onsdag 7. oktober 2015

பிரான்ஸ் ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் சிறந்த வீரரான கிறிஸ்தோபர் கமல்ராஜ் தெரிவு செய்யப்பட்டு அவருக்கான விருதும் கௌரவமும் வழங்கப்பட்டது

பிரான்ஸ் ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் அங்கத்துவம் வகிக்கும் கழகங்களில் இருந்தும் தலா ஒவ்வொரு சிறந்த வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் அண்மையில் சிறந்த முறையில் பிரான்சில் கௌரவிக்கப்பட்டார்கள் அந்த வகையில் நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக்கழகத்தில் இருந்து மிகவும் அனுபவம் வாய்ந்த சிறந்த வீரரான கிறிஸ்தோபர் கமல்ராஜ் தெரிவு செய்யப்பட்டு அவருக்கான விருதும் கௌரவமும் வழங்கப்பட்டது மேலும் கமல்ராஜ் அவர்கள் 35 வயதினைத்தாண்டியும் இன்றும் எமது கழகத்தில் முக்கிய வீரராக சிறப்பாக செயல்பட்டிக்கொண்டு இருக்கின்றார். யாழ்ப்பாணம் நாவந்துறையின் புகழ்பெற்ற முன்ணாள் வீரரான ராசா அவர்களது மூத்த புதல்வனாவார் இவரோடு சுமன்ராஜ்,ரொசாந்தன்,விக்ரர் , தற்போது யாழ் நாவாந்துறை சென்மேரிஸ் கழகத்தின் அணியின் தலைவராக செயற்பட்டு கழகத்தின் வெற்றிக்கு வழிவகுத்துக்கொண்டு இருக்கும் அணித்தலைவர் ஜெக்சனும் இவருடன் கூடப்பிறந்த சகோதரன் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவர்களது விளையாட்டுத்திறன் ஒவ்வொருவரும் விளையாடுகின்ற கால கட்டங்களுக்கு ஏற்ப யாழ் மாவட்டத்துக்கும் புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் மிக முக்கியமான ஒரு தேவையாக இருந்தது பெரும்பாலும் அனைவரும் முன்கள வீரர்களாகவே ஆடினர் அக்கால கட்டத்தில் இவர்கள் இல்லாமல் வெற்றி இல்லை என்ற நிலையும் இருந்தது யாழ் மாவட்ட உதைபந்தாட்ட அணிக்கு இவர்களது வருகை ஒரு வரப்பிரசாதமாகவே இருந்தது திரு கமல்ராஜ் அவரது விளையாட்டு நுட்பத்தினை இன்றும் பலர் ரசித்த வண்ணமேயுள்ளனர் சிறந்த ஒழுக்க சீலரால மைதானத்தில் செயற்படும் கமல்ராஜ் அணியை தலைமைதாங்கி கொண்டு செல்லும் தகமை பெற்றவர் கி.கமல்ராஜ்(அஜந்தன்)வயது-35
புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவன்(st.patricks college Jaffna )
திரு கமல்ராஜ் அவர்கள் களத்தில் முன்கள வீரராகவும் நடுக்கள வீரராகவும் செயற்படக்கூடியவர் தண்டஉதைகளை மிகவும் நேர்த்தியான முறையில் கோலாக்கக்கூடிய வீரர் இவர் பத்திரிசியார் கல்லூரி அணியிலும் தொடர்ந்து நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக்கழகம்,யாழ் மாவட்ட உதைபந்தாட்ட அணி,இலங்கை வடமாகாண அணி,என பல நிலைகளில் தற்போது நாவாந்துறை சென்மேரிஸ் பிரான்ஸ் விளையாட்டுக்கழகம் பிரான்ஸ்
இவர் விளையாட்டிலும் சகல விடயங்களிலும் சிறப்புற்று ஓங்கி எமது நாவாய் மண்ணுக்கு பெருமையை ஈட்டித்தர வேண்டிமென பிரான்ஸ் நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக்கழகமும் உலகெங்கும் பரந்து வாழும் நாவந்துறை சமூகமும் வாழ்த்தி நிற்கின்றது...

tirsdag 29. september 2015

வடமாகாணதின் வல்லவன் " சென் மேரிஸ் "

               

கடந்த ஒன்றரை மாதங்களாக வடமாகாணத்தின் வல்லவன் யார்? என்ற மாபெரும் உதைபந்தாட்ட போட்டியை வல்வெட்டித்துற " " நெற் கொழு கழு குகள் " " விளையாட்டுக்கழகம் நடத்தினர். இதில் 52 கழகங்களுக்கு மேலாக போட்டியிட்டனர். பிரமாண் டமான முறையிலும் நல்ல ஒரு கட்டமைப்பிலும் சர்வதேச. போட்டியை போன்று நடத்தினர். வாழ்த் துக்கள். வடமாகாணதின் வல்லவன் யார் என்று தீர்மானிக்க இறுதி ஆட்டத் தில் பல்லாயிரக்கண க்கான ரசிகர்கள் புடை சூழ. கடந்த பல வருடங்க ளாக மன்னாரில் எழிர்ச்சி கோண்டிருக்கும் சாவற் காடு கில்லறி அணிக்கும். வட மாகாணத்தில் முடி சூடா மன்னன் சென் மேரிஸ் அணியும் மோதினர். ஆட்டம் 8. 45 மணிக்கு ஆரம்பித்து முதல் பாதி ஆட் டம் முடியும் வரை இரு அணிகளும் கோல் போடும் முயற்சியில் ஈடுபட. இரண்டு கோல் காப்பாளர்க ளின் தடுப்பிலும் பின்கள. முன்கள வீரர்களின் முய ற்சியிலும் எவ்வித கோல்களும் இல்லாமல் நிறை வடைந்தது. இருப்பினும் முதல் பாதி ஆட்டத்தில் பல நிமிடங்கள் கில்லறியின் கட்டுப்பாட்டில் இருந் தது.
                                      இரண்டாம் பாதி ஆரம்பித்து சில நிமிடங்களில் சென் மேரிஸ் அணி வீரர்கள் தங்க ளின் ஆட்ட நுட்பத்தினை காட்டி எதிரணியை பல மணி நேரம் மிரட்டினர். இதையடுத்து 55 வது நிமிட த்தில் தண்ட உதை கில்லறி அணிக்கு கிடை க்க றஞ்சா அதை கோலாக்கினார்.போட்டி நிறைவடைய 20 நிமிடங்களில் நட்சத்திர வீரர் யூட் உபாதையி னால் வெளியேற பதிலாக அலக்சன் கோல் காப்பா ளராக செயற்பட சுதா முன் கள வீரராக விளையாடி யும் பல கோல்களை சென் மேரிஸ் அணியினர் நழு வவிட்டனர். சென் மேரிஸ் அணி வல்லவன் ஆக போட்டி நிறைவடைய 5 நிமிடங்கள் தான் இருந்தது.
சென் மேரிஸ் அணிக்கு இன்ற கிக் உதை ஒன்று நிதர்சன் அடித்த பந்து கோல் கம்பத்திற்கு மிகவும் அருகாமையில் செல்ல மேரிஸ் கனவு நகர்ந்தது.
வாழ்க்கையை தொலத்து அனாதவன் போல் ரசிக ர்களின் முகத்தில் கவலையும் கண்ணீருடன் நின்ற னர்.
இறுதியில் திக் திக் நிமிடங்கள்.
இறுதியில் 2 நிமிடங்கள்
மூல உதை ஒன்று சென் மேரிஸ் அணிக்கு கிடைக்க நட்சத்திர வீரன் நிதர்சன் உதைக்க 89 வது நிமிட த் தில் ஜெக்சன் அதை அற்புதமான கோலாக்கி தன் பணியை நிறைவேற்றினர். போன வாழ்வு கிடை த் தது போல ரசிகர்கள் ஆர்பரிப்புடன் நின்றனர். இறுதி நிமிடத்தில் கடந்த ஆறு மாதத்தின் பின்னர் மாற்று வீரராக பிரசித்தி பெற்ற வீரராக ஜெனற் மைதானத் தில் இறங்கினான். கடைசியில் 1 : 1 என்ற சமநிலை யில் முடிந்தது.
சமனிலை தவிர்ப்பு உதையில் சென் மேரிஸ் அணி 5:4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வடமாகாணதின் வல்லவன் ஆகினான்.
*இச் சுற்றில்
சென் மேரிஸ் அணி 7 போட்டியில் பங்குபற்றி 29 கோல்களை வளாசி தள்ளியது.
* வல்லவன் பெருமை சென் மேரிஸ் அணியின் ஒவ்வொரு வீரர்களின் அர்ப்பணிபே சேரும்.

Thanks for Nolasco

søndag 27. september 2015

விண்ணைத்தொட்ட வின்சிங்கின் புகழ்!

                              மேரிஸ் வின்சிங்

 

நாம் நடாத்திக்கொண்டிக்கும் உதைபந்தாட்ட தொடரில் விளையாடிய புகழ்பெற்ற வீரர்களில் மிகவும் முக்கியமான ஒருவர் வின்சிங். தற் போது 35 வயதை அடைந்தும் இப்பபோதும் நாச்சிக்குடா சென்மேரிஸ் அணிக்கு விளையாடி க்கொண்டிருக்கும் . இவரின் சாதனைகளும் உதைபந்தாட்ட வரலாறும் சிறப்புக்குரியது. இருந்தும் எமது வடமாகாண வல்லவன் தொடரில் அவரது அணி துரதிஸ்ரவசமாக முதல் போட்டியிலேயே வெளியேறியதால் இவரின் ஆற்றலைக்காண எமது ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது வேதனைக்குரியது. இரு ந்தும் பெரும்பாலான உதைபந்தாட்ட ரசிகர்கள் இவரை நன்கு அறிந்திருப்பார்கள். சில வருடங் களுக்கு முன் எமது மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள தீருவில் மைதானத்தில் நடை பெற்ற ஒரு உதைபந்தாட்ட தொடரில் சிறப்பாக ஆடி தொடர்நாயகன் விருதை தட்டிச்சென்ற இந்த வின்சிங் இன் துடிப்பான ஆட்டத்தை எளிதில் மறந்துவிட முடியாது. அதாவது 2003 தொடக்கம் 2008 வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாண த்தின் மூலைமுடுக்கெங்கும் வின்சிங் இன் நாமம் ஒலித்துக்கொண்டிருந்தது. நாவாந்துறை சென்மேரிஸ் அணிக்காக நீண்ட காலம் விளை யாடி உதைபந்தாட்ட வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மனதிலும் நீங்காத இடம் பிடித்திருந்தார். யாழ்ப் பாண உதைபந்து பின்தஙகியிருந்த காலத்தில் இந்தளவு ஊடக , தொழில்நுட்ப வசதி இல்லாத காலத்தில் எம் ரசிகர்களுக்கு Ronaldo என்றால் அது வின்சிங் தான் அந்தளவு அவரது உதைபந் தாட்ட திறமை யாழ்ப்பாணம் எங்கும் பரவியி ருந்தது. kicks, shooting ,carving, instep, outstep , tripling என புதிய நுனுக்கங்களை எமது மைதான போட் டிகளில் புகுத்திய பெருமை இவருக்குண்டு. குறி ப்பாக ball controlling செய்வதில் இவரது ஆற்றல் மிக அபாரமானது. இவரது திறமைக்கு அங்கீ காரம் வழங்கி தமிழீழ தேசிய அணியால் ஜேர்மன் செல்லும் வாய்ப்புக்கிடைத்தும் சிங்கள, ஆங்கில மொழி பிரச்சனையால் அதை தவிர்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டது மிகவும் துரதிஸ் ரவசமாகும். இவருக்க கிடைத்த பல வாய்ப்பு க்கள் இதனால் அருகின. இருந்தும் தொடர்சியாக யாழ்ப்பாண உதைபந்தாட்ட ரசிகர்களுக்கு விருந் தளித்தார். நாவாந்துறை சென்மேரிஸ் அணியின் அப்போதைய வெற்றிக்கு இவரின பங்கு அளப்      பெரியது.
                                                    பின்னர் யுத்த சூழ்நிலை காரணமாக பூநகரி நாச்சிக்குடாவிற்கு இடம் பெயர வேண்டி ஏற்பட்டு அங்கேயே அவரது வாழ் கையையம் தொடரவேண்டியேற்ப்பட்டது. பின் னர் அந்த ஊர் அணியான நாச்சிகுடா சென் மேரிஸ் அணியில் இனணந்து இன்றுவரை விளையாடிக்கொண்டிருக்கின்றார். நாவாந் துறை சென்மேரிஸ் அணியை விட்டுச்சென்ற காலத்தில் இருந்து இதுவரை அவரது இடம் வெற்றிடமாகவே காணப்படுகிறது. இப்படிப்பட்ட மகத்தான வீரரின் இடத்தை நிரப்புவது எளிதான தல்ல. இன்றும் கூட நாவாந்துறை வீரர்கள் இவரோடு விளையாடிய அனுபவங்களையும் மறக்கமுடியாத நிகழ்வுகளையும் எண்ணி மெய்சிலிர்க்கின்றார்கள் மன்னாரின் புகழ் பெற்ற வீரர் டிக்கோனிங் இன் காலத்தில் வடமாகாண மற்றும் தமிழிழ தேசிய அணியில் இவரது பங்கும் அளப்பரியது. இவரின் குடும்ப நிலைமை இவரின் உதைபந்தாட்ட வரலாற்றுக்கு பெரும் தடையாக இருந்தும் பல சவால்களை எதிர்கொண்டும் இன்றும் கூட 35 வயதிலும் அவரது கால்கள் பந்தை உதைத்தபடியே உள்ளது. இந்த மகத்தான வீரருக்கு எமது கழகம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நாவாந்துறை விளையாட்டு வல்லவர்கள் வாழ்த்துக்கள் 2015


lørdag 26. september 2015

3வது முறையாக நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டு கழகம் வடமாகாண வல்லவன் கிண்ணத்தை தமதாக்கி்க் கொண்டது. இது ஒரு வரலாற்று சாதனையாகும்.

                                       
   

                                         தினச்செய்தி ஊடக அனுசரணையுடன் நெற்கொழு கழுகு விளையாட்டு கழகம் 3வது ஆண்டாக வடமாகாண உதைபந்தாட்ட கழகங்கள் பங்கு கற்றிய "வடமாகாண வல்லவன்: சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி இன்று சனிக்கிழமை (புரட்டாசி 26, 2015) வல்வெட்டிதுறை மைதானத்தில் மின் ஒளியில் நடைபெற்றது.ஏராளமான ரசிகர்கள் பார் வையிட்டனர்.இறுதிப்போட்டியில் நாவாந்துறை சென் மேரிஸ் கழகத் தினை எதிர்த்து மன்னார் கில்லறி விளையாடி யது. ஆட்டத்தின்முதல் பாதியில் மன்னார் கில்லறி வீரர்களிடமே பந்து அதிக நேரம் இருந்த தனை காணமுடிந்தது. இருந்தும் நாவாந்துறை கழகத்தின் பின்கள மற்றும் பந்து காப்பாளரை கடந்து கோல் போட முடியாமல் கில்லறி வி. கழக வீரர்கள் தடுமாறினர். இதே போலவே நாவாந்துறை சென் மேரிஸ்  அணியும் முதல் பாதியில் கோல் எதுவும்போட முடியாமல் திணறினர். இந்த முதல் பாதியில் மன்னார் கில்லறி கழகத்தி்ற்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் அதை கோலாக்க முயன்றபோது சென் மேரிஸ் பந்து காப்பா ளர் தனது கைகளால்பந்தை வெளியில்தள்ளிவிட்டார்.


                                                             இரண்டாம் பாகம் தொடங்கியதிலிருந்து நாவாந்துறை சென்மேரிஸ் கழக வீரர்களே பந்தை தமது கட்டுப்பாட்டில் ஆனால் அவர்களாலும் கில்லறி கழக பின் கள வீரர்களை தாண்ட முடி யாமல் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. இரண்டாம் பாகத்தின் நடுப்பகுதியில் மன்னார் கில்லறிவி் கழக வீரர்களுக்கு கிடைத்த பந்தை கோல் போடும் முயற்சியில் எத்தனித்த வேளை சென் மேரிஸ் கழக வீரர் பவுள் விளையாடியததால். கில்லறி கழகத்திற்கு பனால்டி உதை கிடைத் தது. கில்லறி கழகம் 1: 0 என்ற கணக்கில்  அந்த பனால்டி உதை மூலம் முன்னிலை வகுத்தது. 

                                            நாவாந்துறை சென் மேரிஸ் வீரர்கள் தொடர்ந்தும் இன்னும் சிறப்பாக விளையாடினர். இருந்தும் கோல் போட முடியவி ல்லை. இதனால் சென் மேரிஸ் ரசிகர்கள் மனதில் ஒருவித பயமும். சோக மும்காணப்பட தொடங்கியது. குறிப்பாக கனடாவில் ஒருவருக்கு ஒருவர் தொலைபேசியில் அழைத்து கவலையை பகிர்ந்துகொண்டிருக்கும் போது சென் மேரிஸ் வி. கழகத்திற்கு கோணர் கிக் ஒன்று கிடைத்தது. அந்த கோணர் கிக்கினால் கிடைத்த பந்தை சிறப்பாகவும், லாகவமாகவும் கை யாண்டு ஜக்சன் கிறிஸ்தோப்பர் கோலினை போட்டார். அப்போது தான் கனடா ரசிகர்களின் மனதிலிருந்து பெரும் மூச்சு போய் தங்களை இயல்பு நிவைக்கு கொண்டு வந்தனர். 

                                  மேலதிக நேரத்திலும் இரண்டு கழகமும் கோல் எதுவும் போடாமல் சமநிலையில் முடிந்ததால் இறுதிப் போட்டி யின் வெற்றியா ளர் எந்த கழகம் என்று தீர்மானிப்பதற்காக பனால்டி உதை வழங்கப்பட் டது. இதில் சென் மேரிஸ் பந்துகாப்பாளர் ஒரு பந்தை தடுத்ததனால் 5 : 4 என்ற கோல் கணக்கில் 3வது முறையாக நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டு கழகம் வடமாகாண வல்லவன் கிண்ணத்தை தமதாக்கி்க் கொண்டது. இது ஒரு வரலாற்று சாதனையாகும். ஆங்கிலத்தில் Hatric என்று அழைப்பார்கள். இந்த போட்டியின் சிறந்த வீரராக ஜக்சன் கிறிஸ்தோப்பர் தெரிவு செய்யப்பட்டார். எங்கள் நாவாந்துறை செல்வங் களே உங்கள் அனவருக்கும் புலம்பெயர்ந்த நாவாந்துறை மக்களின் வாழ்த்துக்கள் சுறிநிற்கின்றோம்.உங்கள் வெற்றி தொடரட்டும்

களத்தில் இருந்து Nolosco வழியாக கனடாவில் இருந்து தொகுத்தவர் ஆசீர்தாசன்

புனித மரியாள் முன்பள்ளி சிறார்களின் கண்காட்சி


யாழ்.நாவாந்துறை புனித மரியாள் முன்பள்ளி சிறார்களின் கண்காட்சி நிகழ்வுகளின் பதிவுகள்- வண்ணப்படங்களாய் வெளிவந்துள்ளன.

சின்ன மழலைகளின் வண்ண ஓவியம்  நாவாய்ப்பூக்களிள் மலர்ந்துள்ளது நன்றி படங்கள் தந்து உதவியவர் Nolasco

fredag 25. september 2015

சம கால சென் மேரிஸ் அணியின் சாதனைகள் அளப்பரிது


சம கால சென் மேரிஸ் அணியின் சாதனைகள் அளப்பரிது இதற்கு அவர்களின் அர்பணிப்பும் தியாகமும்
வேகமும்தான் காரணம் என்றால் அது மிகையாகாது. அவர்க ள் தமது தொழிலை இளந்து வேலைகளை இளந்து ஒழுங்கான மைதானமின்றி இச் சாதனைகளை படைத்து ஊருக்கு பெருமை சேர்க்கிறார்கள்.
சரி சாதனைகளுக்கு வருவோமா
ஐந்து பேர் கொண்ட ஆட்டத்தில் ஒரு தொடரில்86 ற்கும் மேற்பட்ட கோல்களும் அதே தொடரில் ஒரு அணிக்கு எதிராக 16 கோல்களும் அத்தொடரில் நிதர்சன்,யூட் யெனற் மூவரும் செர்ந்து 75ற்கும் மேற்பட்ட கோல்களையும் போட்டார்கள்.இன்னோரு தோடரை
இறுதிப் போட்டிக்குச் செல்லாது அயல் அணிக்கு தாரைவார்த்தார்கள்
7பேர் கோண்ட உதைபந்தாட்டத்தில்
கதாநாயகர்களே இவர்கள் தான்
15 ற்கும் மேற்பட்ட தடவை சம்பியன்கள்
ஒரு மாகாண சம்பியன ஒரு அணிக்கெதிராக10ற்கும் மேற்பட்ட கோல்கள் பிரபல அணிக்கெதிராக 8-4
என வெற்றி.
9பேர் கொண்ட ஆட்டத்தில் ஒரு மாகாண சம்பியன் இறுதிப்போட்டியில்
4-1என வெற்றி.
11பேர் கொண்ட ஆட்டத்தில் இரண்டு முறையே நடந்த மைலோ கிண்ணத்தை இரண்டு முறையும் கைப்பற்றி சாதித்தார்கள். இருந்தும் தாகம் தணியவில்லை டிவிசன்2 மற்றும் கழுகுககள் நடத்தும் வடமாகாண வல்லவன் இரண்டையும் கைப்பற்ற கங்கணம் கட்டி நிக்கிறார்கள்.
இவர்களை சமாளிப்பார்களா கில்லரி அணியினர். முன்கள வீரர்களான நிதர்சன், யூட் ,யெக்சன் , மதி நான்கு பேரின் ஆட்டமும் உயர் ரகம்
தங்கன் நிறோ பிரான்சிஸ் நல்ல நிலயிலேயே உள்ளார்கள் பின்களம் சீனச்சுவர் சுதர்சன் கனிசியஸ் யுனி மூத்தவன் சுதா உடைப்பது கஸ்ரம் தடைதாண்டுவார்களா கில்லரியினர்
அல்லது சரணாகதியாவென்று?
நன்றி சிலுவை ஜனோ Jano

mandag 21. september 2015

வல்லவன் தெரிவில் மீண்டும் வல்லவனானது மேரிஸ்


வல்லவன் தெரிவில் மீண்டும் வல்லவனானது மேரிஸ்..........
இலங்கையில் முதல் தடவையாக ஒரு கழகம் 200000/= பணப்பரிசிலுடன் (கிட்டத்தட்ட மொத்த பரிசுதொகை 400000/=) பிரமாண்டமான மைதான மின் அமைப்பு க்களுடன் சர்வதேச தரத்தில் நெற்கழுகு கழகம் "வடமாகாணத்தின் வல்லவன்" உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி யை நடாத்தி வருகிறது. அதன் முதல் அரையிறுதியில் யாழ்புகழ் சென்.மேரிஸும் மன்னார் மாவட்டத்தின் தலைமகன் சென்.லூசியஸும் 2015.09.21 அன்று இரவு 9.00 மணியளவில் மின்னொளியில் மோதின. ஆரம்பம் முதலே விறுவிறுப்பான போட்டியாக காணப்பட்டது. தொடக்கத்தில் இருந்து லூசியஸ் அணியின் கட்டுப்பாட்டுக்குள் பந்து அதிகமாக காணப்பட்டது. Short pass,long pass,attack என மேரிஸை அச்சுறுத்தினர். மேரிஸ் அணியும் ஆரம்பம் முதல் தடுத்தாடுவதையே நோக்கமாக கொண்டு செயற்பட்டதை அவதானிக்க முடிந்தது. முதல்பாதி ஆட்டத்தில் லூசியஸ் அணி கோல் போடுவதற்கு கடுமையாக முயற்சித்தும் மேரிஸின் பின்கள,நடுக்கள வீரர்களின் போராட்டத்தினால் முழுமையாக தடுக்கப்பட்டது. 2 அணியின் கோல்காப்பாளர்களதும் பரப்புக்குள் ஒருசில பந்துகளே சென்றது. தொடர்ந்து முதல் பாதி லூசியஸ் அணியின் ஆதிக்கத்துடன் 0-0 என முடிவுக்கு வந்தது.2வது பாதியின் ஆரம்பத்திலும் லூசியஸ் அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது கோல்பரப்புக்குள் ஒருசில பந்துகளே சென்றாலும் தங்கள் கட்டுப்பாட்டில் பந்தினை வைத்திருந்தனர்.ஆயினும் மேரிஸ் அணி "counter attack" என்ற நுட்பத்தை பயன்படுத்தினர். முழுமையான diffending கோடு ஒரு attack என்ற நுட்பத்தை பயன்படுத்தி சில சமயங்களில் கரும்புலி தாக்குதலும் நடத்தினர். அவ்வாறே 57 வது நிமிடத்தில் மேரிஸ் அணியின் தலைவர் ஐக்சன் 2பேரை எளிதாக கடந்து கோலினை நோக்கி உரமாக அடித்த பந்து கோலாக மாற யாழ் மாவட்ட உதை பந்து பிரியர்கள் மனது குளிர்ந்தது. ஆயினும் மேரிஸ் அணி தடுத்தாடுவதிலேயே குறியாக இருந்தது. தொடர்ந்து 69வது நிமிடத்தில் நடுக்கள வீரர் தங்கன் கொடுத்த பந்தை ஐக்சன் கோலாக மாற்ற 2-0 என வெற்றி மேரிஸ் பக்கம் சாய்த்தது. 83வது நிமிடத்தில் லூசியஸ் அணியின் ஆதிக்கம் மேலோங்கி கோல் ஒன்று பெறப்பட்டது. ஆரம்பம் முதல் பந்தினை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த லூசியஸ் அணி இறுதி கணங்களில் களைப்படைந்து இருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது. போட்டி யும் முடிவுக்கு வர லூசியஸ் அணி வீரர்களின் கண்களில் கண்ணீர்........... பார்பதற்கே மனசங்கடமாக இருந்தது.............. அதே கண்ணீர் சென்.மேரிஸ் அணி வீரர்களின் கண்களில் இருந்தும்....... இது எங்கள் கஷ்டங்களுக்கு கிடைத்த வெற்றி..... தங்கள் வேலைகள்,தொழில்களை அர்ப்பணித்து விளையாடும் வீரர்களுக்கு எம் பரலோக அன்னை அளித்த பரிசு...........
AVE MARIA.......

søndag 13. september 2015

திரு அன்ரனி தங்கககுமாரன் அவர்தான் உதைபந்தாட்டத்தின் பின்ணனி நட்சத்திரம்


          
அவர்தான் உதைபந்தாட்டத்தின் பின்ணனி நட்சத்திரம்!
                       எல்லோராலும் சின்னண்ணன் என்று அன்போடு அழைக்கப்படும் அமரர் திருவாளர் . அன்ரனி தங்கக்குமாரன் அவர் கள் (பிறப்பு 21. 05.1946 -இறப்பு 27.09. 2013) சிறப் பாக சிறுவயதில் இருந்தே நமது புனித மரியாள் விளையாட்டுக்கழக போட்டிகள், குறிப்பாக 100 மீட்டர், நீளம் பாய்தல் போன்ற மெய்வல்லுணர் போட்டிகளில் என்றும்  முதல் இடத்தில் இருப்பவர். சிறுவயதில் இருந்து உதைபந்தாட்ட த்தில் ஆர்வமும், திறமைகளும் இருந்ததினால், பெரியவர்களும், சக நண்பர்களும் ஏன் நாவந்துறை மக்கள் முழுவதுமே, திரு தங்கக் குமரன் அவர்கள்  சிறந்த விளையாட்டு வீரனாக விளங்குவர் என்று எதிர்பார்த்தார்கள். எங்கள் ஊர்மக்களின் எண்ணங்கள் வீண்போகவி ல்லை, எல்லோரி எண்ணப்படியும் ஆசைப்படியும அவர் சிறந்ததோர் பின் அணி வீரனாக  உதைபந்தாட்டக்களங்களில் ஓர  நட்சத்திரமாக ஜொலித்தார்.
                                                 இருபது ஆண்டுகளுக்கு மேலாக யாழ் தெரிவுக்குழு கோஷ்டியில் நிரந்தர வீரனாகவும், பல  ஆண்டுகளாக அக்குழுவுக்கு தலைவராக விளங்கி யாழ் தெரிவுக்குழு கோஷ்டிக்கு பெருமை சேர்த்தவர்திரு தங்கககுமாரன் அண்ணன் அவர்கள் யாழ் தெரிவுக்குழு கோஷ்ட்டியில் விளையாடும் போது, ஆற்றிய சாதனை கள் எத்தனையோ எத்தனையோ!  இருபத்தி ஐந்து வருடங்களாக, எமது புனித மரியாள் விளையாடுக் கழகத்தில், நிரந்தர வீரனாக, பின் அணி நட்சத்திரமாக விளையாடி பல சாதனைகளை படைத்தவர் இவர்.
                                              1970 களுக்கு முன்னர், திரு அன்ரனி தங்கககுமாரன் அவர்களும், எமது வாழ் நாள் சாதனையாளர் ( The Living legend) திரு,  மணி  மரியதாஸ் அவர்களும், முதன் முதலாக, புனித மரியாள் விளையாட்டு கழகத்தில் இருந்து, யாழ் உதைபந்தாட்ட தெரிவுக்குழு ஊடாக, அகில இலங்கை தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதாற்காக, நாவாந்துறை மண்ணில் இருந்து, முதன் முதலாக சென்றிருந்தார்கள். பரிபூரணமான தகுதிகள்திறமைகள் இருவரு க்கும் இருந்தும் கூட, அகில இலங்கை தெரிவுக்குழுவில் இடம்பெற முடியாமல் போய்விட்டது. இதற்கு அவர்களது தனிப்பட்ட காரன ங்களே அன்றி வேறு ஒன்றும் இல்லை.

                                                பின் அணி நட்சத்திரம் அமரர் திரு, தங்கக்குமார் அண்ணனின் விளையாட்டு இலாவகம், திறமைகள், அவரின் விளையாட்டு மதிநுட்பங்களை சொல்லிக்கொண்டே போக லாம். அவர்தான் அந்தகாலத்திலேயே, மிகவேகமாக பந்தடிக்கும் வீர ர்களின் வரிசையில் முன்ணனிவகித்தவர் என்பதை நான் திட்டவ ட்டமாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்இதுமட்டுமல்ல, நான் சிறுவனாக இருந்த காலத்தில் நடந்த சம்பியன் போட் டிகளில் அவ ரது அபார தடுக்கும் திறத்தால் Defence Skill பல வெற்றிகளை எமது விளையாட்டு கழகம் குவித்துள்ளது. சில சந்தர்பங்களில் போட்டியா
னது சம நிலையில் இருக்கும் போது, இவரின் தனிப்பட்ட தடுப்பு திறமையால் பல தோல்விகளை எமது விளையாட்டு கழகம் தவிர்த்து ள்ளது.
                                          எத்தனையோ போட்டிகளில், எதிர் அணி யிணர் தொடுக்க இருந்த கோல் இலக்குகளை அடையாளம் கண்டு, தனி ஒருவனாக நின்று, தனது சாதுரியத்தினால் அதனை தடுத்து நிறு த்தியுள்ளார்நான் பார்த்த சில போட்டிகளிலும், நான் அவரோடு சேர் ந்து விளையாடிய போட்டிகளிலும், எதிர் அணியினர் குறிப்பாக சொல்லப்போனால், Singin Fish, St Anthony போன்ற முண்ணனி எதிர் அணியிணர் விளையாடும் போட்டிகளில் கூட, எதிர் முன் அணி வீர ர்களின் தாகுதல்களை தனி ஒருவனாக துணிந்து எதிர்கொண்டு தடு த்துள்ளார். எதிர்தரப்பு வீரர்கள் கோல்முகத்தை நோக்கி, முனைப்பு டன் முன்னேறி, கோல் நோக்கி, பந்தை உதைக்கும், ரசிகர் கூட்டம் கோல் என்று கோஷம் எழுப்ப, தங்கமான தங்கக்குமாரன் அண்ணன்,
புலிப்பாய்ச்சலாக பாய்ந்து, பீரங்கி தாகுதல் போல பந்துக்கே உதைப் பார் அன்றி ஒருபோதும்  எதிர் அணியின் கால்களுக்ககு அல்ல!. அவர் தான் விளையாடும் விளையாட்டில் ஒருபோதும் தவறாக விளை யாடி, நடுவர்களிடம் இருந்து தண்டனை பெற்றவரல்ல.எதிர் அணி யினரின் பார்வையாளர்கள் தமது அணிக்கு கோல் கிடைக்கப்போகி ன்றது என்று உட்சாக மிகுதியால் கோஷம் இடும்போது, அந்த மும்மு ரமான தாக்குதலை வெற்றி கொண்டு எமது கழக ஆதரவர்கலின் சந்தோசமாக பல தடவைகளில் மாற்றி அமைத்துள்ள பெருமை அம ரர் திரு தங்கக்க்குமாரர் அவகளையே சாரும் என்பதை அவரின் அனு பவாயிலாக நான் கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்.
                                                       
                                         திரு தங்கக்குமார் அண்ணன் அவர்கள் போட்டியின் போது அல்லது பயிற்சியில் விளையாடும் போதும்அவரிடம் இருந்து நிறைய விளையாட்டு நுட்பங்களை நாங் கள் கற்றுக்கொண்டுள்ளோம். விளையாடும் போது அவரின் அங்க அசைவுகள் Body Language வித விதமான நுட்பங்களை அவ்வப்போது வெளிப்படுத்தும்பந்தில் அவரது பாதம் படும் ஒவ்வொரு கோண மும், பந்து செல்லும் திசையை மாற்றி அமைக்கும், பாதம் பந்தில் படும்போது இடிபோன்ற‌  ஓசையும், பந்து செல்லும் வேகம் மின்ன லைப்போல மின்னி மறையும். அவரின் அடி உதையால் திண்டாடி தட்டுத்தடுமாறி, அவர் அடிக்கும் பந்தை பிடிக் முடியாமல், கோல் எல்லைக்குள் சாய்ந்து விழுந்த கோல்  காப்பு வீரர்கள் எதிர் அணியில் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஒன்றை  மட்டும் நான்  துணிந்து சொல்வேன். அந்தக்காலத்தில், வேகத்தை அதாவது அவரது கால்,
பந்தில் பட்டு செல்லும் வேகத்தை அளக்கும் கருவிகள இருந்திருக்கு மேயனால் , அவர  தான் அபார வேகப்பந்து உதையாளராக முன்ன ணியில் இருந்திருப்பார்  எனபது எனது திட்டவடமான எண்ணமா கும். அவரின் அடிவேகம் மட்டுமல்ல அவரது விளையாட்டு மதி நுட்பமும் மிக திறமையானது.
        
                                                          நான் போ ட்டிகளில் விளையாடிக் கொண்டிருக்கும் போது, பந்து ஓய்வான சமயம் பார்த்து, Living Legend மணி அண்ணனும், திரு, தங்கக்குமாரன்  அண்ணனும் என்னை தனி யாக அழைத்து, விளையாட்டில் வெற்றி கொள்ளும் நுட்பங்களை யும் வியூகங்களையும் சொல்லித்தருவார்கள்.  அவர்களின் ஆலோச னைப்படி, என்னை தனியான இடம் பார்த்து நிற்கச்சொல்வார்கள்.
பின்னர் எதிர்பாராமல் மிகத்தூரத்தில் இருந்து எனக்கு பந்தை அனு ப்பி, பல கோல்களை இலகுவாக அடிக்கும் வாய்ப்புகளை இந்த இருவருமே எனக்கு தந்துள்ளார்கள்.
                                                 அமரர் திரு தங்கக்குமாரன் அண்ணன் அவர்களை பற்றியும் அவரின் சாதனைகள் திறமைகள் பற்றி நிறைய சொல்லலாம். அவரின் தனிப்பட்ட குணங்களும் அருமையானவை பெயருக்கு ஏற்றால் போல தங்கமான தன்னடக்கம் உள்ள மனிதர். பெருமையடித்துக்கொள்ளதாத திறமைமிக்க ஓர் பின் அணி மாவீரர் உண்மையில் அவர் ஒரு நட்சத்திரம் என்று தான் சொல்லுவேன். என்னுடைய அடுத்த முயற்ச்சியாக எமது விளையாட்டு கழகத்தின் வாழ்நாள் உதைபந்தாட சாதனையாளராக திகழும், Living Legend
திரு. மரியதாஸ் மணி அண்ணன் பற்றியும், அமரரான முன்னாள் விளையாடு வீரர் திரு டாணியல் அன்ரனி, முன்னாள் முன்னணி வீரரும் Cool Mind உள்ள சிந்த வீரரும், பல வெற்றிகளை எமது கழகம் பெறுவதற்கு காரணமாக இருந்தவருமான திரு, அடைக்கலம் இவர் களைப்பறிய வெளியீடாக அடுத்த மடலில் தர ஆசைப்படுகின்றேன். எமது உதைபந்தாட்ட வீரர்களின் சரிதம் தொடர்ந்து வரும், அடுத்த மடலில் சந்திக்கும் வரை,
                        அன்புடன்  பாலசிங்கம் பிரான்ஸிஸ் (ரெட்ணசிங்கம்)