fredag 22. mai 2015

ஆசீர்தாசனின் கடிதம்



கனடா

மே18, 2015



நோர்வேயிலிருந்து நாவாந்துறை சென் மேரிஸ் சர்வ தேச அமைப்பின் தலைவர் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு திரு. எ. ஜெயராஜா அவர்களால் 29 – 4 – 2015 திகதியிட்டு எழுதியுள்ள கடிதம் வாசித்தேன்.

2013ம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற 4வது சர்வதேச மகாநாடடில் சமூக சிந்தனை வாதியாக தன்னை அiயாளம் காட்டி தானே தலைவராக இருக்கிறேன் என்று அப்பதவியை வாங்கிக்கொண்டு போன திரு. ஜெயராஜா அவர்களை, கனடா கிளை தீர்மானங்களை சர்வதேச யாப்பு விதிகளுக்கு அமைவாக நடைமுறைப்படுத்துங்கள் என்று தானே கேட்டிருந்தோம். அப்போதெல்லாம் சர்வ தேச யாப்பு விதிகளை மறந்தவராக இருந்தவர் திடீரென என்ன ஞானம் பிறந்து யாப்பு சார்ந்து பேசுகின்றார் என்பது விளங்காத புதிராக மக்களே உங்களுக்கும்

இருக்கிறதா? அப்போது யாப்பு என்பதனை மறந்தவராக இருந்ததற்கு காரணம் சர்வதேச தீர்மானத்திற்கு அமைவாக நீண்ட கால திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக. ஆனால் இப்போது யாப்பு பற்றி பேசுகின்றார் என்றால் யாராவது சமூகத்திற்கு நல்லது செய்திடுவார்கள் இதனால் தங்களின் பதவிகள் பறிபோய், இவர்களின் உண்மை முகம் தெரிந்து விடும் என்பதறகாக, மற்றவர்களால் சமூகத்துக்கான முன்னேறற முயற்சிகள் நடைபெறுவதனை தடுப்பதற்காக “பழைய குறுடி கதவை திறவடி” என்பது போல் யாப்பை கையில் எடுத்துளளார்.



இங்கிலாந்து கிளையினர் சர்வதேச அமைப்பு இயங்காமல் கிடக்கின்றது, இதனால் எம் மக்களுக்கான புரணமைப்பு, அபிவிருத்தி வேலைகள் தாமாகின்றது என்ற நோக்கில் சர்வதேச அமைப்பினை புரணமைக்க கோரி சர்வதேச்தில் அங்கம் வகிக்கின்ற நோர்வே, கனடா, ஜேர்மன், பிரான்ஸ் அனைத்து நாடுகளிடமும் நாடுகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். இதற்கு பதில் கடிதம் எழுதிய ஒரே நாடு கனடா மட்டும் தான். நோர்வேயின் பிரதிநியாக சர்வ தேச தலைவராக சொல்லிக் கொள்ளும் திரு. ஜெயராஜா அவர்களே ஏன் உங்கள் கிளையால் அவர்;களுக்கு பதில் அனுப்பவில்லை? ஏன் சர்வதேச தலைவர் என்று கூறிக்கொண்டிருக்கும் நீங்கள் இது சார்ந்து இங்கிலாந்து கிளையுடன் கதைத்திருக்கலாமே? அப்படி செய்யாமல் அவர்களை சமூக குழப்ப வாதிகளாக காட்ட முயற்சிக்கும், நீங்களே எனது பார்வையில் சமூக குழப்பவாதியாக தெரிகின்றீர்கள்
.



2016ம் ஆண்டு ஜேர்மனியில் சர்வதேச கூட்டம் நடத்தவுள்ளதாக எழுதியுள்ளீர்கள்,

இந்த சர்வதேச மகாநாட்டிற்கு பங்குகொள்ள இருக்கும் நாடுகள் தான் எவை? கனடாவின் நிலையோ விதிகளை மீறா நிர்வாக அமைப்பு அதை மீறும் போது கனடா சுட்டிக்காட்டுவதால் அவர்களை நோர்வே, பிரான்ஸ் நாட்டவர்க்கு பிடிக்காதே. அப்படியென்றால் 5 வது சாவதேச மகாநாடும் சாதனைகளைப் பேசாமல், மீண்டும் முரண்பாடுகளை பேசுவதற்கு தானா? துலைப்பு சூட்டவுள்ளீர்ள். அதிகாரம் இல்லாத, நிர்வாக அலகு புரியாதா? அல்லது புரிந்தும் அதற்கு அமைவாக வேலை செய்ய முடியாத நோர்வே, பிரான்ஸ், ஜேர்மன் பிரதிநிதிகளை நம்பி தங்கள் செலவில் ஜேர்மன் வரும் பிரதிநிதிகள் கனடாவில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.



இங்கிலாந்து கிளையினால் மேற்கொள்ளப்படுகின்;ற சர்வதேச அமைப்பின் புரணமைப்பு சரியானதே. அவர்கள் எல்லோரையம் உள்வாங்கவும், எல்லோர் கருத்துக்களை மதிக்கவும் தயாராக உள்ளனர். ஆனால் நிட்சியமாக அவர்களும் சமூக விரோத எண்ணம் கொண்டவர்களை உள்வாங்கினால் எம்மக்களுக்கு தான் அந்தோ பாவம். மீண்டும்... மீண்டும் ஏமாற்றப்படும் மக்களாக இவர்களே இருப்பார்கள். புலம் பெயர்ந்த நாங்கள் ஏமாற்றிக்கொண்டே இருப்போம். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் பொறுப்பிலுள்ளவர்கள் செய்கின்ற வேலைகளின் வெற்றியில் எல்லோருக்கும் தான் பங்குண்டு. ஒருவரிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு இவரா இதை செய்வது என்ற காழ்ப்புணர்வினை வெளிப்படுத்தாதீங்கோ. அப்படியான நிலையால் தான் கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சர்வதேசத்தால் எதையும் சாதிக்க முடியவில்லை என்பதனையும் மறந்துவிடாதீர்கள். உங்களால் நேர்மையோடு விதிகளுக்குட்பட்டு வேலை செய்வது கஸ்ரமாக இருந்தால் விலகி நின்று செய்யக்கூடியவர்;களுக்கு வழிவிடுங்கள். இதனால் யாரும் தாழ்ந்து போகமாட்டீர்கள்.



திரு. பாக்கியராசா அவர்கள் 2016ம் ஆண்டு சர்வதேச மகாநாட்டுடுடன் தன் பதவிகளிலிரு;து ஒதுங்க போவதாக எழதியள்ளார். உண்மையிலேயே நீங்கள் எம் மக்களுக்கு செய்ய விரும்பிய விடையங்களை பாராட்டாமல் இருக்க முடியாது.

ஆனால் அதற்காக தனிமனித ஆதிக்கத்தை உபயோகிக்க நினைத்து தான் பிழையானது என்பதே என் கருத்தாகும். இதற்கான பல ஆதராரங்கள் என்னிடமுள்ளன. 2010ம் ஆண்டு நான் சர்வதேச செயலாளராக இருந்தபோது நாவாந்துறைக்கு சென்ற போது சட்டத்தரணி ரெமிடியஸ் மூலமாக சட்டரீதியாக கச்சேரியில் இருந்து பெறப்பட்ட பள்ளம் பிட்டி காணியின் உண்மை நிலையினை நிருபித்திருந்தமையினை சர்வதேச நாடுகளுக்கு தெரிவித்தும் அந்தக்காணி எம்முடையது தான் என்று உறுதி கூறி அந்தக் காணி வேண்டிய கொடுக்குமதியாக இருந்த காசும் வில்சனுக்கு கொடுத்து பெருமை சேர்க்க நினைத்த காணியின சுய உண்மை இப்போது உங்களுக்கு முதற்கொண்டு எல்லோருக்கும் தெரிந்தும்,அந்தக் காணி எம்முடையதல்ல என்று நிருபணமானால் அந்தக் காணி வேணடிய முழுக்காசும் திருப்பித்தரப்படும் என்றுகடிதம் எழுதி வீராப்பு காட்டிய வில்சனிடம் இன்று வரை காசு கேட்டு ஒரு கடிதம் எழுதினீங்களா? இது பொதுக்காசெல்லா? ஓ … எனக்கென்ன யாரோ உழைத்து தந்த காசுதானே என்ற போக்கில் விட்டு விட்டீர்காளா? இது எப்படி பொதுச்சேவைக்கான அடையாளமாகும். அதை விடுங்கள்





இந்தக்;; காணி நமக்கு இல்லையென்ற உண்மை தெரிந்தும் இன்று வரை ஏன் நீங்கள் இந்தக காணி சார்ந்து தவறு நடந்து விட்டது என்று பகிரங்கமாக எழுத்து மூலம் அறிவிக்கவில்லை. ஒரு நாளாவது தனிமையில் இருக்கும் போது இந்தக் காணிக்காசு பற்றி யோசித்திருந்தால் அதன் வேதனையை வெளிப்படுத்தியிருப்பீர்கள்

தயவு செய்து ஒரு விடையத்தை மனதில் நிறுத்தி வையுங்கள் நேர்மையான எந்த செயற்பாடும் தோல்வி கண்டதாக வரலாறு இல்லை. அதைத்தான் ரஜனிகாந் தனது படத்தில் இப்படி சொல்லியிருப்பார். “நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான், கெட்டங்களுக்கு கொடுத்தக் கொண்டே இருப்பான் ஆனால் கைவிட்டு விடுவான்”. இது தான் உண்மை.



என் வார்த்தை என்னவென்றால் “ நேர்மை இல்லாமல் செய்கின்ற செயற்பாடுகள் வெற்றி பெறும் தோற்றப்பாட்டை காட்டும், ஆனால் கடைசியில் தோற்று விடும். நேர்மையே வெல்லும்; என்று கூறி எது நம்மால் முடியுமோ அதை செய்வோம் முடியாவிட்டால் குழப்பவாதிகளாக இருப்பதனை விட ஒதுங்கியிருப்பது மிக நன்று.

யார் செய்கிறார்கள் என்று பாhக்காதீர்கள் என்ன செய்யப்படுகறது என்று மட்டும் பாருங்கள் பிடித்திருந்தால் உச்சாகப்படுத்துங்கள். அதுவே நல்லவர்களின் அடையயாளமாகும்.





நன்றி



ஆசீர் அன்ரனி

கனடா