søndag 9. juli 2017

திரு. டாணியல் அன்ரனி மற்றும் திரு. பறுனாந்து அடைக்கலம் இருவரையும் பற்றிய உதைபந்தாட்ட பார்வை!

திரு. டாணியல் அன்ரனி மற்றும் திரு. பறுனாந்து அடைக்கலம் இருவரையும் பற்றிய உதைபந்தாட்ட பார்வை!

                                                             டாணியல் அன்ரனி அவர்கள் யாழ் மத்திய கல்லூரியின் முன்னாள் உதைபந்தாட்டக் கதாநாயகன் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. இவருடைய காலத்தில் தான், யாழ் மத்திய கல்லூரி, யாழ்ப்பாண அரசாங்க பாடசாலை களுக்கிடையிலான உதை பந்தாட்ட போட்டியில் முதன் முத லாக யாழ் மத்திய கல்லூரி சம்பியன் கின்னத்தை தட்டிக்கொ ண்டது. (புனித பரியோவான் கல்லூரி, புனித கென்றி அரசர் கல்லூரி, புனித பத்திரிசியார் கல்லூரி, பருத்திதுறை ஹார்ட்லி கல்லூரிகள் இந்த போட்டியில் பங்கு பற்றுவதில்லை)  இந்த இறுதி போட்டியில், யாழ் மத்திய கல்லூரியும், தெல்லிப்பளை மஹா ஜன கல்லூரியும் இறுதி ஆட்டத்தில் கலந்து கொண்டது.  இந்த ஆட்டத்தில்  யாழ் மத்திய கல்லூரி உதைபந்தாட்ட கதா நாயக னான திரு டாணியல் அன்ரனி அவர்களின் அபார விளை யாட்டி னால் அவரே இரண்டு கோல்களை போட்டு, யாழ் மத்திய கல்லூரி சம்பியன் கிண்ணத்தை தட்டிக்கொண்டது. இந்த விளை யாட்டில் சிறப்பாக விளையாடிய, திரு டாணியல் அன்ரனி அவ ர்களை யாழ் மத்திய கல்லூரி மாணவர்கள் அவரைத்தூக்கி தங்கள் தோளில்களில் சுமந்து, அரை மணி நேரம், அவர்களை தரையில் விடாமல் தங்களின் கால்லூரியின் வெற்றியை கொண்டாடினார்கள். இந்த கண் கொள்ளாக்காட்சியை கண்ட மக்கள் எவ்வளவோ ஆனந்தப்பட்டார்கள். சிறியவானக இருந்த நான் இதனை பார்த்து அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன். இவ ரைப் போல நானும், ஒரு உதைபந்தாட்ட வீரனாக வரவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் உதயமானது

                                                                இதன் பின்பே திரு டாணியல் அன்ரனி அவர்களின் பிரவேசம், நாவாந்துறை சென் மேரிஸ் உதைபந்தா ட்ட கழகத்திற்கு வந்தது. வந்த அவருக்கு அங்கே வரவேற்பும் காத்திருந்தது. அவருடைய சிறுவயது நண்பனும்,  நாவாந்துறை சென் மேரிஸ்  உதைபந்தாட்ட கோஸ்டியின்சிறந்த முன்னணி வீரனும், Cool mind விளையாட்டு வீரனும், சிறந்த பந்து பரிமாற்று வீரனும், Game maker வீரனுமான திரு,பறுணாந்து அடைக்கலம் அவர்களும் சேர்ந்து விளையாடுவதற்கான வாய்ப்பு  இருவ ருக்கும் கிட்டியது.  திரு, டாணியல் அன்ரனி அவர்கள் பந்துடன், ஓடும் போது, மிகவும் அழகாக இருக்கும். ஓடும் போது பந்து அவ ரின் கால்களுடனே பந்து போகும். இரண்டு மூன்று அடிகளுக்கு மேல் போகாது. மேல் வலது, இடது பாதத்தினால்தான் பந்தை தட்டிக்கொண்டு போவார். எதிரணியினர் அவரிடம் இருந்து பந்தை வெற்றிக்கொள்வது என்பது மிக கஸ்டம். போட்டிகளின் போது கோல் அடிக்கும் திறமை ( Finishing) என்பது இவருடன் கூடப் பிறந்தது.   நான் சிறியவனக இருந்த போது,  இவருடைய விளை யாட்டை இரசித்து, அவரிடம் இருந்து நிறைய விடயங்களை கற்றுக்கொண்டிருக்கின்றேன். திரு டாணியல் அன்ரனி அவர்க ளின் கோலடிக்கும் நுட்பம் எனக்கு நன்றாக பிடிக்கும்.

                                                                                                                                                                                                                       நாவாந்துறை உதைபந்தாட்ட வரலாற்றில், மிகவும் நுட்பமாக, Place பண்ணி கோலடிக்கும், வித்தையை முதலில், எங்கள் சென் மேரிஸ் கோஸ்டிக்குள் புகுத்தியவர் திரு டாணியல் அன்ரனி அவர்கள் என்றால் அது மிகையாகது. இவ ரைப்பார்த்துதான் நானும் நுட்பமாக  இடம் பார்த்து ( Placing Ball) அடிக்கும் திறமையைக் கற்றுக் கொண்டேன். இதனை நான் என்றும் மறக்கமாட்டேன். என் தந்தையின் கனவை, என் தந்தை யினாலும், எனது உதைப ந்தாட்ட வழிகாட்டிகளான திரு, மணி அண்ணன் அவர்கள்,  திரு, அன்ரனி தங்கக்குமரன் அவர்கள், திரு ப அடைக்கலம் அவர்கள், திரு, டாணியல் அன்ரனி அவர்கள் இவர்கள் மூலமாக நிறைய கற்றுக்கொண்டவன் என்றதனை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகின்றேன்.

                                        திரு பறுணாந்து அடைக்கலம் இவர் என்னுடைய சிறிய தந்தை, இவரையும் இவருடைய உதைபந்தாட்டத் திற மைகள் பற்றியும், நாவாந்துறை மக்களும் , மற்றும் யாழ் மாவ ட்ட மக்களாலும் நன்கு அறியப்பட்டவர்.  ஒரு காலத்தில் திரு ப.அடைக்கலம் மணியண்ணன் அன்ரனி தங்கக்குமாரன், டாணி யல் அன்ரனி இவர்களைத் தெரியாதவர்கள் யாழ் மாவட்டத்தில் இருக்க முடியாது. இவர்களுடைய காலத்தில் தான்,   சென் மேரிஸ் விளையாட்டு கழகம் சம்பியன் கிண்ணங்களை முதன் முறையாக  வெற்றி கொள்ள தொடங்கியது. இவர்களுடைய காலங்களில் தான்    சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம் முதம் முறையாக வெற்றி கொண்டது . எனது பெரிய தந்தை துரை சிங்கம் அவர்தான் அந்த காலத்தில் விளையாட்டு தலைவராக இருந்தவர். நமது சென் மேரிஸ் கழகத்துக்கு அவர் ஆற்றிய சேவை அளப்பறியது.

                                              இன்னுமொரு திறமை என்னெவென்றால் சென் மேரிஸ் உதைபந்தாட்ட வரலாற்றில், விளையாட்டு தலை வராகவும்,  சிறந்த முன்னணி வீரனாகவும் விளையாடி பல இறு திப்போட்டிகளில் சம்பியன் கிண்ணத்தை தட்டிக்கொண்ட தென்றால் அது மிகையாகாது. அந்த சரித்திர நாயகன் தான் திரு,ப அடைக்கலம் அவர்கள். விளையாடியும், விளையாட்டு தலைவராகவும், இருந்து பல சாதனைகளை புரிந்தவர் என்றல் அதில் ஆச்சரியம் இல்லை. அப்படிப்பட்ட ஒரு மாபெரும் விளை யாட்டு வீரன் தான் திரு ப. அடைக்கலம் அவர்கள். இந்த மாபெ ரும் விளையாடு வீரன், ப.அடைக்கலம் அவர்கள், விளையாடும் போது நிறைய விளையாட்டு நுட்பங்களை பார்த்து கற்றுக்கொ ண்டிருக்கின்றேன்.  விளையாடும் போது இலகுவில் எதிரணி வீரர்கள மீது முட்டமாட்டார். போட்டிகளின் போது எந்த கஸ்ட மான‌ சூழ் நிலையிலும் இலகுவாக பந்தை வெற்றி கொள்வார். போட்டிகளின் போது, பந்து பறிமாற்றம் செய்வதில் திரு அடை க்கலத்தை மிஞ்ச வீரர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.

                                        இவரிடம் உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால் உரிய நேரத்தில் உரிய இடத்துக்கு பந்து கொடுப்பது இவரின் கைவந்த கலை. திரு டாணியல் அன்ரனி, மணியண்ணன் மற்று ம் வீரர்களுக்கு பந்து கொடுத்தால் அது கோலாகத்தான் இரு க்கும். அப்படி தன்னுடன் விளையாடிய வீரர்களுக்கு மிக இல குவாக பந்துகளை கொடுப்பார். எத்தனையோ உதை பந்தாட்ட போட்டிகளின் வெற்றிக்கு இவரின் பந்து பரிமாற்றம்  மிகவும் சிறப்பான காரனமாக இருந்தது. போட்டிகளில் இவருடைய வலது காலின் முன் பாதத்தை வளைத்து எடுத்து, அந்த பந்து எதிரணியிடம் சிக்காமல், தகுந்த நேரத்தில், உரிய இடத்துக்கு அந்த பந்தை கொடுத்து பல போட்டிகளின் வெற்றிக்கு காரன மாக இருந்திருக்கின்றார். பந்தினை தலையால் அடிப்பதில் இவர் கெட்டிக்காரர். கோணர் கிக் அடிக்கும் போது இவரின் தலையில் பந்து பட்டால் அது நிட்ச்சயம் கோலாகத்தான் இரு க்கும். இவரின் உடல் கட்டமைப்பும், தலையின் வடிவமும், இவரின் விளையாட்டுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. குறி பார்த்து,  தலையால் பந்தை கோல் அடிப்பதற்கு,  இவரின் தலை அமைப்பு மிகவும் பொருத்தமாக இருந்தது.இவரின் உடல் கட்ட மைப்பு பந்துகளை சரமாரியாக, உரிய இடங்களுக்கு உரியவர்க ளுக்கு கொடுப்பதற்கு, ஏதுவாக இருந்தது என்பது மிகையாகாது.

                                   இந்த நேர‌த்தில் ஓர் உண்மை சம்பவத்தை நான் உங்களுக்கு சொல்ல ஆசைப்படுகின்றேன். ஏறத்தாள பதி நான்கு வருடங்களுக்கு முன்னர் எனக்கு வயது46  அந்த நேரத்தில் லண்டனில் தமிழ் மக்களின் மிக முன்னணிக்கழகமான WEST 3 உதைபந்தாட்ட கழகத்தில் முக்கிய வீரனாக Mid Field இல் விளையாடிக்கொண்டிருந்தேன். அந்தக்காலத்தில், தற்போது நோர்வே நாட்டில் சிறந்த உதைபந்தாட்ட வீரனாக இருக்கும் எனது மருமகன் சுரேன் ஜெராட், என் தம்பி ரெம்சி இருவரும் என்னுடன் விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில், ஒரு உதைபந்தாட்ட இறுதிப்போட்டி நடந்தது. அந்த போட்டி, West 3 உதைபந்தாட்ட கழகத்திற்கும், வல்வை  Blues விளையாட்டு கழகத்திற்கும் இடையில் நடைபெற்றது.  நாங்கள் விளையாடிய  West3 விளையாட்டுக்கழகம் சிறப்பாக விளையாடி சம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டது. 

                                                          போட்டியின் முடிவில் வெற்றிக்களிப்பில் வெளியே வந்து கொண்டிருந்தோம். அந்த நேரத்தில், சிறிய வயதிலிருந்து என் விளையாட்டை பார்த்து ரசித்து வந்த நண்பர் அவருக்கு என்னைவிட ஆறு வயதுதான் அதிகம். அவருடைய பெயர் சிவநாதன் அவர் அச்சுவேலியைச் சார்ந்தவர்.   சுன்னா கம் ஸ்கந்தவரோதய கல்லூரியில் படித்தவர் நல்ல விளையாட்டு வீரனும் கூட. அவர் என்னைக்கண்டு, என்னிடம் ஒரு கேள்வி கேட்டார் அது என்னவென்றால் " Francis  ஒரு விடயத்தை அவதா னித்தேன். நீங்கள் உதைபந்தாட்ட போட்டிகளில் விளையாடி க்கொண்டிருக்கும் போது, உம்மிடம் பந்து வரும் முன்பே, உம்மி டம் வரும் பந்தை அடுத்ததாக எங்கு அனுப்பவேண்டும் என்ற சரியானஇடத்தை தெரிந்து வைத்து, அதனை உரிய நேரத்தில் உரிய நேரத்திற்கு அனுப்புகின்றீரே இந்த திறமை, எப்படி உம்மி டத்தில் வந்தது, எப்படி இதனை நீர் கற்றுக் கொண்டீர் என நானும்,  வெளியில் உனது விளையா ட்டைப்பார்த்தவர்களும், மிகவும் ஆச்சரியப்பட்டோம். எப்படி உமக்கு இந்த திறமை வந்தது என அவர் என்னிடம் கேட்டார். 

                                              நான் அதற்கு மறுமொழியாக உண்மைதான் இந்த திறமை என்னுடன் சிறுவயதில் இருந்தே வந்தது. ஆனால் எனது சிறிய தந்தைஅடைக்கலம் என்ற ஒரு சிறந்த வீரன் நாவா ந்துறை சென் மேரிஸ் உதைபந்தாட்ட‌ விளையாட்டுக்கழகத் விளையாடி இரு ந்தார். அவரிடம் இருந்தே நான் இந்த விளையா ட்டு நுட்பத்தை கற்றுக்கொண்டேன் என்று கூறினேன்.  திரு, அடைக்கலம் என்பவர் மைதானத்தில் விளையாடும் போது, முன்கூட்டியே மைதானத்தின் விளையாட்டின் போக்கை அவதா னித்து, தன்னிடம் வரும் பந்தை, அடுத்த கட்டமாக முன் கூட்டியே அறிந்து, அதனை மிகச்சரியான இடத்திற்கு செலுத்தும் நுட்ப த்தை, முன் கூட்டியே அறியும் விளையாட்டு ஞானம் கொண்ட வர். அப்படிப்பட்ட மகா கெட்டிக்காரன். அதாவது முன்கூட்டியே மைதானத்தை அவதானித்து, உரிய நேரத்தில் அடுத்த கட்டமாக பந்தை செலுத்தும் ஆற்றல் கொண்டவர். அவரிடம் அதாவது திரு.ப அடைக்கலம் என்ற முன்னாள் சென் மேரிஸ் வீரனிடம் இருந்தே இதனை கற்றுக்கொண்டேன். என பதில் அளித்தேன். 

                                                          அதற்கு திரு, சிவநாதன் இதற்கு மறுமொ ழியாக " Francis இந்த குணம் தானுன்னில் எனக்கு பிடித்த முதல் விடயம். உனக்கு வழிகாட்டிய வீரர்களையும், சிறந்த வீரர்களை யும் நீங்கள் மதிப்பதில்தான் உங்கள் புகழும் உயரும், கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக" என்று பதில் அளித்தார்.  அது எவ்வளவு உண்மை! ஒரு வீரன் நான் என்ற அகம்பாவத்தை மறந்து, நம் முன்னோடிகளான சிறந்த வீரர்களை மதித்து,  நம் சக வீரர்களுக்கும் மதிப்பு கொடுத்து, ஒழுக்கத்துடனும், அடக்க த்துடனும், நாம் எந்த விளையாட்டையும் விளையாடி வந்தால் நிட்ச்சயம், நாம் ஒரு நாள் சிறந்த வீரர்களாக திகழ்வோம் இது உண்மை!
                                                                       திரு டாணியல் அன்ரனி அவர்களின் விளையட்டு விதத்தையும், உருவ அமைப்பையும் உற்று நோக்கி னால், உலக புகழ் பெற்ற பிரேசில் வீரன் Seiko  மனதுக்குள் கொண்டு வரும். திரு டானியல் அன்ரனி அவர்கள் சென் மேரிஸ் விளையாட்டு கழகத்தில் ஓரிரண்டு வருடங்களே சாதனை படை த்தார். தொடர்ந்தும் சாதனை படைக்கமுடியாத படி அவரது காலில் ஏற்பட்ட injury காரனமாக அவர் தொடர்ந்து விளையாட முடியாதபடி விளயாட்டில் இரு]ந்து ஒதுங்க்கியது நாவாய் மக்க ளுக்கும் இரகிகர்களுக்கும் மன வேதனையே! இதே போலவே திரு  ப, அடைக்கலம் அவர்களின் உருவ அமைப்பையும், விளை யாட்டு திறனையும் உற்று நோக்கினால் அவரும் பிரேசில் நாட்டு புகழ் பெற்ற  வீரன் சோக்கிரட்டீஸை மனதுக்குள் கொண்டு வரும், இதை நான் சொல்வதை விட நீங்களே உற்று நோக்கினால் நீங்களே ஒத்துக்கொள்வீர்கள். 

                                              திரு டானியல் அன்ரனி  அவர்கள் கிட்டதட்ட இரண்டு வருடங்கள் விளையாடி இருந்தாலும் இருபது வருடம் விளையாடிய சாதனையை அவர் நிலை நிறூத்தியுள்ளார் என்றே சொல்லலாம்.  அதே போன்று திரு ப. டைக்கலம் அவர்களும் ஒரு சீரான விளையாட்டு வீரனாக இன்றும் ம்க்கள் கருதுகின்றனர். பல ஜாம்பவான்களுடன் நான் விளையாடியிரு ந்தாலும், இந்த இருவருடனும் விளையாடும் சந்தர்ப்பம் எனக்கு கிட்டவில்லையே என்று இன்று நான் கவலை கொள்கின்றேன்

                                                               இவர்களைப்பற்றி நிறைய எழுதிக் 
கொண்டே போகலாம், ஆனல் இந்த சாதனை வீரர்களுக்குப் பின்னால் ஒழுக்கம், கீழ்ப்படிவு, நட்பு போன்ற வற்பண்புகள் இவர்களுக்கு இருந்தபடியால் இந்த வீரர்களால் சாதனை வீரர் களாக மாறினார்கள். என் அனுபவத்தின் பணிவான வேண்டு கோள் எமது வளரும் எதிர்கால சந்ததியினருக்கு கூறிக்கொள்ள ஆசைப்படுவது,  விளையாட்டு மட்டுமல்ல, நமக்கு முக்கியமா னது விளையாடும் காலத்தில்,  ஒழுக்கம், கீழ்படிவு, நட்பு இவை களை கடைப்பிடித்தால், உங்க்ளுக்கு என ஒரு இடத்தை சரித்
திரத்தில் பெற்றுக்கொள்வீர்கள் என்று சொல்லிக்கொண்டு அடுத்து வரும் விளையாட்டு ஆய்வில் உங்களை சந்திக்கி ன்றேன். அதுவரையும் அன்பு வணக்கம் கூறி விடை பெருகின் றேன் வன்றி, வணக்கம் . 
                 
                                    அன்புடன் பாலசிங்க்கம் பிரான்ஸிஸ்

அடுத்துவரும் விளையாட்டு ஆய்வு திரு. மைக்கல்தாஸ் அவர்க ளைப்பற்றிய தாகும். நான் அவருடன் விளையாடிய காலங்களில் நான் சிறுவனாக இருந்த படியால். அவர் பற்றிய மேலதிக தக வல்களை, பிள்ளைகள் சகோதரர்கள். உற்ற வண்பர்களிடம் இரு ந்து எதிர்பார்க்கின்றேன். எனது கைதொ லைபேசிக்கு அனுப்பி வைக்கவும்   0044 7404260413)

)

søndag 2. april 2017

பாப விமோசனம்

பாப விமோசனம்

வையவன்

——————————————-
வையவன்
——————————
சாபத்திற்கு விமோசனம் உண்டு. பாபத்திற்கு விமோசனம் உண்டா பகவானே ?”
மணிநாதம் போல் கேட்ட அந்தக் குரல் தங்கள் தலைவனுடையதோ என்று பிரம்ம லோகத்திற்கு கீழே தாழ்வாக நகர்ந்து சென்ற மேகங்களுக்கு கேட்டன .ஒரு மேகத்திற்குத் துணிச்சல் வந்தது. கூட்டத்தை விட்டு உயர்ந்து ஏறத்தொடங்கியது.
“ஏய், அத்து மீறிப்போய் சாபத்திற்கு ஆளாகி விடாதே” என்று கீழேயிருந்து ஒரு மேகம் எச்சரித்தது. 
ஆம்! மேகநாதனான இந்திரன் தான்.
அவன் பார்வையில் படும் முன் மேலேறிப்போன மேகம் வேகமாகக் கீழிறங்கியது.
“என்ன?”
“நம் தலைவர் தேவேந்திரர் தான் “
 பிரம்மலோகத்தில் ஆழ்ந்த தவத்தில் அமர்ந்திருந்த பகவான் பிரம்மாவின் மனத்தில்  சிறு சலனம்.  இந்திரன் குரலால் ஈர்க்கப்பட்டு நிஷ்டை கலைந்தது. 
மெதுவாக விழிகளைத் திறந்தார். 
எதிரே இந்திரன் நின்றான். 
முகத்தில் கருநிழல். தேவேந்திரனுக்குரிய வசீகரக் களை மறைந்து, சோகமும் சுய இரக்கமும் கலந்த மனத்தொய்வின் ரேகைகள்.
“இப்போது என்ன புதுப்பிரச்சினை இந்திரா?”
தெளிந்த தடாகத்தின் நிர்ச்சலனமான முகத்தோற்றத்தோடு பிரம்மா கேட்டார்.
“எப்போதும் உள்ள பிரச்சினை தான் பகவானே!”
“தங்கள் சிருஷ்டி!”
“எதைச் சொல்கிறாய்?”
“என்னையே சொல்கிறேன்!”
“உனக்கென்ன இப்போது? என் பௌத்திரன் ராவணனைக் கொன்று  இந்திரலோகத்தை ஸ்ரீ ராமன் அவனது கொடும் பிடியிலிருந்து  விடுதலை செய்து விட்டானே!”
“ராஜ்ஜியம் மீண்டுவிட்டது.ராவணன் அழிந்து விட்டான்.ஸ்ரீ ராமனின்
பாத தூளி பட்டு சிலையாகக் கிடந்த அகல்யா சாபவிமோசனம் பெற்று மீண்டும் பழைய உடல் பெற்றுக்கொண்டாள்.ஆனால் நான்.. நான்?” இந்திரன்
தனது உடலெங்கும் பரவியிருந்த கண்விழிக்குறிகளைத்தோள் திருப்பியும், இரு முழங்கைகளை நீட்டியும் நீதி கேட்பது போல் காட்டினான்.
பிரம்ம பகவான் மெதுவாக நெற்றியைத்தேய்த்துக் கொண்டார்.
“விதைத்தாய் .அறுத்தாய்.வினைப்பயனுக்குத் தப்பிக்க முடியாது.அது விதி.”
இந்திரன் மண்டியிட்டு பிரம்மாவின் பாதங்களைத் தொட்டு வணங்கினான். 
“படைத்தவர் தாங்கள்.அதன் பலாபலன்களுக்கு என்னை ஆளாக்கிவிட்டு வினை என்ற விதியை என் பால் சுமத்தினால் நியாயமாகுமா?”
“சிருஷ்டிக்கும்போது உருவாகும் என் மனோதர்மமே வினையை உருவாக்கும் விதியாகிறது. அது நீ சுமந்த ஜென்மஜென்மாந்திரச் செயல்களின் தொகுதி. நீ சிருஷ்டிக்கப்படும் போது அவற்றினால் உருவான என் மனச்சலனமே நீ! ” 
” ஆனால் அகலியாவைச் சிருஷ்டிக்கும்போது தாங்கள் படைக்கும் பொறுப்பிலிருந்து விலகி  தனி மன எழுச்சியுடன் அவளைச் சிருஷ்டித்தீர்கள். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அம்சத்தோடு, தேவர்கள் எல்லாரும் போட்டிபோட்டு ஓடித்தேடிய பேரழகியாக!”
“உண்மைதான் “
பிரம்மா ஒப்புக்கொண்டார்.
“அந்த அழகு ஒரு தூண்டிலாகி எல்லாரையும் ஈர்த்தது போல் என்னை ஈர்த்தது. என்னை நிலை மறக்கச் செய்தது. அது என் குற்றமல்ல. அவளது அழகின் குற்றம். அதை அவ்வளவு அக்கறையும் ஆர்வமும் காட்டி உருவாக்கிய தங்கள் குற்றம்.”
“எங்கே போயிற்று உன் தன்னடக்கம்? கட்டுப்பாடு?”
“என்னைத் தாங்கள் தவ மேன்மையுள்ள துறவியாக சிருஷ்டிக்கவில்லை”
“ஆத்மாவின் யாத்திரையில் ஒவ்வொரு பிறவியும் ஒரு சத்திரம். இந்திரனாக நீ பெற்ற அனுபவ வினைத்தொகுதி அடுத்த சத்தியத்திற்கு போகும்போது உதவும்”
“நான் பாபவிமோசனம் கேட்க வந்தேன். தாங்கள் ஞானோபதேசம் செய்கிறீர்கள்.”
“நான் சிருஷ்டிகர்த்தா.சிருஷ்டிகளின் வினைக்குப் பொறுப்பேற்பவன் அல்ல.”
” அப்போது என் கதி?”
” இந்திராணியிடம் மன்னிப்புக் கேட்டாயா?”
“கேட்டுவிட்டேன்.”
“என்ன சொன்னாள் ?”
“தங்களைப் போய்த் தரிசித்து வரச்சொன்னாள் ” 
“சரி.உன்னைப் பாபம் செய்யத் தூண்டியவர் யாரோ,சாபத்திற்கு ஆளாக்கியவர் யாரோ அவர்களிடம் போய் மன்றாடு. கெஞ்சு.கதறி அழு.”
“இது தான் தங்களது இறுதி முடிவா? “
“அல்ல.நியதியின் முடிவு”
இந்திரன் மீண்டும் பிரம்மாவின் தாள் தொட்டுப் பணிந்தான். அவனது அங்கலாய்ப்பிற்கு அவர் சூட்சுமமாக மனமிரங்கி வழி காட்டி விட்டார். 
‘போ. முயற்சி செய்’ 
செய்ய வேண்டிய இடத்தையும் சுட்டிக்காட்டிவிட்டார். இந்திரன் போனபின்பு கோடானுகோடி உயிர்கள் தாங்கள் செய்த வினையின் விளைவுக்குத் தன்னைச் சபிக்கிற சாபக்கனல் மீண்டும் ஒரு முறை அவரைத் தீண்ட வந்தது.தன்னைச் சுற்றித் தவக்குளுமையால் அவர் போட்டிருந்த அமிர்த வளையம் அதை அகற்றியது.
அகல்யாவின் பேரழகை அவர் சிருஷ்டிக்கவில்லை.
ஜென்ம ஜென்மாந்திரங்களாக அவள் தனக்குத் தானே சேமித்த சௌந்தரியக் கற்பனையின் விளைவு அது  .
‘இந்திரன்?பாவம்!மீன் சிக்கிக் கொள்வதற்குத் தூண்டில்பொறுப்பாக முடியாது! போகவேண்டிய இடத்திற்குப் போய்ப்புரிந்துகொள்வான்.’
சிந்தனையிலிருந்து விடுபட்டார்.ஒரு பரிவு நெஞ்சை வருடியது.இரண்டு கண்களை வைத்துக்கொண்டு ஒரு அகல்யாவுக்காகப் பட்டபாடே போதாதா? ஆயிரம் கண்களில் எத்தனைப் பெண்ணழகு தட்டுப்பட்டு என்ன பாடு படுத்துமோ! 
                                             2 
 
ந்திரனது வாகனம் ஐராவதம் பூமியை நோக்கி இறங்கியது.
அகல்யாவும் கௌதமரும் சதானந்தனுடன் சரயூவின் கரையில் ஆசிரமம் அமைத்துத் தங்கியிருப்பதாகக் கேள்விப்பட்டான். தண்டகாரண்யம் வெறிச்சோடிப்போயிருக்கும் .
 அயோத்திக்கு ஏன் வந்தார்கள்?
ஓ! ஸ்ரீ ராமனின் பட்டாபிஷேகம். அயோத்தி மட்டுமல்ல; சகல ரிஷி குலங்களும் கண்களில் கசியும் கண்ணீரோடு,நெஞ்சில் நிறைந்த வேதனையோடு எதிர்பார்த்துக் காத்திருந்த வைபவம்.
பாத தூளி பட்டு விமோசனம் பெற்ற அகல்யா வராமல் இருப்பாளா? 
அயோத்தியின் அக்கரையில் யார் கண்ணும் படாத இடத்தில் மரங்கள் அடர்ந்த ஒரு சோலையில் ஐராவதத்தை நிறுத்திவிட்டு  இந்திரன் கால் நடையாக மானிட வடிவெடுத்து ஓடத்துறைக்கு வந்தான்.மானிட வடிவெடுத்தபோது எல்லா மானிட நியதிக்கும் கட்டுப்படுவது முறை. அந்த வடிவில் தானே அகல்யாவைச் சந்திக்கப்போனான்! 
‘எவ்வளவு காலமாயிற்று சரயூ நதிக்கரைக்கு வந்து! ராம ஜனனத்தின் போதா?விஸ்வாமித்திரர் .ராம லட்சுமணர்களை தவம் காக்க கானகத்திற்கு அழைத்துச் சென்ற போதா?’
சரியாக நினைவு வரவில்லை. 
ஓடக்கரையில் ஓடக்காரன் நின்றிருந்தான்.
“அக்கரைக்கு.. அயோத்திக்கு..”   
“அயோத்தி என்றால் எந்த இடம்? எந்தக் கரை?”
ஓடக்காரன் வெருட்டிக் கேட்டான்.
” கௌதம மகரிஷி ஆசிரமம்”
“அப்படித் தெளிவாகச் சொல்லவேண்டும்.சரயூவின் கரை நெடியது.இரண்டு பணம் ”  
“என்னிடம் பணம் இல்லை.அதற்குப் பதில்..”என்று இந்திரன் சுண்டுவிரல் மோதிரத்தைக் கழற்றப்போனான்.
தேவேந்திரன் ஏறிஅமர்ந்தும் படகில் பளு இல்லை. தேவனாகையால் காற்றைப் போல் லேசாக இருந்தான் வெற்றுப்படகு போல துடுப்பு போடுவது  இலேசாக இருந்தது. இந்திரனை ஏற இறங்கப்பார்த்த ஓடக்காரன் மனசில் ஒரு மரியாதை தோன்றியது  
“வேண்டாம். வைத்துக்கொள்ளுங்கள்.திரும்பி வரும்போது வாங்கி கொள்கிறேன்”
“ஸ்ரீ ராமச்சந்திரபிரபுவின் பட்டாபிஷேகம் பார்த்தீர்களா?” ஓடக்காரனை இந்திரன் விசாரித்தான். 
“ஓ! கண்கொள்ளாக் காட்சி. இந்தப் பிறவி செய்த புண்ணியம். இதோ இப்போது தான் ஸ்ரீ ராமச்சந்திரபிரபு எங்கள் தலைவர் குகனை வழியனுப்பப் போய்க்கொண்டிருக்கிறார்.”
நல்லது. அகல்யாவிடம் விமோசனம் கேட்கப்போகும்போது ராமன் இல்லாதிருப்பது மேல்.
ஆசிரமக்கரையோரம் ஓடம் நின்றது. இந்திரன் ஓடக்காரனுக்கு நன்றி கூறிவிட்டு இறங்கி ஆசிரம எல்லையில் நுழைந்தான்.
இந்திரன் ஆசிரமத்திற்குள் பிரவேசித்தபோது கௌதமர் அங்கு இல்லை. ஒரு விசேஷ அதிசயமாக சீதா நின்றிருந்தாள் . 
“நீங்களா ?”அகல்யாவின் குரலில் அச்சமில்லை.அதட்டிக் கேட்கும் கம்பீரம்.
இந்திரனின் பார்வை முதலில் அன்று இரவு சுவைத்த அந்த அதரங்களில் ஊர்ந்து, உயிரைக் கவர்ந்து இழுத்த விழிகளுக்குத் தாவியது. அகல்யாவின் எழில் முற்றிலும் குன்றிவிடவில்லை. ஆனால் அச்சமூட்டும் ஒரு தீச்சுடராக ஜொலித்தது. 
“எதற்கு வந்தீர்கள்?”
இந்திரன் தலை குனிந்து நின்றான்.
 எதிரில் அகல்யா . 
இடப்புறம் சீதா. 
மிக அருகில் யாரோ  வரும் மரக்காலடிகளின் ஓசை கேட்டது. இந்திரன் திரும்பிப்பார்த்தான்.
கௌதமர். [தொடரும்]
————————————————————————–
வலப்புறத்தில் வந்து  நின்றார்.
சற்றுத்தொலைவில் சதானந்தன் சரயூ நதியின் அருகில் கண்பார்வை படாத இடத்தில் நின்றான்.
ஏதோ நிகழ இருக்கிறது. இந்திரன் விசாரிக்கப் படப்போகிறானா? தாய் அகல்யாவா?அந்தக் குற்றவிசாரணைக் கீழ்மையின் கொடுக்குகள் தன்னைத் தீண்டித் தாய்மையின் முறையீடு தனக்குள் எழுந்து  தான் செய்து வரும் தவத்திற்கு இடையூறு நேருமோ என்று  நிற்பது போலிருந்தது அது.
யுகயுகங்களுக்கும் இனி தலைநிமிர்வு இல்லை என்று  கூனிவளைந்த இந்திரனின் முதுகெலும்பு ஒப்புதல் சாட்சியம் அளித்தது 
அகல்யா நிமிர்ந்து நூறு நூறு அக்கினிப்பிரவேசங்களைக் கடந்து வந்த கற்பின் கனல் சுடர் வீச நின்றாள் .
அவளது கண்கள் இந்திரனின் குனிந்த தலையை,தொங்கிய தோளை , அவளைத் தீண்டிய அந்தக் கரங்களை, இப்போது துடிக்கும் விரல்களை அவனது உடல் முழுவதும் கௌதம சாபம் வரைந்த ஆயிரம் யோனிக் குறிகளை பச்சாதாபத்தோடு பார்த்தன.தேவராஜனாய் இருந்தும், மண்ணாகப்போகிற  மனிதனுக்குரிய பலவீனம் அவனைப் பற்றிய அந்த இழுக்கிற்கு ஆளாக்கிய இரக்கம் அவளில் மிதந்தது. தான் பொறுப்பில்லை. தனது பேரழகு. காண்கிற எல்லோரையும் அது வசீகரிக்கின்ற காந்தம். இவை தான் காரணம் என்ற விடுபடல் அந்த இரக்கத்தில் வெளிப்பட்டது.
சீதா அகல்யாவின்  முகத்தில் நிலவிய தேஜசைப் பார்த்தாள் அதனால்   ஈர்க்கப்பட்டாள் . அவளையே கண்கொட்டாமல் பார்த்தாள் 
கௌதமரோ  சாபம் இடுமளவு கொதித்த சினம் சாம்பல்   மேடாகி,  அதை மௌனமாகக் கடந்து வரும் சாம்பசிவம் போன்று உணர்ச்சியற்று நின்றார்.இச்சை. மோகம். அழகு தருகின்ற லாகிரியின் அவஸ்தை எல்லாம் கடந்து அவற்றைக்காலில் சுற்றிய பாசியை, லேசாய்  சூலத்தினால் அகற்றி எறியும்  சாந்தம் நிலவியது. 
பட்டாபிஷேகக் கொண்டாட்டங்கள், ஆரவாரங்கள் எல்லாம் தீர்ந்து மழை விட்டுவிட்ட நிம்மதியில், பதிமூன்று  வருஷ கானக அமைதிக்கு மனம் ஏங்கியது.இராமனோடு தனிமை நாடி சரயூ நதிக்கரைக்கு வந்திருந்தாள்.
கரையோரம் கௌதமர் ஆசிரமம் கண்ணுக்குப் பட இருவரும் சென்றபோது அங்கே மீண்டும் இந்திரன்.சேவலாய்க்கூவி பொய்ப்பொழுதை விடியவைத்து, வெளியேறிய கௌதமர் திரும்பியதும் பூனையாய், பதுங்கி ஓடி இப்போது ருசிகண்ட நாயாக வந்திருக்கிறானோ!
எதிரில் இடுப்பின் மேல் கைவைத்தபடி அகல்யா.தூரத்திலிருந்து  சற்றும் பதறாமல் வரும்  கௌதமர்.
சீதா முதலில் திகைத்தாள்.ஏதோ அசம்பாவிதமோ?.அங்கே தான் நிற்கவேண்டுமா? காண விரும்பாமல்   விலகி நடக்க முயன்றாள் 
“நில்லுங்கள்.”என்று தடுத்தாள் அகல்யா.
சீதா நின்றாள்.
“இந்திரன் ஏன் வந்தார்?” சீதா அகல்யாவைக் கேட்டாள்.பதிதன் ஆயினும் ஆண். தேவேந்திரன்.மரியாதை குறைக்கக்கூடாது.
‘அவனையே கேளுங்கள்!’ சொல் இல்லை. முகம் திரும்பி இந்திரனைச் சுட்டும் சைகை.
“தேவேந்திரா!” சீதை நீதிபதி போல் இன்றி கருணை காட்டும் கனிவோடு கேட்டாள்.
சற்றே நிமிர்ந்து சீதையைப்  பார்த்த இந்திரன் அதில் நிலவிய மேன்மையைப் பார்த்து சட்டென்று குனிந்து அவளது பாதங்களைத் தொடப்போனான் .
” நான் மனுஷி. நீங்கள் தேவேந்திரர்.”
அருகில் வந்த கௌதமர் மார்பில் கைகட்டி நின்றார்.
எழுந்துகொண்டு இந்திரன் சொன்னான்.” இல்லை.அன்னையே!எந்தப் பாத தூசுக்கு விமோசன சக்தி உள்ளதோ அவரது பத்தினி தாங்கள்.”
“இங்கே ஏன் மீண்டும் வந்தீர்கள்? “
“பாப விமோசனம் கேட்க வந்தேன்.”
“அகல்யா தேவியிடமா?”
“ஆம், அன்னையே!”
“சாபம் கொடுத்தவர் இவர். இவர் இல்லாத சமயத்தில் இங்கு வந்தால்  இவ்வளவும் நடந்த பின் வந்தால் ..அதற்கு என்ன பொருள்?”  கௌதமரைக் காட்டி சீதா கேட்டாள். 
“சாபத்திற்கு அகல்யா தேவியை ஆளாக்கிய பாவத்திலிருந்து விமோசனம் வேண்ட  வந்தேன் “
அகல்யாவின் மனசில் சாபவிமோசனம் கிடைத்தபின்பும் பாபக்கறையை  போக விடாத  எத்தனை பார்வைகள் ..அருவருப்பு..ஏளனம்.. இந்திரனை நினைத்துத் தனக்குள் தோன்றும் சபலம் மறைத்த பரிவுகள்.
“இவள் தான் அகல்யா..” தன்னைச் சுட்டிக் காட்டி அடையாளம் சொல்லும் எத்தனை ஆண்கள்  . எத்தனை பெண்கள். ரிஷிபத்தினிகள் முதல் இளவரசிகள் வரை. சாபங்களுக்கு அஞ்சி நரிப்பார்வை பார்க்கிற கோழைகள்
“சாபம் கொடுத்தது என் பலவீனம்.” என்றார் கௌதமர்.அவர் குரல் கம்மியிருந்தது.
சீதா அவரை வியப்போடு பார்த்தார். எதை முன்னிட்டுச் சொல்கிறார்?என்னென்னமோ எண்ணங்கள்  உள்ளத்தில் ஓடினாலும் இதுவாயிருக்குமோ அதுவாயிருக்குமோ என்ற சிந்தனை ஓட்டம் மேலும் அவளைக் கிளறியது.
அக்கினிப் பிரவேசத்திற்கு முந்திய சீதை அல்ல அவள். இப்போது மிகவும் மாறியிருந்தாள்.
“என்ன சொல்கிறீர்கள்  மகரிஷி?”
திடீரென்று ஒரு சலசலப்பு கேட்டது. ஒரு சிறுத்தைப் புலியால் விரட்டப் பட்டு வந்த மான் ஒன்று மனிதத் சூழலைக் கண்டு சற்றே 
மருண்டு ஆசிரம வேலி தாண்டிக் குதித்து திறந்திருந்த குடிசை கதவுக்குள் பாய்ந்து நுழைந்தது.  
“ஐயோ பாவம்” என்று மானைப்பார்த்து  அனுதாபத்தை வாய்விட்டுச் சொன்னாள் சீதை.
“கொஞ்சம் பொறுங்கள்.உள்ளே யாகத்திற்கு உரிய பாலும் தயிரும் வைத்திருக்கிறேன்.மான் உருட்டி விடப்போகிறது. ” என்று அனுமதி கேட்டுக்கொண்டு அகல்யா குடிசையை நோக்கிப் போனாள்.
சீதா அவள் போவதைப்பார்த்துவிட்டு கௌதமர் பக்கம் பார்வையைத் திருப்பினாள்.
அதில் கௌதமரின் கருத்தறிந்து தேவை உணர்ந்து  அகல்யா பொறுப்புள்ள பத்தினியாக பணியாற்றி வருவதன் அங்கீகாரம் அந்தப்பார்வையில் வெளிப்பட்டது .
” அகல்யா இல்லையேல் என் தபஸ் இல்லை.” அதற்குப் பதில் போல மெதுவாக தாடியை உருவிக்கொண்டு கௌதமர் சொன்னார்.
அந்த இருவர் எதிரில் இன்னும் தான் நீசனாக நிற்பதன் சிறுமை இந்திரனின் தலையை  மீண்டும் ஒரு முறை குனிய வைத்தது. 
“சீதா!” கௌதமர் அவளை மெல்லிய குரலில் அழைத்தார். “ராமனைப் பார்க்க வந்த குகன் சரயூவின் இக்கரையில் காத்திருக்கிறான். அங்கே ராமனோடும் குகனோடும் அனுமனும் இருக்கிறான்.அவனும் உன்னைக் காண வேண்டி காத்திருக்கிறான்.நாம் போவோமா?”
“உள்ளே போன அகல்யா வந்து விடட்டுமே!”
“இல்லை. நாம் போவோம். இந்திரன் அவளிடம் பாபமன்னிப்புக் கேட்க வந்திருக்கிறான்.மன்னிப்புக் கேட்பவர், கொடுப்பவர்  இருவருக்குமே வேறு சாட்சிகள் இருப்பது தர்மசங்கடம்”
ஒருமுறை இந்திரனையும், கதவுக்கு அப்பாலிருந்த அகல்யாவையும் பார்த்துவிட்டு கௌதமரின் கம்பீரமான பெருந்தன்மைக்குக் கட்டுப்பட்டு சீதா அவரைப் பின்தொடர்ந்தாள்.
அந்த இருவரை ஒன்றாகப் பார்த்ததற்கு சபித்தவர், இப்போது இருவரையும் தனியே இருக்க விட்டு வரும் கண்ணியம் அவள் நெஞ்சைத் தொடாமலில்லை. 
சற்றுதூரம் வாய்ப்பேச்சின்றி நடந்தவர் ஒரு சலசலப்பு கேட்டு நின்றார்.ஆசிரம எல்லையில் ஒரு கனி மரத்தில் இருந்து ஒரு பழம் விழவும்,அதைக் கவ்விக்கொண்டு ஓட வந்து இரு கீரிகள் ஒன்றை ஒன்று துரத்திவர  , மரத்திலிருந்து பாய்ந்து குதித்தோடி  வந்த ஒரு அணில் அதைக் கவ்வி ஓடியதை, வெறித்துப் பார்த்தபடிக்கு நிற்கிற காட்சியைக் கண்டு கௌதமர் அனுதாபத்தோடு உச்சுக் கொட்டினார்.
” இப்போது நான் அகல்யாவை உணர்ந்து கொண்டது போல் அப்போது உணர்ந்திருக்கவில்லை. எனக்குள்ளும் பொறுத்துக் கொள்ள வேண்டிய  அளவு போதிய தபோபலம் வளர்ந்திருக்கவில்லை.”
சீதா அவரது கண்களில் நிலவிய சாந்தத்தை மனசிற்குள் வாங்கிக் கொண்டாள்.
“சபிக்கும் அளவுக்குஅப்போது நான் பலவீனன்.. ஒரு ரிஷிபத்தினி  சாபங்களுக்கு அப்பாற்பட்டவள் . சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவள்.என் அறிவீனம் அவள் சபலங்களுக்கும் அப்பாற்பட்டவளாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தது என்ன அகந்தை!. விளைவு பல ஆண்டுகள் கல்லின் கடினத்தை அவள் சுமந்தது.இந்திரனுக்கு இட்ட சாபத்தால் அவனைக் காண்பவர்கள் எல்லாரையும்  அகல்யாவின் வீழ்ச்சியை நினைக்கச் செய்து விட்டேன்”
  எதிரில் ஒரு பெரிய பாறை தென்பட்டது.
“அம்மா சீதா! அங்கு போய் சற்று அமர்ந்து பேசுவோமா?” என்று கேட்டார்.
“ஆகட்டும் மகரிஷி!”
இருவரும் எதிரெதிரே பார்த்தபடி அமர்ந்தனர் 
“என் மனசில் வளர்ந்திருக்கும் புற்றிலிருந்து நான் இன்று வெளிவரவேண்டும் அம்மா சீதா!”
சீதா புன்னகையோடு அவரை ஒரு குழந்தையைப் பார்ப்பது போல் பார்த்தாள்.
” அகல்யா பிரம்மாவின் மகள். அவரது கற்பனையை எல்லாம் குழைத்து இனி இவளுக்கு மேல் ஒன்று இருக்கக் கூடாது என்ற சங்கல்பத்தோடு உருவாக்கிய பேரழகி.தேவாதி தேவர்களையெல்லாம் ஓட்டப்பந்தயம் ஓடவைத்துப் பார்த்தபின் தேர்ந்தெடுத்த முனிவனான எனக்கு பத்தினியாக்கப் பட்டவள் முனிவனுக்கு மனைவியாக இருப்பது மட்டுமே போதும் என்று இயற்கையை நிர்ப்பந்திக்க முடியாது. அதுவும் தேவர்களுக்கே தலைவனான இந்திரன் தன்னை இச்சிக்கிறான் என்ற கர்வத்திலிருந்து விடுபட்டு நிற்கவும்  அகல்யா கற்பிக்கப் படவில்லை”
 ஆண் பெண் என்ற பாலின பேதம் கடந்த ஞானியாக எதிர்பாராவிதமாக கௌதமர் வெளிப்படுவதைக் கண்டு சீதா அந்த ஞானசாந்நித்தியத்தில் நிற்கிற அனுபவம் பெற்றாள்
“சீதா! உன் வைராக்கியம் பூஜிக்கத்தகுந்தது.அகல்யாவின் பலவீனம் மன்னிக்கத் தகுந்தது.”
“மகரிஷி ..தாங்கள்..?” சீதா வாசகத்தை முடிக்காமல் இழுத்தாள்.
“இந்திரன் மன்னிக்கப்படவேண்டியவன்.என்ன செய்கிறோம் என்பதன் கனம் அறியாமல் ஒரு கணத்தில் தவறிழைத்து விட்டான்.பாபம் அவனைச் சாராது .”
“பின் யாரைச் சாரும்?”
“அகல்யாவின் சிருஷ்டியை.அதை உருவாக்கிய  சிருஷ்டிகர்த்தாவை.”
ஒரு கணம் கண் மூடி யோசித்து வானத்தைப்பார்த்தார். பிறகு எதிரிலிருந்த சீதையைப்  பார்த்துவிட்டுத் தொடர்ந்தார்.
“இல்லை. தெளிவாக யோசித்தால் பிரம்ம தேவர் கூட இதற்குப் பொறுப்பாகமாட்டார். ஒரு பேரழகை தனக்குள் இச்சித்ததால் பிரம்மாவால் அனுக்கிரகிக்கப்பட்ட  வடிவம் அது. நாம் நம்மையே சிருஷ்டித்துக் கொள்கிறோம். அகல்யா அப்படி இச்சித்துப்பெற்ற அனுபவத்தால் தான்  அழகின் பிரமையில் இருந்து இப்போது விடுபட்டிருக்கிறாள்.”
சீதைக்கு ராவணன் நினைவு வந்தது! எவ்வளவு பெரிய சக்திமான்!எப்பேர்ப்பட்ட வீரன்!கைலயங்கிரியைத் தன் கைகளால் அசைத்துப் பார்த்தவன். எப்படித் தன் அழகில் வீழ்ந்து அழியாத அவப்பெயருக்கு ஆளானான்? அவன் பாவங்களை இராமபாணம் துருவித் துளைத்தெடுத்து விட்டது. அவன் மன்னிக்கப்பட்டிருப்பானா?
இருக்காது என்ற எண்ணம் தோன்றியது. அவன் சிந்தையைக் குலைத்த அழகிற்குத் தான் காரணம் என்று நினைவு வந்தது. நடந்தது என்ன? விதி எழுதிய ஒரு பெரிய சோக நாடகமா? திரை விழுந்த பின் உணர்ச்சிகளுக்கு வேலையில்லை.
சீதை ராவணனை மன்னித்தாள்.
 அவன் பாவங்களை எல்லாம் மன்னித்தாள்.
பரிபூரணமான சாந்தி அவளுள் பிரவேசித்தது 
இந்த சாந்தியை அகல்யாவும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினாள்.
வேறொன்றும் கேளாது “போவோம் மகரிஷி!”என்றாள். 
இருவரும் சரயூவின் கரை நோக்கி மெதுவாக நடக்கத் தொடங்கினர்.

fredag 31. mars 2017

kanathasan 2

 இத்’தழுவல்’ காரியங்களைப்பற்றி கவிஞர் கண்ணாதாசன் கூறிய விளக்கமிது.
 “சமஸ்கிருத மொழியில் ஓதப்படும் கல்யாண மந்திரத்தில் ‘நான் மனமாக இருந்து நினைப்பேன்… நீ வாக்காக இருந்து பேசு’ என்று ஒரு வரி வரும். அது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?. ஆனால் அதையே நான் “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்று பாடல்வரிகளாக எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்று அடைந்ததல்லவா?” என்று கேட்டிருந்தான். அவன் சொன்னது முற்றிலும் உண்மை.
 “காயமே இது பொய்யடா/ வெறும் காற்றடித்த பையடா/ மாயனாராம் மண்ணு குயவன் செய்த/ மண்ணு பாண்டம் ஓடடா” என்று சித்தர்கள் பாடிய ஞானப் பாட்டையும்,
 “கத்தன் பிரிந்திடில் செத்த சவமாச்சு/ காணாது காணாது கண்டதெல்லாம் போச்சு/ எத்தனைப்பேர் நின்று கூக்குரலிட்டாலும்/ எட்டாமல் போய்விடும் கட்டையல்லோ?” – என்ற குணங்குடி மஸ்தானின் ஞானத் தத்துவத்தை எல்லாரும் புரிகின்ற மொழியில்
 “பார்த்தா பசுமரம் படுத்து விட்டா நெடுமரம்
சேர்த்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டால் கரியும் மிஞ்சுமா?”
 என்று பாடியிருப்பான்.
 பிற அறிஞர்களின் சாத்திரங்களை நம் மொழியில் பெயர்க்கும் போது நம் மொழிக்கு மற்ற மொழியினரும் ரசிகர்களாகிறார்கள் என்பது மட்டுமின்றி, உலகளவில் ஒரு அங்கீகாரம் கிடக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
 கணியன் பூங்குன்றனார் என்ற ஒரு பழம்பெருங்கவிஞன். ஒரே ஒரு பாடல்தான் எழுதினான். அதுவும் வெறும் பதினான்கே வரிகள். “யாதும் ஊரே யாவருங் கேளிர்’ ஒரு வரி வாசகம் உலகத்திலுள்ள அத்தனை மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. எழுதியவனுக்கு மாத்திரமல்ல தமிழன்னைக்கே சூட்டப்பட்ட மலர்க்கிரீடம் அது.
 “அம்மா என்றழைக்காத உயிரில்லையே” என்ற பாட்டில் கவியரசர் எழுதிய
“மழை கூட ஒரு நாளில் தேனாகலாம் – சிறு
மணல் கூட ஒரு நாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவை யாவும் நீயாகுமா?
அம்மா என்றழைக்கின்ற சேயாகுமா?”
என்ற இந்த வரிகளைச் சாகித்திய அகாதெமி அமைப்பு கிட்டத்தட்ட பதினாறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டது நம்மை பெருமை கொள்ள வைக்கிறது.
 “பால்மணக்கும் பருவத்திலே உன்னைப்போல் நானிருந்தேன்
பட்டாடைத் தொட்டிலிலே சிட்டுபோல் படுத்திருந்தேன்
அந்நாளை நினைக்கையிலே என்வயது மாறுதடா
உன்னுடன் ஆடிவர உள்ளமே தாவுதடா”
 என்ற வரிகள் வோர்ட்ஸ்வொர்த் சொல்வானே “Reflections in Tranquility” என்று; அதைத்தான் நினவு படுத்துகிறது. ‘ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!’ என்று நடந்து முடிந்த கதைகளை அசைப் போடும் மனநிலை அது.
“தனி ஒரு மனிதனின் வாழ்கையில் நடக்கும் எந்த ஒரு சம்பவத்திற்கும் பொருத்தமாக என்னுடைய பாடல் ஒன்று அங்கே ஒலிக்கும்” என்று கண்ணதாசன் சொன்னது முழுக்க முழுக்க உண்மை. அவன் தொடாத பாடமே கிடையாது. சுட்டிக் காட்டாத நிகழ்வுகளே கிடையாது.
 சர்ரியலிஸக் கவிதைகளின் முன்னோடிகளில் ஒருவர் பிரான்ஸ் நாட்டு அப்போலினைர். அவரை பிரான்ஸ் தேசத்தின் ‘கடைசிக் கவிஞன்’ என்று அழைப்பார்கள். (அதாவது அவருக்குப்பின் பிரான்ஸில் வேறு கவிஞர்களே இல்லை என்ற அர்த்தத்தில்)
 “And my heart is as heavy as
A Damascan lady’s backside”
 என்று எழுதுவான். இறுதி வரியில் ஒரு அதிர்ச்சி வைத்தியம் இருக்கும். வரவு எட்டணா/ செலவு பத்தணா/ அதிகம் ரெண்டனா/ என்ற பாடலில் இந்த மூன்று வரிகளில் தென்பாடத ஒரு அதிர்ச்சி யுக்தி “கடைசியில் துந்தனா” என்ற இறுதி வரியில் காணப்படும். இந்த ‘Shock Treatment’ பக்குவப்பட்ட கவிஞனால் மட்டுமே கொடுக்க முடியும்.
 “தோள் கண்டார் தோளே கண்டார்;
தொடுகழல் கமலமென்ன
தாள் கண்டார் தாளே கண்டார்
தடக்கை கண்டாரும் அஃதே”
(கம்பராமாயணம், பாலகாண்டம்: உலாவியற் படலம்:19)
 என்ற கம்பனின் வரிகளை “தோள் கண்டேன் தோளே கண்டேன்/ தோளில் இரு கிளிகள் கண்டேன்/ வாள் கண்டேன் வாளே கண்டேன்/ வட்டமிடும் விழிகள் கண்டேன் – என சுவைபட எளிய நடையில் வடித்திருப்பான் கண்ணதாசன்.
 “உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி” என்ற பாரதியின் வரியை “வியாட்நாம் வீடு” படத்தில் கவிஞன் கையாண்டபோதும் கூட அதை காப்பியென்று யாரும் சொல்லவில்லை. மாறாக அவ்வரிகள் பாரதிக்கு மேலும் புகழை ஈட்டித் தந்தது.
 “கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?” என்று ராமச்சந்திரக் கவிராயரின் பாடல் கண்ணதாசனுக்கு ஒரு தாக்கதை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
“அத்தான் என் அத்தான் – அவர்
என்னைத்தான்… எப்படி சொல்வேனடி – அவர்
கையைத்தான் கொண்டு மெல்லத்தான் – வந்து
கண்ணைத்தான்…. எப்படி சொல்வேனடி?”
 காதலன் பூனைப்பாதம் வைத்து பதுசாய் காதலியின் கண்ணைப் பொத்தும் நிகழ்வை ராமச்சந்திர கவிராயனின் தத்துவார்த்த சிந்தனையோடு முடிச்சு போடுவதற்கு ஒரு தனித்திறன் வேண்டும். அது கண்ணதாசனிடம் மிதமிஞ்சி இருந்தது.
 “மீன் செத்தா கருவாடு; நீ செத்தா கருவாடு; இது கண்ணதாசன் சொன்னதுங்க” என்றும் “கண்ணதாசன், காளிதாசன், கவிதை நீ நெருங்கி வா” என்றும் மறைந்த அந்த மகாகவியின் மேல் பாராட்டு மழை பொழிந்து விட்டு வேறொரு புறம் “கண்ணதாசன் காரைக்குடி, பேரைச் சொல்லி ஊத்திக்குடி” என்று இன்றைய சினிமா பாடலாசிரியர்கள் எழுதுவது உண்மையிலேயே அவரை பாராட்டுகிறார்களா அல்லது அவரை கிண்டல் செய்கிறார்களா என்று புரிந்துக் கொள்ள இயலவில்லை.
 “He came. He saw, He conquer and He has gone” என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். “அவன் வந்தான், வென்றான், சென்றான்” என்று சொல்வதை விட வந்தான், வென்றான், நின்றான் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நம் நெஞ்சில் நின்ற வண்ணம்தானிருப்பான்.

இன்னிசையுடன் கூடிய கண்ணதாசனின் இப்பாடல்வரிகளை,  இரவின் மடியில், இரண்டு கண்களையும் இறுக்கமாக மூடியபடி   இலயித்து  ரசிக்கும்போதெல்லாம், அதில் வரும் ஒவ்வொரு வரிகளுக்கும், காட்சிகள்  என்  மனக்கணினி திரை முன், தனித்தனியே Windows தானகவே திறக்கும்.
இப்பாடலின் அத்தனை வார்த்தைகளுக்கும் அருஞ்சொற்பொருள், அத்தனை வரிகளுக்கும் பதவுரை; பொருளுரை; விளக்கவுரை எழுத வேண்டுமெனில் எனக்கு நேரமும் போதாது, அதை வாசிக்க உங்களுக்கு பொறுமையும் கிடையாது.
அதில் காணப்படும் இரண்டே இரண்டு வரிகளுக்கு மட்டும் சிறிய விளக்கத்தை தர விழைகிறேன். (சிறிய விளக்கமே இம்புட்டா என்றெல்லாம் கேட்கப்படாது. )
“தெய்வம் என்றால் அது தெய்வம் – அது
சிலை என்றால் வெறும் சிலை தான்”
இதுதான் இப்பதிவுக்காக விளக்கம் கூற முற்பட நான் எடுத்துக் கொண்ட  இருவரிகள்.
வெறும் எட்டாம் வகுப்பு வரை படித்த கவிஞர் கண்ணதாசன் எப்படி திருமூலர் கருத்துக்கள் முதல் ஷேக்ஸ்பியர், ஷெல்லி கருத்துக்கள் வரை  இரண்டிரண்டு வரிகளில், உயிரைக் குடிக்கும் வீரியம் கொண்ட சயனைடு வேதிப்பொருளை சிறிய குப்பிக்குள் அடைத்து வைப்பதுபோல், வீரியமிக்க கருத்துக்களை Auto Compress செய்து எப்படி Word Format-ல் அடக்கி வைத்தார் என்பது மில்லியன் தீனார் கேள்வி (ஏன்.?. டாலரில் மட்டும்தான் கணக்கு சொல்ல வேண்டுமா என்ன?)
இந்தக் கருத்தை கண்ணதாசன் திருமூலரிடமிருந்து காப்பிரைட் இன்றி “அலேக்காக அபேஸ்” பண்ணியிருக்கக்கூடும் என்று நினைக்கிறேன் அல்லது Great Minds think Alike” என்ற கோட்பாட்டின்படியும்  இருக்கக்கூடும். திருமூலர் சொன்ன மூலக்கருத்தை Enlarge செய்வதற்கு ஒரு குட்டிக்கதை இங்கு தேவைப்படுகிறது.
சுரேஷும்,  ரமேஷூம் ஒரு கலைப்பொருள் கண்காட்சிக்கு செல்கிறார்கள். அங்கு பிரமாண்டமான அளவில் தேக்கு மரத்தாலான ராட்சத யானை ஒன்று செதுக்கப்பட்டு காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
“வாவ்..! சூப்பர்.. என்னமா ‘ டால்’ அடிக்குது பாத்தியா இந்த தேக்கு மரம்” என்கிறான் ரமேஷ்.
“ஓ மை காட்! அட்டகாசம்..! எவ்வளவு நேர்த்தியாக செய்திருக்கிறார்கள் இந்த யானையை?. அஜீத் படம் மாதிரி அமர்க்களமாக இருக்கிறது” என்கிறான் சுரேஷ்.
காணும் காட்சி ஒன்றே. காண்பவர்களின் மனநிலை வெவ்வேறாக இருக்கிறது
இதைத்தான் திருமூலர் சொல்கிறார்
“மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை” என்று.
கண்ணதாசன் எழுதிய மற்றொரு பாடலும் கிட்டத்தட்ட இதே உட்பொருளை  கருவாகக் கொண்டதுதான் அண்ணன் தம்பிகளான 2G [அதாவது சிவாஜியும், பாலாஜியும்]  பெண்பார்க்கச் செல்கிறார்கள். ஒருவனுடைய கண்களுக்கு அப்பெண் பொன்னாகத் தெரிகிறாள். இன்னொருவன் அவள் முகத்தைக் காண்கிறான் . அது அவனுக்கு முகமாகத் தெரியவில்லை; பூவாகத் தெரிகிறது. இது என்ன உடான்ஸ் என்று கேட்கக்கூடாது. இதற்குப் பெயர்தான் Concentration.
//பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா?
என்னென்று நான் சொல்ல வேண்டுமா?
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏனென்று நான் சொல்லலாகுமா?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா?//
இதுதான் அந்த அர்த்தம் பொதிந்த அட்டகாச வரிகள்
“கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!” என்ற பழமொழியை நாம் அடிக்கடி கையாள்கிறோம். அதன் உண்மையான உட்பொருள் வேறு. நாம் பயன்படுத்தும் சூழ்நிலை வேறு.
“கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,
நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்”
என்ற சொல்வழக்குத்தான் நாளடைவில் [GUN என்ற உயிர்கொல்லி ஆயுத எழுத்துக்களை அகற்றிவிட்டு], நாயகனை நாய் ஆக்கி விட்டது..
கோயிலுக்குச் செல்லும் ஒருவன் கல்லால் ஆன நாயகனை (கடவுளை) வெறும் கல் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் அது வெறும் கல்தான். அதேசமயம் அதனை கல் என்ற எண்ணத்தை அகற்றிவிட்டு கடவுளாகப் பார்த்தால் அது கடவுள்தான் என்று பொருள். இதைத்தான் ILLUSIONS என்று மேஜிக் செய்பவர்கள் கூறுகிறார்கள்.   நான் பள்ளியில் படிக்கையில் ஒரு மேஜிக் வித்தை செய்பவர்  எவர்சில்வர் டம்ளரில் கரண்டியால் கிண்கிணி என்று அடித்து சப்தம் உண்டாக்கி விட்டு அந்த     அதிர்வலை அடங்குவதற்குமுன் என் காதில் வைத்து “ரகுபதி ராகவ ராஜாராம்” என்ற பாடல் உன் காதில் கேட்கிறதா என்றார். என்ன ஆச்சரியம்? ஆம் கேட்டது.!!!
இதைத்தான் கண்ணதாசன் தனக்கே உரிய பாணியில் பாமரனும் புரியும் வண்ணம்
“தெய்வம் என்றால் அது தெய்வம் – அது
சிலை என்றால் வெறும் சிலை தான்”
என்று பாடினான்.
“Concentration is the root of all the higher abilities in man” என்கிறார் மறைந்த உலகப் புகழ்ப்பெற்ற தற்காப்புக்கலை வீரர் புரூஸ்லீ.
“The secret of concentration is to shut down the other windows.”    என்கிறார் இன்னொரு யோகி
“மனதை ஒரு முகப்படுத்த கற்றுக் கொள்பவன் மகான் ஆவான்” என்கிறார் சுவாமி விவேகானந்தர் .
ஐவேளை தினந்தோறும் தொழுகும்  ஒரு முஸ்லீமுக்கு தொழுகையை விட மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சி வேறு எதுவும் இருக்க முடியாது என்பது என் தாழ்மையான எண்ணம்.
வில்வித்தையில் நிபுணத்துவம் பெற்ற அர்ச்சுனன் பறவையை குறி பார்த்தபோது, அவனுக்கு அந்த பறவை அமர்ந்திருந்த மரமோ, மரத்தின் இலைகளோ, அல்லது அதற்கு பின்னால் தென்பட்ட வானமோ, அதனை சுற்றியிருந்த காட்சிகள் எதுவுமே அவன் கண்ணில் படவில்லை, ஏன் அந்த பறவைகூட அவன் கண்ணுக்கு முழுமையாகத் தெரியவில்லை, அவன் கண்ணுக்கு தென்பட்டது அப்பறவையின் கழுத்து மட்டுமே.
சீடன் ஒருவன் தன் குருவிடம் சென்று ஒரு கேள்வி கேட்கின்றான்.
“சுவாமி! நீங்கள் எங்கும் பிரம்மம் உள்ளது. அதைவிடுத்து வேறெதுவும் இங்கு இல்லை என்று உறுதியாக சொல்கின்றீர்கள், ஆனால் என் கண்களுக்கோ உலகம்தான் தெரிகின்றதே தவிர பிரம்மம் தெரியவில்லையே. ஏன் சுவாமி?”  எனக் கேட்கின்றான்
.
குருஜீ ஒரு மெல்லிய புன்னகையோடு பதில் கூறுகிறார்.
“ஒருவன் நகை வாங்க பொற்கொல்லர் இல்லத்திற்குச் செல்கிறான். அவரது அறையில் அவர் உருவாக்கிய வளையல், காப்பு, மோதிரம், தோடு கம்மல், பிள்ளையார் உருவம், போன்ற ஆபரணங்கள்   செய்யப்பட்டு அழகாக காட்சி தருகின்றன. தங்கமும், அதன் தரமும், அதன் எடையும் மட்டுமே அந்த ஆசாரிக்கு முக்கியம் அதேபோன்று போல பிரம்மத்தைதவிர வேறு எதுவும் எனக்கு முக்கியம் இல்லை.    நம்மிருவருக்குமே   காட்சி ஒன்றுதான், ஆனால் பார்க்கும் பார்வைதான் வெவ்வேறு” என்று அவனுக்கு புரிய வைத்தார்.
குருஜி முதல் புரூஸ்லீ வரை அத்தனைப்பேருடைய கருத்துக்களையும் கண்ணதாசன்
“தெய்வம் என்றால் அது தெய்வம் – அது
சிலையென்றால் வெறும் சிலைதான்”
என இரண்டே வரிகளில் ஒரு மேஜிக்காரர் வரவழைக்கும் ILLUSION    போன்று  காட்சிகளை கொண்டுவந்து நமக்கு எளிதில் புரிய வைத்தார்.

That Is Knnadasan.
கவலை இல்லாத மனிதன்”  படத்தில் வரும் கண்ணதாசனின் இவ்வரிகள் எனக்குப் பிடித்த வரிகள்.
“அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வதுமின்பம்
தன்னையறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்”
இன்பம் இரண்டு வகைப்படும். ஒன்று சிற்றின்பம். மற்றொன்று பேரின்பம். எதுவெல்லாம் இன்பம்? என எத்தனையோ கவிஞர்கள் பாடியிருக்கிறார்கள்.
“இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி – நீ
சொல்லும் சொல்லில் மழலைக்கிளி – என்
நெஞ்சில் ஆடும் பருவக்கொடி”

இது கவிஞர் புலமைப் பித்தனின் வரிகள்.  இன்பத்திற்கு மறுபெயர் பெண்மை என்பது இப்பாடலில் காணும் நாம் விளங்கும் பொருள்.  எது இன்பம்? என்பதற்கு ஒவ்வொரு கவிஞர்களும் ஒவ்வோர் விதமான விளக்கங்களை அளித்துள்ளனர்.
ஜில்லென்ற காற்று இன்பம். மழைச்சாரலில் நனைவது இன்பம். உறக்கம் சிலருக்கு இன்பம். சுவையாக உண்பது சிலருக்கு  இன்பம். எனக்கோ குளித்துவிட்டு காட்டன் பட்ஸால் காது குடைவது இன்பம்.
நான்கே வரிகளில் இன்பத்தின் சாராம்சங்களை எது இன்பம்? எது பேரின்பம்? என்று பாமர சினிமா ரசிகனுக்கு புரிய வைப்பதில் கண்ணதாசன் கில்லாடி.
“அன்னையின் கையில் ஆடுவதின்பம்…”
‘குவா குவா’ என்று அழுதுக்கொண்டிருக்கும் ஒரு பச்சிளங் குழந்தையானது அன்னையவள் தூளியிலிட்டு தாலாட்டுப் பாடுகையில் தன்னை மறந்து துயில் கொண்டு விடுகிறது. அந்தக் குழந்தைக்கு அன்னையின் கையில் தொட்டிலில் ஆடுவது இன்பம். இது குழந்தைப் பருவம்.
“கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்….”
அரும்பு மீசை முளைத்து இளைஞனானதும் அவனது கவனம் கன்னியின்பால் நகர்கிறது. தன் மனதுக்கு பிடித்த காதலிடன் பேசுவதில் இன்பம் காண்கிறான். அவளிடம் பழகுவதில் இன்பம் காண்கிறான். அவளோடு பொழுதைக் கழிப்பதில் இன்பம் காண்கிறான். அவளது கையில் சாய்வதில் இன்பம் காண்கிறான் இது காளையர் பருவம்.
“தன்னையறிந்தால் உண்மையில் இன்பம்…”
வாலிப வயதை எட்டி, படித்துப் பட்டம் பெற்றபின் வேலையிலும் அமர்ந்தாகி விட்டது. இப்போது வாழ்க்கையில் உயர வேண்டும். முன்னேற வேண்டும், என்ன செய்வது? அதற்கு  அவன் தன்னையறிய வேண்டும், தன்னுடைய தகுதி என்ன? தன்னுடைய திறமை என்ன? தன்னுடைய அசுரபலம் என்ன? இதனையறிந்து அதற்கான உத்வேகத்துடன், அதற்கான முயற்சியுடன் முழுவேகத்துடன் செயல்பட்டால் அவன் வாழ்க்கையில் முன்னேறி விடலாம். இதே கருத்தை மற்றொரு பாடலில் கவிஞர் கண்ணதாசன்
“உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் – தலை
வணங்காமல் நீ வாழலாம்”
இது நடுத்தர வயது.
“தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்……”
எதுவெல்லாம் இன்பம் என்று சொல்லியாகி விட்டது. இப்போது இதில் எது பேரின்பம் என்று கவிஞர் சொல்லியாக வேண்டும். 
ஐந்தறிவைக்கொண்டு புலனின்பங்களை அனுபவிப்பது சிற்றின்பம். ஆறாம் அறிவைக்கொண்டு , தன்னையறிந்து தன்னலம் துறந்து செயலாற்றுவதுதான் பேரின்பம்.

சம்பாதித்து வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை எட்டியபின்பு பிறர்நலம் காண உழைக்க வேண்டும். தன்னலம் மறந்து , சுயநலம் மறந்து சமுதாயப் பணிக்காக தன் நேரத்தை செலவழிக்க வேண்டும். EGO என்ற கர்வத்தை விட்டொழிக்க வேண்டும். அதுவே பேரின்பம் என்கிறார் கண்ணதாசன்.

வாழ்க்கையின் தத்துவத்தை நான்கே வரிகளில், மனிதனின் வாழ்க்கைப் பருவத்தை நான்காகப் பிரித்து, இன்பம் என்றால் என்ன? உண்மையில் எது இன்பம்? எது சிற்றின்பம்? எது பேரின்பம்? என்ற வாழ்க்கை நெறிகளை, வாழ்க்கையில் அடங்கியிருக்கும் மாபெரும் சூட்சமத்தை எளிமையான மொழியில் பாமரனும் அறியும் வண்ணம் புரியவைக்கும் திறமை கவிஞர் கண்ணதாசனிடத்தில்தான் இருக்கிறது.  அவருக்கு எனது சல்யூட்.

நீண்ட இடைவெளிக்குப்பின் இந்த ‘இடைவேளை’ கட்டுரையை  எழுதுகிறேன். இடையிடையே ‘திண்ணை’யில் எழுத நினத்தாலும், எழுத முடியாமல் போனதற்கு இடுப்பொடிந்து போகும் இடையறாத வேலைப்பளுதான் காரணம்.
திருவள்ளுவர் சமணர் என்று ஒரு சாராரும், நோ.. நோ.. அவர்  வைணவர் என்று வேறொரு சாராரும் சொந்தம் கொண்டாடிய சோதனைக் காலத்தில், திருவள்ளுவர் முஸ்லீம் என்பதற்கு போதிய ஆதாரம் இருக்கிறது என்று ஒரு பெரிய ‘ஹிரோஷிமா குண்டை’ தூக்கிப் போட்டார் என் நண்பரொருவர்.
வள்ளுவர் வரைந்த முதற் பாடலிலேயே “அல்லாகு” என்று வருவதினால் அவர் ‘ஆதிபகவன்’ என்று அடித்துச்சொல்வது அல்லாவைத்தான் என்ற அட்டகாசமான பாயிண்டை அடுக்கி வைத்தார் அவர்.
“அகர முதல எழுத்தெல்லாம்
ஆதிபகவன் முதற்றே வுலகு”
என்ற குறளில் வரும் முதலெழுத்து “அ”, நடு எழுத்து “ல்லா”, கடைசி எழுத்து “கு”  இவற்றைக் கூட்டிக் கழித்து, பெருக்கிப் பார்த்தால் “அல்லாகு” என்று வருகிறதாம். வாவ்….! எழுதியவருக்கே தெரியாத எதிர்பாரா விஷயங்களை ஏடாகூடமாக கண்டுபிடித்து தருவதற்காகவே ஒரு கூட்டம் கங்கணம் கட்டிக்கொண்டு அலையத்தான் செய்கிறது.
என்ன பார்வை இந்த பார்வை
இடை மெலிந்தாள் இந்த பாவை
என்ற வரிகளை கண்ணாதாசன் எழுத, “ஆஹா ஓஹோ.. என்னமாய் ஒரு அற்புதமான சிந்தனை?” என்று கண்ணதாசனுக்கு முன்னாலேயே ஒருவர் மேடையில் ஐஸ்கட்டியை ‘டன்’ கணக்கில் தலையில் வைத்தாராம்.
“பார்வை” என்ற வார்த்தையில் இடையில் உள்ள “ர்” என்ற எழுத்து மெலிந்து காணாமல் போனதும் அது “பாவை” என்று ஆகிவிடுகிறது. இதனைத்தான் கண்ணதாசன் சூசகமாகச் சொல்கிறார் என்று சொல்ல, “இப்படி ஒரு மேட்டர் இந்த பாட்டில் இருப்பது இப்பத்தான் எனக்கே தெரிகிறது” என்று அப்பாவித்தனமாக சொன்னாராம் பிழைக்கத் தெரியாத நம் கவிஞர்.
இந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ கவிஞர்கள் இடையைப் பற்றி இடையறாது பாடிவிட்டு போய்விட்டார்கள். இவர்களுக்கிடையே ஒரு இடைத்தேர்தல் வைத்தால் அதில் வெற்றி வாகைச் சூடுவது கண்ணதாசன்தான்.
இளமை துள்ளும் பாடல்களில் ‘இடை’ வருணனையை இடையிடையே இடைச்செருகலாக எப்படியாவது நுழைத்து விடுவார் இவர். இடை ஆராய்ச்சியில் கண்ணதாசன் ‘முனைவர்’ பட்டம் பெற்றவர் என்று சொல்ல வேண்டும்.
“நாடகம் ஆடும் இடையழகு” என்றும்  “சின்னக் கொடியிடை என்னைப் பிடியென ஆடும் அழகென்ன” என்றும் விதவிதமான கற்பனையைக் கலந்து விருந்து படைப்பார். சொல்லவரும் கருத்துக்களில் ஒரு நளினமிருக்கும்; ஆபாசம் இருக்காது.
விஷயங்களை விரசம் கலக்காமல்; சூசகமாக; சர்க்கரை கலந்த சூரணமாகத் (Sugar Coated pills.. என்பார்களே) தருவதில் கண்ணதாசன் கில்லாடி மட்டுமல்ல பலே.. பலே.. கில்லாடி!!.
‘எடைக்கு எடை’ நாணயம் கொடுப்பதுபோல் இதற்காகவே இவருக்கு ‘இடைக்கு இடை’ ஏதாவது சன்மானம் கொடுத்திருக்கலாம்.
‘தடியிடை’ எந்தக் கவிஞனுக்கும் பிடிக்காது போலும். கவிஞன் ‘மெல்லிடை’ என்றான். ‘கொடியிடை’ என்று சொல்லிப் பார்த்தான். திருப்தி இல்லை. இன்னும் சற்று மெலிய வைத்து  ‘நூலிடை’ என்றான். ஊஹூம் அவன் எதிர்பார்த்த ‘எஃபெக்ட்’ கிடைக்கவில்லை. கடைசியில் “இடையே இல்லை” என்று சொல்லி விமோசனம் அடைந்துக் கொண்டான்.
நடையா இது நடையா – ஒரு
நாடகமன்றோ நடக்குது
இடையா? இது இடையா? – அது
இல்லாததுபோல் இருக்குது.
என்ற கண்ணதாசனின் பாடல் கலக்கலான உதாரணம். (இடையே இல்லாவிட்டால் பி.சி.சர்க்கார் மேஜிக் -ஷோவில் காட்டுவதுபோல் உடல் வேறு, கால் வேறாக அல்லவா போய்விடும் என்றெல்லாம் கேள்விகள் கேட்டு என்னைப் படுத்தக்கூடாது)
மனுஷன், இடியுடன்-மின்னலை இணைத்து பாடியிருக்கிறாரோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் இடையுடன்-மின்னலை இணைத்து நிறைய பாடியிருக்கிறார்.
“இல்லை என்று சொல்வதுந்தன்
இடையல்லவா – மின்னல்
இடையல்லவா”
என்ற வரிகளை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். மின்னல் வெட்டினால் கண்கள் கூசும் அல்லவா? அப்படியொரு மின்சார வெட்டாம், அந்த இடையில்.
இடையின் மீது கரிசனம் முற்றிப் போய் கவிஞருக்கு சில சமயம் ‘கிலி’ தொற்றிக் கொள்ளும். இடையை இவ்வளவு மெல்லியதாக எழுதி விட்டோமே, ஒடிந்து விட்டால் என்னவாகும் என்ற பயம் ஏற்பட்டுவிடும். அடுத்த வரியில் அவரே அதற்கு ‘சமாளிபிகேஷன்’ செய்து ‘சால்ஜாப்பும்’ கூறிவிடுவார்.

“ஒடிவது போல் இடை இருக்கும்” என்ற கேள்வி பிறக்க “இருக்கட்டுமே!” என்ற பதிலும் தொடர்ந்து வரும். நாயகி நடந்து போனாலே கவிஞருக்கு வெலவெலக்கத் தொடங்கி விடும்.
“மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்!
முல்லை மலர் பாதம் நோகும்-உந்தன்
சின்ன இடை வளைந்தாடும்
வண்ணச் சிங்காரம் குலைந்து விடும்!”
என்ற தன் பயத்தை வெளிக்காட்டி விடுவார். நாயகி ‘ஸ்லோமோஷனில்’ நடந்து போவதுதான் கவிஞருக்கு பிடிக்கும் போலும். வேகமாக நடந்தால் ஆபத்து என்று அபாயச் சங்கு முழங்குகிறார்.
இந்த ‘இடை’ சமாச்சாரங்களைத் தொடங்கி வைத்தது கம்பனா அல்லது அவனுக்கு முந்திய கொம்பனா என்று சரியாக சொல்லத் தெரியவில்லை.
“இழைந்த நூலினை மணிக்குடஞ்
சுமக்கின்ற தென்னக்
குழைந்த நுண்ணிடைக் குவியளா
வனமுலைக் கொம்பே”
என்கிறார் கம்பர். “மணிக்குடங்களை தாங்க இயலாமல் வளையும் கொடிபோல உன் இடை இருக்கிறது என்று திருவாய் மலர்ந்தருள்கிறார்.
‘இடை’ என்று கேட்டுக் கேட்டு புளித்துப் போய் விட்டது, நாம் சற்று வித்தியாமாக எழுதிப் பார்க்கலாம் என்று முயன்று வம்பில் மாட்டிக் கொண்ட கவிஞர்களும் உண்டு.
“குறுக்குச் சிறுத்தவளே” என்றும் ”ஒல்லி ஒல்லி இடுப்பே/ ஒட்டியாணம் எதுக்கு?/ ஒத்த விரல் மோதிரம்/ போதுமடி உனக்கு…” என்றெல்லாம் மாற்று வார்த்தைகளைப் போட்டு மகிழ்ந்துக் கொண்டார்கள்.
நயாகராவுக்கு, வயாகரா என்று எதுகை மோனை போட்டதைப் போல் “இடுப்பு” என்று முடியும் வரிக்கு “அடுப்பு” என்று “ரைமிங் வோர்ட்ஸ்” போட்ட பாடலாசிரியர்களை நினைத்தாலே எனக்கு கடுப்பு வருகிறது.
வைரமுத்து “இஞ்சி இடுப்பழகி” என்று ஏடாகூடமாக எழுதப் போய் தமிழ்மக்கள் அனைவருமே தொல்காப்பியர்களாக மாறி “இஞ்சி இடுப்பழகி”க்கு அருஞ்சொற்பொருள் தேட ஆரம்பித்து விட்டார்கள். 
இஞ்சியைக் கையிலேந்தி அவரவர் தங்கள் ஆராய்ச்சியின் முடிவை அறிவித்தார்கள். “இஞ்சியானது உருவத்தில்  பெருத்தும் இடையில் சிறுத்தும் இருப்பதனால் இஞ்சி எடுப்பழகி” என்று கூறியிருக்கக் கூடும் என்று சில பிரகஸ்பதிகள் பிரகடனம் செய்தார்கள்.
இஞ்சியை தினந்தோறும் கரைத்துக் குடித்தால் இடையானது உடுக்கையைப் போன்று குறுகி விடும் என்று சித்தவைத்திய சிகாமணிகளாய் வேறுசிலர் வியாக்யானம் தந்தார்கள்.
வில்லங்கம் பிடித்த ஒரு பத்திரிக்கை விவகாரமான ஒரு கண்டுபிடிப்பை வெளியிட்டு தாய்க்குலத்தின் ஒட்டு மொத்த கோபத்துக்கும் ஆளாகும் அளவுக்கு அந்த தமிழினக் கவிஞரை தாறுமாறாக மாட்டி விட்டது.
ரேஸில் ஓடுகின்ற குதிரை மிடுக்காக காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக அதன் வாலுக்கடியில் இஞ்சியைச் செருகி விடுவார்களாம். அதனால் ஏற்படும் எரிச்சலைத் தாங்க முடியாத குதிரைகள் தாங்கித் தாங்கி நடக்குமாம். இது கேட்டு மாதர் சங்கத்தார் எப்படி கொதித்துப் போயிருப்பார்கள் என்பதை நீங்கள் கற்பனைச் செய்துக் கொள்ளலாம்.
கண்ணதாசனிடமிருந்து வெளிப்பட்ட ‘மூடுமந்திர’ நளின பாஷை மற்ற கவிஞர்களிடத்தில் இல்லாமல் போனது வருத்தத்திற்குரியது.
“எப்படி? எப்படி? சமைஞ்சது எப்படி?” மற்றும் “கட்டிப்புடி கட்டிபுடிடா” போன்ற பட்டவர்த்தனமான பாஷையில் வாலிபக் கவிஞர் வாலி கையாண்ட வார்த்தைகள் நம்மை முகஞ்சுளிக்க வைக்கிறது.
“மடி மேலே அழகு சிலை ,
இதழ் மேலே கனியின் சுவை,
இடை மேலே பருவ சுமை,
இது தானே இனிய கதை!”
என்ற கவிஞர் வாலியின் வரிகளில் விரசம் மேலோங்கி இருப்பதை நாம் காண முடிகிறது. தணிக்கைக் குழுவின் கத்தரிக்கோலுக்கும் ஆளாகியது.
“மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடா
சற்றே நிமிர்ந்தேன்
தலைசுற்றிப் போனேன்
அடடா அவனே வள்ளலடா”
என்ற வைரமுத்து பாடல் வரிகள் “பச்சை” என்று குற்றம் சொல்ல முடியாதென்றாலும் ஒரு விதமான “மைல்ட் ஷாக்” ஏற்படுத்தும் ரகம்தான்.
“அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா?”
என்ற கண்ணதாசனின் பாடலில் “சின்ன இடை இருந்தும் என்னை என் தலைவன் வெறுத்து விட்டானா?” என்று தலைவி நம்மைப் பார்த்து கேட்கையில் நமக்கே அந்த பாத்திரத்தின்மேல் இரு இனம் புரியாத இரக்கம் ஏற்படுகிறது.
“யாருக்கு மாப்பிள்ளை யாரோ..
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ?”
என்று தலைவி பாடுவாள். கைப்பிடிக்க போகின்ற கணவன் எப்படி இருப்பானோ என்ற கவலை அவளிடத்திலிருந்து ஒவ்வொன்றாய் வெளிப்படும்.
“ஊரறிய மாலையிடுவாரோ..
இல்லை ஓடி விட எண்ணி விடுவாரோ..
சீர் வரிசை தேடி வருவாரோ..
இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ..”
என்ற வரிகளில் “உள்ளத்தழகை பார்க்காமல், உடலழகை மட்டும் மோகிக்கும் கணவன் வாய்த்து விட்டால் நம் நிலைமை என்னாகுமோ? ஏதாகுமோ?”  என்று நாயகி கவலையுறுகையில் நமக்கும் அவள் மீது பச்சாதாபம் ஏற்படுகிறது,
படிப்போர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் இதுபோன்ற வார்த்தைகள்தான் ஒரு படைப்பாளிக்கு கிடைக்கக் கூடிய முழுமையான வெற்றி.
கண்ணதாசனின் மற்றொரு ‘மாஸ்டர் பீஸ்’ “அன்புள்ள மன்னவனே!” என்று தொடங்கும் காதற் கடித பாடல்.  
“இளையகன்னியின் இடை மெலிந்ததோ
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ?”
என்ற சந்தேகத்தை நாயகன் கிளப்ப
“இடை மெலிந்தது இயற்கை அல்லவா
நடை தளர்ந்தது நாணம் அல்லவா”
என்ற நெத்தியடி பதில் நாயகியிடமிருந்து வரும். எவ்வளவு நாசுக்கான ‘இடை’ வருணனை?
எகிப்து போன்ற நாடுகளில் பிரபலமாக இருக்கும் ‘இடை நடன’த்திற்கு ஆங்கிலப் பெயரோ “பெல்லி டான்ஸ்”. தமிழில் மொழி பெயர்க்க வேண்டுமெனில் “தொந்தி நடனம்” என்றோ “தொப்பை நடனம்” என்றோ கண்றாவியாக மொழிபெயர்க்க வேண்டிவரும்.
முத்தமிழ் என்று போற்றப்படும் நம் மொழிக்கு வல்லினத்திலிருந்தும், மெல்லினத்திலிருந்தும், இடையினத்திலிருந்தும் ஒவ்வொரு எழுத்தினை தேர்ந்தெடுத்து “தமிழ்” என்ற இனிமையான பெயரைச் சூட்டிய நம் மூதாதையர்களுக்கு ஒரு “ஓ” போட வேண்டும்.
அம்சமாக (‘மடிப்பு ஹம்ஸா’ அல்ல) பெயர் வைப்பதில் தமிழனுக்கு மிஞ்சி யாருமே இல்லை எனலாம். மனித உடம்பில் இடைப்பட்ட பகுதிக்கு “இடை” என்ற எத்துணைப் பொருத்தமானப் பெயர் !!!!