tirsdag 10. juni 2014

நாவாந்துறை மக்களுக்குப் பகிரங்க வேண்டுகோள்!

நாவாந்துறை மக்களுக்குப் பகிரங்க வேண்டுகோள்!


துறை முகங்களும், கடற்கரையோரப் பிரதேசங்களும் மீனவக் கிராமங்களுக்குப் பொதுவானையாக இருப்பது மிக அத்தியாவசியமானதும், தேவையானதும்கூட. தோணிகள், படகுகள் தரித்து நிற்கும் களக் கடலும், அதனைச் சார்ந்த கரையோரங்களும் தனியார் மயப் படுத்த முடியாததாகும். யாழ். தென்மேற்குக் கரையைப் பொறுத்தவரை கொட்டடியிலிருந்து குடாக்கரைவரை மீனவர்களின் இறங்குதுறையாகப் பாதுகாக்கப் பட வேண்டியதாகும்.



ஏற்கனவே பாதுகாக்கப் படவேண்டிய கல்லுண்டாய்க் கரையோரம் குப்பைத் தொட்டியாக்கப் பட்டுவிட்டது.


எஞ்சியுள்ள நாவாந்துறைச் சந்தையான றாத்தலடியின் தெற்குப் பக்கத்திலிருந்து வடக்கே குடாக்கரை வரையுமுள்ள கடற்கரைப் பிரதேசங்களாவது பாதுகாக்கப் பட வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும்.

சில ஆண்டுகளுக்குமுன் கடலட்டை அவிக்கவும், இறால் கொள்வனவு செய்யவுமெனத் தற்காலிக வாடிகள் அமைத்தவர்கள் இன்று அவற்றைத் தமது சொந்தச் சொத்தாக கையகப் படுத்தும் மட்டும் எப்படிப் பொறுமை காத்தீர்கள் என்பது உண்மையில் எமக்குப் புரியவில்லைத்தான். மீதமுள்ள கரைகளும் இன்று தனியார் சொத்தாக மாற்றப் பட்டுக் கொண்டிருக்கின்றன. கடற்தொழிலாளர்கள் செறிந்து வாழும் கிராமங்களில் உள்ள கடற்கரையோர நிலங்களை தனியார் சொந்தமாக்கக் கூடாதென்றும், எத்தனை மீற்றர்களுக்கப்பால் தனியார் நிலங்களைத் தமதாக்க முடியும் என்ற விதிகளும் யாழ். கடற்தொழில் சமாசத்தில் விபரமாகவும், மிகத் தெளிவாகவும் வரையறுக்கப் பட்டுள்ளன என்பதை இனியாவது அறிந்து செயற்படுவதே அனைத்து மீனவ மக்களின் நலன்களுக்கும் உவப்புடையதாகும்.

இதற்கான அரச அதிகாரிகளைச் சந்தித்து உரிய நடவடிக்கைகளைக் காலக் கிரமத்தில் எடுக்கவில்லையெனில், ஏற்கனவே கடல் வளங்களின் மிகப் பெரும் பகுதியை இந்திய முதலாளிகளின் பல்லாயிரக் கணக்கான இழுவைப் படகுகளுக்குப் பலிகொடுத்து  இழந்த நிலையில் இருக்கிறோம். அதாவது நாம் கரையோரங்களையும் இழப்பது மட்டுமல்ல, ஏழாற்றுப் பிரிவின் வடக்காறு எழுவைதீவு வடக்கு முனையால் பயணித்து, ஊர்கவல்த்துறை கடற்கோட்டை வழியாக குருசடித்தீவு, பேராறு, நாவாந்துறையில் வந்துதான் மையங் கொள்கின்றது என்பது அனைத்துக் கடற் தொழிலாளர்களும் அறிவர். அதேவேளை அனலைதீவு, எழுவைதீவு போன்ற தீவுகளின் மேற்குக் கரைகளில் தமிழகத்துப் பாரம்பரிய இழுவைப் படகுகள் நாசம் செய்வதால் குருசடித்தீவு, நாவாந்துறை, பேராறு என வரவேண்டிய கடல்வளம் முற்றாக அற்றுப் போகும், போய்க் கொண்டிருக்கின்றது. இந்த அவலங்கள் இப்படியிருக்க, கடற்கரையோர நிலங்களையும் தனியார் தம் வசப் படுத்தும் கொடுமைகளையும் நாம் தாங்க வேண்டியுள்ளது.



இனி இந்தக் கரையோரங்களில் வரப்போகும் தொழிற்சாலைக் கழிவுகளால் சூழல் மாசடைந்து, நாவாந்துறை என்ற அழகிய கரையோர நகர் மனிதர்கள் வாழ்வதற்குத் தகுதியற்ற பூமியாகும் என்ற எச்சரிக்கையையும் சொல்லி வைக்கின்றோம். 

-
தமயந்தி. 

அம்மா சிறுகதை எழுதியவர் ஆசீர்தாசன் கனடா ஸ்கபரோ

“அம்மா”                                               

                                   அடுப்படியிலிருந்து டொக்குää டொக்கென்ற இருமல் சத்தம் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டிருந்தது. காலைச ; சாப்பாடு வேண்டுவதற்காக பள்ளி க்கூட பிள்ளைகள் வந்து நிற்கிறார்கள். அவ சரத்துக்கு விறகு எரிவதாக இல்லை ஊதி ஊதி களைத்துப்போய் இருமல் தான் மிஞ்சியது. மீண்டும் இருமல் சததம் கேட்டு அடுப்படி க்கு வந்த ஷோபா என்னம்மா ஒரே இருமிக் கொண்டிருக்கிறீங்கள் தண்ணீர் குடியுங்கோ என்று கொடுத்தாள். வாங்கிக் குடிச்ச கருத்தாயிக்கு கொஞ் சமாக உடல் தெம்பு வந்த வேகத்தை உபயோகப்படுத்தி அடுப்பை எரியவைத்தவ ளுக்கு மீண்டும் இருமல் வந்தது.

“அம்மா இந்த இருமலுக்கு வைத்தியரிடம் காட்டுங்கள்”; என்று ஷோபா சொல்ல “எடி போடி புள்ள இது தாண்டி ஏழைகளின் அடையாள்” என்று சொல்லி பெருமூச்சு விட்டாள் கருத்தாயி;. தாயின் பரிதாப நிலையை கண்டு மனம் நொந்த ஷோபா நாங்  கள் மூன்று பேரும் பெண்களாக பிறந்து விட்டோமே என்று தங்களையே கடிந்து பொண்டாள்.  தான் வயிற்றில் இருக்கும் போது தான் அப்பா அம்மாவை அம்போ என விட்டிட்டு போன தாகவும்ää போனவர் இன்று வரை வரவுமில்லை யெனவும்  சொன்ன அம்மாää இன்று மட்டுமென்ன நான் உயிரோடு இருக்குமட்டும் உங்களை காப்பாற்றுவன் புள்ளைகளே என்று  சொன்னது இன்னமும் எங்கள் நெஞ்சங்களில் அழியாத நினைவுகளாக இருக்கின்றது..

                         காலைச் சாப்பாடெல்லாம் விற்று சிறிது ஓய்வெடு த்துக்கொண்டிருந்த கருத்தாயியின் மனக்கண் முன்னால் தாயி மங்காத்தா வந்து புள்ள உன்னை நினைச்சு பெருமையாக இருக்கடி நீ ஒன்றுக்கும் பயப்படாத அந்த மகமாயி உன்னைக் கை விட மாட்டா ஒன்றுக்கும் கவலைப்படத என்று சொல்வது போல் ஒரு உள்ளுனர்வுää  தன் தாயின் நினைவில் மூழ்கியவவின் எண் ணங்கள் தன் கணவன்  எங்கே என்றே தெரியாமல்ää ஆனால் என்றோ ஒரு நாள் வருவார் என நம்பிக்கொண்டு வயசான அம்மாää மூன்று சின்னஞ்சிறு குழந்;தைகளையும் கையில் வைத்துக்கொண்டு கருத்தாயி பட்ட துன்பங்கள். வாழ்க்கை என்பது சிலருக்கு மட்டும் தானா மகிழ்ச்சியானது. எங்களைப் போன்ற ஏழைகளுக்க இல் லையா? கடவுள் தான் இப்படி படைத்தாரென்றால் யார் அந்தக் கடவுள்? இரக்கமில்லாதவரா கடவுள்? என்று தன் இயலாமையி னால் எழும் கோபத்திற்கு வரும் கேள்விகளுக்கு விடை தெரியா மல் வாழ்ந்து வந்தாள். இருந்தும் தன் மூன்று குழந்தைகளான ராதாää சிநேகாää மற்றும் ஷோபா மீது என்றைக்கும் கருத்தாயிக்கு பாசம் குறையவில்லை. தன் துன்பத்திலும் இந்த குழந்தைகளின் சிரிப்பில் இன்பம் கண்டாள். கருத்தாயின் உலகமே தன் மூன்று குழந்தைகளும் தான். அவர்களின் எதிர்கால வாழ்வு தன்னைப ;போல் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவேää தொலைந்த மனிதனை மறக்க ஆரம்பித்தாள் தன் வாழ்வின் முழுமையினையும் தன் குழந்தைகளுக்காக அர்பணித்தாள்.


                     மூன்று பேரின் பரிட்சைக் காலத்தில் அவள் படும் கஸ்ரங்கள்ää துயரங்கள் சொல்லிலடங்காதவை. உற வுகளிடம் உதவிகேட்கும் போதுää அவர்கள் சொல்லும் வசையினை ராதா ஒருநாள் கேட்டு அன்று முழுநாளும் யாருக்கும் சொல்லாமல் அழுதுகொண்டிருந்ததை கண்ட கருத்தாயி மகளே ஏன் அம்மா அழவுறாய். அவங்க அப்பிடித்தான் பேசுவாங்க என்ர வாழ்க்கை போக்கத்தது அதவுடு கண்ணு. நீயும் தங்கச்சி மாரும் நல்லாப்படி ச்சு பெரியாக்களாக வரவேண்டும் அது தான் இந்த அம்மாவின் ஆசை என்று சொல்லி ராதாவை சமாதானம் செய்தாள்.. அந்த சம்பவமானது ராதாவை தனது படிப்பை 10ம் வகுப்போடு நிறுத்தி வேலை செய்யத் தூண்டியது மட்டுமல்ல உறவினரிடம் தன் தாய் எந்தவித உதவியும் கேட்க கூடாது என்ற வைராக்கிய முடிவையும் மேற்கொண்டாள்.


              ராதா 10ம் வகுப்போடு படிப்பை நிறுத்தி ஒரு கடையில் சேல்ஸ் கேளாக வேலையை தொடங்கினாள். இவளின் இந்த முடிவில் கருத்தாயிக்கு கொஞ்சம் கூட விருப்பம் கிடை யாது. இருந்தும் மகளின் போக்கில் விட:விட்டாள். ராதாவின் உத வியுடன் தனது பலகார வியாபாரத்தையும் சேர்த்து ஒருவாறு குடு ம்பத்தை ஓட்டிக்கொண்டிருந்த போது கருத்தாயின் அம்மா சுகயீன முற்று வைத்தியர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் இறந்துபோனர். தனது உறுதுனையாக இருந்த அம்மாவின் இழப்பால் ஆடிப் போனாள் கருத்தாயி. தனக்கும். தன் குழந்தைகளுக்கும் ஒரு பாது காப்பு அரணாக விளங்கிய அம்மம்மாவின் இழப்பால் குழந்தை களும் சேர்வடைந்து விட்டனர். இப்படியே இருநதால் இநத வீட்டில்

எதுவும் சாதகமாக நடக்காது என்பதனை உணர்ந்த கருத்தாயி முதலில் தன்னை மாற்றிக்கொண்டு தன் குழந்தைகளையும் இய ல்பு வாழ்க்கைக்கு கொண்டு வந்தாள்.


                     வாசல் படலையை திறந்து கொண்டு யாரோ உள்ள வரும் சத்தம் கேட்டு சுய நினைவுக்கு வந்தவள் வாசலை பார்த்தபோதுää சரோஜா ரீச்சரும் சிநேகாவும் உள்ளே வந் தார்கள். ரீச்சரோடுää சிநேகாவைக்கண்ட கருத்தாயி பதைச்சுப்போய் என்னங்க ரீச்சர் இவ ஏதும் தப்பு பண்ணிட்டாளா? என கேட்டாள். அதுக்கு ரீச்சர் அவ ஒண்டும் தப்புப்பண்ணலää அவட வயசு தான் உனக்கு தொந்தரவை தந்திருச்சு எண்டு சொல்லää ஒண்டும் புரி யாமல் அப்பாவியாக சிரித்தா கருத்தாயி.. என்ன கருத்தாயி நான் சொல்லுறது உனக்கு புரியுதா? என்று சரோஜா ரீச்சர் கேட்க இந்த மக்குக்கு எங்க ரீச்சர் புரியபோகுது என்று சொல்லி மௌனமாக நின்றாள்.


           அருகில் வந்த ரீச்சர்ää கருத்தாயி உன் பொண்ணு வயசுக்கு வந்திட்டா என்று சொன்னதும் தான் ஓ அதுவா எனக் கேட்ட கருத்தாயிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் எந்தவித உணர்வுகளும் காட்டாமல் நின்றவவைக் கண்ட சரோஜா ரீச்சர் என்ன நான் நல்ல செய்தி சொல்லுறன் நீ ஒன்றுமே உணர்ச்சி யில்லாமல் நிற்கிறாய் எனக் கேட்கவும்ää என்னங்க ரீச்சர் இந்த தகல்கள் எல்லாம் பணக்காரருக்கு தான் மகிழ்ச்சியானது. எங்க ளைப் போல் ஏழைகளுக்கு ஒரு நேர கஞ்சிக்கே வக்கத்தவள்  நான் இதுக்கு எப்படி சிரிக்கமுடியும் என்றாள்.  சிநேகாவை  கட்டி அணைத்த கருத்தாயி வாம்மா வா நாமளும் மனிதர்கள்  தானேää நாம் வாழும் உலகத்துக்குள் சிரிப்போமென்று சொல்லி ரீச்சர் புள்ளையகை; கொண்டு வந்து விட்டதற்கு ரொம்ப நன்றி என்று சொன்னார்.


            வெளியில் வந்த சரோஜா ரீச்சருக்கு கருத்தாயின் வார்த்தைகள் வலியினை ஏற்படுத்தியது.. துன்பம் என்பது ஒரு சில ருக்கு மட்டும் தானா சு10ழவேண்டுமென்ற கேள்வி ரீச்சர் மனதிலும் எழுந்தது. கருத்தாயியின் இந்த வாழ்க்கைக்கு யார் காரணம்?   ஏன் இவவுக்கு மட்டும் இப்படி நடக்கவேண்டும் என்று எண்ணிய சரோஜா ரீச்சர் திரும்பி வந்து கருத்தாயிää. கருத்தாயி எனக் கூப்பிட யாரது என்று கேட்டுக்கொண்டு வெளியில் வந்தா கருத்தாயி. ரீச் சரைக் கண்டதும் என்னங்க ரீச்சர் நீங்க இன்னமும் போகலையா எனக் கேட்க ரீச்சர் பக்கத்தில் வந்து தன்னிடமிருந்த 200 ரூபாவை எடுத்து பிள்ளையின் செலவுக்கு வைச்சிரு எண்டு கொடுத்தா. முத லில் வாங்க மறுத்தவ சரோஜா ரீச்சரின் வற்புறுத்தலில் வேண்டி க்கொண்டா. ரீச்சர் நீங்கள் எங்கள்ள வைச்சிருக்கும் அன்புக்கும்ää உங்கட உதவிகளுக்கும் நான் எப்படி கைமாறு செய்யப் போறே னோ தெரியாதென கண்கலங்கி நின்றவவை சரோஜா ரீச்சர் என்ன கருத்தாயி இதுக்கெல்லாம் பெரிய பெரிய வார்த்தைகள் சொல ;லுறாய். என்னட்ட இருக்கு தாறன்.  பிள்ளையைக் கவனமாக பார்த்துக்கொள் என்று சொல்லி சென்றவவுக்கு இரு கரம் குவித்து நீங்க நல்லா இருப்பீங்க ரீச்சர் என்று தன் நன்றியை தெரிவித்தார்.


                     உள்ளே வந்த கருத்தாயிக்கு மகள் சிநேகாவின் கதறல் கவலையத்தந்தது. என்னம்மா ராசாத்தி என்ன செய்யுது. அம்மா எனக்கு வயித்து நோ தாங்க முடியால் இருக்க ம்மா என்று சொல்லி வயித்தை பிடித்துக்கொண்டு கத்தினாள். ராசாத்திää செல்லம் இரண்டு நாளைக்கு இப்படித்தான் இருக்கும் நான் போய் அந்த மகராசி தந்த காசுக்கு பிள்ளைக்கு சாப்பாட்டு பொருட்கள்ää நல்லெண்ணைää முட்டையெல்லாம் வேண்டிக்கொண்டு வாறன் அது வரை பொறுமையாக இரும்மா எண்டு சொல்லி கடை க்கு போனவவின் எண்ணங்கள் எங்கெங்கோ அலை பாய்ந்தது.


                   மூன்றாவது தன் வயித்தில் தங்கியதும் ஐயோ இது என்ன பிள்ளையாக இருக்குமோ என நினைத்தவளு க்குää பெண் பிள்ளையாக இருந்தாலும் எண்டு நினைத்து அழிக்க போனவவை தாய் மகமாயி நம்பிக்கையூட்டினாள். அட புள்ள இது ஆண் பிள்ளையாக இருந்தால் என்று. அம்மாவின் வார்த்தையில் தான் மூன்றாவதையும் பெத்தெடுத்தாள். கடவுளா! யார் இவர்? ஆணா? பெண்ணா? என்ற கேள்வி கருத்தாயின் மனதில் எழுந்த போது உடனேயே இல்லை இல்லை அது ஆண் தான் அதனால் தான் மனித வர்க்கத்தில் எல்லா உடல் சுமையையும் பெண்ணு க்கே கொடுத்துள்ளார்.

                 தன் இனம் சொகுசாக வாழ எண்ணிய தால் தான் எங்களை இப்படி போட்டு பாடு படுத்துகின்றார் என்று கடவுளை வஞ்சித்துக்கொண்டு நடந்தவவின் எண்ணங்களில்?

படுபாவி இந்த என் ஆம்பிளையான் இப்படி என்னை அனாதையாக விட:டு தொலைஞ்சிட்டானே என்று திட்டிக்கொண்டு கடையை வந ;தடைந்தாள். கருத்தாயியைக் கண்டதும் கடக்காற கருப்பன் வாம்மா வா என்ன கன நாளாக் காணம் என்று கேட்கää என்னண்னே வீட்டில இருக்கிற வேலையே செய்ய நேரம் காணாது என்று சொல்லி தன க்கான பொருட்களை சொன்னாள். அப்போது கருப்பன் என்னம்மா என்ன வீட்டில விசேசமா? எனக் கேட்கää விசேம் ஒன்றும் இல்லை யண்ண அவள் ரெண்டாவது வயசுக்கு வந்திட்டாள் அது தான். அட அப்படியா விசயம். அப்ப உன் தம்பி காங்கேயனுக்குää தாய் மாமன் என்ட முறையில சொல்லத்தானே வேண்டுமென்று கருப்பர் சொல்ல அட போங்கண்ணேää நீங்க இருக்கிற பாசம் கூட என் தம்பி என்னில இல்லைää அத விட அவன் பொண்டாட்டி…. போங்கண்ணே எனக்கு கோபத்தை கிளப்பாமல். சற்று பொறுமையான கருப்பர் பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டு கருத்தாயி நீ என்னை உன் அண்ணனெண்டு சொல்லுறியே அதுக்கு ரொம்ப நன்றியம்மா. ஆனா இந்த அண்ணன் சொல்லுறன் நீ யாருக்கும் சொல்லாத ஆனா உன் தம்பிக்கு கட்டாயம் சொல்லம்மாää அவர் வாறது வராதது அவங்க பிரச்சினைää நீ சொல்லேல்ல எண்ட குறை வரக் கூடாது தாயி அம்புட்டும் தான் சொல்லிப்போட்டன்.



                  கடையிலிருந்து திரும்பி வந்து கொண்டி ருந்த கருத்தாயிää தம்பி காங்கேன் மீதுள்ள கோபத்தில் தன்வசம் கதைத்ததுக்கொண்டு வந்தாள். இவ்வளவு வசதியாக இருப்பவன் தன் தாயிக்குரிய கடமையே செய்யாதவன்ää மருமகளுக்கு மட்டுமா வந்திடுவான். என்று புலம்பிக்கொண்டு வந்தவளுக்குää என்ன இருந் தாலும் இந்த பயல் பிறந்த வீட்டுக்குள்ள எங்கய்யா பட்ட சந்தேசம் இருக்கே அதை இப்ப நினைத்தாலும் யாராலையும் மறக்க முடி யாது. தம்பி என்று இந்த பய மேல தான் வைத்திருந்த அன்பை யெல்லாம் படிச்சு முடிச்சதும். படிச்ச பிள்ளையை கல்யாணம் முடிச்சுக்கொண்டு பட்டணத்துக்கு போனவன் தான்ää ஒரு அம்மாää அக்காää பிள்ளைகள் இருக்கென்று ஒரு தடவைகூட வந்து பார்க் காத பயபுள்ள இதுக்கு மட்டுமா வந்திடுவான். என்று நினைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.


                 கடக்காற கருப்பண்ணை சொன்னதை தன் மகள் ராதாவிற்கு சொல்லி என்னம்மா என்ன செய்யலாம் என்ற கருத்துக்காகவும் காத்திருந்தாள். அம்மா மாமனைப்பற்றி சொன் னதும் கடும் கோவம் வந்தது. இருந்தும் அம்மாவின் மனம் வேத னைப்படும் என்றதற்காக மௌனமாக கேட்டுக்கொண்டிருந்தாள். சற்றும் எதிர்பாராமல் அம்மா தன்னிடம் அபிப்பிராயம் கேட்டது என்னவென்று புரியாமல் இருந்த ராதாவை அம்மாவின்ää  பிள்ளை என்று கூப்பிட்ட குரல் நினைவுக்கு கொண்டு வந்தது. என்னம்மா ராதா என்ன யோசிக்கிறாய் உன்ர அபிப்பிராயம் என்னவென்று கேட் டனான் என்றார். ராதா தன்னை சுதாகரித்துக்கொண்டு அம்மா…. நான் என்ன சொல்ல உனக்கு எது சரியெண்டு படுகிறதோ அதை செய்யனண என்றாள்.


              இளையவளுக்கான சாப்பாடெல்லாம் கொடுத்து முடித்துக்கொண்டு சற்று ஓய்வு எடுக்க நினைத்து படுக்க போன வவை அம்மா என்ற குரல் நிற்பாட்டியது. யாரது என்று கேட்டுத்

திரும்பியவள் ஷோபாவை பார்த்ததும் என்ன புள்ள அதுக்குள்ள பள்ளிக்கூடம் முடிஞ்சிதா? என்று கேட்டு நேரத்தைப்பார்த்தாள். வாடா வா உனக்கும் சாப்பாடு தந்திட்டு கொஞ்சநேரம் கண்ண யர்ந்தால்தான் விடிய நேரத்துக்கு எழும்பலாமென்று சொல்லிக் கொண்டு அடுப்படிக்கு போனாள். உடுப்பு மாத்தி கைää கால் கழிவிக்கொண்டு சாப்பிட வந்த ஷோபா அம்மா சிநேகாவுக்கு என்ன நடந்தது என்று கேட்டாள். அதுக்கு கருத்தாயி ஒரு நீண்ட பெரு மூச்சோடு அவ வயசுக்கு வந்துட்டாவடி என்றார். ஓ… அதுவா  அது தான் சரோஜா ரீச்சர் கொண்டு வந்து விட்டவா? என்று ஆச்சரியத்தோடு கேட்டாள்.


               மாலையில் எழுந்து ஏதோ தீர்மானித்தவளாக வெளிக்கிட்டுக் கொண்டு கடைப்பேரிப்பக்கமாக போளாள் கருத்தாயி. கருப்பண்ணனின் கடையில் போய் அண்ணே காலையில நீங்கள் சொன்ன விடையமாக வந்திருக்கிறேன் என்றாள். அதுக்கு என்னம்மா நான் செய்யவேண்டும் எனக்கேட்டார். வந்தண்ணே தம்பியட தொலைபேசி நம்பர் தெரியாது அது தான் என்று இழுத்த கருத்தா யிக்குää பொறு புள்ள உன்ர தம்பியோடு படிச்சவர் தான் நம்ம கவுன்சிலர் அவரட்ட கேட்டு வேண்டித்;தாரன்ää நீ இந்தக் கடைய கவனித்துக்கொள் என்று சொல்லி சைக்கிளை வேகமாக மிதித ;தவருக்கு தன்னையும் மதித்து கருத்தாயி சம்மதித்தது மிக மகிழ்ச ;சியைக் கொடுத்தது. அவசரமாக கவுனிசிலரிடம் போன் நம்பரை வேண்டுக்கொண்டு வந்தவர் தன் போனிலிருந்தே தொடர்பினை ஏற்படுத்தினார்.


                மறுபக்கம் மணி ஒலிக்கும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் ஒரு பெண் குரல் ஹலோ சொன்னதும் நான் மாவி லாறு கராமத்திலிருந்து கருப்பன் பேசுறன் அப்பா இருக்கிறாங்களா

என கேட்கää அப்பா உங்களுக்கு தான் போன் என சொல்லி போனை காங்கேயனிடம் கொடுத்தாள். காங்கேயன் போனை வேண்டி ஹலோ யார் பேசுறீங்கள் என்றான். அதுக்கு தம்பி நான் மாவிலாறு கிராமத்திலிருந்து கருப்பன் பேசுறன் எப்பிடியப்பு இருக்கிறீங்க என்றார்? ஓ கருப்பண்ணையோ நான் சுகமா இருக்கிறன் நீங்க எப்படி இருக்கிறீங்க? என்றான். ஓம் நல்லா இருக்கிறன் என்று சொன்னவர்… சிறிய இடைவேளையின் பின்..


                தம்பி உங்களோட ஒருவர் பேசவேண்டுமாம் என்று சொல்லி போனை கருத்தாயிடம் கொடுத்தார்.. ஹலோ என்று கருத்தாhயி கேட்க பதிலுக்கு ஹலோ சொன்ன காங்கேயன் நீங்க யாரு பேசுறீங்க என்றான் வார்த்தைகள் தொண்டைக் குழியிலிருந்து அடைபட்டு பிசிறு பிடித்து வெளிவந்தது. கருத்தாயின் கண்களில் கண்ணீர் துளிகள் அவளை அறியாமல் உதிர்ந்தது. மீண்டும் காங் கேயனின் குரல் ஹலோ நீங்க யார் பேசுறீங்க என்றது. கருத்தாயி கருப்பனை பார்த்தாள் அவர் கையால் சமிக்கை காட்டி பேசச் சொன்னார். மீண்டும் சிறிது திறந்த குரலில் ஹலோ தம்பி என்று கூப்பிட்டா. தம்பி நான் அக்கா பேசுறன் உன்ற மருமகள் சிநேகா வயசுக்கு வந்திட்டா அதை செர்லுவம் எண்டு தான் எடுத்தனான். ஏப்பிடி ராசா சுகமா இருக்கிறியா? எனக் கேட்கவும் தொலைபேசி இணைப்பு துண்டித்து சத்தம் கேட்டும் புரியாதவளாக தன் கதை சொல்லிக் கொண்டிருந்தாள் கருத்தாயி. மறுபக்கம் எந்தவித பதி லும் காணாத கருப்பன் பிள்ள என்ன தம்பி உன்னோட கதைக் கிறானோ எனக் கேட்டார். அப்போது தான் மறு முனையில் சத்தம் கேளாமையினை உணர்ந்தாள்.


                      என்னம்மா இப்படி செய்து போட ;டானே உன் தம்பி என்றார் கருப்பர். அண்ணே உங்களால என் தம்பியின் குரலையாவது கேட்டேனே எனக் கூறிää எவ்வளவண்ணே காசு எனக்கேட்டாள். துக்கம் தாளாமல். போம்மா போ இதுக் கெல்லாம் உன்னட்ட காசு வேண்டிறதா என சொல்லி எல்லாம் நல்லபடியாக நடக்கும் கவலைப்படாத என சொல்லி அனுப்பினார் கருப்பர். மீண்டும் மனச்சோர்வோட நடந்து வந்த கருத்தாயியின் நெஞ்சு பாச வேதனையால் கனத்து ஒரு மர நிழலில் உக்காந் தாள்.. தன் மனச் சுமைக்கு மரநிழலில் பட்ட காத்து சுகமாக இருந்தாலும்ää தன் தம்பியால் ஏற்பட்ட வலியின் வேதனையை கருத்தாயினால் தாங்கமுடியாமல் இருந்தது. உறவுகள் என்றும் சுமைகளோ என எண்ணினாள்…


                     வீட்டுக்கு வந்த போது குழந்தைகள் மூவரும் தாயை ஆவலோடு காத்திருந்தனர்ää அம்மா போன அலுவல் என்னாச்சு என்று ராதா கேட்டதன் மூலம் கருத்தாயி உணர்ந்தாள். ஊம்… என்னத்தை சொல்ல என்று இழுத்தாள். என்னம்மா மாமா உன்னோட பேசவே இல்லையா? என கேட்டுää  விடம்மா இதெ ல்லாம் நடக்குமென்று எனக்க தெரிந்து தான்ää  உன் விருப்பபடி செய்யென்று மௌனமாக இருந்தனான். இதுக்கு போய் கவலை ப்படதயம்மா என்றாள். ஷோபா தாயைக் கட்டி அணைத்து அம்மா நான் நல்லாப் படிச்சு டாக்டராக வந்து உங்களையெல்லாம் சந் தோசமாக வைத்திருப்பன் என்று சொல்லி தாயின் நாடி துடிப்பினை பரிசோதனை செய்வது போல் செய்தது தாயின் மனதில் மகிழ் ச்சியை ஏற்படுத்தியது.


                 மூன்று பிள்ளைகளிலும் ஷோபா படிப்பில் மிகவும் கெட்டிக்காறியாக இருந்தாள். இதனால் பள்ளிக்கூட அதிபர் அவளை நன்றாக படிப்பிக்க வேண்டுமென்று உற்சாகம் ஊட்டுவார். ஒரு முறை மாவட்ட ரீதியான பரிட்சையில் அதிக புள்ளிகள் எடு த்து முதலாம் இடத்திற்கு வந்து தன் பாடசாலைக்கு மட்டுமல்லää அந்த மாவிலாறு கிராமத்துக்குமே பெருமையைத் தேடிக்கொடு ;த்தாள். ஷேபாவின் புகைப்படம் பத்திரிகையில் வந்ததை அதிபர் ஷோபாவிடம் கொடுத்து வீட்டில் காட்ட சொன்னார். அன்றிலிருந்து பாடசாலையின் கதாநாயகியாக ஷோபா விளங்கினாள். இருந்தும் ஷோபாவின் மனம் தன் தாயின் சுமைகளையும் என் அம்மாää அக்காக்கள் சந்தோசமாக வாழவேண்டும் என்பதனையும் எண்ணி ஏக்கம் கொண்டபோது தனக்குள் தானே சபதம் எடுத்துக ;கொண்டான். முடியாதது என்ன இருக்கு….


                     சிநேகாவும் 12ம் வகுப்பில் படிப்பை தொடங்கினாள்.. ராதாவின் வருமானமும்ää தாயின் வருமானமும் விலைவாசியின் முன் தாக்கு பிடிக்க முடியால் மேலும் கஸ்டமான வாழ்க்கைக்கே இட்டுச்சென்றது. வறுமையின் கொடுமையினை உணர்;ந்த பிள்ளைகள்ää. எதற்கும் தாயிடம் அடம்பிடிக்காதவர்கள். எப்படி தம் வருமானத்தினை உயர்த்தலாம் என யோசித்தவர்க ளுக்கு ஷோபா தன் அபிப்பிராயத்தினை சொன்னாள். இதைக்கேட்டு ராதா அதிர்ந்து போய் போடி நீ பெரிய மனுசியாட்டம் கருத்து சொல்ல வந்திட்டா. உன்ர வேலை படிக்கிறது. அதை சரியாக செய் எனச்சொன்னாள்.  இருந்தும் ஷோபா தன் கருத்தில் உறுதியக நின்றதால் வெற்றியும் கண்டாள்.


                  மறு நாளே பாடசாலை முடிந்து வீட்டுக்கு வநத ஷோபாவிடம்ää கருத்தாயி பலகாரம் சுட்டுக் கொடுத்துவிட்டாள். அதை தன் தலையில் சுமந்து றோட்டு றோட்டா போய் விற்க தொடங்கினாள்.. இந்த வயசுப்பிள்ளையின் முயற்சியை சிலர் பாரட்டிய போதும் சிலர் விமர்சிக்கவே செய்தனர். விமர்சனங்கள் எதையும் கருத்தாயின் குடும்பம் செவியில் வேண்டிக்கொள்ளாமல் தமது வாழ்வின் விடியலை நோக்கியே சென்றுகொண்டிருந்தது.


                       நாட்கள் மாதங்களாகää மாதங்கள் வருடற்களாக உருண்டோடி ஷோபாவும் வளர்ந்து 12ம் வகுப்பு படி த்துக்கொண்டிருந்த போது மாவட்ட ரீதியாக பேச்சுப்போட்டி நடை பெற உள்ளதாகவும்ää இதில் வெற்றி பெறும் மூன்று பேருக்கு கணி சமான தொகை பணம் பரிசாக கொடுக்க இருப்பதாகவும் விளம்பரம் வந்த செய்தியை அறிந்த மாவிலாறு பாடசாலை அதிபர் ஷோபா வை பங்கு கொள்ள உற்சாகப்படுத்தினார். இதில் அதிஷ்டம் என்னவென்றால் தலைப்பு பேசுபவர்களின் விருப்பமாக இருந்தது தான். பாடசாலை அதிபரின் விருப்பத்திற்கு இணங்க ஷோபா விண்ணப்ப படிவத்தை நிரப்பி கையொப்பம் இட்டு அதிபரிடமே கொடுத்திருந்தபோது அதிபரிடம் சார் தலைப்பு என்னுடையதுää நான் மேடையில் பேசும் வரை யாருக்கும் சொல்ல மாட்டேன் என்பதனை உறுதியாக சொன்னாள்;. அதிபரும் அவள் மேல் நம்பிக்கை கொண்டு சம்மதித்தார்.


                   அந்த பேச்சுப்போட்டி நாளும் வந்தது. மாவட்ட ரீதியாக பலர் கலந்து கொண்டனர். எல்லாப் பேச்சா ளர்களும் பிரபலங்களின் வாழ்வியலைப் பற்றி பேசினர். ஷோபா வின் முறை வந்தது. போட்டியின் நீதிபதிகள் சபையில் இருந்த அறிஞர்கள் அனைவருக்கும் வணக்கம் சொல்லி முடித்து நான் தெரிவு செய்திருக்கும் தலைப்பு  ”வறுமை” என்று சொன்னாள். தலைப்பே பலரின் ஆவலை தூண்டியதை அதிபர் கவனிக்க தவறவில்லை.


               உலக சனத்தொகையில் அதிகமான மக்கள் வறியவர்களாக இருக்கின்றனர். அதிலும் நம்மைப்போன்று பின்தங் கிய நாடுகளில் வாழும் மக்களில் அதிகமானவர்கள் தங்களின் நாளாந்த வாழ்வியலையே நிறைவு செய்துகொள்ள முடியாதவர் களாக வறுமையில் சிக்குண்டு தவிக்கின்றனர். இப்படி வறுமையில் சிக்குண்டு தவிப்பவர்களை ஒரு நிலையான வாழ்க்கை தரத்திற்கு கொண்டுவருவதற்கு யாருமே மனிதம் சார்ந்து முயற்சித்தது கிடை யாது. அரசியல் தலைவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை வளம் பெற செய்பவர்களாகவும்ää வாக்கு சேகரிக்க மட்டும் மக்களை தேடுபவ ர்களாகவுமே இருக்கின்றார்கள்.


                     சமூக அந்தஸ்து என்பது வாழவியல் சார்ந்த உயர்வுää தாழ்வினை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. அப்ப டியானால் வறுமையில் வாழும் மக்களின் நிலைக்கு யார் தான் கார ணம். கடவுளா? அதிஸ்டமா? விதியா? என்பதான கேள்விகள் எழு கின்றன. கடவுள் என்போமானால் மனிதர்களை பிரிவினையென்னும் கோட்பாட்டிற்கு அமைவாக ஏன் படைக்கவேண்டும் என்ற கேள்வி எழுகின்றது.


                     அதிஸ்டம் என்ற கேள்வி எழுந்தால்ää அது ஓரு சோம்பேறின் வெற்றியாக மனித வாழ்வு அமைந்து விடு கின்றது அல்லவா? அப்படியானால் விதியாக இருக்கலாமா? விதி யென்றால் என்ன என்ற கேள்வி எழுமல்லவா?  விதி என்பதனை எப்படி தீர்மானிப்பது என்ற கேள்வியும் கூடவே எழுகின்றது. உண ;iயிலேயே வறியவர்களாக மனிதர்கள் படைக்கப்பட்டர்களா? அல் லது வறியவர்களாக ஆக்கப்பட்டர்களா?  என்ற கேள்வியே வறு மையினை தீர்மானிக்கின்றது. எனது பார்வையில் மனிதர்கள் வறி யவர்களாக ஆக்கப்படுகின்றார்கள் என்பதுவேயாகும். காரணம் ஒரு மனிதனின் நாளாந்த வருமானத்தையே நிர்ணயிக்கும் சக்தியாக முதலாளித்துவம் விளங்குவதேயாகும். அந்த முதலாளித்துவää தொழிலாளித்துவ வர்க்க முரண்பாட்டினை இல்லாது ஒளித்;தால் ஒளிய வறுமை இந்த உலகை விட்டு ஒளியாது.


                      சான்றோர்களே இந்த வறுமையி னை ஒளிப்பதற்கான சமூக சு10ழலை உருவாக்கிää தீர்வினை காண வேண்டுமென்று உங்களை அன்போடு கேட்டு போட்டியின் கால வரைக்குள் என்னால் முடிந்தளவு வறமையின் கொடுமையினை விபரித்துள்ளேன் என எண்ணி என் உரையினை நிறைவு செய் கின்றேன். ஷோபாவின் பேச்சில் அங்கிருந்த எல்லோருமே கதி கலங்னி போனார்கள். இந்த சிறு குழந்தையின் மன உணர்வுகளின் பதிவின் நியாயத்தினை உணர்ந்தனர்.


                     கருத்தாயின் கண்களில் அவளையும் அறியாமல் கண்ணீர் துளிகள். சந்தேசத்தின் அடையாளமா? அல் லது  வறுமையின் இயலாமையின் அடையாளமா என தன்னையே தான் கேள்வி எழுப்பிக்கொண்டு புடவைத் தலைப்பால் கண்களை துடைத்துக்கொண்டாள். சிறிய இடைவேளைக்கு பின் பேச்சுப் போட்டியின் தீர்ப்பு அறிவிக்க நடுவர்கள் மேடைக்கு வந்தார்கள். மண்டபம் மயான அமைதியாகி பேச்சாளர்கள்ää பெற்ரோர்கள் மன ங்களில் எல்லாம் ஒரு வகை பதட்ட நிலை நிலவியது. நடுவர் எழுந்து இப்பேச்சுப்போட்டியில் 3ம் இடம் பிடித்தவர் என்று கூறி அவரின் பெரினை சொன்னார். அது ஒரு ஆண் மாணவாக இரு ந்தார். எல்லோரும் கரகோசம் எழுப்பி உற்சாகமூட்டினார்கள். அடு த்து 2ம் இடத்துக்கான பெயர் அறிவிக்கப்பட்டதுää இதிலம் ஷோப வின் பெயர் இடம்பெறவில்லை. இருந்தும் பெற்ரோர்கள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை தெரிவித்தனர். இப்போது மண்டபத்தில் எல ;லோர் மனங்களிலும் ஒரு வகையான பதட்டத்தினை காணக்கூடி யதாக இருந்தது.


                       பிரதம விருந்தினராக வந்திருந்த மாவட்ட கலெக்டர் எழுந்து ஒலிபெரிக்கி முன் வந்தார். ஆவலோடு எல்லோரும் அவரையே வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டி ருந்தனர். ஒவ்வொரு மணித்துளிகளும் பெற்ரோரின் பொறுமையை சோதிக்கும் கணமாக அமைந்ததை அனைவரும் இருக்கையின் நுனிக்கு நகர்ந்தமை தெளிவு செய்தது. 10 வரை நம்பர் எண்ணப்ப ட்டது. இறுதியாக கலைக்டர் வாயிலிருந்து செல்வி ஷோபா என்று உச்சரித்ததும் அதிபரின் மனம் துள்ளிக் குதித்தது. இப்போது நிஜ மாகவே கருத்தாயியின் கண்களில் கண்ணீர்த்துளிகள். தன்னைப ;பார்த்த அதிபருக்கு இரண்டு கைகளையும் கூப்பி நன்றி செலுத்தினாள்.


                  அரங்கமே அதிரும் வண்ணம் கரகோசம் கேட்டது. தன் மகள் மேடைக்கு போகும் கண்கொள்ளா காட்சியை பார்த்து தன்நிலை மறந்தவளாகää சொல்ல முடியாத ஒரு வகை உணர்ச்சிகளால் பின்னப்பட்டு செய்வதறியாது தடுமாறினாள். என் குழந்தையும் இவர்களைப் போலத்தான் வென்றுவிட்டாள் என்று மனதுக்குள் புலம்பினாள். வெற்றிக் கேடயத்துடனும்ää பரிசுப்பணத் துடனும் மேடையை விட்டு கீழே வந்த ஷோபா நேரடியாக அதிப ரிடம் சென்றுகாலில் விழுந்து ஆசீர்வாதம் வேண்டினாள். பின் தாயி டம் சென்று ஆசீர்வாதம் பெற குனிந்தவளை அப்படியே அள்ளி அணைத்து முத்தமழை பொழிந்தாள். என் புள்ள சாதித்து விட்டாள் என்று மனதுக்குள் சொன்னாள். தன் மகளின் கனவின் தொடக்கம் இது என மகிழ்ந்தார்.


                        மாவிலாறு கிராமமே ஷோபாவை வழியனுப்புவதற்காக திரண்டிருந்தது. சும்மாவா தமது ஊர் பிள்ளை பெரிய படிப்பு அதுவும் டாக்டருக்கு படிக்க போகிறது என்ற மகிழ ;ச்சி பலரின் முகங்களில் காணமுடிந்தது. இருந்தும் சிலரின் வாய் களில் ஊம் மாமனையும் இப்படித்தானே வழியனுப்பி வைத்தோம் படிப்பு முடிய இந்த ஊர் பக்கமே வராத பயல்ää அது போலத்தான் இவவும் செய்வாவோ தெரியாதென புறுபுறுத்தனர். பாடசாலை அதி பர்ää ஆசிரியர்கள் என்று எல்லோருமே ஒன்ற கூடி வழியனுப்பினர். கருத்தாயி என்ன நடக்கிறதென்றே தெரியாதவளாக கண்ணளில் கண்ணீர் துளிகளோடு நின்றவவிடம் ஓடிவந்த மகள் ஷோபாää தாயைக் கட்டிப்பிடித்து கொஞ்சியபோது தான் கருத்தாயி சுய நினைவுக்கு வந்தாள்.


                     மகளை வழியனுப்பி வைத்ததோடு எல்லோரும் தங்கள் தங்கள் வீடுகளுக்குள் சென்று கொண்டிரு ந்தனர். அதிபர்ää ஆசிரியர்கள் எல்லோரும் கருத்தாயிக்கு வாழ்த ;துக்கள் கூறி விடைபெற்றுக்கொண்டிருந்தனர். அப்போது கருத்தா யிக்கு அருகில் வந்த சரோஜா ரீச்சர் கருத்தாயியை கட்டி அணை த்து உன் துன்பங்களுக்கொல்லாம் விடிவு கிட்டிவிட்டதென்று மன நிறைவோடு சொன்னபோதுää ரீச்சர் உங்கட ஆசீர்வாதமும்ää அதிபரின் முயற்சியும் தான் காரணம் எல்லாம் நல்ல படியாக முடியவேண்டும் ரீச்சர் என்று சொன்னாள். அதுக்கு சரோஜா ரீச்சர் ஒன்றுக்கும் பய ப்படாத கருத்தாயி எல்லாம் மகிழ்சியாக நடக்கும் என்றார்.


                      நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. கருத்தாயிக்கும்ää ராதா.சிநேகாவுக்கும் ஷோபாவின் பிரித்துயர் வாட ;டிக்கொண்டிருந்தது. கஞ்சியோää கூளோ குடித்துக்கொண்டு ஒன்றான இருந்த நாங்கள் இப்படி ஒருத்தியை பிரிந்து விட்டமே என்ற வாட்டம் இருக்கதானே செய்யும். வழமைபோல் இரவு எல்லா வேலைகளையம் முடித்துக்கொண்டு சாமி கும்பிட்டு விட்டு படுக்க போன கருத்தாயின் மனதில் ஏதோ ஓர் உணர்வு. என்ன இது மன தை ஏதோ செய்கின்றது. என்று நினைத்து மீண்டும் சாமி கும்பிட்டு படுத்துக்கொண்டாள்.

                    காலை 5 மணிக்கு எழுந்து வெளியில் வந்தவளை காகம் கரைந்து வரவேற்றது. என்ன இது விடிய வெள் ளன காகம் கரைகிறதே என்ன நடக்கப் போகிறதோ என்று கட வுளை வேண்டிக்கொண்டு காகத்தை கலைத்தாள். ஆனால் அது அந்த இடத்தை விட்டு நகர்வதாகவும் இல்லைää கரைவதை நிறு ததுவதாகவம் இல்லை;. காலைச்சாப்பாடெல்லாம் முடித்து பிள் ளைகள் ராதாவையும்ää சிநோவையும் வேலைக்கனுப்பிவிட்டு திண ;னையில் சாய்ந்தாள் கருத்தாயி. தூங்க போனவளின் காதுகளில் காகத்தின் இரச்சல் இடஞ்சலைத் தந்தது. கோபம் கொண்டு எழுப்பி தடி எடுத்துக்கொண்டு கலைக்க போனவுக்கு வாசலில் சைக்கிள் மணி அடிக்கும் ஓசைகேட்டு வாசலைத்தேடி போனாள். தடியுடன் கருத்தாயிளைக் கண்ட தபால் காரன் பயந்து போய். அம்மா உங்களுக்கு கடிதம வந்திருக்கு என்று பெலமாக சொன்னான். தன் கையிலிருந்த தடியை தூர எறிந்துவிட்டுää தம்பி யாரெட்ட ராசா இருந்து வந்திருக்கு என்று கேட்டாள். யாரோ ஷோபாவாம் என்றான். அது யாரோ இல்லையப்பு என்ர கடக்குட்டி பெட்ட என்று சொல்லி ராசா இதை ஒருக்கா படிச்சு சொல்லப்பு உனக்கு புண்ணியம் கிடைக்குமென்றாள்.  தபால்காரன் படிக்க தொடங்கினார்.


                   அன்புள்ள அம்மாää ராதாஅக்காää சிநேகா அக்கா எல்லோருக்கும் நான் நலமுடன் வந்துள்ளேன். நீங்கள் எல்லோரும் சுகமாக இருக்கின்றீர்காளா? அம்மா நான் எப்படியும் படித்து வருவேன் என்னை நினைத்து கவலைப்படாதீங்கள். அக்கா க்களை சந்தோசமக வைத்திருங்கள். எனக்கு உங்களை நினைத்த தான் கவலை அம்மா. எங்களையே உங்கள் உலகமாக்கிக்கொ ண்டுää எந்தவித சந்தோசத்தையும் அனுபவிக்காமல் வாழுகின்றீர் களே அதை நினைத்தால் தான் எனக்கு மிகவும் கலையாக இரு க்கிறது. அம்மா நமக்கான விடியல் தொலைவில் இல்லையம்மா. மகி;ழ்ச்சியாக இருங்கள். ராதா அக்கா எப்படி இருக்கின்றீர்கள். வேலையெல்லாம் எப்படி போகின்றது. அக்கா அம்மாவை கவனமா கப் பார்க்கவும். உங்களையெல்லாம் பிரிந்து வந்தது எனக்கு சரி யான கவலைää இருந்தும் நம் வாழ்வின் எதிர்காலத்துக்காக எல்லாவைற்றறையும் தாங்க தயாராக இருக்கின்றேன்.


                         ஹலோ சிநேகா அக்கா எப்படி இருக்கின்றாய். உங்களையெல்லாம் சகோதரங்களாக நான் பெற்றது பெரிய பாக்கியம். என்னவாம் அம்மா. உனக்கு தான் அம்மாவின் உணர்வுகள் நன்றாகப் புரியும் அம்மா கவனம். கவனமாக பார்த ;துக்கொள்ளவும். பட்டணம் எப்படி இருக்கென்று என்னால் எழுத்து க்களில் எழுத முடியாமல் உள்ளது. பார்க்கும் இடமெல்லாம் கட ;டிடங்கள். வண்ணமயமான காட்சிகள். கார்கள் ஆயிரக்கணக்கில். இந்த மனிதர்களின் வாழ்க்கையை நாம் கூடிய விரைவில் அனுப விப்போம். எனக்கு வகுப்புகள் தொடங்கிவிட்டன. சுஜாதா என்ற பெண் என்னுடன் அன்பாக பழகுகின்றா. அவதான் என் அறையிலும் என்னோடு இருக்கின்றா. நமது ஊரில் எல்லோருக்கும் என் அன்பை தெரிவிக்கவும். நான் அடிக்கடி கடிதம் போடுகின்றேன். அம்மா உங்கள் மகிழ்ச்சி தான் என் படிப்பினை தொடர உதவி செய்யும்.

நீங்களும் எனக்கு கடிதம் போடவும்.


அன்புடன்

ஷோபா


        கடிதத்தை வாசித்து முடித்த தபால் காரர் பெரு மூச்சு விட்டு அப்ப நான் உங்கள் வீட்டுக்கு அடிக்கடி வரவேண்டி வரும் எனக் கூறி சென்றவனை நில்லு தம்பி என்று மறித்த கருத்தாயி இந்தா ராசா ஆர் பெத்த புள்ளையே இதுக்கு போற வழியில தேனீர் குடியுமென கொடுத்தர். அதற்கு தபால் காரன் அம்மா உங் களின் நிலமை எனக்கு நன்கு தெரியும் நீங்களே இந்த காசை வைத்திருங்கள் என கொடுத்தான். நன்றியம்மா எனக்கூறி சைக் கிளை ஏறி மிதித்தான்.


                      நாட்கள் விரைந்து மறைந்தது பல கடிதங்கள்ää பல போராட்டங்களுக்கு ஊடாக தன் உணர்வுகளை அம்மாää சகோதரகளுடன் மட்டுமல்லாமல் பாடசாலையிலும் பகிர்ந்த கொண்டு இறதியாண்டுக்கு வந்துவிட்டேனே என எண்ணினாள். சுஜாதாவின் நட்பு கடவள் தந்த வரம் என்று பல தடவைகள் நினைத்ததுண்டு. இந்த வருடத்துடன் சுஜாதாவையும் விட்டு பிரியபோகின்றேனே என்ற ஆதங்கம் மனதில் கவலையை கொடுத் ததில் ஆச்சரியம் இல்லை. இருவர் கண்களிலும் அந்த பிரிவின் வேதனைகள வெளிப்பட தொடங்கினது. இருந்தும் காட்டிக் கொள் ளாமல் தங்களின் படிப்பில் கவனம் செலுத்தினர்.


                  பரிட்சை மண்டபத்தினை விட்டு வெளிவே வரும் போது  பெரும் மூச்சை விட்டார்கள். தங்களையே சுதாகரித் துக்கொண்டவர்கள் யாரும் தங்களை பார்கவில்லையே என்பதனை உறுதிப்படுத்திக்கொண்டு தங்களையும் அறியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து வெட்கப்பட்டனர். ஷோபாவையும் அறியாமல் மனம் ஒரு வகை மகிழ்ச்சியில் அலைபாய்ந்தது. ஷோபாவின் நகர்வுகளில் மாற் றங்களை கண்ட சுஜாதா கேட்Nடு விட்டாள். என்னடி ஷோபா நீ வீட்டபோறதில் மிகவும் சந்தோசமாக இருக்கின்றாய் போல. இருக் காதா பின்னää என்ர அம்மாää அக்காக்களை சந்திப்பதென்பது எவ் வளவு மகிழ்ச்சியான விடயம் என்றாள். இருந்தும் மறுபக்கம் உன்னை பிரிவதும் கஸ்டமாக இருக்கு என்றாள். மக்கு நாமதான் எப்படியாவது அடிக்கடி தொலைபேசியில் கதைப்பம்ää  சந்தர்ப்பம் கிடைக்கும் போது சந்தித்து கதைக்கப்போறம் என்று கவலையை வெளிப்படுத்தாமல் ஆறுதல் சொன்னாள் சுஜாதாää ஷோபாவுக்கு நேரம் நகர்வதாக தெரியவில்லை. ஒவ்வொரு நிமிடமும் வருடங்கள் போல் தோன்றின. இரவு சாப்பாட்டை முடித்துக்கொண்டுää கன்ரினில் எல்லோருக்கும் நன்றியும்ää பயண பிரிவையும் பகிர்ந்து கொண்டு இருவரும் தங்கள் அறைக்கு வந்தனர். சில மணித்துளிகள் இருவ ரும் தங்களின் பள்ளிக்கூட நாட்களை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்து மகிழ்ந்தனர். அப்போது சுஜாதா சொன்னாள் பாh ;த்தியா ஷோபா எத்தனை தடைகள்ää எத்தனை போராட்டங்களை தாண்டி நாமும் இன்று இறுதி நிலைக்கு வந்துள்ளோம். தலை யாட்டி சுஜாதாவின் கருத்தை ஆமோதித்தாள்.


                        உரையாடலின் ஊடே இருவரும் தங்களை மறந்து தூங்கிப்போனார்கள். நடு இரவில் ஏதோ நினைவு வந்தவளாக கண் விழித்த ஷோபாவுக்கு அப்போது தான் தெரிந்தது

இருவரும் தூங்கிவிட்டோமே நைற்றி கூட மாத்தாமல் என்பது. அறை முழுவதும் வெளிச்சமாக இருந்தது. ஷோபா எழுந்து சுஜாதா வின் உடுப்பை சரி செய்த விட் பெட்சீட்டால் மூடிவிட்டு தானும் இரவு உடுப்பை மாற்றிக்கொண்டு மீண்டும் படுத்துக்கொண்டாள். சிறிய தூக்கம் கொண்டதால் தொடர்;ந்து உடனே தூக்கம் வராமல் அங்க மிங்கும் பிரண்டு படுத்தவள் எழுந்து கனது இரவ வெளிச ;சத்தில் புத்தகத்தை எடுத்து படித்தாள்.


                    காலைச் சு10ரியனின் சு10டு பட்டு எழுந்த ஷோபாவுக்கு என்ன இது தூக்கிப்போனேனேää நன்றாக விடிந்த விட ;டதே என்று எண்ணிக்கொண்டு சுஜாதாவின் பெட்டை பார்த்தாள்ää அங்கு சுஜாதா இல்லைää எங்க இவள் ஏன் என்னை எழுப்பவி;ல்லை என எண்ணும் போது கதவு திறந்து கொண்டு வந்த சுஜாதா குட் மோர்னிங் என்றால் பதிலுக்கு மோர்னிங் சொன்ன ஷோபா என்னடி என்னை எழுப்பாமல் என்ற கேட்கää நீ நன்றாக தூங்கிங்க்கொண்டி ருந்தாய் அதனால  விட்டுவிட்டன் என்றாள். என்னடி இன்றைய பகல் பொழுதை எப்படி நகர்த்துவதென்று தெரியாமல் உள்ளது என்றாள். அதற்கு சுஜாதா நான் ஒரு யோசனை சொல்லுறன் கேட்பியா? என்றாள்.  என்ன யோசனை என கேட்ட ஷோபாவுக்குää நாம் பிரயாணத்திற்கான எல்லா ஆயத்தங்களையும் செய்து விட்டு வெளியில் போய் சாப்பிட்டு வர நேரம் சரியாகிடும் என்றாள்.

                      ஆமா இது நல்ல யோசனையாக இருக்கின்று கூறிய ஷோபா தன்னுடைய பொருட்களை எடுத்து வைக்க ஆரம்பித்தாள். இருவருமாக பயண ஆயத்தங்களை செய்து வைத்துவிட்டு வெளியில் சென்றனர். முதலில் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு விட்டுää சில கடைகளில் ஏறி இறங்கி ஏதும் வேண ;டலாமா என சுஜாதா கேட்டாள். ஷோபாவுக்கு எதுவும் வேண்டுவது விருப்பாக இல்லைää காரணம் தேவையான எல்லாம் வேண்டியாகி விட்டது. இந்த கடை சுற்றுலா வெறும் நேரம் போக்காட்டுவத ற்கானது என்பதில் மிகவும் தெளிவாக இருந்தாள். அது மட்டுமல்ல சுஜாதாவையும் எதுவும் வேண்ட விடவில்லை. தங்களின் படிப்பு காலத்தில் பிள்ளைகளுக்கு ரியுசன் சொல்லிக்கொடுத்து வந்த காசில் தான் தங்களின் நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்து வந்தார்கள். அப்படி வந்த காசில் வீட்டுக்கு கொண்டு போகவேண ;டுமென்று சேர்த்து வைத்த காசில் இருந்து செலவு செய்வதற்கு ஷோபாவுக்கு சிறிது கூட விருப்பம் இல்லை.


                 அந்த பிரிவின் நேரம் வந்தது. பொருட்கள் யாவும் இரண்டு ஒட்டோவில் ஏற்றப்பட்டு ஷோபா புகையிரத நிலைய த்துக்கும்ää சுஜாதா பஸ் நிலையத்துக்கும் போக தயாராகிவிட்டனர். ஆந்த சிறிது நேரம் அங்கு மயான அமைதி. ஏன்ன இது எப்படி தீடிரென இந்த நிலை வந்தது. இதற்கு முன்பு எத்தனை பேர் இந்த கொஸ்ரலை விட்டு போயிருப்பார்கள் எங்களுக்கு என்ன நடந்தது. போன்ற கேள்விகள். பிரிவென்றால் இத்தனை வலிகளை தருமா? தங்கள் குடும்பங்களை பிரிந்து வந்தபோது கூட இல்லத வேதனை எப்படி இப்போது? புதில் பெற முடியாத கேள்விகள் இரு வர் மனதிலும் எழுந்தது. பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி என்ற பாடல் தானே கவிஞர் எழு தினார். ஆனால் இப்போது எமது நிலமை பிரிவின் போதும் அழு தால் நிம்மதியாக இருக்கும் போன்று உணர்ந்தவர்களாக இரு வருமே ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து கண்ணீர் மல்க நின்ற காட்சி அங்கு வழியனுப்ப வந்த நண்பர்கள் மனதில் இருவரின் நட்பின் ஆழத்தை கட்டியம் கூறி நின்றது.


                       கனத்த மனங்களோடு வண்டியில் ஏறினார்கள். இரண்டு ஆட்டோவும் இரண்டு திசைகளில் பிரிந்து சென்றது. கைகள் மட்டும் கண் பார்க்கும் தூரம் வரை அசைந்து ஓய்தது. ஷோபாவின் மனதில் இவ்வளவு தானா? எங்கள் நட்பு. இனி எப்போது பார்ப்போமோ என்ற ஏக்கம் மட்டும் கேள்வியாக மிஞ்சியது. புகையிரத நிலையத்தை வந்தடைந்த போது ஷோபா வின் மனம் மாற்றம் கண்டு தன் குடும்பம்ää தன் கிராமத்தின் நினை வுகளில் மூழ்கியது. மனித மனம் எவ்வளவு தையிரியமானது. துன் பம் மட்டும் சுமக்கும் மனமாக இருக்குமானால் இந்த உலகம் நிட் சயம் அழிந்து விடும். அதனால் தான் மனம் அடிக்கடி மாற்றம் பெறுகின்ற இயல்பினை கொண்டிருக்கின்றது. இந்த மாற்றங்களால் தான் மனிதன் சாதனையாளனாகவும் இருக்கின்றான் என எண்ணி க்கொண்;டு தன் பிரயாணத்தை தொடங்கினாள்.


                     மாவிலாறு கிராமமே ஒரு வகையான மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தது. கருத்தாயின் எண்ணங்கள் மகள் ஷோபாவையே சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தது. தான் வாழ்வில அனுபவித்த துன்பங்களுக்கெல்லாம் விடிவு காலம் வந்து விட்டதுää என் குழந்தைகளின் வாழ்வில் விடியல் ஏற்பட்டு விட்டதென்று நினைத்தவளின் மனதில் சொல்லொனா சந்தோசம். ராதாää சிநேகா அங்குமிங்கும் ஓடிää ஆடி வேலை செய்துகொண்டு இருந்தார்கள்.

ஷோபாவின் வரவுக்காய் ஊரே காத்திருந்தது.


                    புகையிரதத்தை சுற்றி எங்கும் இருள் மயம். நேரமும் நடுச்சாமத்தினை நெருங்கிக்கொண்டிருந்தது. இதா னால் அதிகமான பயணிகள் தங்களை மறந்து தூங்கிக்கொண்டி ருந்தார்கள். ஷோபாவின கண்களில் தூக்கம் வரவில்லை. மாறாக

தன் தாயின் நினைவுகள் தான் சுற்றி சுற்றி வந்தது. அம்மா என் அம்மா என வாய்உசிசரிததது. எங்கள் குடும்பத்தின் வாழும் தெய் வம். என்றும் தன் சுமைகளை மனம் கலங்காமல் சுமப்பவ என் அம்மா. எங்களோடு என்றும் அன்பைத்தவிர வேறு எதையும் பகிh ;ந்து கொண்டவவில்லை. நாங்களாக எங்கள் அம்மாவின் சுமைகளை உணர்ந்து வாழ்ந்து வருகின்றோம். ஆழகான அக்காக்கள் இன்று எனக்காக எத்தனை தியாகங்களை செய்கின்றார்கள். தங்களின முழு உழைப்பையும் அகிழ்சிசியாக என் படிப்பிற்காக செலவு செய் கின்றார்கள். இளமையின் கனவுகளை தொலைத்தவர்கள் என் அக்காக்கள். என் வாழ்க்கை யாவும் இந்த மூன்று பேரின் மகிழ்ச ;சியில் தான் இருக்கின்றது. என்பதில் ஐயளவும் மாற்றம் இல்லாத வளாகவும். தூன் வேலை தொடங்கியதும் ராதா அக்காவின் திரு மணம் செய்து வைக்கவேண்டுமென்றும் எண்ணிக்கொண்டிருந்த ஷோபா அமைதியின் பிடியில் சிக்கி உறங்கிப்போனாள்.


                         விடியலின் ஒளித்தெறிக்கைகள் பட்டு கண்விழித்த ஷோபாவுக்கு தன் கிராமம் நெருங்கி விட்டதற ;கான அடையாளங்களை கண்டாள். இன்னமும் இரண்டு தரிப்பிடம் தான் இருக்கிறது என்பதனை உணர்ந்தவள்ää தன் ஆடைகளை சரிசெய்து கொண்டு தலைவாரிää மகத்தினை நன்றாக துடைத்து ஆயத்தமானாள். புள்ள ராதாää சிநேகா என கூப்பிட்டுக்கொண்டு கருத்தாயி அடுப்படியிலிருந்து வந்தாள். தாயின் குரல் கேட்டு இரு வரும் ஓரே குரலில் என்னம்மா என்று கேட்டுக்கொண்டு அறை யிலிருந்து வெளியே வந்தார்கள். என்ன புள்கைகள் ரெடியா கிற்றீங்களா? வண்டி வர்ர நேரமாகிறது என்று சொல்லி பகையிரத நிலையத்துக்கு போவதற்காக வண்டியில் ஏறினார்கள். வண்டி புகையிரத நிலையத்தை நோக்கி விரைந்தது. புகையிரத நிலை யத்தில் ஊர் மக்கள் கூடி நின்றனர். சிறிது நேரத்தில் வண்டி இவர்களின் நிலையத்தை வந்தடைந்தது. புகையிரத ஓட்டுனருக்கு என்ன இவ்வளவு சனம் கூடி நிற்குதே யாரும் அரசியல் பிரமுகர்கள் வருகின்றார்களா? என்ற கேள்வி எழுந்தது. அதை அங்கு வேலை உத்தியோகத்தரிடம் கேட்டபோது அவர்தான் சொன்னார். இந்த கிரமத்தில் டாக்டருக்கு படித்து விட்டு ஷோபா என்ற பொண் வருகிறார் அவரை வரவேற்கத்தான் இவ்வளவு கூட்டம் என்றார்.


                  மக்கள் கூட்டத்தை கண்ட ஷோபாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தபோதும் தன் அம்மாவையும் அக்காக்களையும் தேடினாள். அப்போது அந்தா ஷோபா என கருத்தாயின் குரல் கேட்டு திரும்பினாள் ஷோபா. அம்மா என கத்திக்கொண்ட வண்டி யிலிருந்து குதித்து இறங்கினாள். தூயை கட்டிப்பிடித்து முத்த மழையால் நனைத்தாள். அதே போலவே ராதாää சிநேகாவையும் மாறி மாறி கொஞ்சினாள். ஏல்லோரும் தங்களை மறந்து அழுது கொண்டிருந்தனர். ஆனால் கண்ணீர் முகத்தில் வடிந்தாலும் அதை யும் தாண்டி அவர்களின் முகம் மகிழ்ச்சியாக இருந்தது. இதைத் தான் ஆனந்தக் கண்ணீர் என்றனரோ. தன் அம்மாää அக்காக்கள் ஊர் மக்களை கண்டது ஷோபாவுக்கு தன் கனவுகள் யாவம் நிறைவேறியதாகவும். இனிமேல் தான் தனது கடமைகள் இருப்ப தாகவும் நினைந்து கொண்டு வீட்டுக்கு புறப்பட்டனர்.