fredag 16. januar 2015

ஒற்றுமை உணர்வு நாவாந்துறை மக்களுக்கு மிக மிக அவசியமானது

                   

                                                        ண்மைக்காலமாக நாவாந்துறை மக்களிடையே சண்டை சச்சரவுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒரு பகுதி மக்கள்,   இன் னொரு பகுதி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதும், பதிலுக்கு இவர்கள், அவர் கள் மீது பதில் தாக்குதல் செய்வதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. சச்சரவு களுக்கு  ஆயிரம் காரணம் இருக்கலாம் அதை ஆய்வு செய்வதை விட்டுவிட்டு, ஒற்றுமையையும், புரிந்துணர்வையும் உண்டாக்குவதில் இரு பகுதியிலும் உள்ள, புத்தி ஜீவிகள், சமய ஆர்வலர்கள் எவ்வளவு தூரம் அக்கறை காட்டியுள் ளார்கள் என்பது எமக்கு முன் உள்ள கேள்வி? இரு கோவில்களுக்கு ஒரு பங்கு தந்தை. அதன் அர்த்தம் நாவாந்துறையில் இரண்டு ஆலையங்கள் இருந்தா லும்,  ஒரு பங்கு என்பதுதான் அர்த்தம். ஆனால் ஒரு பங்குச்சபை உள்ளாதா? என்றால் அதுதான் இல்லை. இரு ஆலையங்களுக்கும் தனித்தனியே வெவ் வேறு பங்கு சபைகள்.
                                                               பிரிவினை, வேற்றுமை என்பது ஆண்டவன் ஆலையம் என்பதில் ஆரம்பமாகின்றது என்பதை நினைக்கையில் வேதனை யாக இருக்கின்றது. இப்படிப்பட்ட ஆலையங்கள் தேவைதானா என்று கூட எண்ணத்தோன்றுகின்றது. அன்பு ,அயலவர் ,பகிர்வு என்ற உண்ணதமான கிறிஸ்தவ பண்புகள் அறவே அற்ற ஒரு ஊரை கடவுள் எப்படி ஆசீர்வதிப்பார்? அந்த ஊரில் இருந்து பெரும் கல்விமான் கள்,  தொழில் அதிபர்கள், சமூக தலை வர்கள் உருவாக கடவுளால் எப்படி உதவி செய்ய‌ முடியும்?  தற்பொழுது இரு பகுதி மக்களும் ஒன்றாக, ஒற்றுமையாக இருப்போம் என்று உறுதி மொழி கொடுத்தால் தவிர,  நாவாந்துறைக்கு, பங்கு குரு வரமாட்டார் என்பதும், திருப் பலி எதுவுமே நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது வர வேற்க்கத்தக்க விடயம். ஆனால் ஒற்றுமையை உருவாக்கும் ஆரம்ப பணியை யார் செய்வது? எங்கிருந்து ஆரம்பிப்பது? என்பது தான் கேள்வி.
                                                                                               முதலில் அதை ஆண்டவன் சந்நிதியாக உள்ள ஆலையத்தில் இருந்து ஆரம்பிக்கவேண்டும். உடனடியாக நாவாந்துறயில் பொதுப்பங்கு சபை ஆரம்பிக்கப்படவேண்டும். எல்லாவித மான சமூக பிரச்சனைகளையும்,  பங்கு குருவின் வழிகாட்டலில், இச்சபை யில் ஆராய்ந்து, நியாயமான தீர்வுக்கு வரவேண்டும். இரு பகுதி இளைஞர் களும், இரு பாலாரும், பங்கு கொள்ளும் ஒரு இளைஞர் மன்றம் உருவாக்க ப்படல் வேன்டும். குறிப்பாக இளைஞர் மத்தியில் இருந்துதான் பிணக்குகள் ஆரம்பிப்பதால், இளைஞர்களிடையே விழிப்புணர்வு, முன்னேற்ற இலட்சி யங்கள் என்பன விதைக்கப்படல் வேண்டும். இதற்கு இந்த இளைஞர் ஒன்றி யம், கருத்தரங்கு கள், ஞான ஒடுக்கம் போன்ற வழிமுறையில் பதப்படுத் தலாம்.
                                                                     விளையாட்டு துறை தான், பிரச்சனைகள் ஆரம்பிப்பதற்கு தோறுவாயாக இருப்பதால், முதலில் விளையாட்டு வீரர்கள் மத்தியில் ஊர் என்ற (We feelin target) உணர்வு உருவாக்கப்படல் வேண்டும். இரு பகுதி விளை யாட்டு அணிகளும் மற்ற அணிகளை மனமார ஆதரிக்கவேண் டும் இருவரில் யார் வென்றாலும்  ஊர் பொதுவாக வெற்றியை கொண்டாட வேண்டும். இரு அணிகளூம் தமக்குள் மோதிக்கொள்ளும் சந்தர்ப்பம் வந்தால், அதை தவிர்க்கவேண்டும். முடிந்தால் ஒரு படி முன் சென்று, நாவாந்துறை தேர்வு அணியை Navanthurai Selected உருவாக்கலாம். இது ஒரு சவாலான விட யம்தான் இதை உருவாக்கிவிட்டாலே சகல பிரச்சனைகளும் ஓய்ந்து விடும். இதை உருவாக்கி விட்டு, சர்வ இலங்கைக்கே நாவாந்துறை சமூகம் சவால் விடலாம் நிட்சயம் வெல்வார்கள் என்பது உறுதி. அன்பர்களே இதனை வாசிப்பவர்கள் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.                    
                                                                                       நன்றி
                                                                                                                       இணைய ஆசிரியர்

lørdag 10. januar 2015

கவிதை (நன்றிக்கடன்) AJ டானியல் பரிஸ் பிரான்ஸ்‏


பள்ளியிடைவழியே
கோரமாய் வெயில்
இரக்கமின்றி சுட்டெரிக்க
குடையாய் பரந்து
எமை மூடிய
ஆலவிருட்சங்களே
குளிர்வூட்டிய
வேப்ப மரங்களே
உங்களுக்கு நன்றிகள்


தண்ணீர்த்தாகம்..
நாவரண்டு துவண்டவேளை
தண்ணீர்ப்பந்தராய்
தாகம் தீர்த்த காக்கா
தே நீர்க்கொட்டிலும்
மார்க்கண்டு சிற்றூண்டி
சாலையும் என்றுமே
அன்னமிட்ட கைகளே
நன்றி உங்களுக்கு


கோவில் விட்டு பள்ளி
முகப்பில் குடிவந்த
சாம்பற் புறாக்களே
நாங்கள் கல் எறிந்து
கிளையுடைந்தும் கோபம் கொள்ளாகொட்டங்காய்
மரங்களே
ஞாபகமிருக்கிறதா எமை
தெளிவாய் ஞாபகமிருக்கிறதா?

பள்ளி ஓய்வு நேரம்
வேப்பமர நிழலில்
கூட்டமாய் கூடி
வெட்டியாய் பேசி
எள்ளி நகையாடி மனம்
துள்ளி விளையாடி
துக்கம் மறந்து
வெட்கமின்றி போசனம்
பறித்துண்டோம்
மறந்திடுமோ
இனிதானும்


சாதியேது மதமேது
அர்த்தமறியா காலம்
சரஸ்வதி பூஜை ஒளிவிழா
எங்கள் இன்பமான நேரம்
கல்வியோடு ஒழுக்கம்
எம்மிரு கண்கள்
கலை எம் உடலோடு ஒன்றி
விளையாட்டு எம்
அன்புத் தோழனாய்
கற்பித்த நல்லவர்கள்
என்றும் எம் நடமாடும்
தெய்வங்களாய்

தோல்வியில் தட்டிக்கொடுத்து
வெற்றியில் எட்டி நின்று
கை தட்டியவர்களே
பல கோடி நன்றிகள்
எம் சுவாசமுள்ளவரை
இதயம் இயல்பாய் துடித்துக்கொண்டே இருக்கும்
நீங்கள் அதில்
வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள்

இன்று பூக்களின் விடுமுறை Aj Danie


அழகு மொட்டுக்களே!
அச்சம் தவிர்அழகாய்
விரிந்திடுங்கள்
பூக்காரன் வரான்
இன்று விடுமுறை 
விழித்திடுங்கள்
வண்டுகளே ஓய்வெடுங்கள்
இன்று மட்டும் விட்டுவிடுங்கள்
பூக்களை மட்டும்....!

வண்டுகளே பூக்களின் புகழை
நான் பாடுகின்றேன்
தென்றலே பூவின் வாசனையை
நான் பிரச்சாரம் செய்கின்றேன்
நீங்கள் செல்லுங்கள்
அப்பாலே...

பூக்களே..!
உங்கள் மௌன மொழியைக்கற்றுத்தாருங்கள் உங்கள் புகழ்பரப்பி
கவி கட்டுகின்றேன்
என் சிறு விண்ணப்பம்
இன்றோடு எனைக்
குட்டிக் கவிஞனாக்குங்கள் 
இன்பத்தில் கலந்துவிடுவேன்...

வண்ண மலர்களே!
சஞ்சலம் வேண்டாம்
இனி தவிப்புகளில்லை
வாசம் வீசுங்கள் பூமியெங்கும்
இன்று மட்டும் மனிதன் மரிக்கவில்லை
கோவில் வாசல்கள் திறக்கவிலை
அர்ச்சனைப்பூக்கள் வேண்டாம்
யாரும் புஸ்பவதியாகவில்லை
இன்றுஒட்டுக்கலப்புத்திருமணமில்லை
உச்சாகம் பெறுங்கள்
உங்கள் ஆயுட்காலம்
கொஞ்சம் நீளட்டும்...

பூக்களே இன்று நான் உங்கள் விருந்தாளி எனை மகிழ்வூட்டுங்களே
இன்ப உபசரிப்பில் நெகிழ்ந்துபோகிறேன் மலர்களே
வருகின்றேன் உங்களைத்தேடி.....

அந்த மெல்லிய மடல்களில் 
படுத்துருண்டு 
இன்பமடைகின்றேன்
கம்பளம் போன்ற 
மேற்பரப்பில் துள்ளி விளையாடி
பூவின் மகரந்தத்தண்டி வழியே
தேன் குளத்துள் மூழ்கி 
தேன் குடிக்கின்றேன்
மகிழ்ச்சியினெல்லை
இன்னும் அறியவில்லை
இயற்கையன்னையின் மிகஉன்னத பிரசவிப்பு இந்தப்பூக்கள் மட்டுமே..!

பூக்களைமதிக்கின்ற 
தேசங்கள் வேண்டும்
உலகம் பூக்களால் 
நறுமணம் வீசட்டும்
மனிதா பூக்களை நேசி
வன்முறை வேண்டாம்
துப்பாக்கி பிடிக்கின்ற கைகள்
இனி பூச்செண்டு பிடிக்கட்டும்
நான் பெற்ற இன்பம்
இவ்வுலகம் பெறட்டும்..!

-Aj டானியல்-
06-Nov-2014

நிலைப்பாடு கவிதை ஆக்கம் Aj Daniel


கார்த்திகை மாசம் 
கோயில் கொடியேற்றம்
அண்ணன் கனடாவில இருந்து
அக்காளுக்கு அட்டியலும்
வளையல்க்காப்பும் 2 சோடி

மாமிக்கு முறுக்குச்சங்கிலி
மச்சினிச்சிக்கு வட்டிக்காசு 
வாங்க  சிவத்த ஸ்கூட்டி பப்பு
பக்கத்து வீட்டு 
சரசு கூட வாங்கிற்றாளாம் 

பெரிய மச்சினி புள்ளத்தாச்சியாம்
7 மாசமம் சீசறியன் டாக்டர்மார் 
 சொல்லிற்றினம் ஒரு ரெண்டு லச்சம் காசு
வீட்டுக்கு பெயின்ரு நீலமும் வெள்ளயும் 

ஐயாவட செத்த நாளும் வருகுது 
சுவாமிக்குச்சொல்லணும்
பூச வச்சு வணிசு கொடுக்கணும்
மாமாவுக்கு கண் ஓப்பிரேசன் நவலோகாவில

சுண்டுக்குளியில கடசி மச்சினி
அப்பிடியே அவளுக்கு கொம்பீயூட்டர் கோசு
கலியாண வயசில மச்சான் 
வேல தேட ஜமகா எவ் சி

வைல் சாறி வெள்ளக்கலரில
 ரெண்டு அம்மாவுக்கும்
வரும்போது ரெண்டு சில்வர் தட்டு
நேஸ்டோமார்ல் சிஸ்ரர் சொன்னவே

அம்மா கைதடி முதியோர் இல்லத்தில்
ஆங்காங்கே மரங்களின் நிழல்களில்
பெருமை பேசுறா பெத்த தாய்
என்ர மோன் வாறான் 
இண்டைக்கு கனடாவில இருந்து.....

(அண்ணனையும் முதியோர் இல்லம் வரவேற்கிறது)

-AJ Danial-

முக‌வரியற்ற நாவாயின் குரலுக்கு மற்றுமொரு எதிர்வலை எழுதுவது மொன்மொலின் ஜெறாட்


தம்பி ……(பெயர்)……அவர்கட்கு!
                                                                                                                                 10.01.15
நாங்கள் லண்டன் கிளையால் சர்வதேச அமைப்பிலுள்ள நெருக்கடிகள்பற்றி எழுதிய கடிதத்திற்கு நீர் தேவையற்றவிதத்தில் என்னை இழுத்து 24.12.14 ல் நத்தார் இரவு என்றும் பார்க்காது நோர்வே பேர்கனிலிருந்து இயங்கும் நாவாயின் குரல் முகநூலான  ஷமஞ்சள் பத்திரிகை’ ஊடாக மொட்டைக்கடிதம் எழுதியுள்ளீர். அதற்கு நான் விடுமுறையில் வேறொரு நாட்டில் நின்றபடியால் அவசரமாக 27.12.14 ல் பதில் எழுதவேண்டியதாயிற்று. ஆனால் தற்போது நீர் யார் என்பதை நன்கு உறுதிப்படுத்தியபின்பு நேரடியாகவே உமக்கு எழுதுகிறேன். ஆனால் நீர் எனது பெயரை ஊடகங்களில் வெளியிட்டு என்னை அசிங்கப்படுத்த முயற்சித்தது போன்ற ஈனச்செயலை நான் செய்யமாட்டேன். அதாவது உமது பெயரை ஊடகங்களில் வெளியிடமாட்டேன். ஏனெனில் நீர் சமுகத்தில் உமது எழுத்துமூலம் ஓர் அந்தஸ்தை தேட நினைக்கும்; ஒரு நபர். உமக்கென்று ஒரு எதிர்காலம் உண்டு. ஆனால் தனிப்பட்ட ரீதியில் உமது பெயரை யாராவது கேட்டால் நிச்சயமாக நான் கூறுவேன் உமது பெற்றோரிடமும் நான் தெரிவிப்பேன் ஏனெனில் நீர் திருந்தவேண்டுமென்பதற்காக…

(இந்தியாவில்) மஞ்சள் பத்திரிகையானது பிரபலங்கள் பற்றி தாறுமாறாக எழுதி மக்கள் மத்தியில் கிழுகிழுப்பை ஏற்படுத்துவதற்காக முன்னொருகாலத்தில் வெளியிடப்பட்டது. நாவாயின் குரலில் வரும் உருமைகோரப்படாத கட்டுரைகளை விரும்பும் மனங்கள் எவ்வளவு வக்கிரமானதென்பதையும் மக்கள் புரிந்துகொள்வார்கள். இவர்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்குத்தான் ஊரில் பெருமை கிடைக்கவேண்டுமென்று விரும்புபவர்களே தவிர ஏனையோரின் பங்களிப்பை இவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. எமது ஊருக்கு வரவிருந்த திட்டங்கள் தடைப்படுவதற்கு இவர்களும் ஓர் காரணமாக இருந்துள்ளனர். நாவாயின்குரல் நண்பனே தெய்வங்களின் படங்களையும் ஆன்மீக விடயங்களையும் உமது முகநூலில் நிரப்பினால்போல் நீர் நல்லவன் அல்ல. பெயர் விபரங்களைக்குறிப்பிடாது தனியே பெண் என்று உமது அடையாளத்தை முகநூலில் குறிப்பிடும் நீர் உண்மையிலேயே முதுகெலும்பற்ற பேடிதான்!

சரி இனி விடயத்திற்கு வருவோம். தம்பி, உமது மொட்டைக்கடிதத்திற்கு பதில் சொல்லவேண்டிய தேவை எனக்கில்லை. ஆனால் நீர் அதனை ஊடகங்களில் வெளியிட்டதால் மக்களுக்கு எனது தரப்பு நியாயங்களை தெரிவிப்பது எனது கடமையாகவுள்ளது.

முதலில், சர்வதேசக் கிளைகள்பற்றி எனக்கு கதைப்பதற்கு எதுவித தகுதியோ தராதரமோ இல்லை என்கிறீர். எனது தராதரங்களை சுருக்கமாகத் தருகிறேன். கடந்த 12 ஆண்டுகளாக சர்வதேச அமைப்பில் அங்கம்வகித்து வந்துள்ளேன். அதில் முக்கியமான நீண்டகாலத்திட்ட இணைப்பாளர் பதவியில் இருந்திருக்கிறேன். நாவாந்துறையில் ஏற்படுத்தப்பட்டள்ள ஒருசில முக்கிய திட்டங்களில் எனது கை பதிந்துள்ளது. (இதனை விபரிக்க நான் விரும்பவில்லை மக்களே அதனைக் கூறுவார்கள்.) 2005ம் ஆண்டிலிருந்து எனக்கு கொடுக்கப்பட்ட பதவி களவாடப்பட்டு எனது கைகள் கட்டப்பட்டன. எனது பதவியைத் தொடர்ந்து செய்ய என்னை அனுமதித்திருந்தால் ஊரில் இன்னும் பல திட்டங்களை சர்வதேசத்துடன் ஒன்றிணைந்து உருவாக்க  ஏதுவாக இருந்திருக்கும். இப்படி நான் சொல்வது தற்பெருமைக்காக அல்ல மாறாக அது ஷமுடியும்’ என்கிற தன்னம்பிக்கை! நானும் நமது சமுகத்தைச் சார்ந்தவன்தானே என்னில் ஏன் இந்தப் பொறாமை? சர்வதேசத்தில் நான் என்றும் தனி வழி சென்று செயல்பட்டவன் அல்ல. சர்வதேச நிர்வாகத்தில் ஏனைய அங்கத்தவர்களுடன் ஒன்றிணைந்து  சர்வதேச யாப்பு விதிகளுக்கு அமைவாக கூட்டுப்பொறுப்புடனேயே எப்பொழுதும் செயற்பட்டவன். ஏந்தவொரு காலகட்டத்திலும் சர்வதேச நிர்வாகத்தால் எனது செயற்பாடுகளில் குறைகள் சுட்டிக்காட்டப்படவில்லை. ஏனைய சில உறுப்பினர்கள்பற்றி இன்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என்பதுதான் உண்மை. ஆகவே இத்தகுதிகள் போதும் நான் ஏனைய கிளைகளைப்பற்றி கதைப்பதற்கு!

நான் எந்தக்கிளைகளுக்கும் சந்தா செலுத்துவதில்லையென கூசாமல்  பொய்சொல்கிறீர். எந்த ஆதாரத்தை வைத்து இதனைக் கூறுகிறீர்? நான் தற்பொழுதும் லண்டன் கிளைக்கு மாதாந்தம் சந்தா செலுத்திவருகிறேன். இதனை எமது பொருளாளரிடம் கேட்டு ஆதாரத்துடன் உறுதிப்படுத்திக்கொள்ளலாம். சரி, எனது சிறிய சந்தாவைப்பற்றி அதிகம் கவலைப்படும் நீர் நோர்வேயில் குளிர் பனி என்றும் பார்க்காமல் சிரமதானம்செய்து சிறுகச்சிறுக அங்குள்ள மக்களால் பல ஆண்டுகளாகச் சேர்த்த பல இலட்சக்கணக்கான பணத்தினை நோர்வேயிலிருக்கும் உமது எஜமானர்கள் ஊரில் அனுபமில்லாத ஒருசிலருடன் கூட்டுச்சேர்ந்து ஒழுங்கான முறையில் செயற்படாது  பள்ளம்பிட்டிக்காணிக்குள் போட்டு மூடியுள்ளார்கள் (தற்போது இதன்பெறுமதி கோடிகள்) இதனை ஏனையோர் செய்திருந்தால் சிலுவையில் அறைந்து கொன்றிருப்பீர்கள். இதனைச் செய்தவர்கள் உங்களுக்கு வேண்டப்பட்வர்களாக இருப்பதால் இதுபற்றி நீங்கள் மூச்சுக்கூட விடுவதில்லை. இதிலிருந்து உம்போன்றவர்களின் நடுநிலமை எமக்கு நன்றாகவே புரிகிறது.
உம்மைப்போன்றவர்களுக்காகத்தான் ஷநெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி’ என்று பாரதியார் பாடிவிட்டுச் சென்றுள்ளார்.

சன்மானமும் நான் வழங்குவதில்லை எனக்குறிப்பிட்டுள்ளீர். என்னைப்பொறுத்தவரையில் சன்மானம் 3 விதப்படும். 1. அரசியல்வாதிகளும் அதிகாரத்திலுள்ளவர்களும் மக்களின் செல்வாக்கைப் பெறுவதற்காக மக்களுக்கு அன்பளிப்பு (லஞ்சம்?) வழங்குவது. 2. பண்ணையார்கள் ஊர்மக்களைத் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்து தமது இருப்பை தக்க வைப்பதற்காக காலத்திற்கு காலம் அவர்களுக்கு ஷகொடுப்பனவுகள்’ வழங்குவது. 3. சாதாரண மக்கள் தம்மால் முடியுமென்றால் சிலவேளைகளில் ஏனையோருக்கு உதவமுன்வருவது. இது கட்டாயமில்லை. இருந்தபோதும் இந்த மூன்றாவது வகையான உதவியை நான் என்னால் முடிந்தவரை ஊரில் பல வருடங்களாகச் செய்துவருகிறேன். இது ஊருக்குத்தெரியும். உம்மைப்போன்ற கண்ணிருந்தும் குருடராய் காதிருந்தும் செவிடராய் இருப்பவருக்கு தெரியாமலிருக்கலாம்.

இனி என்னை விமரிசிக்க உமக்கு என்ன தராதரம் இருக்கு என்று பார்ப்போம். இலங்கையில் வசிக்கும் நீர் அங்கு எந்த அமைப்பிற்கும் சந்தா செலுத்தி உறுப்பினராக இருந்ததில்லை. ஆன்மீகம் என்கிற போர்வையைப் போர்த்துக்கொண்டு ஊடகங்களில் எழுதிக்கொண்டு ஊரின் பழைய கோவில் வரலாறுகளை குழிதோண்டி புதைத்து உமது உறவினர்களை புகழ்ந்துகொண்டு ஏனையோர்கள் ஊருக்கு எவ்வளவுதான் நல்லது செய்தாலும் அவர்களை ஊக்குவிப்பதற்கு பதிலாக அவர்களை இகழ்ந்து மொட்டைக் கடிதங்கள் போடும் தில்லாலங்கடி வேலைகளைச்செய்பவராகவுள்ள உமக்கு இருக்கும் ஒரேயொரு தராதரம் நீர் நாவாயின் குரல் மஞ்சள் பத்திரிகையின் ஊர் முகவராகவும் வெளிநாடுகளில் குறிப்பாக நோர்வேயில் வசிக்கும் உமது உறவினர்களுக்கு பினாமி வேலைசெய்யும் ஒரு கைத்தடியாகவும் இருப்பதுதான். சர்வதேசப் பிரச்சனைகள்பற்றி கதைக்கவேண்டியவர்கள் வெளிநாடுகளில் இருந்து கதைக்க துணிவில்லாது உம்போன்றவர்களை பகடைக்காய்களாக ஆக்கி என்போன்றவர்கள்மீது ஏவிவிடுகிறார்கள். இந்த சலசலப்புகளுக்கெல்லாம்  அஞ்சுபவன் நானல்ல என்பதை நீர் புரிந்துகொள்ளவேண்டும். நீர் உண்மைக்குப் பின்னால் இல்லாது உறவிற்கு பின்னால் நிற்கிறீர்! இதன் விழைவு… நீர் இனி சமுகத்தில் எந்தக்கருத்தைச் சொன்னாலும் எடுபடாது. ஏனெனில் நீர் நடுநிலையற்ற முதுகெலும்பில்லாத கோழை என்பது அவர்களுக்குத் தற்போது தெரிந்துவிட்டது.

அடுத்து, ஷநாட்டுக்காக உழைப்பவன் நாடே எட்டி உதைத்தாலும் ஒன்றாய் இருந்தே ஓசை எழுப்புவான். முடியாத பட்சத்தில் மறைந்திருந்து நாட்டை எழுப்புவான்’ என்கிறீர்.
தம்பீ என்னே அருமையான தத்துவம்! ஒரு வருடம் அல்லது இரு வருடம் ஒருவனை எட்டி உதைத்தால் பரவாயில்லை 12 ஆண்டுகள் எட்டி உதைத்து ஊருக்கு வரவேண்டிய திட்டங்களையெல்லாம் இல்லாமல் செய்துவிட்டு கேள்விகேட்கும் எம்போன்றவர்களை மறைந்து வாழச்சொல்கிறீர். நல்ல காலம் இந்த தத்துவத்தை யேசுவுக்கு காந்திக்கு மண்டேலாவுக்கு கப்பலோட்டிய தமிழனுக்கு சொல்லாமல் விட்டுவிட்டீர். உம்மைப் பொறுத்தவரையில் சமுகத்தில் அநீதியிழைப்பவர்களுக்கு வழிவிட்டு ஏனையோர் ஒதுங்கவேண்டும் என்கிறீர் அப்படித்தானே!
தம்பீ…புரட்சியின் மூலம்தான் பலநாடுகளில் உரிமைகள் வென்றெடுக்கப்பட்டன என்பதுதான் வரலாறு. இதனைப் புரிந்துகொள்ளும். ஷஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை’
எந்த விடயத்திலும் ஏன் எதற்கு என்கிற வினாக்கள் கேட்கப்படும்போதுதான் மனித அறிவு
வளர்ச்சியடைகிறது என்கிறார் தத்துவஞானி சோக்ரட்டீஸ்.

உமது மொட்டைக்கடிதத்தில் என்னை அசிங்கப்படுத்துவதுதான் உமது நோக்கமாக இருந்ததே தவிர அதில் லண்டன் கிளை ஏனைய கிளைகள்மேல் வைத்த முறைப்பாடுகள் எதற்கும் பதிலளிக்க நீர் முயற்சிக்கவில்லை. அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பின்னர் பதில் அளிக்கப்படும் என்று கூறி தந்திரமாக நழுவிவிட்டீர். ஏற்கனவேயும் நாவாயின்குரல் மஞ்சள் பத்திரிகையில் எமக்கெதிராக மொட்டைக்கடிதம் எழுதியவர்தானே நீர். ஒரு பிள்ளையால் பெற்றோருக்கு பெருமை ஏற்படவேண்டுமே தவிர உம்மைப்போன்ற பொய்யர் மற்றும் உண்மைகளைத் தெரிந்து கொள்ளவிரும்பாத மொட்டைக்கடிதம் எழுதுவதில் கலாநிதி பட்டம் பெற்ற கோழையைப் பெற்றதற்கு உமது பெற்றோர் வெட்கப்படவேண்டும். வீதியில் நின்று சண்டையிடும் சண்டியர்களை விட உம்மைப் போன்றோர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். ஏனெனில் நீங்கள் சமுதாயத்தின் நச்சுக்கொடிகள். உமது பாவ மன்னிப்புக்குத்தவிர வேறு எதற்காகவும் நீர் கடவுள் பெயரை உச்சரிக்கக்கூடாது. நீர் அப்படி உச்சரித்தால் ஷசாத்தான் வேதம் ஓதுவதற்கு ஒப்பானதாகும்’.

இறுதியாக, லண்டன் கிளையால் உரிமை கோரி அனுப்பப்பட்ட கடிதத்திற்கு லண்டன் கிளையிடமோ அல்லது கடிதத்திற்கு உரிமை கோரியவரிடமோதான் ஏதாவது விளக்கம் இருந்தால் கேட்கவேண்டுமே தவிர எனது பெயரைத் தேவையில்லாது இழுத்து பொய்களைக் கூறி எனக்கு அவமானத்தையும் மன உழைச்சலையும் ஊடகங்கள் ஊடாக ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். இது கிறிமினல் குற்றம் என்பதை இவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இந்த செயற்பாடுகளை இவர்கள் இனியும் தொடர்ந்து செய்வார்களாக இருந்தால் அவர்கள் இருக்கும் இடத்திற்கே வந்து பொலிசில் முறைப்பாடு செய்வதோடு அவர்களை நீதி மன்றத்திலும் சந்திக்கவேண்டி வரும் என்பதை எச்சரிக்கையுடன் கூறிவைக்கவிரும்புகிறேன்.

எனது மடியில் கனமில்லை. எதனையும் துணிவுடன் எதிர்கொள்ளும் சக்தி என்னிடம் உண்டு.

இப்படிக்கு

இ. மொன்மொலின் ஜெறாட்