søndag 12. februar 2017

ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது

பிரபாகரனை தலைமைப் பதவியை விட்டு ஒதுங்கச் சொல்லுங்கள்!!: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -7)

புலிகள் கருணா  இலங்கையில் தேடிக்கொண்டிருக்கும்போதே இந்தியா தற்காலிகமாக தத்தெடுத்திருந்தது.
ஊட்டியில் தனியான ஒரு பங்களாவில் தங்க வைத்து புலிகளைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொண்டதோடு புலிகளுக்கு எதிரான நவடிக்கையில் தங்கள் பக்கம் வைத்திருக்க விரும்பியிருந்தார்கள்.
ஈழ விடுதலை இயக்கங்களில் ஒன்றான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (P.L.O.T ) அமைப்பின் உட்கட்சி மோதல் மற்றும்  படுகொலைகளால்  அதிலிருந்து    பிரிந்தவர்களில்   ஒருவரான  ஞானப்பிரகாசம்   ஞானசேகரன் (பரந்தன் ராஜன்) என்பவர் அந்த அமைப்பில் இருந்து பிரிந்தவர்களை வைத்து ஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணி (E.N.D.L.F) என்றொரு அமைப்பை உருவாக்கியிருந்தார்.
pirapakarannnas பிரபாகரனை தலைமைப் பதவியை விட்டு ஒதுங்கச் சொல்லுங்கள்!!: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -7) pirapakarannnas
இந்த அமைப்பானது முழுக்க முழுக்க இந்திய அரசின் உதவியோடு அவர்கள் கட்டுப்பாட்டிலேயே இயங்கியது.
இலங்கையில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த 1987 …1990 வரையான காலத்தில் இந்திய இராணுவத்தோடு இணைந்து புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடு பட்டிருந்தனர்.
பின்னர் இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிய போது அவர்களுன் E.N.D.L.F அமைப்பினரும் வெளியேறி இந்தியாவிற்கு சென்று விட்டிருந்தது மட்டுமல்லாது எவ்வித செயட்பாடுக்களுமின்றி முடங்கிப்போய் இருந்தனர்.
கருணாவை வைத்து மீண்டும் அந்த அமைபிற்கு புத்துயிர் கொடுக்க விரும்பிய இந்தியா அதற்கான வேளைகளில் இறங்கியிருந்தது.
கருணாவிற்கும் வேறு வழியின்றி ஒப்புக்கொள்ள வேண்டிய நிலைமை.
இங்கு ஒரு ஆச்சரியப்படவேண்டிய விடயத்தையும் கூறவேண்டும்.
கருணா புலிகள்  அமைப்பிலிருந்து  பிரிவதற்கு  சரியாக  இரண்டு   வருடங்களிட்கு முன்னரே 2002ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் இருந்து வெளிவரும் Frontline என்ற ஆங்கிலப் பத்திரிகையில் விடுதலைப் புலிகள் அமைப்பில் கருணா  கிழக்கு  மாகாணத்தைச்  சேர்ந்தவராக  இருந்தும்   சக்தி மிக்க தலைவராக உருவாகி வருகின்றார்.
பிரபாகரனை மிஞ்சும் தலைவராகவும் அவர் வர முடியும். ஒரு நாள் பிரபாகரன் இடத்திலேயே கருணா அமரும் நிலை வரும் என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப் பட்டிருந்தது .
அன்றைய கால கட்டத்தில் கருணா பிரபாகரன் மோதல் வருமென்று யாருமே கனவில் கூட நினைத்துப்பார்த் திருக்காத காலகட்டம்.
எனவே இப்படியொரு மோதலை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை சில உழவமைப்புகள் அன்றே ஆரம்பித்து விட்டிருந்தது புலனாகிறது.
karunaas பிரபாகரனை தலைமைப் பதவியை விட்டு ஒதுங்கச் சொல்லுங்கள்!!: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -7) karunaasகருணா E.N.D.L.F இணைந்து புலிகளுக்கு எதிரான நவடிக்கைக்கான திட்டங்களை வகுத்து அதை நடை முறைப்படுதுவதட்காக சில இந்தியாவில் தங்கியிருந்த E.N.D.L.F உறுப்பினர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.
கருணா  எங்கே என்று  தெரியாமல் புலிகளின் தலைமை தலையை பிய்துக்கொண்டிருந்தபோது தான் 15.04.2005 அன்று மட்டக்களப்பு  எல்லையில்   காட்டுப்பகுதியில் கருணா அணியொன்று தங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அந்த இடத்தை சுற்றி வழைத்து புலிகளின் அணியொன்று திடீர் தாக்குதலை நடத்துகின்றது.
அங்கிருந்த  கருணா அணியினர் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
அவர்களது  ஆயுதங்களையும்  உடமைகளையும் புலிகள் கைப்பற்றியபோது  அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.
கொல்லப்பட்டவர்களுள் விஜயன், ரவி என்ற இருவர் இந்தியக் கடவுச் சீட்டுக்களையும், இந்திய சாரதி அனுமதிப் பத்திரங்களையும் தம்வசம் வைத்திருந்தார்கள்.
இவர்கள் இருவருமே  இந்தியாவில் தங்கியிருந்து பயிற்சி பெற்ற   ஈ.என்.டீ.எல்.எப். உறுப்பினர்கள் என்பது தெரியவந்தது.
39937843_leader1 பிரபாகரனை தலைமைப் பதவியை விட்டு ஒதுங்கச் சொல்லுங்கள்!!: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -7) 39937843 leader1
அவர்களிடமிருந்து  கைப்பற்றிய தொலை பேசியில் அம்மான் என்றிருந்த இலக்கத்தை அழுத்தினார்கள் மறுமுனையில். “கலோ” என்ற கருணாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
இந்த உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் உன்னை விடமாட்டோம் என்றதோடு போன் கட்டாகிவிட்டது.
தான் இந்தியாவில் தங்கியிருப்பதை புலிகள் கண்டுபிடித்து விட்டார்கள் இனி இந்தியாவில் இருப்பது புத்திசாலித் தனமில்லை என நினைத்தார்.
காரணம் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் நடந்து கொண்டிருக்கும் பேச்சு வார்த்தைக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டிருந்த  நாடுகளில்  இந்தியாவும் முக்கியமான நாடாக இருந்தது.
எனவே பேச்சு வார்த்தை மேசையில் கருணாவை தங்களிடம் ஒப்படைக்கும்படி புலிகள் அழுத்தத்தை கொடுத்தால் இந்தியா சில நேரம் தன்னை ஒப்படைத்து விடலாம் என சந்தேகித்தான்.
அதே நேரம் கருணா குழுவின் திறமை இன்மையாலேயே தமது நீண்டகால உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர் என்கிற குற்றச்சாட்டை E.N.D.L.F வைக்க அவர்களோடும் முறுகல் நிலை ஆரம்பித்தது .
எனவே இந்தியாவை நம்புவதைவிட இலங்கையை நம்பலாமென முடிவெடுத்து மீண்டும் இலங்கைக்கே திம்பி விடுகிறான்.
கருணாவின் பிரச்சனைகள் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க மறுபக்கம் புலிகளுக்காக வந்த இரண்டு ஆயுதக் கப்பலில் ஒன்று தாக்கியழிக்கப்பட  இன்னொன்று தப்பிச் சென்றிருந்தது.
தப்பிச் சென்ற இரண்டாவது  ஆயுதக் கப்பலும் இந்து  சமுத்திரப்பிராந்தியத்தில் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் வைத்து இலங்கை கடற்படையால் தாக்கி அழிக்கப்பட்டது.
புலிகளும் தொடர்ந்து ஆயுதங்களை கொள்வனவு செய்துகொண்டிருந்தனர் எனவே பேச்சு வார்த்தை மேசையில் புலிகளோடு கடுமையாக நடந்து கொள்ள அமெரிக்கா முடிவெடுத்து அவர்களிடம் சில நிபந்தனைகளை முன்வைத்தார்கள்.
child பிரபாகரனை தலைமைப் பதவியை விட்டு ஒதுங்கச் சொல்லுங்கள்!!: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -7) child
ஒன்று …குழந்தைப் போராளிகளை விடுவித்து அவர்களை பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
இரண்டு.. கரும்புலிகள் அமைப்பை கலைக்க வேண்டும்.
மூன்று ..வான் புலிகள் திட்டத்தை விரிவு படுத்தாது தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என மூன்று நிபந்தனைகளை வைத்து விட்டு வன்னியிலிருந்து பிரபாகரனின் பதிலுக்காக காத்திருக்கும் போது வெளிநாடுகளில் இருக்கும் புலி ஆதரவாளர்கள் சிலர் இந்திய அதிகாரிகள் சிலரோடு தனியாக ஒரு பேச்சு வார்த்தையை நடத்திக்கொண்டிருந்தார்கள்.
காரணம் தென் கிழக்காசிய அரசியலில் இந்தியா தவிர்க்க முடியாத ஒரு சக்தி.
இலங்கைத்தீவிலும் இந்தியாவின் தலையீடு இன்றி அவர்களை தவிர்த்து எந்தவொரு அரசியல் நகர்வையும் மேற்கொள்ள முடியாது என்பதை திடமாக நம்பினார்கள்.
தமிழ்செல்வனின் மரணத்தின் பின்னர் புலிகளின் அரசியல் துறை பொறுப்பை ஏற்றுக்கொண்ட நடேசனும் அதே கருத்தை கொண்டவராகவே இருந்ததோடு இந்தியாவோடு மீண்டும் நட்புறவை புதிப்பிக்கும் முயற்சிகளை மேட்கொண்டிருந்தார் .
மேற்குலகம் வைத்த மூன்று கோரிக்கைகளில் குழந்தைப் போராளிகளை விடுவிப்பதாக சம்மதம் தெரிவித்திருந்தனர்.
அதற்கு வேறொரு காரணமும் இருந்தது பெருமளவான குழந்தைப் போராளிகளை கருணாவே இணைத்ததாக பொதுவான குற்றச்சாட்டு இருந்தது.
அவர்களை விடுவிப்பதன் மூலம் புலிகளின் தலைமைக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை.
கருணாவே குற்றவாளி என்று சர்வதேசத்திடம் நிருபித்து விடுவது என்பதுதான் நோக்கம்.
அதுவும் ஒரு சம்பிரதாய நிகழ்வாக யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழு, செஞ்சிலுவைச்சங்கம்,  மற்றும் உள்ளூர் வெளிநாட்டு பத்திரிகையாளர் முன்னால் முப்பது வரையான சிறுவர்களை ஒப்படைத்தனர்.
pooralikal2520322 பிரபாகரனை தலைமைப் பதவியை விட்டு ஒதுங்கச் சொல்லுங்கள்!!: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -7) pooralikal2520322ஆனால் கரும்புலிகளையோ வான் புலிகள் அமைப்பையோ கலைக்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்து விட்டார்கள்.
இது மேற்குலகத்திற்கு ஏமாற்றத்தையும் சினத்தையும் கொடுத்திருந்தது.
ஆனாலும் புலிகள் மீண்டும் சண்டைக்கு திரும்பி விடமால் பேச்சுவார்த்தை மேசையிலேயே வைத்திருக்க பெரும்பாடு பட்டனர்.
அதே நேரம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய புலிகளின் ஆதரவாளர்கள் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கி அவர்களை அங்கீகரித்து ஈழப் போராட்டத்திற்க்கு ஆதரவளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
irajivee-680x365 பிரபாகரனை தலைமைப் பதவியை விட்டு ஒதுங்கச் சொல்லுங்கள்!!: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -7) irajiveeராஜீவ்காந்தி படுகொலை
ஆனால் புலிகளால் நடத்தப்பட்ட ராஜீவ்காந்தி கொலை என்பது இந்திய தேசத்துக்கு நடந்த மிகப்பெரிய கௌரவப் பிரச்சனையாகவே அவர்கள் பார்த்தார்கள்.
இந்தக்கொலையானது புலிகள் அமைபிற்கு ஒரு தற்காலிக மகிழ்ச்சியை கொடுத்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் அவர்களது ஆயுதப் போராட்ட  வரலாற்றில்  தூர நோக்கற்று செய்த மிகப்பெரிய பிழை என்பதை பல புலித் தலைவர்களே  உணர்ந்திருந்த காலகட்டம் அது.
ஆனால்,  கால இயந்திரத்தில் திருப்பிச் சென்று சரி செய்யமுடியாத பிழை. அந்தப் பிழை இந்தியாவிடம் ஆதரவு கோரிய புலி ஆதரவாளர்களின் பேச்சுவார்த்தையின் முன் மிகப் பெரிய தடைகல்லாக நின்றது.
புலிகளின் மீதான தடையை நீக்கி மீண்டும் நல்லுறவை ஏற்படுத்த வேண்டுமாயின் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முக்கியமானவராக கருதப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள புலிகளின் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் பொட்டம்மானை தங்களிடம் ஒப்படைத்தால் இழுபட்டுக்கொண்டேயிருக்கும் கொலை வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதோடு  உறவுகளையும்  புதுப்பிக்க முடியும் என்று  இந்தியத் தரப்பில் கூறப்பட்டது.
பேச்சுவார்த்தை குழுவினர் இந்தியாவின் பதிலில் மகிழ்ச்சியடைந்து,  உடனடியாக புலிகளின் தலைமைக்கு செய்தியை தெரிவித்தார்கள்.
அவர்களது கோரிக்கை சுவரில் அடித்த பந்தைப்போல் முடியாது என்கிற பதிலோடு வேகமாக வந்தது.
சோர்வடைந்த பேச்சுவார்த்தை குழுவினர் அப்போது நோர்வேயில் தங்கியிருந்த தமிழ்ச்செல்வனை சந்தித்து பொட்டம்மானை சரணடைய வைப்பது பற்றி விரிவாக விளக்கினார்கள்.
“நாட்டுக்காக மகளுக்காக எத்தனயோ போராளிகள் தங்கள் உயிரை கொடுத்து விட்டார்கள். கரும்புலிகளாகவும் மாறிஇருகிறார்கள் அப்படியிருக்கும் போது அந்த மகளுக்கு ஒரு நல்லது நடக்க வேண்டுமானால் பொட்டம்மான் சரணடைவதில் தப்பில்லை”.
10-pottu-mman-arrest-in-hong-kong34-300 பிரபாகரனை தலைமைப் பதவியை விட்டு ஒதுங்கச் சொல்லுங்கள்!!: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -7) 10 pottu mman arrest in hong kong34 3001இந்தியாவும் பொட்டம்மானை உடனடியாக தூக்கில் போட்டுவிடப் போவதில்லை அவருக்காக வாதாட பெரிய லாயர்களை நாங்களே ஏற்பட்டு செய்கிறோம் என்று அவர்கள் சொன்னார்கள்.
சொல்லி முடிக்கவும் அனைவரையும் பார்த்த தமிழ்ச்செல்வன் உங்களிடம் வேறு எதாவது ஆலோசனைகளும் உள்ளதா என்று நக்கல் சிரிப்போடு கேட்டார்.
தாங்கள் பேசியது எதனையும் தமிழ்செல்வனும் காதில் வாங்கவில்லை என்று புரிந்து கொண்டவர்கள் தயங்கியபடியே இன்னொரு ஆலோசனையையும் சொன்னார்கள்.
புலிகளின் தலைமை மீது ஏகப்பட்ட வழக்குகளும், குற்றச்சாட்டுகளும், நம்பிக்கையீனங்களும் சர்வதேச அளவில் இருப்பதால் மகளுக்கு நல்லதொரு தீர்வு எட்டும்வரை,
பிரபாகரன் தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல்ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு  ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே முகம் கடுமையாக மாறிய தமிழ்ச்செல்வன் ..
“தமிழீழம் எப்படி எடுப்பது என்று எங்களுக்கு தெரியும் நீங்கள் பொத்திக்கொண்டு போகலாம் என்றதும், தலையை தொங்கப்போட்டுக் கொண்டு அங்கிருந்து வெளியேறியவர்கள் அத்தோடு தங்கள் நல்லெண்ண நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்திக் கொண்டார்கள் ..
தொடரும்..

Ingen kommentarer:

Legg inn en kommentar