fredag 19. februar 2016

பேரறிஞ்ஞர் அண்ணாவுக்கு A என்ற ஆங்கில எழுத்தின் மீது அலர்ஜீயாம்!

பேரறிஞ்ஞர் அண்ணாவுக்கு A என்ற ஆங்கில எழுத்தின் மீது அலர்ஜீயாம்!

சொற் செல்வம் பேரறிஞ்ஞர் அண்ணாதுறை அவர்கள் சிறந்த பேச்சாளார். தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் சர‌மாரியாக மேடையிலே பேசும் ஆற்றல் கொண்டவர்.சுமார் 1965ம் ஆண்டு வாக்கில் பேரறிஞர் அண்ணா அவர்கள் பாராளுமன்ற உறுப்பி னராக இருந்தார்.அப்போது பாராளுமன்ற கூட்டத்தொடர் நட ந்துகொண்டிருந்த சமயம் அவர் டெல்லியில் இருந்தார். அண்ணா டபுள் M.A. படித்து,ஆங்கில இலக்கியத்தில் புலமை பெற்றவர்.பாராளுமன்றத்தில் சர்வசாதாரணமாக அவர் ஆங்கி லத்தில் பேசுவார். அந்தசமயம் ஒரு இளவயது டெல்லி பத்திரி கை நிருபர் ஒருவர் பாராளுமன்றத்தைவிட்டு வெளியேவந்த அண்ணாவிடம், "நான் தங்களை பேட்டி எடுக்க விரும்புகி றேன்..."என்றார்.                                            அண்ணாவும் பேட்டிகொடுக்க சம்மதித்து பேட்டிக்கு தயாரானார். நிருபர் துணிச்சலாக "உங்களிடம் எதை ப்பற்றி கேள்வி கேட்டாலும் சுலபமாக உடனே பதில் சொல்வீர் களாமே...நான் கேட்கும் கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா?..." என்றார்.அண்ணாவும் "கேளுங்க தம்பி..." என்றார் ஆங்கிலத்தில். உடனே நிருபர் கேட்டார்."ஆங்கிலத்தில் 100 வார்த் தைகளுக்கு "A" என்ற எழுத்தே இல்லாமல் உங்களுக்கு பதில் சொல்லத் தெரியுமா?..." என்றார்.உடனே அண்ணா சற்றும் தாமதிக்காமல், "தம்பி, 1 முதல் 100 வரை ஆங்கிலத்தில் எழுதிக்கொள்ளுங்கள்.கடைசியில் STOP என்று ஆங்கிலத்தில் எழுதிக்கொள்ளுங்கள்..." என்றார். இந்தபதிலை கொஞ்சமும் எதிர்பார்க்காத நிருபர் உடனே அண்ணாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.அன்றுதான் நிறையபேருக்கு தெரிய ஆரம்பித்தது 0 முதல் 99 வரை ஆங்கிலத்தில் "A" என்ற எழுத்தேவராது என்று. தகவல் தேனை சேகரித்தவர் தேவதாஸ் நோர்வே