mandag 27. juli 2015

இறுதிப்போரில் கருணா குழு சார்பாக 600 பேரை இறுதி யுத்தத்திற்கு அனுப்பிய கருணா!


தமிழ் மக்களை மனித கேடய ங்களாக பாவித்து அவர்களை சுட்டு கொல்வதற்காக 600 தமி ழ்ப் போராளிகளை விடுதலை ப்புலிகளுக்கு எதிராக செயற் படுவதற்காக கருணா கிழக் கிற்கு அனுப்பி வைத்ததாக வும் தற்போது அதற்கான பொறுப்புகளைத் தானே சுமக்க நேரிட்டுள்ளதாக தெரிவித்துள்ள கருணா, சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை பற்றிய சாட்சியாக மாறுகிறாரா? இல்லை இலங்கை அரசு ஒட்டுமொத்தமாக பழியை தன் மேல் போட்டுவிடும் என பயப்படுகிறாரா!...

தனது காட்டிகொடுப்புக்கு நல்ல பாடம் தந்துவிட்டார்கள் என்று தமிழ்மக்களுக்கு எதிராக காட்டிகொடுத்த கருனா தற்போது கதறுகிறார்.
இறுதிப்போரில் கருணா குழு சார்பாக 600 பேரை இறுதி யுத்தத்திற்கு அனுப்பியதாகவும் அதில் 300 பேரை இழந்ததாகவும் தற்போது ஆதங்கத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

(இவர்கள்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரில் இறுதி யுத்ததில் தமிழ்மக்களை புலிகளிடமிருந்து பிரிக்க சில நடவடிக்கைகளை செய்தனர் அதாவது தமிழ் மக்களை மனித கேடயங்களாக பாவித்து அவர்களை சுட்டு கொள்வதற்காக இவர்கள் பாவிக்கப்பட்டுள்ளார்கள். பின்னர் அதை புலிகள் செய்ததாக பரப்புரையை ஶ்ரீலஙகா அரசு மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.)
கருனா என்னும் முரளிதரன் மேலும் தெரிவிக்கையில்
தனக்குத் தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றி விட்டதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் விசனமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளார்,
தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பதாக சுசில் பிரேம் ஜெயந்தவும், அனுர பிரியதர்சன யாப்பாவும் எனக்கு வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் கடைசியில் எனது பெயர் தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்படாதது வருந்தத்தக்கது.
போர் முக்கியமான கட்டத்தை எட்டியிருந்த போது, கோத்தாபய ராஜபக்சவும், லக்ஸ்மன் ஹுலுகல்லவும், வந்து அரசாங்கத்துக்கு உதவ வேண்டும் என்று உனது உதவியைக் கோரினர்.
அந்த நேரத்தில் நாட்டுக்காக நான் மிகவும் ஆபத்தான ஒரு முடிவை எடுத்தேன். அதன் காரணமாக, தமிழர்களின் சில பகுதியினரின் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த நேரத்தில் 600 தமிழ்ப் போராளிகளை விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்படுவதற்காக கருணா கிழக்கிற்கு அனுப்பி வைத்ததாகவும், அவர்களின் 300 பேர் போரில் இறந்து போனதாகவும், கொழும்பு ஆங்கில நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது அதற்கான பொறுப்புகளைத் தானே சுமக்க நேரிட்டுள்ளதாக தெரிவித்துள்ள கருணா, தற்போதைய அரசியல் சூழல் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை என்பதை முதலில் கூற வேண்டியுள்ளதாகவும், இந்தச் சூழலில், இதுபற்றி நான் முடிவு ஒன்றை எடுக்க வேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

lørdag 25. juli 2015

நீதியை நிலைநாட்டுங்கள்


நீதியை நிலைநாட்டுங்கள் அப்பொழுது எல்லாம் நமக்கு கிடைக்கும்!
உறவுகளே! இது இயேசுவின் பொன்மொழியாகும். நமது தமி ழனத்தின் நியாயமான  கோரிக்கைகள், அநியாயமாக நசுக்கப்ப ட்டுள்ளது. அதை நசுக்கும் கைங்காரியத்தில் மகிந்தாவின் அரசு க்கு, சர்வதேசம் முழுவதும், யுத்த தார்மங்களை மீறி, நச்சு வாய்வு பிரயோகித்தாவது விடுதலைப்புலிகளை அழிக்கும் நோக்கில் அப்பாவி பொது மக்களை இலட்சக்கணக்கில் கொ ன்று குவித்ததை  நாம் அறிவோம், மஹிந்தரை எப்படியாவது திருப்திபடுத்தி, இலங்கை அரசாங்கத்தை, தமது மேற்குலக தாராண்மை வாத பொருளாதார ஒழுங்கு முறைக்குள் கொண் டுவந்துவிடாலாம் என்ற கனவில் மேற்குலகு தமிழினஅழிவை கவனத்தில் எடுக்கவில்லை. மஹிந்தர் தாம் நினைத்தவைக்கு மாறாக விடாது சீனாவைப்பற்றிகொண்டபடியால், மஹிந்தா வை ஆட்சியில் இருந்து இறக்கி, அவரை பழிவாங்க சர்வதேச விசாரனையை கையில் எடுத்தது. ஆனால் தமது ஆட்டத்திற்கு ஏற்ப ரனில் அரசாங்கம் வாளைந்து கொடுத்தால், சர்வதேச நீதிவிசாரனை புஸ்வானமாகிவிடும். தென் இலங்கையில் எந்த அரசாங்கம் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும், நீதியான நியாய மான தீர்வை ஒருபோதும் தரப்போவதில்லை. ஆட்சி மாற்றம் பேசுவதற்கு வாய்ப்பை, அல்லது குறைந்த பட்ச தீர்வுக்கு வர லாம், ஆனால் முழுமையான விடுதலையை நாம் அனுபவிக்கப் போவதில்லை. தமிழனம் இப்போது வேண்டுவது சுயமான சுய பாதுகாப்போடு கூடிய ஒரு ஆட்சி வடிவம், அது ஒற்றை ஆட்சி க்குள் என்றாலும் பரவாயில்லை  என்ற‌ நிலைக்கு வந்துவிட்டா ர்கள். அதைக்கூட நாம் பெறப்போவதில்லை. எனவே சர்வதேச விசாரனை மூலமே ஒரு தீர்வுக்கு வர மேற்குலக நாடுகள் நிர்ப் பந்திக்கப்படலாம். அதற்கு தமிழர்காளின் ஒருமித்த குரல், செய ல்பாடுகள் மிக மிக முக்கியம். தமிழர் தரப்புக்குள் தற்போது மும்முனைப்போராட்டம் தொடங்கியுள்ளது. இந்த மும்முனை போராட்டத்திற்கு அப்பால் ஒரு சிங்கள அரசியல் கட்சியை வட க்கு கிழக்கு மக்கள் ஆதரிப்பார்கள் என்றால் அவர்கள் எடுக்கும் தீர்மானங்களை நாம் ஏற்பவர்கள் ஆகிவிடுவோம். சூதாட்டத் தில் பாண்டவர்கள் நாடு ஆட்சி உரிமை இழந்த கதையாக, ஒரு சூதாட்டமாக இந்த தேர்தல் அமையப்போகி ன்றது. ஒரு சிங்கள கட்சியை எக்காரணத்திற்காகவும் நாம் ஆதரிக்ககூடாது. அது வும் வீரம் செரிந்த நவாந்துறை மக்களுக்கு அழகல்ல! புலம் பெயர் நாவாய் மக்கள் யாவரும் சர்வதேச விசாரணை அதன் பின் வருகின்ற தீர்வின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். எனவே உங்கள் வாக்குகள் தமிழர் தரப்பையும் சர்வதேச விசாரணையும் பலப்படுத்துவதாக அமையட்டும். நன்றி