்ன வள்ளத்தையும் தாட்டு வைத்திருந்த தால் அதற்குள் கிடந்த தண்ணீரை ஏற்கனவே இறைத்து விட்டார்கள்.
கந்தையாவும், சின்ராசாவும் கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருந்தா ர்கள்.
அரைமணித்தியாலத்திற்குள் எல்லாவற்றையும் விரைவாக முடித்துக் கொண்டு ஏலேலோ பாடலோடு தோணிகள் தொழிலாளர்களை சுமந்து கொண்டு காற்றின் எதிராய் கடல் அலைகயைக் கிழித்துக் கொண்டு நகரளூ உவர்நீர் வெண்நுரை கக்கியது. எம் சொந்தகங்களின் செங்குருதி கள் இக்கடலோடு தானே கரைந்துபோனது அல்லவா....? காற்றினில் கறை சேற்றினில் பிணம் ஆயினும் மீனவன் வாழ்வின் மீது தீராத காதல் கொள் வான். நலிந்த வாழ்விலும் நெஞ்சினில் நளைய வாழ்வுக்கான நம்பிகை விதை... கடற்கரை வெளியில் கனவுகள் விரியும். அவனது விழிகளின் உயிர்ப்பெல்லாம் கடல்தான்.

தொழிலாளர்களை அனுப்பிவிட்டு கடலையே பார்த்துக் கொண்டிருந்த கந்தப்பு, தொடுவை வள்ளத்திற்குள் நின்றவர்கள் ஓலைக் கயிற்றை வளை த்த வேகத்தை கண்டு ஏதோ வள்ளத்தில் நின்றவர்களுக்கு நடந்ததுபோல் உணர்ந்தான். பதட்ட நிலையில் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந் தான். விழிகள் பிதுங்கியது. கொஞச நேரம்கூட நிதானமாக நிக்க முடியாத நிலை அவனுக்கு.. சில நிமிடங்களுக்குள் கோயிலில் நின்றவர்களுக்கு சம்பவ் காற்றாய்ப் பறந்தது.

ஆலமரத்திற்கும் சிறுவர் பாடசாலைக்கும் இடையில் இருக்கும் கல்லறை ஆண்டவர் சுருபத்திற்கு முன்னாள் முழந்தாலில் இருந்து கொண்டு சின்னணி 'ஆண்டவனே ஏன் எங்களுக்கென்று இந்தச் சிலுவையை தந்தாய் மண்ணில் மனிதனாய் பிறந்து தெங்வமானாய். வேதனை நிநை;த துயர நாட்களை ஏன் தொடரவிடுகிறாய். இன்னும் எத்தனை நாட்கள் இப்படியே வாழ்வது?' சின்னமணியின் விழிகளில் இருந்து கண்ணீர் கசிந்தது. வேர்த் துக் களைக்க வந்த கந்தையாவின் மனைவி 'அடியே சின்னமணி உங்கட ஐயாவுக்கு விடுவலை வள்ளத்தில ஏதோ நடந்திட்டாமென்னு எல்லோரும் கடக்கரைக்கு ஓடியினம். நீயென்ன இதிலே இருந்து அழுது கொண்டிருக் கிறாய்' சின்னமணி விக்கித்துப் போனாள். கடைசிப் பிள்ளையை கையில் தூக்கி கொண்டு ஓட்டமும் நடையுமாக கடற்கரையை நோக்கி போனாள்.

கடல் பெருக்கில்லாததால் மெல்லிய அலைகள் மட்டுமே கரையில் வந்து மோதிக் கொண்டிருந்தன. யுத்தகால அனர்த்தங்களை கடற்கரை கவ்வி யிருந்தது. ஊதல் காற்றும் ஓயாது வீசிக் கொண்டிருந்தது. கடற்கரையை ஒட்டியிருந்த வீடுகள் சிதைவடைந்தும், ஓலைக் குடிசைள் எரிந்த குறை யிலும் காணப்பட்டன. தென்னை மரங்கள் கூடஷெல் பட்டு சோகமே உருவாகி நின்றன. வள்ளம் வந்த வேகத்தில் அணியத்தின் முன்பகுதி கரைக்கு மேலே ஏறிவிட்டது. யப்பான் மீன், கெழுறுகளின் சலசலப்பு தண்ணீரில்.சேற்றினில் புதையுண்டுபோன கால்களோடு வள்ளத்தைச் சுற்றி அழுத விழிகயோடு சிலர் நெஞ்சில் அடித்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள். சின்னமணி வள்ளத்திற்கு அருகே சென்று தலையை கீழே குனிந்து நடுப்பலகைக்கு பக்கமாக கிடந்த உடலை பார்த்தாள் கண்டதும் ஒ வென்று கத்தினாள். 'ஐயா இவ்வளவு தெதியிலே விட்டிட்டு போயிட்Nடுங்களே....'அலை ஓசையையும் மீறி விண்ணைத் தொட்டது அழுகை ஒலி. சின்னமணியின் சிறு விழிகள் சிவந்து விட்டன. ஆனந்தன் ஆட்களின் நெரிசலுக்கிடையில் நுழைந்து வள்ளத்தை எட்டிப்பார்த்தான் விக்கித்துப் போனான் அவனுள் ஒரு வித வைராக்கியம் மனதில் எழுந்தது. இழந்ததற்கான தேடல் கண்களில்;.... மறுகணமே இடத்தை விட்டு விலகி விட்டான்.
ஐம்பது வயது நிரம்பிய மனிதர் அன்றாடம் ஜீவனுக்காக அயராது போரா டுகின்ற ஏலோலோ பாடகன் எதற்காக செப்புக் குண்டுக்கு இரையானான்? மரக்கோல் பிடித்து மரத்துபோன கைகள் உப்புக் கரைசலில் ஊறித் திரண்ட உடல் அந்நிய மிருக வெறிக்கு இரையாகி கோவணத்துணியோடு கிடக் கிறது. கூட்டத்தில் நின்றவர்களில் ஒருவன் 'கோயிலடியில் நின்ற சீக்கி யன் போகச் சொல்லிப்போட்டு காக்கை தீவில் நின்றவன் சுட்டுப்போட் டான் என்றான். வள்ளம் முழுவதும் இரத்தக் கட்டிகளாய்... உடலிருந்து பெருக்கெடுக்கும் இரத்தத்தை கட்டுப்படுத்த நாலு முழு வேட்டியால் இறுகக் கட்டினார்கள். நின்றவர்களில் ஐந்து பேர் சேர்ந்து தூக்கினார்கள். உடலிலிருந்து இரத்தத் துளிகளாய் வழிந்தது. சின்னமணியின் வீட்டிற்கு தூக்கிக் கொண்டு போனார்கள். இன்று சின்னமணியின் வீட்டில் மட்டு மல்ல ஒப்பாரி ஓலம்.எமது தெருவெல்லாம்தான். அன்று முழுவதும் அழுகைகளோடும் அடக்கம் செய்வதிலும் ஈடுபட்டுக் கொண்டு இருந்தவர் கள் ஆனந்தனை மறந்து விட்டார்கள். இரவு எட்டு மணியாகியும் ஆனந்தன் வீட்டிற்கு வரவில்லை. சின்னமணி ஆனந்தனை தேடத் தொடங்கினாள்..

(முற்றும்) 

வெறும் கூடு (சிறுகதை) -செ.டானியல்ஜீவா

                வெறும் கூடு

                                                                 (சிறுகதை)
                                                        -செ.டானியல்ஜீவா-

சற்று முன்புதான் திருந்தாசி மணியடித்து ஓய்ந்தது. முன் பெல்லாம் நள்ளிரவு மூன்றோ நான்கோ மணிக் கெல்லாம் விழித்து தொழிலுக்கு போவதுதான் தொழிலார்களின் வழக்கம்.அந்தோணியும் இதற்கு விதி   விலக்கல்ல.இப்போதெல்லாம் அப்படி நடப்பதில்லை. திருந்தாசி மணி ஆறு மணிக்கு கோயிலிருந்து அடித்த பின்னர்தான் தொழிக்கு போக வேண்டிய கட்டாய சூழ் நிலை. இந்திய இராணுவம் சனசமூக நிலைய கட்டிடத்திற்குள் முகாமிட்ட பின்னரே இந்தக் கால வரையறை கட்டாய நிலைக்கு வந்துவிட்டது.பொதுவாக இந்தச்சூழல் மீனவர்களுக்கு உடன் பாடில்லையென்றாலும் அவற்றை மீறி நடந்து கொள்ள எவருக்கும் துணிச்சல் வரவில்லையென்று சொல்வதிலும் பார்க்க துப்பாக்கிச் சூடு   வாங்கத் தயார் என்றால் அந்த முடிவை எடுக்கலாம் என்று சொல்வது தான் பொருத்தமாயிருக்கும்.

காலையில் இராணுவத்தின் காவல் அரணுக்கு சென்று தொழிலுக்கு போகிற மீனவர்கள் வரிசையில் நின்று தமது அடையாள அட்டையை கொடுத்து பதிவேட்டில்  பதிந்த பின் அடையாள அட்டையை அவர்களி டம் ஒப்படைத்து விட்டு கடலுக்கு போனால் வரும் போது அந்த காவல் அரண்ணுக்குச் சென்று வாங்கிக் கொண்டு வீட்டிற்கு போவர்கள். இரா ணுவம் கட்டிடத்திற்குள் இருந் தாலும் அந்த வளவுக்குள்ளேயே ஒரு மூலையை ஒட்டி மண்மூடைகள் அடுக்கி ஒரு சிறிய கூடுபோல் காவல்   அரண் போட்டிருந்தார்கள்.சிலமணித்தியாலத்திற்கு ஒரு  முறை மாறி மாறி காவல் புரிவார்கள்.இதேபோல் கடற் கரையை பார்த்தபடியிருக்கும் கட்டிடத்தின் பின் பக்கமாக என்னெரமும் துப்பாக்கி சகிதம் உலாவித் திரி வார்கள். முன்னரங்கில் மட்டுமல்ல கடல்பக்கமாக இருந்தும் வந்து தாக் குதல் தொடுக்கலாம் என்ற எச்சரிக்கையோடு மிகவும் அவதானமாக காவலிருப்பார்கள். உள்ளுக்குள் ஒருவித பயமோ அல்லது பயமற்றோ இருக்கும் அந்த இருப்பில் காவல் அரணை கடந்து செல்கின்ற ஒவ் வொரு மனித முகத்தையும் உன்னிப்பாய் கவனிக்காமல் விடுவதில்லை. சிலர் தங்கள் கண்ணுக்குள் இதுவரையில் புலப்படாத முகமாய் இருந் தால் அவர்ளை மறித்து அடையாள அட்டையை பார்ப்பதோடு அவர்கள் பற்றிய முழு மையான விபரத்தை அறிந்து கொள்வார்கள். சந்தேகத்     தின் பேரில் யாரும் கைது செய்யப்பட்டாள் அவர்களை எங்கு கொண்டு செல்கிறார்கள் அவர்களுக்கு என்ன நடக் கின்றது என்பது பற்றி அநதோணிக்கோ அந்த ஊரைச்சேர்ந்த யாருக்குமே தெரியாத விடயம்.

அந்தோணி தொழிலுக்குப் போவதற்கு தயாராகிக் கொண்டான். இன்று சனிக்கிழமை என்ற படியால் மாறனுக்கு பாடசாலை விடுமுறை. மக னையும் எழுப்பி விட்டான் தொழிலுக்குப் கூட்டிக் கொண்டு போவதற் காக. அறைக்    குள் படுத்திருந்த மேரியின் இருமல் சத்தத்துடன்  அந்தோணியின் மனைவி எலிசபேத்து தூக்கம் கலைந்து விழித்து விட் டாள். படுத்த படுக்கையில் கிடந்தபடியே... 'இஞ்சேருங்க தேத்தண்ணி போட்டுத் தரட்டாங்கோ?' என்று கேட்ட போது எலிசபேத்தின் நினைவு அந்தோணியின் நெஞ்சில் முட்டியது. நேற்றிரவே அவனுக்கு எலிசபேத் சாப்பாடு போட்டு கொடுக்கும் போதே அவள் கொஞ்சும் குரலில் செல்ல மாய் பலவற்றை சொன்னாள். அனேகமாக இருவரும் சாப்பிடும்போது தான் பல விடையங்கள் பற்றி பரஸ்பரம் புரிந்துணர்வுடன் கதைத்துக் கொள்வது வழக்கம். எப்போதாவது எந்தக் கருத்து நிலையில் முரன்பாடு எழுந் தாலும் அவர்கள் தங்களுக்குள் அன்றைய பொழுதே பேசித்தீர்   த்துக் கொள்வார்க்ள். நேற்றைய பொழுதில் எலிசபேத் சொன்ன வார்த் தைகள் அவனைச் சுற்றிச் சுழன்று வந்து கொண்டிருந்தது. 'இங்கேரப்பா நமக்கெண்டு இருக்கிற தொழில் கடலத்தொழில் தான். அதையும் இந்த பாழ்பட்டுப் போவார் வந்த பிறகு நேரக் கட்டுப்பாடு போட்டிட்டாங்க. இதால வலை இழுக்கப் போறதற்குள்ள விடிஞ்சுபோய் மீன இறால் எல் லாம் வலைக்குள்ள இருந்து மீண்டு போய்  விடுதுங்க. எத்தனை நாளுக் குத் தான் இப்படி வலை இழுக்கப்போய் வெறுங்கையோட வாறது. ஒரு க்கா ஆமிக்காரன் கிட்ட கதைச்சு நேரத்தோடு தொழிலுக்கு போக வழி பண்ண மாட்டிங்களா..?''எலிசபேத் நான் என்ன செய்ய முடியும். அவங்க என்ன தான் இருந்தாலும் ஆமிக்காரன்கள். அவங்க தங்கட மேலிட த்து ஓடரைத்தான் செய்வாங்க.''உங்களோட தானே அந்த ஆமிக்காரன்கள் நல்லா கதைப்பாங்கள் எண்டு சொன்னீங்கயல்ல....அவங்கட்டயாவது சொல்லிப் பாருங்கவன். அப்படி கேட்டு சரிவந்தால் மெத்தப்பெரிய உப காரமாக இருக்கும் நம்ம ஊருக்கு. எனக்கு உடபெல்லாம் என்னவோ செய் யிறமாதிரி இருக்குது. நாரி வேற உழைவாய்யிருக்கு. காச்சல்கீச்சல் வரு கிறமாதிரி போல இருக்கு. நான் தூங்கப்போறன்.' என்று எலிசபேத் சொல் ல அப்ப இரண்டு 'டிஸ்பிறின்' வாங்கிக் கொண்டு வரவாங்க.. போட்டுட் டுபடுத்தா கொஞ்சம் சுகமாக இருக்குமல்ல.' என்று அந்தோணி கேட்டான் .'வேணாப்பா.... நாளைக்கும் இதேமாதிரி இருந்தா காலையில பார்த்துக் கொள்ளலாம். இப்ப நான் தூங்கப்போறன்.' என்று தூங்கப் போனவள் தான் இப்ப எழும்ப இசக்கம் இன்றி வார்த்தைகள் வந்த போது அந்தோணிக்கு எலிசபேத்தின் நினைவு அனிச்சையாக வெளிப்பட்டு விலகிச் சென்றது.  'இங்கேரப்பா நான் கேட்டதக்கு ஒண்டும் பறையாமல் கொள்ளாமல் நிக் கிறையள். என்ன நடந்தது...?'  மின்விளக்கு போடப்படாத இருள் சூழ்ந்த அறையில் இருந்து குரல் அந்த அமைதியை கிழித்துக்கொண்டு அந்தோணி யின் காதில் விழுந்தது. அந்தோணி கோடிப்பக்கமாக மின்விளக்கின்; வெளிச்சத்தில் 'கடிப்பைத்' தேடிக் கொண்டிருந்தான். 'எழும்பி தேத்தண்ணி போட்டுத்தரவாங்க..?'மீண்டும் ஒடுங்கிய குரலில் எலிசபேத் கேட்டாள். 'இந்த நேரத்தில எதுக்கு உனக்கு சிரமத்த கடலுக்கு போகேக்க சந்தியிலி ருக்கிற அப் துல்லா காக்ககிட்ட குடிச்சுப்போட்டு போறன்' என்றான் அந் தோனி. எலிசபேத்து நேற்று தன் உடல் நிலை பற்றி சொன்னதை நினைவு வைத்துத்தான் இதைச் சொல்லியிருக்கலாம். 'சில்லறைக்காசு உங்கட்ட கிடக்கோ...?' 'இல்லையப்பா...''என்ர பச்ச வைல் சீலை மூலையில முடிஞ்சு வைச் சிருக்கிற சில்லறைக் காசை எடுத்துக்கொண்டு போங்க...'. 'சரியென எடுத்துக்கொண்டு போறன். நீங்க தூங்குங்க...'  என்று சொல்லிக் கொண்டு மாறனையும் கூட்டிக்கொண்டு கடலுக்கு போவதற்கு புறப்பட்டார்கள் .மங்கலான வெளிச்ச  த்தில்வீதி விறைத்து கிடந்தது.துயரத்தில் தோய்  ந்த இருப்பின் ஈடாட்டத்தை இரவு சுமந்து கிடந்தது. கடற்கரையின் மெல் லிய அலையசைவு இராணுவம் தங்கியிருக்கும் கட்டிடத்தின் பின்பக்க கரையை மோதிக்ககொண்டிருந்தது. ஊதல்காற்றின் வீச்சில் பூமி குளிர்ந் திருந்தது. காவல் அரண் களில் லாம்பின் வெளிச்சத்தில் கடல் செல்வத ற்காக காத்தி ருக்கும் மீனவர்கள் நேர் வரிசையில் நின்றார்கள். ஒவ்வொ ருவரிடம் இராணுவம் அடையாள அட்டையை வாங்கி பதிவு செய்தபின் காவல் அரணுக்குள் இருக்கும் ஒரு சிறிய பெட்டி க்குள் அடிக்கி வைத்தார் கள். அந்தோணி அடையாள அட் டையை கொடுத்து பதிவு செய்து விட்டு கடற்கரைக்கு வந்து தோணியில் ஏறி மரக்கோலால் தாங்கத் தொடங்கி னான். அந்தோணி கடையால் பக்கமாக நின்று தாங்கஇ மாறன் அணியப் பக்கத்தில் வங்கில் இடது காலை பிடிப்பாக வைத்துக்கொண்டு வள்ளத் தைத் தாங்கினான். அந்தோணி கடையால் பக்கதில் நின்று வள்ளத்தை தாங்குவதோடு வள்ளம் போகும் திசையை கவனமாக செலுத்தினான். சிலர் குறுக்கு மறுக்காக களங்கண்ணி வலையை துறையால் பாஞ்சதால் அந்த வலைகளை அறுத்துக்கொண்டு போகாமல் அவதானமாக தாங்கிக் கொண்டு போனர்கள். களங்கண்ணி வலைகள் பல வெள்ளை பறிந்து கிடந்தது. நிலவுகாலம் நெருங்குகின்றது. இனிமேல் தான் எல்லோரும் வலையைப் பிடுங்கி துவர்ப்பட்டை போட்டு அவிச்சு மீண்டும் இருட்டு வந்தவுடன் கடலில் புதைப்பார்கள். அந்தோணி கொஞ்சம் வித்தியாசமாகச் செய்வான். களங்கண்ணி வலை இரண்டு கடலில் நிற்கும் போது வீட்டில் எப்போதும் இரண்டு களங்கண்ணி வலையை பொத்திஇ அவிச்சு காயப் போட்டு மேலதிகமாக வைத்திரு ப்பான். நிலவு காலம் வந்தால் வெள்ளை பறிந்த வலையை பிடுங்கி வீட்டுக்கு கொண்டு வந்து விட்டுஇ வீட்டில் இருக்கும் வலையை அடுத்த நாளே கடலில் புதைச்சு விடுவான். நிலவு காலத்தில் இறால் பிடிபடாவிட்டாலும் சில மீன் சாதி வலைக்குள் அகப்ப டும் என்பதற்காக.கிழக்கால் வெள்ளாப்புக் கொடுத்துக் கொண்டிருந்தது. முனங்குப் பக்கம் இருந்து கொண்டல் காற்று விடாமல் மூசிக்கொண்டிருந் தது. களங்கண்ணி வலையை அந்தோணியின் வள்ளம் நெருங்கிக்கொண்டி ருந்தது. கடல் காகங்கள் கடலுக்குள் விழுந்து விழுந்து மீனைக் கொத்திக் கொண்டு மேல்நோக்கி பறப்பதும் மீண்டும் கடலுக்குள் மூழ்குவதுமாக இருந்தது. வள்ளத்தை விரைவாக தாங்கினார்கள். கடல் சாதாளையை கிழித்துக்கொண்டு வள்ளம் வேகத்தில் முன்நோக்கி பாய்ந்து பாய்ந்து போனது. மாரி காலம் என்பதால் துறைக்கரை கூட கொஞ்சம் ஆழமான  கடல் பகுதி போல் இருக்கும். கடலின் நீர்ப்பரப்பில் வெண்ணாரைகள் தென்றல் போல் அசைந்து கொண்டு போனது. மாரிகாலங்களில் தான் அநேகமாக 'சுணைநீர்' மீனவர்களுக்கு பிடிப்பது வழக்கம். 'சுணைநீர்' தொழி லாளிகள் மீது மெல் லப் பட்டாலும் உயிரைக் கொல்லும் அளவிற்கு உடலை வருத்தி பாடுபடுத்தி விடும். அப்படி யாருக்கும் சுணைநீர் பட்டால் அடுத்த நாள் வரை அந்த வலி தாங்க முடியாமல் தவிப்பார்கள்;. கொஞ்சம் வசதி உள்ளவர்கள்இ யாழ்ப்பாண பிரதான வீதியில் உள்ள டொக்டர் பிலிப் பிடம் போனால்இ அவர் கொடுக்கிற மருந்துடன் அந்த வலி மறைந்து போய்விடும். இந்தச் சுணைநீர் எப்படி கடலில்...?அதுவும் மாரி காலத்தில் தான் திடீரென தோன்றுகின்றது என்றால் யாழ்ப்பாணப் பெரியாஸ்பத்தி ரியில் இருந்து இரசாயணக் கழிவுக் கூறுகள் கழிவுக் குழாய்கள் வழி யாக பண்ணைப் பக்கமாக கடலோடு கலக்கின்றது. இந்தக் கழிவு நீர்தான் கடலில் கலந்து மாரி காலத்தில் ஒரு வகையான இரசாயன பதார்த்தம் போல் கடலின் நீரின் மேற்பரப்பில் கண்ணுக்குப் புலப்படாமல் மிதந்து செல்லுகின்றது. தற்செயலாகவே தொழிலாளிகள் மீது பட்டு விடுகிறது. இது காலம் காலமாய் இருந்து வந்ததா என்று பார்த்தால் அதுவும் கிடை யாது. ஒரு குறிப்பிட்ட ஆண்டுக ளுக்கு முன்னர் தான் இந்த 'சுணைநீர் பிடிச்சது' என்ற வார்த் தைப் பிரயோகம் புளக்கத்தில் வந்தது. இதை நிவ ர்த்தி செய்ய எவரும் முன்வரவில்லை.சுனை நீர் உடலில் படும்போது அது வழுக்குண்டு போய்விடும் என்பதால். அந்தோணியின் வள்ளத்துக்குள் எப்போதும் ஒரு போத்தலில் தேங்காய்யெண்ணை நிரப்பி வைத்திருப்பார்.

அந்தோணி வள்ளத்தை வலையோடு அணைத்துக் கட்டினான். போத்த லோடு இருந்த தேங்காய்யெண்ணையை எடுத்து அந்தோணியும் மாறனும் உடம்பு முழுக்க பூசிக் கொண்டு கடிப்போடு வலைக்குள் இறங்கும் போது கடல் தண்ணியைத் தொட்டு அந்தோணி பிதாச் சுதன் போட்டு விட்டு இற ங்க அதன் பின் மாறனும் அதேமாதிரிச் செய்து கொண்டு கடலில் இறங்கி னான். முதல் இழுப்பை இழுத்து மாட்டி வள்ளத்துக்குள் போட்டார்கள். மீண்டும் அடுத்த இழுப்பிற்காக மாறன் கடிப்பின் ஒரு பக்கத்தை கையால் வலையின் வாசல் பக்கத்தை மறை த்த படி நிற்க அந்தோணி சுற்றி இழு த்துக் கொண்டு வந்தான். சிறகு வலைக்குள் கிடக்கின்ற கடல் உணவுகள் அனைத்தும் கடிப்பைப் போட்டு இழுப்பதன் மூலம் அகப்பட்டு விடும். சில வேளை கடிப்பை வளைத்து இழுக்கும் போது மீனோ றாலே கழிந்து போய் விடும். அதற்காகத் தன் ஒரு முறை மட்டும் இழுக்காமல் இரண்டு அல் லது மூன்று முறை இழுப்பது வழக்கம்.மூன்றாவது முறையாகவும் வலை இழுத்;துவிட்டு கடி ப்பை வள்ளத்திற்குள் வைத்து விட்டு வள்ளத்திற்குள் மாறன் எறினான்.வலை வெள்ளை பறிந்து போய் விட்டதால் வீட்டில் துவ ர்வைத்து காயப் போட்டு கட்டிவைத்திருக்கும் வலையை நாளை கொண்டு வந்து புதைப்பதற்காக அந்தோணி வலையை புடுங்கத் தொடங்கினான்.

மாறன் வள்ளத்திற்குள் இருந்து கொண்டு மீனை தனியாகவும் றாலைத் தனியாகவும் தெரிவு செய்து அத்தாங்கிற்குள் போட்டுக் கொண்டிருந் தான்;.உப்பிய வயிறோடு உயிரோடு வள்ளத்தின் நடுவங்குப் பக்கமாக கிடந்த பேத்தை மீனை எடுத்து நண்டுத் தொழிலுக்கு போறவர்களுக்கு கொடுப்பதற்காக கடையால் பக்கமாக வீசி எறிந்தான்.வீசிய பேத்தைமீன் கடையால் பக்கமாக கிடந்த தண்ணீருக்குள் விழ வள்ளத்தின் உட்பரப்பில் உப்புத்தண்ணீ சிதறியது. 'மாறன்'என்று  அந்தோணி கூப்பிட வள்ளத்திற் குள் குனிந்து கொண்டிருந்த மாறன் தலையை நிமிர்த்தி தந்தையை பார் த்தான்.'என்னப்பா கூப்பிட்டியலோ.....?''ஒம் மாறன்......கம்புகுகளை கடலில விட்டிட்டு போவமா...?''ஏனப்பா யாரவது களவெடுத்துக் கொண்டு போக மாட்டாங்கள....?''என்னத்த புடுங்கிக் கொண்டு போகப் போறாங்க..... நாளை க்கு காலையிலேயே வீட்டில இருக்கிற துவர் வைச்ச வலையைக் கொண்டு பாய்யிறதுக்கிடை யில...கம்பையும் புடுங்கிக்கொண்டிருந்தால் உனக்கு ரீயுசனுக்கு போறதுக்கு நேரம் போய்விடும்''அப்பா!கம்பில கொட்ட  லசு இல்லையோ...?''இல்லையட மாறன்..''அப்பா!அப்ப புடங்காமல் கம்பை கடலிலேயே விட்டிட்டு போவம்....''ம்.... மாறன்.மீனையையும் றாலையும் தெரிஞ்சு போட்டிட்டு நடு ப்பலகை பக்கமாக நின்டு கொண்டு வலையில அப்பிக்கிடக்கிற சொளியை வள்ளத்தில அடிச்சுப்போட்டு வள்ளத்திற்குள் ஏத்து மாறன்......''ஓமப்பா....தெரிஞ்சுட்டன்.அத்தாங்கை கடையாலுக் குள்ள வைச்சுப் போட்டு வலையை ஏத்துறனப்பா' என்றான் மாறன்.'மாறன் முதலி ல்ல சிறகை அடிச்சுப்போட்டு ஏத்து..... அதுக்குப் புறவு நிலவலையை ஏத்தி ஒரு வங்குக்குள்ளே கிடக்கக் கூடிய மாதிரி போட்டு விடு' என்றான் அந்தோணி  'ஒம் அப்பா'என்று சொல்லிக் கொண்டு நடுப்பலகை பக்கமாக வந்து வலையை வலது கையால் பிடித்து வள்ளத்தின் பலகையின் வெளி ப்பரப்பில் அடிப்பதும் பின் கடலில் தோய்த்து வள்ள த்திற்குள் வலையை ஏத்தத் தொடங்கினான் மாறன்.

வானம் மப்பும் மந்தாரமுமாய் இருந்தது.மழை வருவதற்குரிய சாத்தியக் கூறுகள் அதிகமாய் காணப்பட்டது.இடி மின்னல் என்று அடிக்கடி எட்டிப்பார் த்துக் கொண்டிருந்தது.கருமேகம் திரட்சியாய் வானத்தில் தோண்றிய போதும் வெண்மேகமும் அங்கொன்றாய் இங்கொன்றாய் வியாபித்துக் கிட ந்தது 'அளப்புளு'கடலின் நீர் மட்டத்தில் சில மிதந்தும் சில கடல் மட்ட த்தில் தாண்டும் கிடந்தன.அளப்புளு ஒரு மீன் வகை அல்ல ஆனால் அது பூ வடிவில் அழகாய் இருக்கும்.அதைத் தொட்டால் ஒருவகை கடி தோண் றும்.அதுவும் கொஞ்ச நேரம் மட்டும்தான். பரவைக் கடலில் மட்டுமே இது காணப்படும். கெலுறுமீன் யப்பான்மீன் போன்ற மீன்களும் மிக ஆழம் குறைந்த சதுப்பு நிலம் கொண்ட துறைப் பகுதியிலே காணப்படும். சாத ளை என்றொரு செடி வகையும் இப்பகுதியில் வளர்ந்து நீட்டி நிமிhந்து கிடக்கும்.கடலில் நடக்கும் போது சாதளை கால் கைகளை வெட்டிக் கிழி த்து விடும். இதைவிட 'ஆர்க்கு'என்று ஒரு சிப்பி வகையும் சில இடங்க ளில் ஆவெண்டு கடலின் நிலமட்டத்தில் விளைந்து கிடக்கும். மீனவர்கள் நடக்கும் போது கால் இதன்மீது தடுமாறி வைத்தால் பெரிய கத்தியால் வெட்டியது போன்றுஆழமான வெட்டுக் காயத்தை உண்டுபண்ணி விடும்; .நரிச்சுங்கான் என்றொரு மீன்வகை உண்டு இது அழகாக வரிக் குதிரை களில் விழுந்திருக்கும் கோடுகள் போல் உடல் முழுதும் கொண்டிருக் கும்.இது சில மனிதர்கள் வெளித் தோற்றத்திற்கு நல்லவர்கள் போல் நடி த்துக் கொண்டு உள்ளே விசத்தை சுமப்பவர்கள் போல் இருக்கும். பார்ப்ப தற்கு மிக அழகாய் இருக்கும் சுங்கான்மீன் மீது கை தடுமாறி உடலின் மேற்ப் பரப்பில் இருக்கும் முள்ளின் மீது பட்டால் உயிர் போக வலி எடுக்கும் இது கடலின் மேற்ப்பரப்பில் ஒரு கூட்டமாகவே நீந்தித் திரியும். களங் கண்ணி வலைக்குள் கூட ஒரு கிளையாகத்தான் மாட்டிக கொள் ளும். இவையெல்லாம் கடலில் கிடந்து மீனவர்களை துன் புறுத்திய போதும் கடல்தான் அவர்களுக்கு கடவுள் போல....வதவதவென்று வலை யை வள்ளத்தில் அடித்துக் கொண்டு சிந்தனையில் நின்ற மாறன் திடீரென ஏதோ தோண்ற....'அப்பா' என்று கூப்பிட்டான்.'என்ன மாறன்'என்று பதிலுக்கு அந்தோணி கேட்டான்.'அப்பா...!உங்களுக்கெனப்பா அந்தோணி என்டு அப்பு பெயர் வைச்சவா.;..?''அப்பு அந் தோணியார் மீது அதிகம் பற்றுள்ளவர் அதனால் அந்தோணி என்று எனக்கு பெயர் வைத்தவர்.ஆனா நான் தமிழ் பற்று ள்ளவன்.அதனால் மாறன் என்ற பெயரை உனக்கு வைத்த னான். 'அப்பா! அப்புவட காலத்தில தமிழ் பற்றுயில்லை யோ..?''  இல்லையெண்டு சொல்ல முடியாது...... நாற்பத்தெட் டுக்கு முதல் நம்மள வெள்ளையன் தான் ஆட்சி செய்தான். அப்ப மொழிப் பற்று நம்ம சனத்தட்ட இருந்தாலும் என்ர ஜயாவுக்கு இருந்த மாதி தெரியல...அவருக்கு கிறிஸ்த்தவ மதத்தை தவிர பெரிசாக எதிலும் பற்றற்வராகத்தான் சாகும் வரையில் இருந்த வர்.நம்மட மூதாதையர் கிறிஸ்தவர்களாக இருந்ததற்கான எந்தச் சாத்தியக் கூறுகள் எதுவும் கிடையாது. ஒல்லாந்தர் போத்துக்கீசர் இங்குவந்த பிறவு தான் கிறிஸ்தவம் பரப்பப்பட்டது. பெரும்பாலும் கரையோரப் பிரதேசத்தை அண்டியே பரப்பப்பட்டு நன்றாக வளர்ந்திருக்குது....' அந்தோணி வைத்த பிரசங்கத்தை பேசாமல் பறையாமல் மாறன் வள்ளத்தில் நின்று கேட்டுக் கொண்டு நின்றான.அந்தோணி நில வலையைப் பிடுங்கிக் கொண்டு  ;;...நிலவலையோடு கட்டப்பட்ட 'றால் கூட்டை' வலையிலிருந்து பிடுங்கி றால்கூட்டின் முன் பக்கமாக வட்ட வடிவில் வலைக்குள் கோர்த்திருக்கும் இரும் புக் கம்பியை இடது கையால் பிடித்துக் கொண்டு வலது கை யால் அந்தோணி வளைத்தான். நீண்டு வட்ட வடிவில் பிண் ணப்பட்ட றால் கூட்டு வலை.. றால் பிடிப்பதற்காக பிரத்தியேகமாக களங்கண்ணி வலை யில் வைக்கப்படுவது. றால்கூட்டை வளைத்துக் கொண்டு வந்த அந்தோணி அடிப்பக்கமாக எல்லா றாலும் சேர்ந்து கிடக்கும் என்ற நம் பிக்கையோடு 'தூர்ரை' கையால் வளைத்து பிடிக்க றால் கூட்டுக்குள் ஓரு மச்சசாதியிம் இல்லாமல் கிடந்ததைக் கண்டு அந்தோணி விக்கித்துப் போனான்.அந்தோணி வள்ளத்திற்குள் நின்ற மாறனை பார்த்து.....'மாறன் றால் கூட்டில ஒரு மச்சசாதி யையும் இல்ல...யாரோ வெள்ளனத்தோடு வந்து தட்டிக் கொண்டு போய்விட்டாங்க' என்றான் அந்தோணி.'அப்பா  வெறும் கூடுதான இருக்கு...''ஓம் மாறன் வெறும் கூடு தான் என்ர கையில இருக்கு...இது மட்டுமல்ல வெறுங் கூடு.... அங்க பார் என்று சொல்லிக் கொண்டு கையை பரலோகமாத கோயிலுக்கு முன்பாக இருக்கிற சனசமூக நிலையக் கட்டிட வளவுக்குள் இருக்கிற இந்திய ஆமிக்கா ரனின் காவல் கூட்டை காட்டிக் கொண்டு... 'இந்தக் காவல் கூட்டினால் நாங்கள் படும்துன்பம் கொஞ்ச நெஞ்சமில்ல... ஒருநாள் நம்மட பொடியல் அவங்கள அடிச்சு கலைச்சு விடுவாங்க அப்ப அதுவும் வெறும் கூடாய்த்தான் இருக் கும்...'என்று அந்தோணி சொல்லமாறன் உன்னிப்பாய் அந்தோணி சொன்னதைக் கேட்டுக் கொண்டு நின்றான்.

(முற்றும்)