søndag 13. september 2015

திரு அன்ரனி தங்கககுமாரன் அவர்தான் உதைபந்தாட்டத்தின் பின்ணனி நட்சத்திரம்


          
அவர்தான் உதைபந்தாட்டத்தின் பின்ணனி நட்சத்திரம்!
                       எல்லோராலும் சின்னண்ணன் என்று அன்போடு அழைக்கப்படும் அமரர் திருவாளர் ச. அன்ரனி தங்கக்குமாரன் அவர் கள் (பிறப்பு 21. 05.1946 -இறப்பு 27.09. 2013) சிறப் பாக சிறுவயதில் இருந்தே நமது புனித மரியாள் விளையாட்டுக்கழக போட்டிகள், குறிப்பாக 100 மீட்டர், நீளம் பாய்தல் போன்ற மெய்வல்லுணர் போட்டிகளில் என்றும்  முதல் இடத்தில் இருப்பவர். சிறுவயதில் இருந்து உதைபந்தாட்ட த்தில் ஆர்வமும், திறமைகளும் இருந்ததினால், பெரியவர்களும், சக நண்பர்களும் ஏன் நாவந்துறை மக்கள் முழுவதுமே, திரு தங்கக் குமரன் அவர்கள்  சிறந்த விளையாட்டு வீரனாக விளங்குவர் என்று எதிர்பார்த்தார்கள். எங்கள் ஊர்மக்களின் எண்ணங்கள் வீண்போகவி ல்லை, எல்லோரி எண்ணப்படியும் ஆசைப்படியும அவர் சிறந்ததோர் பின் அணி வீரனாக  உதைபந்தாட்டக்களங்களில் ஓர  நட்சத்திரமாக ஜொலித்தார்.
                                                 இருபது ஆண்டுகளுக்கு மேலாக யாழ் தெரிவுக்குழு கோஷ்டியில் நிரந்தர வீரனாகவும், பல  ஆண்டுகளாக அக்குழுவுக்கு தலைவராக விளங்கி யாழ் தெரிவுக்குழு கோஷ்டிக்கு பெருமை சேர்த்தவர். திரு தங்கககுமாரன் அண்ணன் அவர்கள் யாழ் தெரிவுக்குழு கோஷ்ட்டியில் விளையாடும் போது, ஆற்றிய சாதனை கள் எத்தனையோ எத்தனையோ!  இருபத்தி ஐந்து வருடங்களாக, எமது புனித மரியாள் விளையாடுக் கழகத்தில், நிரந்தர வீரனாக, பின் அணி நட்சத்திரமாக விளையாடி பல சாதனைகளை படைத்தவர் இவர்.
                                              1970 களுக்கு முன்னர், திரு அன்ரனி தங்கககுமாரன் அவர்களும், எமது வாழ் நாள் சாதனையாளர் ( The Living legend) திரு,  மணி  மரியதாஸ் அவர்களும், முதன் முதலாக, புனித மரியாள் விளையாட்டு கழகத்தில் இருந்து, யாழ் உதைபந்தாட்ட தெரிவுக்குழு ஊடாக, அகில இலங்கை தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதாற்காக, நாவாந்துறை மண்ணில் இருந்து, முதன் முதலாக சென்றிருந்தார்கள். பரிபூரணமான தகுதிகள், திறமைகள் இருவரு க்கும் இருந்தும் கூட, அகில இலங்கை தெரிவுக்குழுவில் இடம்பெற முடியாமல் போய்விட்டது. இதற்கு அவர்களது தனிப்பட்ட காரன ங்களே அன்றி வேறு ஒன்றும் இல்லை.

                                                பின் அணி நட்சத்திரம் அமரர் திரு, தங்கக்குமார் அண்ணனின் விளையாட்டு இலாவகம், திறமைகள், அவரின் விளையாட்டு மதிநுட்பங்களை சொல்லிக்கொண்டே போக லாம். அவர்தான் அந்தகாலத்திலேயே, மிகவேகமாக பந்தடிக்கும் வீர ர்களின் வரிசையில் முன்ணனிவகித்தவர் என்பதை நான் திட்டவ ட்டமாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இதுமட்டுமல்ல, நான் சிறுவனாக இருந்த காலத்தில் நடந்த சம்பியன் போட் டிகளில் அவ ரது அபார தடுக்கும் திறத்தால் Defence Skill பல வெற்றிகளை எமது விளையாட்டு கழகம் குவித்துள்ளது. சில சந்தர்பங்களில் போட்டியா
னது சம நிலையில் இருக்கும் போது, இவரின் தனிப்பட்ட தடுப்பு திறமையால் பல தோல்விகளை எமது விளையாட்டு கழகம் தவிர்த்து ள்ளது.
                                          எத்தனையோ போட்டிகளில், எதிர் அணி யிணர் தொடுக்க இருந்த கோல் இலக்குகளை அடையாளம் கண்டு, தனி ஒருவனாக நின்று, தனது சாதுரியத்தினால் அதனை தடுத்து நிறு த்தியுள்ளார். நான் பார்த்த சில போட்டிகளிலும், நான் அவரோடு சேர் ந்து விளையாடிய போட்டிகளிலும், எதிர் அணியினர் குறிப்பாக சொல்லப்போனால், Singin Fish, St Anthony போன்ற முண்ணனி எதிர் அணியிணர் விளையாடும் போட்டிகளில் கூட, எதிர் முன் அணி வீர ர்களின் தாகுதல்களை தனி ஒருவனாக துணிந்து எதிர்கொண்டு தடு த்துள்ளார். எதிர்தரப்பு வீரர்கள் கோல்முகத்தை நோக்கி, முனைப்பு டன் முன்னேறி, கோல் நோக்கி, பந்தை உதைக்கும், ரசிகர் கூட்டம் கோல் என்று கோஷம் எழுப்ப, தங்கமான தங்கக்குமாரன் அண்ணன்,
புலிப்பாய்ச்சலாக பாய்ந்து, பீரங்கி தாகுதல் போல பந்துக்கே உதைப் பார் அன்றி ஒருபோதும்  எதிர் அணியின் கால்களுக்ககு அல்ல!. அவர் தான் விளையாடும் விளையாட்டில் ஒருபோதும் தவறாக விளை யாடி, நடுவர்களிடம் இருந்து தண்டனை பெற்றவரல்ல.எதிர் அணி யினரின் பார்வையாளர்கள் தமது அணிக்கு கோல் கிடைக்கப்போகி ன்றது என்று உட்சாக மிகுதியால் கோஷம் இடும்போது, அந்த மும்மு ரமான தாக்குதலை வெற்றி கொண்டு எமது கழக ஆதரவர்கலின் சந்தோசமாக பல தடவைகளில் மாற்றி அமைத்துள்ள பெருமை அம ரர் திரு தங்கக்க்குமாரர் அவகளையே சாரும் என்பதை அவரின் அனு பவாயிலாக நான் கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்.
                                                       
                                         திரு தங்கக்குமார் அண்ணன் அவர்கள் போட்டியின் போது அல்லது பயிற்சியில் விளையாடும் போதும், அவரிடம் இருந்து நிறைய விளையாட்டு நுட்பங்களை நாங் கள் கற்றுக்கொண்டுள்ளோம். விளையாடும் போது அவரின் அங்க அசைவுகள் Body Language வித விதமான நுட்பங்களை அவ்வப்போது வெளிப்படுத்தும். பந்தில் அவரது பாதம் படும் ஒவ்வொரு கோண மும், பந்து செல்லும் திசையை மாற்றி அமைக்கும், பாதம் பந்தில் படும்போது இடிபோன்ற‌  ஓசையும், பந்து செல்லும் வேகம் மின்ன லைப்போல மின்னி மறையும். அவரின் அடி உதையால் திண்டாடி தட்டுத்தடுமாறி, அவர் அடிக்கும் பந்தை பிடிக் முடியாமல், கோல் எல்லைக்குள் சாய்ந்து விழுந்த கோல்  காப்பு வீரர்கள் எதிர் அணியில் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஒன்றை  மட்டும் நான்  துணிந்து சொல்வேன். அந்தக்காலத்தில், வேகத்தை அதாவது அவரது கால்,
பந்தில் பட்டு செல்லும் வேகத்தை அளக்கும் கருவிகள இருந்திருக்கு மேயனால் , அவர  தான் அபார வேகப்பந்து உதையாளராக முன்ன ணியில் இருந்திருப்பார்  எனபது எனது திட்டவடமான எண்ணமா கும். அவரின் அடிவேகம் மட்டுமல்ல அவரது விளையாட்டு மதி நுட்பமும் மிக திறமையானது.
        
                                                          நான் போ ட்டிகளில் விளையாடிக் கொண்டிருக்கும் போது, பந்து ஓய்வான சமயம் பார்த்து, Living Legend மணி அண்ணனும், திரு, தங்கக்குமாரன்  அண்ணனும் என்னை தனி யாக அழைத்து, விளையாட்டில் வெற்றி கொள்ளும் நுட்பங்களை யும் வியூகங்களையும் சொல்லித்தருவார்கள்.  அவர்களின் ஆலோச னைப்படி, என்னை தனியான இடம் பார்த்து நிற்கச்சொல்வார்கள்.
பின்னர் எதிர்பாராமல் மிகத்தூரத்தில் இருந்து எனக்கு பந்தை அனு ப்பி, பல கோல்களை இலகுவாக அடிக்கும் வாய்ப்புகளை இந்த இருவருமே எனக்கு தந்துள்ளார்கள்.
                                                 அமரர் திரு தங்கக்குமாரன் அண்ணன் அவர்களை பற்றியும் அவரின் சாதனைகள் திறமைகள் பற்றி நிறைய சொல்லலாம். அவரின் தனிப்பட்ட குணங்களும் அருமையானவை பெயருக்கு ஏற்றால் போல தங்கமான தன்னடக்கம் உள்ள மனிதர். பெருமையடித்துக்கொள்ளதாத திறமைமிக்க ஓர் பின் அணி மாவீரர் உண்மையில் அவர் ஒரு நட்சத்திரம் என்று தான் சொல்லுவேன். என்னுடைய அடுத்த முயற்ச்சியாக எமது விளையாட்டு கழகத்தின் வாழ்நாள் உதைபந்தாட சாதனையாளராக திகழும், Living Legend
திரு. மரியதாஸ் மணி அண்ணன் பற்றியும், அமரரான முன்னாள் விளையாடு வீரர் திரு டாணியல் அன்ரனி, முன்னாள் முன்னணி வீரரும் Cool Mind உள்ள சிந்த வீரரும், பல வெற்றிகளை எமது கழகம் பெறுவதற்கு காரணமாக இருந்தவருமான திரு, அடைக்கலம் இவர் களைப்பறிய வெளியீடாக அடுத்த மடலில் தர ஆசைப்படுகின்றேன். எமது உதைபந்தாட்ட வீரர்களின் சரிதம் தொடர்ந்து வரும், அடுத்த மடலில் சந்திக்கும் வரை,
                        அன்புடன்  பாலசிங்கம் பிரான்ஸிஸ் (ரெட்ண‌சிங்கம்)

lørdag 25. juli 2015

நீதியை நிலைநாட்டுங்கள்


நீதியை நிலைநாட்டுங்கள் அப்பொழுது எல்லாம் நமக்கு கிடைக்கும்!
உறவுகளே! இது இயேசுவின் பொன்மொழியாகும். நமது தமி ழனத்தின் நியாயமான  கோரிக்கைகள், அநியாயமாக நசுக்கப்ப ட்டுள்ளது. அதை நசுக்கும் கைங்காரியத்தில் மகிந்தாவின் அரசு க்கு, சர்வதேசம் முழுவதும், யுத்த தார்மங்களை மீறி, நச்சு வாய்வு பிரயோகித்தாவது விடுதலைப்புலிகளை அழிக்கும் நோக்கில் அப்பாவி பொது மக்களை இலட்சக்கணக்கில் கொ ன்று குவித்ததை  நாம் அறிவோம், மஹிந்தரை எப்படியாவது திருப்திபடுத்தி, இலங்கை அரசாங்கத்தை, தமது மேற்குலக தாராண்மை வாத பொருளாதார ஒழுங்கு முறைக்குள் கொண் டுவந்துவிடாலாம் என்ற கனவில் மேற்குலகு தமிழின‌ அழிவை கவனத்தில் எடுக்கவில்லை. மஹிந்தர் தாம் நினைத்தவைக்கு மாறாக விடாது சீனாவைப்பற்றிகொண்டபடியால், மஹிந்தா வை ஆட்சியில் இருந்து இறக்கி, அவரை பழிவாங்க சர்வதேச விசாரனையை கையில் எடுத்தது. ஆனால் தமது ஆட்டத்திற்கு ஏற்ப ரனில் அரசாங்கம் வாளைந்து கொடுத்தால், சர்வதேச நீதிவிசாரனை புஸ்வானமாகிவிடும். தென் இலங்கையில் எந்த அரசாங்கம் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும், நீதியான நியாய மான தீர்வை ஒருபோதும் தரப்போவதில்லை. ஆட்சி மாற்றம் பேசுவதற்கு வாய்ப்பை, அல்லது குறைந்த பட்ச தீர்வுக்கு வர லாம், ஆனால் முழுமையான விடுதலையை நாம் அனுபவிக்கப் போவதில்லை. தமிழனம் இப்போது வேண்டுவது சுயமான சுய பாதுகாப்போடு கூடிய ஒரு ஆட்சி வடிவம், அது ஒற்றை ஆட்சி க்குள் என்றாலும் பரவாயில்லை  என்ற‌ நிலைக்கு வந்துவிட்டா ர்கள். அதைக்கூட நாம் பெறப்போவதில்லை. எனவே சர்வதேச விசாரனை மூலமே ஒரு தீர்வுக்கு வர மேற்குலக நாடுகள் நிர்ப் பந்திக்கப்படலாம். அதற்கு தமிழர்காளின் ஒருமித்த குரல், செய ல்பாடுகள் மிக மிக முக்கியம். தமிழர் தரப்புக்குள் தற்போது மும்முனைப்போராட்டம் தொடங்கியுள்ளது. இந்த மும்முனை போராட்டத்திற்கு அப்பால் ஒரு சிங்கள அரசியல் கட்சியை வட க்கு கிழக்கு மக்கள் ஆதரிப்பார்கள் என்றால் அவர்கள் எடுக்கும் தீர்மானங்களை நாம் ஏற்பவர்கள் ஆகிவிடுவோம். சூதாட்டத் தில் பாண்டவர்கள் நாடு ஆட்சி உரிமை இழந்த கதையாக, ஒரு சூதாட்டமாக இந்த தேர்தல் அமையப்போகி ன்றது. ஒரு சிங்கள கட்சியை எக்காரணத்திற்காகவும் நாம் ஆதரிக்ககூடாது. அது வும் வீரம் செரிந்த நவாந்துறை மக்களுக்கு அழகல்ல! புலம் பெயர் நாவாய் மக்கள் யாவரும் சர்வதேச விசாரணை அதன் பின் வருகின்ற தீர்வின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். எனவே உங்கள் வாக்குகள் தமிழர் தரப்பையும் சர்வதேச விசாரணையும் பலப்படுத்துவதாக அமையட்டும். நன்றி

fredag 22. mai 2015

ஆசீர்தாசனின் கடிதம்



கனடா

மே18, 2015



நோர்வேயிலிருந்து நாவாந்துறை சென் மேரிஸ் சர்வ தேச அமைப்பின் தலைவர் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு திரு. எ. ஜெயராஜா அவர்களால் 29 – 4 – 2015 திகதியிட்டு எழுதியுள்ள கடிதம் வாசித்தேன்.

2013ம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற 4வது சர்வதேச மகாநாடடில் சமூக சிந்தனை வாதியாக தன்னை அiயாளம் காட்டி தானே தலைவராக இருக்கிறேன் என்று அப்பதவியை வாங்கிக்கொண்டு போன திரு. ஜெயராஜா அவர்களை, கனடா கிளை தீர்மானங்களை சர்வதேச யாப்பு விதிகளுக்கு அமைவாக நடைமுறைப்படுத்துங்கள் என்று தானே கேட்டிருந்தோம். அப்போதெல்லாம் சர்வ தேச யாப்பு விதிகளை மறந்தவராக இருந்தவர் திடீரென என்ன ஞானம் பிறந்து யாப்பு சார்ந்து பேசுகின்றார் என்பது விளங்காத புதிராக மக்களே உங்களுக்கும்

இருக்கிறதா? அப்போது யாப்பு என்பதனை மறந்தவராக இருந்ததற்கு காரணம் சர்வதேச தீர்மானத்திற்கு அமைவாக நீண்ட கால திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக. ஆனால் இப்போது யாப்பு பற்றி பேசுகின்றார் என்றால் யாராவது சமூகத்திற்கு நல்லது செய்திடுவார்கள் இதனால் தங்களின் பதவிகள் பறிபோய், இவர்களின் உண்மை முகம் தெரிந்து விடும் என்பதறகாக, மற்றவர்களால் சமூகத்துக்கான முன்னேறற முயற்சிகள் நடைபெறுவதனை தடுப்பதற்காக “பழைய குறுடி கதவை திறவடி” என்பது போல் யாப்பை கையில் எடுத்துளளார்.



இங்கிலாந்து கிளையினர் சர்வதேச அமைப்பு இயங்காமல் கிடக்கின்றது, இதனால் எம் மக்களுக்கான புரணமைப்பு, அபிவிருத்தி வேலைகள் தாமாகின்றது என்ற நோக்கில் சர்வதேச அமைப்பினை புரணமைக்க கோரி சர்வதேச்தில் அங்கம் வகிக்கின்ற நோர்வே, கனடா, ஜேர்மன், பிரான்ஸ் அனைத்து நாடுகளிடமும் நாடுகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். இதற்கு பதில் கடிதம் எழுதிய ஒரே நாடு கனடா மட்டும் தான். நோர்வேயின் பிரதிநியாக சர்வ தேச தலைவராக சொல்லிக் கொள்ளும் திரு. ஜெயராஜா அவர்களே ஏன் உங்கள் கிளையால் அவர்;களுக்கு பதில் அனுப்பவில்லை? ஏன் சர்வதேச தலைவர் என்று கூறிக்கொண்டிருக்கும் நீங்கள் இது சார்ந்து இங்கிலாந்து கிளையுடன் கதைத்திருக்கலாமே? அப்படி செய்யாமல் அவர்களை சமூக குழப்ப வாதிகளாக காட்ட முயற்சிக்கும், நீங்களே எனது பார்வையில் சமூக குழப்பவாதியாக தெரிகின்றீர்கள்
.



2016ம் ஆண்டு ஜேர்மனியில் சர்வதேச கூட்டம் நடத்தவுள்ளதாக எழுதியுள்ளீர்கள்,

இந்த சர்வதேச மகாநாட்டிற்கு பங்குகொள்ள இருக்கும் நாடுகள் தான் எவை? கனடாவின் நிலையோ விதிகளை மீறா நிர்வாக அமைப்பு அதை மீறும் போது கனடா சுட்டிக்காட்டுவதால் அவர்களை நோர்வே, பிரான்ஸ் நாட்டவர்க்கு பிடிக்காதே. அப்படியென்றால் 5 வது சாவதேச மகாநாடும் சாதனைகளைப் பேசாமல், மீண்டும் முரண்பாடுகளை பேசுவதற்கு தானா? துலைப்பு சூட்டவுள்ளீர்ள். அதிகாரம் இல்லாத, நிர்வாக அலகு புரியாதா? அல்லது புரிந்தும் அதற்கு அமைவாக வேலை செய்ய முடியாத நோர்வே, பிரான்ஸ், ஜேர்மன் பிரதிநிதிகளை நம்பி தங்கள் செலவில் ஜேர்மன் வரும் பிரதிநிதிகள் கனடாவில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.



இங்கிலாந்து கிளையினால் மேற்கொள்ளப்படுகின்;ற சர்வதேச அமைப்பின் புரணமைப்பு சரியானதே. அவர்கள் எல்லோரையம் உள்வாங்கவும், எல்லோர் கருத்துக்களை மதிக்கவும் தயாராக உள்ளனர். ஆனால் நிட்சியமாக அவர்களும் சமூக விரோத எண்ணம் கொண்டவர்களை உள்வாங்கினால் எம்மக்களுக்கு தான் அந்தோ பாவம். மீண்டும்... மீண்டும் ஏமாற்றப்படும் மக்களாக இவர்களே இருப்பார்கள். புலம் பெயர்ந்த நாங்கள் ஏமாற்றிக்கொண்டே இருப்போம். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் பொறுப்பிலுள்ளவர்கள் செய்கின்ற வேலைகளின் வெற்றியில் எல்லோருக்கும் தான் பங்குண்டு. ஒருவரிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு இவரா இதை செய்வது என்ற காழ்ப்புணர்வினை வெளிப்படுத்தாதீங்கோ. அப்படியான நிலையால் தான் கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சர்வதேசத்தால் எதையும் சாதிக்க முடியவில்லை என்பதனையும் மறந்துவிடாதீர்கள். உங்களால் நேர்மையோடு விதிகளுக்குட்பட்டு வேலை செய்வது கஸ்ரமாக இருந்தால் விலகி நின்று செய்யக்கூடியவர்;களுக்கு வழிவிடுங்கள். இதனால் யாரும் தாழ்ந்து போகமாட்டீர்கள்.



திரு. பாக்கியராசா அவர்கள் 2016ம் ஆண்டு சர்வதேச மகாநாட்டுடுடன் தன் பதவிகளிலிரு;து ஒதுங்க போவதாக எழதியள்ளார். உண்மையிலேயே நீங்கள் எம் மக்களுக்கு செய்ய விரும்பிய விடையங்களை பாராட்டாமல் இருக்க முடியாது.

ஆனால் அதற்காக தனிமனித ஆதிக்கத்தை உபயோகிக்க நினைத்து தான் பிழையானது என்பதே என் கருத்தாகும். இதற்கான பல ஆதராரங்கள் என்னிடமுள்ளன. 2010ம் ஆண்டு நான் சர்வதேச செயலாளராக இருந்தபோது நாவாந்துறைக்கு சென்ற போது சட்டத்தரணி ரெமிடியஸ் மூலமாக சட்டரீதியாக கச்சேரியில் இருந்து பெறப்பட்ட பள்ளம் பிட்டி காணியின் உண்மை நிலையினை நிருபித்திருந்தமையினை சர்வதேச நாடுகளுக்கு தெரிவித்தும் அந்தக்காணி எம்முடையது தான் என்று உறுதி கூறி அந்தக் காணி வேண்டிய கொடுக்குமதியாக இருந்த காசும் வில்சனுக்கு கொடுத்து பெருமை சேர்க்க நினைத்த காணியின சுய உண்மை இப்போது உங்களுக்கு முதற்கொண்டு எல்லோருக்கும் தெரிந்தும்,அந்தக் காணி எம்முடையதல்ல என்று நிருபணமானால் அந்தக் காணி வேணடிய முழுக்காசும் திருப்பித்தரப்படும் என்றுகடிதம் எழுதி வீராப்பு காட்டிய வில்சனிடம் இன்று வரை காசு கேட்டு ஒரு கடிதம் எழுதினீங்களா? இது பொதுக்காசெல்லா? ஓ … எனக்கென்ன யாரோ உழைத்து தந்த காசுதானே என்ற போக்கில் விட்டு விட்டீர்காளா? இது எப்படி பொதுச்சேவைக்கான அடையாளமாகும். அதை விடுங்கள்





இந்தக்;; காணி நமக்கு இல்லையென்ற உண்மை தெரிந்தும் இன்று வரை ஏன் நீங்கள் இந்தக காணி சார்ந்து தவறு நடந்து விட்டது என்று பகிரங்கமாக எழுத்து மூலம் அறிவிக்கவில்லை. ஒரு நாளாவது தனிமையில் இருக்கும் போது இந்தக் காணிக்காசு பற்றி யோசித்திருந்தால் அதன் வேதனையை வெளிப்படுத்தியிருப்பீர்கள்

தயவு செய்து ஒரு விடையத்தை மனதில் நிறுத்தி வையுங்கள் நேர்மையான எந்த செயற்பாடும் தோல்வி கண்டதாக வரலாறு இல்லை. அதைத்தான் ரஜனிகாந் தனது படத்தில் இப்படி சொல்லியிருப்பார். “நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான், கெட்டங்களுக்கு கொடுத்தக் கொண்டே இருப்பான் ஆனால் கைவிட்டு விடுவான்”. இது தான் உண்மை.



என் வார்த்தை என்னவென்றால் “ நேர்மை இல்லாமல் செய்கின்ற செயற்பாடுகள் வெற்றி பெறும் தோற்றப்பாட்டை காட்டும், ஆனால் கடைசியில் தோற்று விடும். நேர்மையே வெல்லும்; என்று கூறி எது நம்மால் முடியுமோ அதை செய்வோம் முடியாவிட்டால் குழப்பவாதிகளாக இருப்பதனை விட ஒதுங்கியிருப்பது மிக நன்று.

யார் செய்கிறார்கள் என்று பாhக்காதீர்கள் என்ன செய்யப்படுகறது என்று மட்டும் பாருங்கள் பிடித்திருந்தால் உச்சாகப்படுத்துங்கள். அதுவே நல்லவர்களின் அடையயாளமாகும்.





நன்றி



ஆசீர் அன்ரனி

கனடா