søndag 12. februar 2017

சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்…


சமாதான முயற்சிகளில்.. அயர்லாந்து விடுதலை ராணுவத்தின் ( IRA) முன்னாள் தலைவர் மார்ட்டின் மக்னஸ்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 31) -சிவலிங்கம்

 மாவிலாறு சம்பவங்கள் நோர்வேயின் சமாதான முயற்சிகளை தோல்வி நிலைக்குத் தள்ளியபோதும் நோர்வே தரப்பினர்  தொடர்ந்தும் அதில் ஈடுபட்டது தனக்கு வியப்பைத் தந்ததாக ரணில் கூறுகிறார்.
மாவிலாறு நிலமைகள் பிரபா – ராஜபக்ஸ உறவில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது.
ஏற்கெனவே பின்கதவு முயற்சிகள் இருந்தபோதும் அவற்றிற்கு என்ன நடக்கப்போகிறது? என்பதை தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
go  சமாதான முயற்சிகளில்..அயர்லாந்து விடுதலை ராணுவத்தின் ( IRA) முன்னாள் தலைவர் மார்ட்டின் மக்னஸ்!!   (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 31) -சிவலிங்கம் goகோதபாய
புலிகளும் கண்காணிப்புக்குழுவின்  பிடியிலிருந்து விலகுவதையே  விரும்பினார்கள். ஏனெனில் சர்வதேச சமூகத்துடன் அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பது ரணிலின் அபிப்பிராயமாக இருந்தது.
ஆனால் கோதபய இன் அபிப்பிராயம் பின்வருமாறு இருந்தது.
2006ம் ஆண்டு யூலை, ஆகஸ்ட் மாதங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்ற சம்பவங்கள் அவற்றை உணர்த்தியதாக அவர் கூறுகிறார்.
1200 படையினரை ஏற்றி வந்த கப்பலைக் கவிழ்ப்பதன் மூலம் பெருந்தொகையான படையினரைக் கொல்லத் திட்டமிட்டார்கள்.
இவர்களின் சடலங்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும்போது சிங்கள மக்கள் மனதில் வெறுப்புகள் அதிகரிக்கும்.
அதனைத் தொடர்ந்து மூதூர் துறைமுகத்தைக் கைப்பற்றி திருகோணமலைத் துறைமுகத்தைத் தாக்குவதற்கான பலத்தை அதிகரிக்க திட்டமிட்டிருந்தார்கள்.
அதன் பின்னர் அத் துறைமுகத்திற்குச் செல்வதைத் தடுத்தால் யாழ். செல்லும் படையினரின் போக்குவரத்தைத் தடுக்க முடியும்.
அதன் பின்னர் குடாநாட்டைத் தாக்கி மீண்டும் கைப்பற்றலாம்.
இப் பாரிய திட்டம் நிறைவேறியிருந்தால் குடாநாட்டைத் துண்டாடி தனிநாட்டைப் பெற்றிருப்பார்கள்.
இத் திட்டத்தோடு பாரிய போரை ஆரம்பித்த அவர்களின் முயற்சி உரிய நேரத்தில் தடுக்கப்பட்டது என்கிறார் கோதபய.
சர்வதேச தொண்டு நிறுவனத்தில் மூதூரில் பணிபுரிந்த 17 தொண்டர்கள் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் போருக்கான தீயை மூட்டியது.
2006ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் திகதி முகமாலை முன்னரங்கை புலிகள் தாக்கினர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் யாழிலிருந்து வன்னிக்கு செல்லும் கடக்கும் இடமாக அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
புலிகளின் அம் முயற்சியும் வெற்றிபெறவில்லை.
கடற் புலிகளின் ஊர்காவற்துறை கடற்டை முகாம் தாக்குதலும் தோல்வி அடைந்தது. இவற்றிற்கு மத்தியில் திருகோணமலை சீனன்குடா கடற்படை முகாம் மீது தீவிர தாக்குதலை நடத்தினார்க்ள.
இப் பின்னணியில் அமெரிக்காவில் கூடிய கூட்டுத் தலைமை நாடுகள் உடனடியாக வன்முறையை நிறுத்துமாறும், பேச்சுவார்த்தைக்குத் திரும்புமாறும் கோரியது.
இச் செய்தி எவர் செவிகளிலும்  போய்ச் சேரவில்லை. அரச பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல அரசாங்கத்தையும், பயங்கரவாதிகளையும் ஒரே மாதிரிப் பார்ப்பது தவறு எனத் தெரிவித்தார்.
இதற்கிடையில் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் திகதி பாகிஸ்தானிய தூதுவரின் காரிற்கு கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. இச் சம்பவத்தில் 7 பேர் மரணமடைந்ததோடு, 10 பேர் படுகாயமடைந்தனர்.
அதே தினம் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பாடசாலை ஒன்றின்மேல் விமானத் தாக்குதல் நடந்தது.
அதில் 61 யுவதிகள் மரணமடைந்ததோடு, சுமார் 250 பேர் காயமடைந்தனர். இப் படுகொலை குறித்து பெரும் குழப்பம் ஏற்பட்டது.
senjolai-murder-1  சமாதான முயற்சிகளில்..அயர்லாந்து விடுதலை ராணுவத்தின் ( IRA) முன்னாள் தலைவர் மார்ட்டின் மக்னஸ்!!   (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 31) -சிவலிங்கம் senjolai murder 1(முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோ லை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், பாட சாலை மாணவிகள் 61 பேர் கொல்லப்பட்டனர்.)
இத் தாக்குதலில் மரணித்தவர்கள் யாவரும் புலிகளால் பராமரிக்கப்படும் அனாதைகள் இல்லத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களுக்கு சமூகத்தில் தலை நிமிர்ந்து செயற்படுவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்ட வேளையில் அக் கொடிய தாக்குதல் நடத்தப்பட்டதாக புலிகள் குற்றம் சாட்டினர்.
ஆனால் கெகலிய ரம்புக்வெல இன் கருத்துப்படி தமது உளவுத்துறை பல மாதங்களாக கவனித்து வந்ததாகவும், அது ராணுவப் பயிற்சி முகாம் எனவும் மாறி மாறி இவ்வாறான விளக்கங்கள் வெளிவந்தனவே தவிர அம் மரணங்கள் அல்லது காயப்பட்டோர் குறித்து எந்தக் கவலையும் வெளிப்படவில்லை.
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற புலிகள் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து புலிகளை மேலும் பின் தள்ள ராணுவம் முடிவு செய்தது.
அதனால் முகமாலையிலிருந்த புலிகளின் முகாம் ராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து முகமாலையிலிருந்து வன்னிக்கு கடந்து செல்லும் சந்தி மூடப்பட்டது.
இதனால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியே அல்லது உள்ளே வர முடியாதவாறு ஏ 9 பிரதான நெடும்சாலை மூடப்பட்டது.
இறுதியில் போர் நிறுத்த ஒப்பந்தமே அப் பாதையைத் திறப்பதற்கான வாய்ப்பை வழங்கியது.

makallaa  சமாதான முயற்சிகளில்..அயர்லாந்து விடுதலை ராணுவத்தின் ( IRA) முன்னாள் தலைவர் மார்ட்டின் மக்னஸ்!!   (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 31) -சிவலிங்கம் makallaa
இப் பாதை மூடுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் விடுதலைப்புலிகளே. முகமாலைச் சந்தியைப் பயன்படுத்தி புலிகள் வரி வசூலித்து பெருமளவு பணம் திரட்டியிருந்தார்கள்.
ராணுவம் அப் பாதையை  மூடியதால் யாழப்பாணத்தில்   பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஏனெனில்  உணவுப் பொருட்களின் போக்குவரத்து ஏ9 பாதைப் போக்குவரத்தில் பிரதானமாக தங்கியிருந்தது.
ராணுவம் மூதூரைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து புலிகளின் சம்பூர் முகாமைக் கைப்பற்றத் திட்டமிட்டார்கள். ஏனெனில் யாழ்ப்பாணத்திற்கு ராணுவத்தை எடுத்துச் செல்வதற்கு திருகோணமலைத் துறைமுகத்தையே ராணுவம் பயன்படுத்தியது.
புலிகள் சம்பூரில் இருந்தால் அது திருகோணமலைத் துறைமுகத்திற்கு ஆபத்து என்பதால் சம்பூரிலிருந்து புலிகளை அகற்ற ராணுவம் திட்டமிட்டது.
அதனை மகிந்த மிகவும் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.
இது ராணுவத்தைப் பாதுகாப்பதற்கான உத்தி என அரச தரப்பில் கூறப்பட்ட போதும் சம்பூர் தாக்குதல் என்பது புலிகள் மீதான தாக்குதலாகவே அமைந்தது.
போர் நிறுத்த ஒப்பந்தம் அவ்வாறான தாக்குதலை ஏற்றுக்கொள்ளாது என்பதால் அத் தாக்குதல் தமது பாதுகாப்பு கருதியே என அரச தரப்பு தொடர்ந்து தெரிவித்தது.
ஆனால் இன்னும் சில அதிகாரிகள் அத் தாக்குதலை மனிதாபிமான தேவை கருதியே எனத் தெரிவித்தனர்.
இவ்வாறு 2002ம் ஆண்டின் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை மீறுவதும், அதன் பின்னர் தாம் எண்ணிவாறு வியாக்கியானம் வழங்குவதும் அந்த ஒப்பந்தம் தோல்வி அடைந்த ஒன்று என்பதை உறுதிப்படுத்தியது.
இதற்கிடையில் புலிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்புக் குழு உறுப்பினர்களை வெளியேறவேண்டுமென காலக்கெடு ஆகஸ்ட் 31ம் திகதி என விதித்த காரணத்தால் அக் காலம் நெருங்குவதற்கு முன்பதாகவே டென்மார்க், சுவீடன், பின்லாந்து நாடுகளைச் சேர்ந்த உறுப்பனர்கள் வெளியேறினர்.
கண்காணிப்புக் குழுவின் சுமார் 30 உறுப்பினர்கள் வெளியேறியதால் நோர்வே, ஐஸ்லாந்து நாடுகளைச் சேர்ந்த 20 உறுப்பினர்களே செயற்பட்டனர்.
பின்னர் 10பேர் இணைந்த போதும் கண்காணிப்புக்குழு பயனற்ற ஒன்றாகவே இருந்தது.
2006ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மகிந்த ராஜபக்ஸ அவர்கள் பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயர் அவர்களைச் சந்தித்துப் பேசியதாக செய்திகள் வெளியாகின.
இச் சந்திப்பிற்கு வட அயர்லாந்தில் மிக நீண்ட காலமாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுப் பின்னர் ரொனி பிளேயர் காலத்தில் ஏற்பட்ட பெரிய வெள்ளி ஒப்பந்தம் காரணமாக ஐ ஆர் ஏ என அழைக்கப்படும் ஐரிஸ் விடுதலை ராணுவம் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டது.
article-0-1cded95a00000578-57_306x423  சமாதான முயற்சிகளில்..அயர்லாந்து விடுதலை ராணுவத்தின் ( IRA) முன்னாள் தலைவர் மார்ட்டின் மக்னஸ்!!   (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 31) -சிவலிங்கம் article 0 1CDED95A00000578 57
( Martin Mcguinness)
இவ் விடுதலை ராணுவத்தின் மிக முக்கிய தலைவராக மார்டின் மக்னஸ் ( Martin Mcguinness)    செயற்பட்டார்.
2004ம் 2005ம் ஆண்டு காலத்தில் வட அயர்லாந்திற்கு மகிந்த சென்றிருந்த வேளை மார்டின் மக்னஸ் உடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக ஏற்பட்ட நெருக்கம் காரணமாக ரொனி பிளேயருக்கும், மகிந்தவிற்கும் இடையே தொடர்புகளை இவரே ஏற்படுத்தியிருந்தார்.
வட அயர்லர்ந்தில் சந்தித்த வேளை மார்ட்டின் அவர்களை இலங்கை வருமாறு மகிந்த அழைப்பு விடுத்திருந்தார்.
மகிந்த ஜனாதிபதியாக தெரிவாகியதும் 2006ம் ஆண்டு ஜனவரியில் அங்கு சென்றார்.
அங்கு அவர் மகிந்தவுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள், அதனைத் தொடர்ந்து அவர் மேலும் ஏற்படுத்திக்கொண்ட தொடர்புகள் காரணமாக ராணுவ வெற்றி இரு சாராருக்கும் சாத்தியமில்லை.
பேச்சுவார்த்தை மூலமே சாத்தியமாகும், அதற்கு இரு சாராரினதும் அர்ப்பணிப்பு அவசியம் என்றார்.
mcguiness-ltte  சமாதான முயற்சிகளில்..அயர்லாந்து விடுதலை ராணுவத்தின் ( IRA) முன்னாள் தலைவர் மார்ட்டின் மக்னஸ்!!   (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 31) -சிவலிங்கம் Mcguiness LTTEமார்ட்டின் மக்னஸ் அவர்களுடன், அவரது சின்பைன் ( Sinn Fein ) கட்சியின் இன்னெரு முக்கியஸ்தரான எய்டன் மக்ரர் (Aidan McAteer ) உடன் சென்றிருந்தார்.
கொழும்பு தலைநகரில் காணப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் அவருக்கு வட அயர்லாந்து நிலமைகளை ஞாபகமூட்டியது.
அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அவர் உணர்ந்தார்.
அரசாங்க தரப்பில் பேச்சவார்த்தையில் ஈடுபடுவதற்கான தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள அவர் ஆவலாக இருந்தார்.
அவருக்கு ஆரம்பத்தில் சகல தரப்பாரையும் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்ட போதும் அவர் அங்கு சென்றதும் அவருக்கு புலிகளைச் சந்திக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அதன் பின்னர் 2006ம் ஆண்டு வசந்த காலத்தின் போது அன்றைய அமைச்சர் ஜனாதிபதி ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்த்தனா புலிகளுடன் புதிய உறவை ஏற்படுத்தும் பொருட்டு மீண்டும் மார்ட்டின் மக்னஸ் (Martin Mcguinness) இற்கு அழைப்பு விடுத்தார்.
வன்னி செல்வதற்கு வாய்ப்புத் தருவதாக உறுதி  செய்யப்பட்டது. நோர்வே இப் பிரச்சனையில் ஈடுபட்டிருப்பதால் அம் முயற்சிகளுக்கு எதுவித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதில் தாம் கவனமாக இருப்பதாக தெரிவித்தார்.
இலங்கை வந்திருந்த மார்டின் மக்னஸ், எய்டன் மக்ரர் இருவரும் கிளிநொச்சியில் தமிழ்ச் செல்வன் உட்பட மற்றும் பலருடன் பல மணி நேரம் உரையாடினர்.
அவ் உரையாடலின் போது பிரித்தானிய ராணுவம் ஐரிஸ் விடுதலை ராணுவத்தினைத் தோற்கடிக்க முடியாது.அதே போலவே ஐரிஸ் விடுதலை ராணுவம் பிரித்தானிய ராணுவத்தைத் தோற்கடிக்க முடியாது என்ற நிலையில் பேச்சுவார்த்தைக்குச் செல்வதே ஒரே வழியாக அமைந்தது.
இத் தருணத்தில் புலிகள் அரசாங்கத்தின் மீதான தமது அவ நம்பிக்கையை வெளிப்படுத்தினர். இது அவருக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.
இப் பேச்சுவார்த்தைகளின் பெறுபேறுகளை அவர் அரச தரப்பினருக்கு கூறிய பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது இரு சாராருமே பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை எனத் தெரிவித்தார்.
ஆனால் அரசாங்கம் போருக்கான தயாரிப்புகளை மேற்கொள்வதை இருவரும் நன்கு உணர்ந்துகொண்டனர்.
sajin-vass  சமாதான முயற்சிகளில்..அயர்லாந்து விடுதலை ராணுவத்தின் ( IRA) முன்னாள் தலைவர் மார்ட்டின் மக்னஸ்!!   (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 31) -சிவலிங்கம் sajin vassசஜின் வாஸ் குணவர்த்தனா
இதன் பின்னர் சஜின் வாஸ் குணவர்த்தனா மார்ட்டின் அவர்களைத் தொடர்புகொண்டு பிரதமர் ரொனி பிளேயருடன் தொடர்புகளை ஏற்படுத்தித் தருமாறு வேண்டிக்கொண்டதைத் தொடர்ந்தே அவ் உறவுகள் ஆரம்பமாகின.
இதன் நோக்கம் தெளிவாக இல்லையாயினும், பிரித்தானிய அரசிடமிருந்து விசேட பிரதிநிதியை பேச்சுவார்த்தைகளை நடத்த அரசு எதிர்பார்த்திருந்தது. குறிப்பாக ரொனி பிளேயரையே ஈடுபட வைக்க அவர்கள் நோக்கினர்.
வாசகர்களே! 
இலங்கை அரசு பேச்சுவார்த்தை முயற்சிககளில் விடுதலைப் புலிகள் நடந்துகொள்ளும் முறையை உலகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவர்கள் பேச்சுவார்த்தைகளில் விசுவாசமாக இல்லை என்பதை உணர்த்தி தமது போருக்கான நியாயங்களைத் தயாரிப்பதிலேயே குறியாக இருந்தனர்.
இப் பேச்சுவார்த்தைகள் குறித்து தற்போது வட அயர்லாந்தின் உதவி முதலமைச்சராக உள்ள மார்ட்டின் மக்னஸ் அவர்களின் அபிப்பிராயங்களை அடுத்த வாரம் பார்ப்போம்.
(Erik Solheim  அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட   TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்.. தொகுப்பு : வி. சிவலிங்கம்)
தொடரும்… (Thanks… ILAKKIYAA Inaiyam…) -தொகுப்பு… கி.பாஸ்கரன், சுவிஸ்.

‘மகிந்த ராஜபக்ஸவை, நெல்சன் மண்டேலாவின் மரணச்சடங்கில் கண்டேன் : அவருடன் பேசுவதற்கு வெறுப்படைந்தேன்’!! . -மார்ட்டின் மக்னஸ் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 32) -சிவலிங்கம்

 வாசகர்களே!
வட அயர்லாந்து பிரதி முதலமைச்சரும், ஐரிஸ் விடுதலை ராணுவத்தின் முன்னாள் தலைவருமான மார்ட்டின் மக்னஸ் (Martin Mcguinness) இலங்கை சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட அனுபவம் மிக முக்கியமானது.
அத்துடன் அப்போதைய பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயர் அவரின் முயற்சியாலேயே அதில் ஈடுபட நேர்ந்தது.
இவ் விபரங்கள் அவ்வளவு விரிவாக இதுவரை வெளிவரவில்லை. அந்த வகையில் இக் கட்டுரை மேலும் பல பயனுள்ள தகவல்களைத் தரும் என நம்புகிறேன்.
இலங்கை சென்று திரும்பிய மார்ட்டின் மக்னஸ் ( Martin Mcguinness) அவர்களின் அனுபவம் இவ்வாறு இருந்தது.
எனது அபிப்பிராயத்தினை தெளிவாகவே முன்வைத்தேன். தமது ராஜ்யம் கிடைக்கும் வரை மக்கள் ஒருவரை ஒருவர் கொல்லலாம்.
அல்லது விசுவாசத்துடன் அதனைப் பேசித் தீர்ப்பதற்கு சமாதான மேசைக்குச் செல்ல முயற்சிக்க வேண்டும்.
pipakarannn  ‘மகிந்த ராஜபக்ஸவை நெல்சன் மண்டேலாவின் மரணச்சடங்கில் கண்டேன் : அவருடன் பேசுவதற்கு வெறுப்படைந்தேன்’!! . -மார்ட்டின் மக்னஸ் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 32) -சிவலிங்கம் pipakarannn(Martin Mcguinness, pirapakaran)
இலங்கையின் இந்த வரலாற்றினையும், புலிகள் நடந்து கொள்ளும் முறைகளையும் தெரிந்த பின்னரும் எனக்குக் கிடைத்த ஒரே ஏமாற்றம் பிரபாகரனை நான் சந்திக்க முடியவில்லை என்பதுதான்.
வெளியுலகத்துடனான தனது உறவை அவர் மூடியிருந்தார். அது அவரது பெரிய முட்டாள்தனமாகும்.
அவர்கள் சார்பில் பேச முயற்சிப்பவர்களைச் சந்திக்கவும் தயாராக இருக்கவில்லை.
ராஜபக்ச நிர்வாகம் தாம் தமிழர்களை வென்றுள்ளதாக நம்பலாம். ஆனால் பிரச்சனையை அவர்கள் தீர்க்கவில்லை.
வடக்கில் வாழும் சுமார் 10 லட்சம் மக்கள் இன்னமும் இரண்டாம் தர பிரஜைகளாகவே கணிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் மத்தியிலே கோபம், வெறுப்பு, கடுiமையான உணர்வுகள் உள்ளன. அவை ஒரு நாள் எதிர்காலத்தில் வெடிக்கலாம்.
நான் நெல்சன் மண்டேலா அவர்களின் மரணச் சடங்கில் பார்த்தேன். எனக்கு அவ்வளவு கோபமாக இருந்ததால் நான் அவருடன் பேசவில்லை.
தமிழருக்கு நடந்தவைகள், இடம்பெற்ற மனிதக் கொலைகள் என்பன மீண்டும் அவருடன் பேசவைக்க இடமளிக்கவில்லை.
இரண்டு மாதங்களின் பின்னர் ஆரம்ப பேச்சுவார்த்தைகளுக்காக வட அயர்லாந்திற்கான பிரித்தானிய செயலாளர் போல் மேர்பி ( Paul Murphy) 2006ம் ஆண்டு நவம்பர் நடுப்பகுதியில் இலங்கை சென்று அரச அதிகாரிகளையும், கிளிநொச்சியில் தமிழ்ச்செல்வனையும் சந்தித்தார்.
மார்டின் மக்னஸ் அவர்களின் வருகை குறித்து ரிரோன் பேர்டினட் (Tyrone Ferdinands) அவர்களின் கருத்து இவ்வாறாக இருந்தது.
மார்டின் மக்னஸ் இரண்டாவது தடவையாக யூலை மாத ஆரம்பத்தில் இலங்கை வந்திருந்தார். இத் தடவை கிளிநொச்சிக்கும் சென்றிருந்தார்.
அவர் நாடு திரும்பவிருந்த வேளையில் அவரை பஸில் ராஜபக்சவைச் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு மகிந்த கூறினார். பஸிலிடம் ஒரே ஒரு வேண்டுகோளே இருந்தது.
அதாவது புலிகளுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தித் தரும்படி அவரைக் கோருவதுதான்.
அவர் அவ்வாறு கோரியபோது நோர்வே தரப்பினருக்கு என்ன நடந்தது? எனக் கேட்டார். அதற்கு அவர் அவர்கள் உத்தியோகபூர்வ பேச்சுக்களைத் தொடரட்டும்.
நான் அதனை உதாசீனம் செய்ய விரும்பவில்லை. ஆனால் வேறு பிரச்சனைகளை நேரடியாக பேச விரும்பகிறோம் என்றார்.
பஸிலைச் சந்தித்ததும் அவர் தெரிவித்த கருத்து என்னவெனில் இரு சாராருக்குமிடையே நம்பிக்கை அறுந்துவிட்டால் அதனை மீளக் கட்டுவது அனுசரணையாளருக்கு முடியாத காரியம்.
நீங்கள் மிகவும் தீவிரத் தன்மையுடனும், எதனையும் பகிரங்கமாக வைக்கத் தயாராகவும் இல்லை.
நீங்கள் 10 வருடங்களுக்குப் பின்னால் சென்றுள்ளீர்கள். இந் நிலையில் புலிகளுடன் என்ன பேச விரும்புகிறீர்கள்? எனக் கேட்டார்.
நாங்கள் அவர்களுடன் பேசவில்லை என எண்ணுகிறீர்களா? அவ்வாறு இல்லை. நாம் இதில் மிகவும் அனுபவஸ்தர்கள். நேரடியாக தொடர்புகளை வைத்திருக்கிறோம்.
எமக்கு உண்மையில் அவர்கள் எதனைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்? என்பதை அறியவேண்டியுள்ளது.
பலர் அவர்களுடன் பேசியபோது அவர்களது மறு பக்கம் பற்றியும் கூறினர். அவர்களிடமிருந்து சில பகிரங்க சமிக்ஞைகளை எதிர்பார்க்கிறோம்.
நாம் சிறுவர்களல்ல. நாம் அதனைக் கையாளுவோம். அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தாருங்கள் என பஸில் கேட்டார்.
இவை பற்றி மார்டின் மக்னஸ் தெரிவிக்கையில் அரச தரப்பினர் புலிகளுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்த விரும்புகின்றனர்.
ஆனால் அவ்வாறு யாரையும் நேரடியாக சந்திக்க புலிகள் தயாராக இல்லை. எனது இரண்டாவது பயணத்தின் பின்னர் அவ்வாறான ஒரு சூழல் இருப்பதாக எனக்குப் புலப்படவில்லை.
பஸிலை நான் சந்தித்தபோது ஒரு ராணுவ தரப்பைச் சேர்ந்த ஒருவரோடு பேசுவதாக உணர்ந்தேன்.
புலிகளுக்கு எதிராக ராணுவ தாக்குதல் இருப்பதையும், தாம் அதாவது அரசாங்கம் பேச்சுவார்த்தையில் அதிக நம்பிக்கை கொண்டிருப்பதாக காண்பிப்பதற்கு அவர் முயற்சிப்பதையும் நான் உணர்ந்துகொண்டேன்.
ஆனால் புலிகள் அதற்குத் தயாராக இருக்கவில்லை. அதனால் நேரடியாக பேசுவதற்கான வாய்ப்பு இல்லை என பஸிலிடம் தெரிவித்தேன்.
இவை தொடர்பாக நோர்வே விஷேட தூதுவர் ஜொன் ஹன்சன் பவர் (Jon Hanssen Bauer) தெரிவிக்கையில் ரொனி பிளேயர் இப் பிரச்சனையில் ஈடுபட விரும்பவதாக தமக்கு சில செய்திகள் கிடைத்ததாகவும்,
ஆனாலும் இதன் பின்னணியில் வட அயர்லாந்துக் கட்சியான சின்பெய்ன் ( Sinn Fein ) செயற்படுவது குறித்து மிகவும் சொற்ப தகவல்களே கிடைத்ததாக கூறும் அவர், போல் மேர்பி விஷேட தூதுவராக நியமிக்கப்பட்டது தனக்கு ஞாபகமில்லை.
ஆனால் அது தமது முயற்சிகளுக்கு தடையாக அமையலாம் என உணர்ந்ததாக கூறினார்.
அவரது இலங்கை விஜயம் எதிர்பார்த்த அளவில் அமையவில்லை ஆனாலும் அவர் சில தொடர்புகளை ஏற்படுத்தியதாக தகவல்கள் கிடைத்ததாக கூறுகிறார்.
வேறு அரசியல்வாதிகள் இதில் தலையிடுவது பிரச்சனைக்குரியது எனினும் நாம் அனுசரணையாளர் என்ற வேலையில் அதிக கவனம் செலுத்தினோம்.
Blair_1705623c  ‘மகிந்த ராஜபக்ஸவை நெல்சன் மண்டேலாவின் மரணச்சடங்கில் கண்டேன் : அவருடன் பேசுவதற்கு வெறுப்படைந்தேன்’!! . -மார்ட்டின் மக்னஸ் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 32) -சிவலிங்கம் Blair 1705623ctony blair
இவை பற்றி அறிய லண்டன் சென்று ரொனி பிளேயரின் அதிகாரிகளில் ஒருவரான ஜொனதன் பவல் (Jonathan Powell) அவர்களுடன் இலங்கை நிலமைகள் குறித்து தாம் பேசிய போது அங்கு சமாதானத்திற்கான வாய்ப்புகளை விட போருக்கான நிலமைகளே அதிகம் உள்ளதாக தெரிவித்தபோது பேச்சுக்களின் முடிவில் ரொனி பிளேயர் அப் பிரச்சனையில் எதுவும் செய்யும் அளவிற்கு நிலமைகள் இல்லை என்ற முடிவிற்கு வந்தனர்.
நோர்வே இற்கு வெளியில் புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த ஜனாதிபதி மிகவும் முயற்சிப்பது தெரிந்தது.
இவை புலிகளுக்கு பெரும் விசனத்தை அளித்தது. அவர்கள் நோர்வேயைத் தவிர வேறு எவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை அல்லது இன்னொரு தரப்பாருடன் தொடர்புகளை வைத்திருப்பதை விரும்பவில்லை.
வட அயர்லாந்து கிளர்ச்சியாளர்கள் நீண்ட கால போராட்டத்தின் பின்னர் பேச்சுவார்த்தைக்குச் சென்று ஆயுதங்களை ஒப்படைத்தவர்கள். இதில் ஈடுபடுவது புலிகளின் கவனத்தை ஈர்க்கலாம் என மகிந்த எண்ணியிருக்கலாம்.
வட அயர்லாந்து நிர்வாகம் இப் பிரச்சனையில் ஈடுபடுவது குறித்து எரிக் சோல்கெய்ம் இன் கருத்து இவ்வாறு இருந்தது.
pirapakaran  ‘மகிந்த ராஜபக்ஸவை நெல்சன் மண்டேலாவின் மரணச்சடங்கில் கண்டேன் : அவருடன் பேசுவதற்கு வெறுப்படைந்தேன்’!! . -மார்ட்டின் மக்னஸ் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 32) -சிவலிங்கம் pirapakaran 1
(Gerry Adams – வட அயர்லாந்தின் சின்பெயின் அமைப் பின் தலைவர்)
இதில் வட அயர்லாந்து ஈடுபடுவது பலருக்கு ஆர்வத்தை அளிப்பதாக இருந்த போதிலும் பிரபாகரன் என்பவர் ஜெரி அடம்ஸ் (Gerry Adams )இற்கு இணையானவர் அல்ல என்பது அப்போதைய கருத்தாக இருந்தது.
பாலசிங்கம் இருக்கும் வரை புலிகள் வட அயர்லாந்தில் அதிக நாட்டம் கொள்ள மாட்டார்கள். புலிகளுக்கு என்ன தேவை? என்பதை தாம் அறிவோம் என நம்புபவர்.
ஆனால் புலிகள் தரப்பினர் உலகம் முழுவதும் சென்று சமஷ்டி பற்றி அவர்கள் அறியவேண்டுமென்பதை அவர் விரும்பினார்.
சகலமும் தனது கட்டுப்பாட்டில் இருப்பதை விரும்பிய அவர் நோர்வே மட்டுமே ஒரே தொடர்பு எனவும் எண்ணினார். பேச்சுவார்த்தைகள் சுமுகமாகச் செல்லுமானால் வெளியார் தலையீடு அவசியமில்லை என அவர் கருதினார்.
கிராமத் தலைவரை ஒத்தவராக மகிந்த உள்ளார் என்பதற்கு இது மிகவும் பொருத்தமாக அமைகிறது எனக் கூறும் சோல்கெய்ம். மார்ட்டின் மக்னஸ் இன் வருகை இதற்குப் பொருத்தமாக அமைகிறது என்கிறார்.
அவர் பல வழிகளைத் திறக்க எண்ணுகிறார். அது அவருக்கு பல்வேறு அணுகுமுறைகளைத் தரும்.
இதனையே அவர் ஜெனீவா இலும் சமாதானத்திற்கு ஆதரவானவர்களையும், எதிர்ப்பவர்களையும் அங்கு அனுப்பிக் கையாண்டார்.
பிரச்சனை நீண்டு செல்வதை அவர் விரும்பவில்லை எனவே அவர் குறுக்கு வழிகளைத் தேடுகிறார்.
அது போலவே நோர்வே இற்கு வெளியிலும் வாய்ப்புகளைத் தேடுகிறார். சமாதான முயற்சிகளில் அவருக்குத் தெளிவான பார்வை இல்லை என்பதை இவை உணர்த்தி நிற்கின்றன.
news-graphics-2007-_633853a  ‘மகிந்த ராஜபக்ஸவை நெல்சன் மண்டேலாவின் மரணச்சடங்கில் கண்டேன் : அவருடன் பேசுவதற்கு வெறுப்படைந்தேன்’!! . -மார்ட்டின் மக்னஸ் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 32) -சிவலிங்கம் news graphics 2007  633853a(tony blair and Jonathan Powell)
இவை குறித்து ரொனி பிளேயரின் பிரதம அதிகாரியாக செயற்பட்ட ஜொனதன் பவல் (Jonathan Powell)கூறுகையில் விக்கிலீக்ஸ் தகவல்கள் நோர்வே இன் முயற்சிகளை நான் திருட முயற்சிப்பதாக செய்திகளை வெளியிட்டிருந்தது.
இது முழுமையாகத் தவறானது. மகிந்த ராஜபக்ஸவை மகிழ்ச்சிப்படுத்தவே அதில் இறங்கியதாகவும், மார்ட்டின் மக்னஸ் எங்களை அணுகி இப் பிரச்சனையில் ஈடுபடுவது பிரயோசனமானது எனத் தெரிவித்தார்.
வட அயர்லாந்து பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை அடைந்த நிலையில் அவர்களின் வேண்டுகோளுக்கும் இசைவது தேவையாக இருந்தது.
அத்துடன் அது நியாயமான கோரிக்கையாகவும் காணப்பட்டது. எனவே நாம் மிகவும் சாதாரணமாகவே ஆம் எனப் பதிலளித்தோம்.
மார்ட்டின் மக்னஸ் ஸ்பெய்ன் நாட்டின் பாஸ்க் பிரதேச பிரச்சனையிலும் ஈடுபட்டதோடு சின்பெய்ன் கட்சி தனது முக்கிய உறுப்பினர்களை பர்மா நாட்டிற்கும் அனுப்பியிருந்தது.
கிளர்ச்சியாளர்களோடும், அரசாங்கங்களோடும் ஈடுபடும் அவர்களது அனுபவங்களுக்கு மதிப்பளிப்பது பொருத்தமானது எனவும் கருதினோம் என அவர் தெரிவித்தார்.
வாசகர்களே!
தென் கிழக்கு ஆசியாவில் மிகவும் ராணுவ மயமாக்கப்பட்ட நாடாக இலங்கை அமைந்திருந்தது.
2006ம் ஆண்டு முதல் 2010 ம் ஆண்டு வரை இதுவே நிலமையாக காணப்பட்டது. அக் கால கட்டத்தில் கொலம்பியா, பர்மா, சியராலியோன், சூடான், பிலிப்பைன்ஸ், உகான்டா ஆகிய நாடுகளிலும் இவ்வாறான நிலமை காணப்பட்ட போதும் நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் மிகப் பெரிய தொகையை விழுங்கிய நிகழ்வு இதுவாகும்.
இப் பின்னணியில் ஜெனிவாவை நோக்கிய பாதையில் தொடர்ந்து நடந்தது என்ன? என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.
(Erik Solheim அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள். தொகுப்பு : வி. சிவலிங்கம்)
 தொடரும்… (Thanks… ILAKKIYAA Inaiyam…) -தொகுப்பு… கி.பாஸ்கரன், சுவிஸ்.

வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய நீதிமன்ற தீர்ப்புக் காரணமாக 2006ம் ஆண்டு மாவீரர் தின உரையில் சுதந்திரநாடு பிரகடனம் எதிர்பார்க்கப்பட்டது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 33) -சிவலிங்கம்

+புலிகளை ஜெனீவா பேச்சுவார்த்தைகளுக்கு எடுத்துச் செல்வதற்கு கூட்டுத் தலைமை நாடுகளும், நோர்வேயும் பலத்த முயற்சிகளை எடுத்தன.
புலிகள் மீது பலமான அழுத்தங்கள் போடப்பட்டன. பயங்கரவாத அமைப்புகள் தடை, வங்கிக் கணக்குகள் உறைய வைத்தல், ஐரோப்பிய பயணங்கள் தடை என எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகள் புலிகளைப் பேச்சுவார்த்தையை நோக்கித் திரும்ப வைத்தன.
2006ம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் தாம் நிபந்தனை அற்ற பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக நோர்வேயினருக்கு தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். இலங்கை அரசும் தமது விருப்பத்தைத் தெரிவித்தனர்.
இச் செய்திகளைத் தொடர்ந்து கூட்டுத் தலைமை நாடுகள் இரு தரப்பாரும் வன்முறையை முழுமையாகக் கைவிட்டு சமாதானத்தில் தமது நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டுமெனவும், கடந்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொண்டவைகளுக்கு அமைவாக செயற்பட வேண்டுமென  நீண்ட பட்டியலொன்றையும் வெளியிட்டிருந்தது.
இவ் அறிக்கை கூட்டுத் தலைமை நாடுகள் இப் பிரச்சனையில் மிக முக்கியமான பங்கினை வகிக்கப் போவதை உணர்த்தியது.
இதன் பின்னர் வன்முறை படிப்படியாக குறையத் தொடங்கியது. சம காலத்தில் மனித உரிமை பற்றிய கோரிக்கைகள் சர்வதேச அளவில் எழுந்தன.
ஜெனீவா மனித உரிமைச் சபையினர் ஐ நா சபையின் அனுசரணையுடன் சுயாதீன விசாரணைக் குழு ஒன்றினை அமைக்க வேண்டுமென குரல் எழுப்பியது.
இதே வேளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அரசாங்கமும், புலிகளும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறுவதாக குற்றம் சாட்டியது.
குறிப்பாக ஏ9 பாதையை மூடி உணவு விநியோகத்தைத் தடுத்துள்ளதாக கூறியது. மறு பக்கத்தில் உணவுக் கப்பல்களின் பாதுகாப்பை தம்மால் உறுதிப்படுத்த முடியாது என புலிகள் கூறினர்.
39937843_leader1  வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய நீதிமன்ற தீர்ப்புக் காரணமாக 2006ம் ஆண்டு மாவீரர் தின உரையில் சுதந்திரநாடு பிரகடனம் எதிர்பார்க்கப்பட்டது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 33) -சிவலிங்கம் 39937843 leader11ஜெனீவா பேச்சுவார்த்தைகள் ஆரம்பிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் இலங்கையின் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றின் பாதுகாப்பு தொடர்பான கட்டுரைகளை எழுதி வரும் இக்பால் அத்தாஸ் அவர்கள் கருணாவை பேட்டி கண்டிருந்தார்.
புலிகள் மிகவும் பலவீனமாக உள்ளார்கள். எனவேதான் காலத்தை கடத்தும் வழிகளை நோக்குகின்றனர்.
நிபந்தனை அற்ற பேச்சுவார்த்தைகளுக்கு அவர்கள் தயார் என்பது அவர்களது பலவீனத்தை எடுத்துக் காட்டுகிறது.
தனது வெளியேற்றத்தின் பின்னர் பல தோல்விகளை பிரபாகரன் சந்தித்துள்ளார்.
நல்ல விவேகமுள்ள, தலைமை தாங்கும் ஆற்றலுள்ள, பல வெற்றிகளைத் தந்த போராளிகளை இழந்துள்ளார்.
பல முனைகளிலும் புலிகள் தமது திறனை இழந்துள்ளனர். இது வன்னியில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் மற்றும் சர்வதேச அபிப்பிராயமும் சார்பாக இல்லை.
அவர்களது வீழ்ச்சிக்கான ஆரம்பம் கிழக்கில் கட்டுப்பாட்டிலிருந்த பெரும் பகுதி நிலத்தை இழந்துள்ளதிலிருந்து ஆரம்பித்துள்ளது.
வெகு விரைவில் எமது போராளிகளை அவர்கள் வன்னியிலும், யாழ்ப்பாணத்திலும் காண நேரிடும். அதனால் பொட்டு அம்மான் போன்றோரின் தீவிரப்போக்கான தற்கொலைத் தாக்குதலுக்கு செல்ல நேரிடும்.
இவை பிரபாகரனுக்கு அச்சுறுத்தலாக அமைய நிலமைகள் மேலும் மோசமடையலாம் என கருணா தெரிவித்திருந்தார்.
புலிகளும், அரசாங்கமும் பேச்சுவார்த்தைக்குத் தயாரென அறிவித்ததால் 2006ம் ஆண்டு அக்டோபர் 28-29 திகதிகளில் ஜெனீவாவில் சந்திப்பதாக அறிவிக்கப்பட்டது.
இத் தருணத்தில் தேசிய பாதுகாப்புக் கருதி தாம் சில நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என அரச தரப்பிலிருந்து வெளியான தகவல் கூட்டுத் தலமை நாடுகள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியது.
பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கான திகதி அறிவித்து மூன்று வாரங்களுக்கு முன்னர் அதாவது அக்டோபர் 6ம் திகதி மாங்கேணியில் இரு தரப்பாருக்கும் போர் மூண்டது.
இரு தரப்பார் மத்தியிலும் பலத்த இழப்புகள். கருணா தரப்பினரும் ராணுவத்துடன் இணைந்துள்ளதாக புலிகள் குற்றம் சாட்டினர்.
அக்டோபர் 11ம் திகதி முகமாலை முன்னரங்கில் போர் மூண்டது. இங்கு புலிகளின் தந்திரோபாயத்தினால் போர் மூண்ட இரு மணி நேரத்தில் சுமார் 130 ராணுவத்தினர் கொலையுண்டதோடு, மேலும் 500 ராணுவத்தினர் காயமடைந்தனர்.
முகமாலையைத் தொடர்ந்து  திருகோணமலை முகாமிலிருந்து ராணுவத்தினர் வெளியேறுவதைத் தடுப்பதற்காக அக்டேபர் 16ம் திகதி பாரிய வாகனங்கள் தெருவில் தடுப்புக்காக நிறுத்தப்பட்டன.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த கடற்படை வாகனத்தில்; வெடி மருந்துகள் நிரப்பப்பட்ட லொறி மோதியதால் 130 கடற்படையினர் கொல்லப்பட்டதோடு, 130 பேர் காயமடைந்தனர்.
இத் தாக்குதலால் நிலை குலைந்திருந்த அரசிற்கு மேலும் தலையிடி காத்திருந்தது.
காலி துறைமுகத்தில் உள்ள கடற்படைத் தளத்தை புலிகளின் இரண்டு படகுகள் அக்டோபர் 18ம் திகதி தாக்கின.
பாகிஸ்தான் இத் துறைமுகம் மூலமாகவே ஆயுதங்களை இலங்கைக்கு விநியோகித்தது. இத் தாக்குதல்கள் நாட்டில் எப் பகுதியிலும் புலிகள் தாக்கும் வல்லமை உடையவர்கள் என்பதை உணர்த்தியது.
இப் பின்னணியில் 2016ம் ஆண்டு அக்டோபர் 16ம் திகதி இலங்கை இந்திய ஒப்பந்த மூலம் இணைக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கு இணைப்பு அரசியல் அமைப்பிற்கு முரணானது என ஜே வி பி இனால் தொடரப்பட்ட வழக்கிற்கு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இது சர்வதேச அளவிலும் குறிப்பாக இந்தியா மத்தியிலும் விரக்தியை ஏற்படுத்தியது. வடக்கு கிழக்கு இணைப்பு என்பதே இலங்கை இனப் பிரச்சனையில் இந்தியாவின் முக்கிய அத்திவாரமாகும்.
இத் தீர்ப்பு எதிர்வரும் மாவீரர் தின உரையில் பிரபாகரனை சுதந்திர நாட்டுப் பிரகடனத்தை நோக்கித் தள்ளலாம் என சில அரசியல் ஆய்வாளர்கள் கருதினர்.
அக்டோபர் 23ம் திகதி இன்னொரு ஆச்சரியம் நிகழ்ந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் ‘ தேசியக் கொள்கைகள்’ என்ற பெயரில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டன.
இம் முயற்சி தேசிய அளவிலான தேசிய நல்லிணக்கத்தை உருவாக்க உதவலாம் எனக் கருதப்பட்டது. கூட்டுத் தலைமை நாடுகளும் அதனை வரவேற்றன.
richard-boucher-2jpg-preview  வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய நீதிமன்ற தீர்ப்புக் காரணமாக 2006ம் ஆண்டு மாவீரர் தின உரையில் சுதந்திரநாடு பிரகடனம் எதிர்பார்க்கப்பட்டது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 33) -சிவலிங்கம் Richard Boucher
(Sri Lankan President Mahinda Rajapaksa (R) talks to U.S. Assistant Secretary of State for Central and South Asian Affairs Richard Boucher at the President House in Colombo October 19, 2006.)
அமெரிக்க உதவி ராஜாங்க அமைச்சர் ரிச்சார்ட் பௌச்சர் (Richard Boucher) யசூசி அகாசி, ஆகியோரின் வருகை அங்கு போர் நிலமைகளை ஓரளவு தணித்திருந்தது.
இத் தருணத்தில் வட பகுதியில் காணப்பட்ட மனித நேயத் தேவைகளிற்கான மோசமான நிலமைகளை தமிழ்ச்செல்வன் அமெரிக்க அமைச்சருக்கு கூறினார். புலிகளின் கவனம் ஏ9 பாதையைத் திறக்க வைப்பதுதான்.
ஜெனிவாவில் ஆரம்பித்த பேச்சுவார்த்தைகள் முறைப்படி ஆரம்பிக்கவில்லை. அங்கு நிகழ்ச்சிநிரல் எதுவும் இருக்கவில்லை.
இரு சாராரையும் நெருக்கமாக்க முயற்சிகள் எடுக்கபட்ட போதும் அது சாதகமாகவில்லை. இதனால் எரிக் சோல்கெய்ம் முதலில் தனது உரையைத் தொடங்கினார்.
கடந்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்தத் தவறியதால் 2 இலட்சம் மக்கள் உள்ளுரில் இடம் பெயர்ந்துள்ளதாகவும், சுமார் 3000 பேர் போரில் இறந்துள்ளதாகவும், ராணுவ முனைப்பிற்கு சர்வதேச ஆதரவு ஒருபோதும் இருக்கப்போவதில்லை எனவும் பேச்சுவார்த்தைகளில் உண்மையான முன்னேற்றம் ஏற்பட்டால் மாத்திரமே சர்வதேச ஆதரவு கிடைக்கும் எனத் தெரிவித்த அவர் மூன்று முக்கியமான பிரச்சனைகள் மேசையில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.
அவையாவன:
மனிதாபிமான சிக்கல்கள்,
ராணுவ விஸ்தரிப்பு,
அரசியல் தீர்வு என்பன எனக் கூறினார்.
சோல்கெய்ம் இன் உரையைத் தொடர்ந்து இரு தரப்பாரும் ஏற்கெனவே தயாரித்த தமது உரைகளை வெளியிட்டனர்.
அதில் அரச தரப்பில் பேசிய அமைச்சர் சிறீபால டி சில்வா இறுதியாக நடைபெற்ற பேச்சுவார்ததைகளுக்குப் பின்னர் நடந்த சம்பவங்களைப் பட்டியல் போட்டு புலிகளுடன் தாம் நடத்தும் பேச்சுவார்த்தைகளின் நோக்கத்தின் நிகழ்ச்சி நிரலையும் தெரிவித்தார்.
புலிகள் தரப்பினரும் அதே போலவே தமது அரசியல் கோரிக்கை வரை நீண்ட பட்டியலை வெளியிட்டனர்.
இரண்டாம் நாளின்போது புலிகள் ஏ9 பாதையை மூடியதால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளைக் கூறி ஆரம்பித்தனர்.
அரச தரப்பினர் அவற்றை நிராகரிக்க புலிகள் தம்மால் தொடர்ந்து பேச முடியாது எனக் கூற நிலமைகள் இழுபறி நிலைக்குச் செல்ல நோர்வே தரப்பினர் ஒருவாறாக மேசைக்கு அழைத்து வந்தனர்.
ஏ 9 பாதையை மூடியமையை பேர்லின் சுவருக்கு உதாரணமாக தமிழச்செல்வன் கூறி அப் பாதை தொடர்பான பேச்சுவார்தைகளிலிருந்தே ஆரம்பிக்க வேண்டுமெனக் கூறினார்.
அரச தரப்பினர் தாம் கடல் வழியாக உணவுகளை குடாநாட்டிற்கு அனுப்பலாம் எனக் கூற புலிகள் அதனை நிராகரித்தனர்.
geneva-talks1_0  வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய நீதிமன்ற தீர்ப்புக் காரணமாக 2006ம் ஆண்டு மாவீரர் தின உரையில் சுதந்திரநாடு பிரகடனம் எதிர்பார்க்கப்பட்டது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 33) -சிவலிங்கம் Geneva Talks1 0
(Protagonists of war shake hands for peace: LTTE’s chief negotiator S. P. Tamilselvan shakes hands with Sri Lanka Government chief representative Minister Nimal Siripala de Silva while Norway’s International Development Minister Erik Solheim looks on in Geneva)
இரு தரப்பாரும் இணக்கமற்ற நிலையில் காணப்பட்டதால் அடுத்த பேச்சுவார்த்தையை டிசெம்பர் இலும் அதனைத் தொடர்ந்து 2007ம் ஆண்டு பெப்ரவரியிலும் வைக்கலாம் என நோர்வே தரப்பினர் தெரிவித்தபோது ஏ9 பாதை விவகாரம் தீர்க்கப்படாமல் தம்மால் அடுத்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள முடியாது என தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
இதனால் எதுவித உடன்பாடும் எட்டப்படாமல் சந்திப்பு முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் இரு தரப்பாரும் அடுத்த பேச்சுவார்ததைக்கான திகதியை ஏற்றுக்கொள்ளாவிடினும், இரு தரப்பாரும் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மீதான தமது நம்பிக்கையை வெளியிட்டார்கள் எனவும், ராணுவத் தாக்குதல்களை நடத்துவதில்லை என ஏற்றுக்கொண்டுள்ளார்கள் எனவும் சோல்கெய்ம் தெரிவித்தார்.
05_04_06_kli_01_53081_435  வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய நீதிமன்ற தீர்ப்புக் காரணமாக 2006ம் ஆண்டு மாவீரர் தின உரையில் சுதந்திரநாடு பிரகடனம் எதிர்பார்க்கப்பட்டது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 33) -சிவலிங்கம் 05 04 06 kli 01 53081 435Norwegian Special Envoy Mr. Jon Hanssen-Bauer shaking hands with Mr. S.P. Thamilchelvan
இவ் இரண்டாவது ஜெனீவா பேச்சுவார்த்தைகள் தொடர்பாக நோர்வே அனுசரணையாளர் ஜொன் ஹன்சன் பவர் (Jon Hanssen Bauer)  தெரிவிக்கையில் பேச்சுவார்த்தைகளின் ஆரம்பமே பிரச்சனையாக அமைந்ததாகவும், இரு சாரரும் மேசைகளின் பின்னால் அமர்ந்தபோது புலிகள் வலது பக்கத்தில் அமர்ந்தனர்.
இதனை அரச தரப்பினர் புலிகளுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பதாக முறையிட்டதாகவும், சோல்கெய்ம் தனது உரையில் முதலில் புலிகளை முதலில் விளித்துப் பேசியதும் சரியாக போய்ச்சேரவில்லை எனவும், அரச தரப்பினர் கோபமடைந்ததாக குறிப்பிடுகிறார்.
இவை அவர்களது முகங்களில் வெளியானதாகவும் குறிப்பிட்ட அவர்… “சிக்கலான பிரச்சனைகளில் தாம் ஆரம்பித்தபோதும் அது எடுபடவில்லை எனவும் புலிகள் ஏ9 பாதை விவகாரம் தீர்க்கும் வரை மேலும் பேச தாம் தயாரில்லை என கூற அரச தரப்பினர் பாதகாப்பு காரணங்களைக் கூறி புலிகள் ராணுவ நோக்கங்களுக்காகவே திறக்கும்படி வற்புறுத்துவதாக கூறினர்.
அரச தரப்பினர் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலக தயாரில்லை. ஆனால் அவர்கள் எதையும் பேச அனுமதிக்கப்படவில்லை.
எதற்கும் இணங்காமலேயே அடுத்த திகதியை நிர்ணயிக்க அரச தரப்பினர் முற்பட்டனர். இரு தரப்பாரும் பொதுவாகவே பேச விரும்பவில்லை போரிடவே விரும்பினார்கள்.
(அடுத்த வாரம் தொடரும்)
Erik Solheim அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள். தொகுப்பு : வி. சிவலிங்கம்
தொடரும்… (Thanks… ILAKKIYAA Inaiyam…) -தொகுப்பு… கி.பாஸ்கரன், சுவிஸ்.

கூட்டமைப்பு உறுப்பினர் ரவிராஜ் படுகொலை இன உறவுக்கு பாதகமாக அமைந்தது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 34) -சிவலிங்கம்

 வாசகர்களே,
கடந்த வார கட்டுரையுடன் 2006ம் ஆண்டு பிரபாகரனால் வழங்கப்பட்ட   மாவீரர் தின உரையையும் இவ் இணையத்தில் கேட்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.
இவ் உரை இரண்டாவது ஜெனீவா சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்த பின்னணியில் இடம்பெற்றிருந்தது.
இப் பேச்சுவார்த்தைகளில் சர்வதேச சமூகமும் தனது சக்தியைச் செலவிட்டிருந்தது.
எனவே அவர்களின் முயற்சியும் தோல்வி அடைந்தது என்றே நாம் கொள்ளவேண்டும்.
முக்கியமாக அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், யப்பான் ஆகிய நாடுகளின் ஈடுபாடு பயனற்றதாகியது எனக் கொள்ள முடியுமா? அல்லது  அதற்கு ஒரு விலை உண்டு என நாம் கருதலாமா?
அவ்வாறானால்  இத் தோல்வியைத் தொடர்ந்து  ஆரம்பித்த போரும்   அதன் முடிவுகளும் அதில் ஈடுபட்ட இரு தரப்பாருக்கும் ஏற்கெனவே தெரிந்த ஒன்றுதான்.
எந்த மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும் போராளியாக, பாதுகாவலனாக இருப்பதாக கூறி போராட்டத்தை நடத்திய விடுதலைப்புலிகள்  அம் மக்களில் பல லட்சம் பேரைக் காவு கொள்ளும்   உக்கிரமான போரை  நடத்த ஏன் முனைந்தார்கள்?
அதே போன்று இலங்கையின்  இறைமையைப் பாதுகாப்பதாகக் கூறி பயங்கரவாத்த்தின் பிடியிலிருந்து நாட்டைப் காப்பாற்றுவதாகக் கூறி தனது பிரஜைகளை  படுகொலை செய்யும் போருக்கு இலங்கை அரசு முடிவு செய்தது பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவா?
அல்லது தேசிய இனப் பிரச்சனை என்ற ஒன்று இலங்கையின் அரசியல் வரலாற்றில் இனிமேல் இல்லை என்ற முடிவின் வெளிப்பாடா?
இரண்டாவது ஜெனீவா பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில் நிலமைகள் ராணுவ தலையீட்டினை அதிகரிக்கலாம் என நோர்வே தூதுவர் கருதினார்.
இதன் காரணமாக நோர்வேயின் சமாதான முயற்சிகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே அமைந்தது.
இருப்பினும் நோர்வே தொடர்ந்து இதில் ஈடுபடுவது அமெரிக்கர், இந்தியர், கூட்டுத் தலைமை நாடுகள் என்பன நோர்வேயினை தொடர்ந்து  ஊக்கப்படுத்தியதால்  மேலும் ஈடுபட வைத்தது.
இலங்கை அரசும் தமது வெவ்வேறு நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நோர்வேயினரின் பங்களிப்பை நிறுத்தவும் தயாராக இருக்கவில்லை. ஆனால் வெவ்வேறு தரப்பார் மூலமாக நோர்வேயைத்  திட்டித் தீர்த்தார்கள்.
060222geneva0  கூட்டமைப்பு உறுப்பினர் ரவிராஜ் படுகொலை இன உறவுக்கு பாதகமாக அமைந்தது!!  (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 34) -சிவலிங்கம் 060222geneva0(The LTTE delegation led by Anton Balasingham, sat across a four sided table from Ministers of the new Rajapakse government in Colombo. Norwegians and the Swiss hosts sat on a third side and the truce monitors completed the square.)
ஜெனீவா பேச்சுவார்த்தைகள் முறிவடைந்த சில நாட்களுக்குள்ளாகவே போர் ஆரம்பமானது.
2006ம் ஆண்டு நவம்பர் 2ம் திகதி கிளிநொச்சியில் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் 5 பொதுமக்கள் இறந்தனர். வைத்தியசாலையும் தாக்குதலுக்குள்ளாகியது.
இதனால் நோயாளிகள் பயத்தினால் வெளியேறினார்கள். இத் தாக்குதல் சர்வதேச மனிதநேய சட்டங்களுக்கு முரணானதாக அமைந்திருந்தது.
இரு சாராரும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என கூட்டுத் தலைமை நாடுகள் அறிக்கை விடுத்தன.
நிலமைகள் மோசமடைந்தன. நவம்பர் 8ம் திகதி கடற்கரைக் கிராமமான கதிரவெளியிலிருந்த அகதிகள் முகாம் ராணுவ ஏவுகணைகளால் தாக்கப்பட்டது.
இதனால் 50 அகதிகள் கொல்லப்பட்டதோடு, 135பேர் காயமடைந்தனர். அதற்கு அருகாமையில் புலிகளின் முகாம் இருந்நதாக அரச தரப்பில் கூறப்பட்ட போதிலும் கண்காணிப்புக் குழுவினரின் விசாரணையில் அதில் உண்மையில்லை என்பது தெரியவந்தது.
இவ் வாகரைச் சம்பவம் குறித்து ராணுவ தரப்பு  சாட்டுகளைக்  கூறி தப்பித்துக்கொள்ள முடியாது. இதேபோன்ற சம்பவங்களை அதாவது பொதுமக்களின் மரணங்களை அது தமிழரோ முஸ்லீம்களோ அல்லது சிங்களவரோ அதில் வேறுபாடு இல்லாமல் அவற்றைத் தமது அரசியல் லாபத்திற்காக புலிகள் பயன்படுத்தினர்.
08_11_poonakary_09  கூட்டமைப்பு உறுப்பினர் ரவிராஜ் படுகொலை இன உறவுக்கு பாதகமாக அமைந்தது!!  (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 34) -சிவலிங்கம் 08 11 poonakary 09(Sri Lanka Monitoring Mission (SLMM) Major General Lars Johan Sølvberg and his delegation who were visiting the Liberation Tigers of Tamil Eelam (LTTE) controlled Pooneryn jetty)
வாகரைச் சம்பவ தினத்தன்று பூனேரியில் (Pooneryn)   கண்காணிப்புக்குழுவின் தலைவர் லார்ஸ் சொல்பெர்க்   (Lars Solvberg) ராணுவ தாக்குலிருந்து மயிரிழையில் தப்பினார்.
ஏ 9 பாதை மூடப்பட்டதைத் தொடர்ந்து மாற்று வழிகள்  மூலம் உணவுகளை எடுத்துச்   செல்லும் வாய்ப்புகளைக்  கண்டறிவதற்காக அரச சம்மதத்துடன் அவர் அங்கு சென்றார்.
அவர் அங்கு நிற்பது ராணுவத்திற்கு நன்கு தெரியும். பூனேரித் துறைமுகம் பாவனைக்கு உகந்ததாக உள்ளதா? என்பதனை உறுதிப்படுத்தவே அவர் அங்கு சென்றார்.
அங்கு நடந்த தாக்குதலைத் தொடர்ந்து அவர் பதுங்கு குழிக்குள் மறையவேண்டி ஏற்பட்டது. அதன் பின்னர் புலிகளின் உதவியுடன் தமது இருப்பிடத்திற்குச் சென்றார்.
08_11_poonakary_06  கூட்டமைப்பு உறுப்பினர் ரவிராஜ் படுகொலை இன உறவுக்கு பாதகமாக அமைந்தது!!  (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 34) -சிவலிங்கம் 08 11 poonakary 06
HoM seeking refuge at an LTTE bunker in Pooneryn
இச் செய்தியைக் கேள்வியுற்ற எரிக் சோல்கெய்ம் இத் தாக்குதல் அங்குள்ளவர்களைக் கொல்லவே என்ற முடிவுக்கு வந்த அவர் ஒருவேளை அத் தாக்குதலை நடத்தியவர்களுக்கு கண்காணிப்புக்குழுத் தலைவர் அங்கிருப்பது தெரியாமல் இருக்கலாம் என்றார்.
அரசாங்கம் இச் சம்பவத்திற்கு மன்னிப்புக் கோரியதோடு வழமைபோலவே எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவம் இடம்பெறாமல் தவிர்ப்பதாகவும் தெரிவித்தனர்.
இச் சம்பவம் குறித்து கண்காணிப்புக் குழுவின் உறுப்பினரான ஜொன் ஒஸ்க்கர்  ( Jon Oskar )தெரிவிக்கையில் அரசாங்கத்திற்கும், கண்காணிப்புக் குழுவிற்குமிடையே காணப்பட்ட  நெருக்கடியான உறவை இது உணர்த்தியதாகவும், குறிப்பாக பாலித கோகனவுடனான உறவினை இது பிரதிபலித்தது என்றார்.
11_11_06_raviraj_06  கூட்டமைப்பு உறுப்பினர் ரவிராஜ் படுகொலை இன உறவுக்கு பாதகமாக அமைந்தது!!  (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 34) -சிவலிங்கம் 11 11 06 raviraj 06
இவை ஒரு புறம் தொடர அரசியலில் மேலும் துக்கமான சம்பவங்கள் தொடர்ந்தன்.
2006ம் ஆண்டு நவம்பர் 10ம் திகதி கூட்டமைப்பின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் அவரது மெய்ப்பாதுகாவலருடன் படுகொலை செய்யப்பட்டார்.
மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் படுகொலை செய்யப்பட்ட இரண்டாவது கூட்டமைப்பு உறுப்பினராக அவர் காணப்பட்டார்.
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே மூன்று மொழிகளிலும் சரளமாக பேசக் கூடிய ஒருவர் அவர்.
அவ்வாறான மிதவாத கருத்துடைய, சிங்கள மக்கள் மத்தியிலேயும் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய ஒரு சிலரில் அவரும் ஒருவர். அவர்களின் மொழிகளுக்கு அப்பால் இவ்வாறானவர்களின் குரலை ஒடுக்குவது அரசின் தேவையாகவும் இருந்தது எனக் கூறப்பட்டது.
இவரது மரணம் தொடர்பான விசாரணைளை நடத்துவதற்கு பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்து பொலீசாரின் உதவியை மகிந்த கோரியிருந்தார்.
இதிலிருந்த வேடிக்கை என்னவெனில் உள் நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை விசாரிக்க அவர் ஓர் ஆணைக்குழுவை நியமித்திருந்தார்.
ரவிராஜின் மரணத்தை விசாரிக்க பிரித்தானிய பொலீசாரைக் கோரும் ஜனாதிபதி, நாட்டின் மனித உரிமை மீறல்களை விசாரிக்க நியமித்த குழுவில்  எவ்வாறான நம்பிக்கை  கொண்டுள்ளார் என்ற கேள்விகள் எழுந்தன.
அத்துடன் வெளியாரின் உதவியின்றி அரசினால் நியாயமான விசாரணைகளை மேற்கொள்ள முடியாது என்பது புலனாகியது.
இப் பின்னணியில் ஏ 9 பாதையை பரீட்சார்த்த முறையில் முகமாலையில் திறக்கப்போவதாக நவம்பர் 19ம் திகதி அரசு அறிவித்தது.
நவம்பர்  21ம் திகதி கூட்டுத்  தலைமை நாடுகள் அமெரிக்காவில் மனிதாபிமானப் பிரச்சனைகள் குறித்து சந்திக்க இருந்த வேளையில் இவ் அறிவிப்பு வெளியாகியபோது  அதனைப் புலிகள் நிராகரித்தனர்.
அத்துடன் நவம்பர் 16ம் திகதி அரசு தனது வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டியிருந்தது. அதில் பாதுகாப்பு செலவினங்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் 45 சதவீத அதிகரிப்புக் காணப்பட்டது. இவை போருக்கான ஆயுதங்கள் கொள்வனவுக்கான முயற்சி எனக் கருதப்பட்டது.
jonn  கூட்டமைப்பு உறுப்பினர் ரவிராஜ் படுகொலை இன உறவுக்கு பாதகமாக அமைந்தது!!  (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 34) -சிவலிங்கம் jonnUN’ special advisor on children and armed conflicts Allan Rock
இத் தருணத்தில் ஐ நா சபை செயலாளரின் விசேட பிரதிநிதி அலன் றொக்   ( Allan Rock ) 10 நாள் விஜயத்தில் இலங்கையில் தங்கியிருந்தார்.
புலிகள் தொடர்ந்தும் சிறுவர்களை ஆயுதக்குழுவில் இணைப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. அத்துடன் கருணா குழுவினர் ராணுவத்தின் உதவியுடன் அரச தரப்பிற்காக சிறுவர்களை ஆயுதக் குழுவில் இணைப்பதாக சாட்சியங்களும் அவருக்குக் கிடைத்தன.
அவரும் தனது அறிக்கையை ஐ நா செயலாளருக்கு ஜனவரியில் வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் ஏ 9 பாதை திறப்பு பற்றிய அரச அறிவித்தல் வெளியாகியது.
கூட்டுத் தலைமை நாடுகள் வெளியிட்ட அறிக்கையில் கண்காணிப்புக் குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்துவது இரு தரப்பினரின் கடமை எனவும், குறிப்பாக ஏ 9 பாதை திறப்பது முக்கியமானது எனவும் தெரிவித்திருந்தது.
நவம்பர் மாவீரர் தின உரையில் போர் நிறுத்த ஒப்பந்தம் வலுவிழந்துவிட்டது எனவும், அரசு பொருளாதார முனையிலும், ராணுவ முனையுமாக இரு வழியில் தமிழ் மக்கள் மீது போர் தொடுத்துள்ளது எனவும் கூறி சர்வதேச அரசுகள் தமிழ் மக்களின் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டுமென பிரபாகரன் கோரினார்.
2006ம் ஆண்டு டிசம்பரில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அரசியல் தீர்வை நோக்கிச் செல்லும்படி மகிந்தவிற்கு அழுத்தம் கொடுத்தார். தாம் டிசம்பர் மாத மத்தியில் அதிகார பரவலாக்கல் அடிப்படையில் இடைக்கால தீர்வு ஒன்றை முன்வைக்கப்போவதாக மகிந்த தெரிவித்திருந்தார்.
72686919  கூட்டமைப்பு உறுப்பினர் ரவிராஜ் படுகொலை இன உறவுக்கு பாதகமாக அமைந்தது!!  (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 34) -சிவலிங்கம் 72686919
ஆனால் மாவீரர் தின உரை முடிவடைந்து நான்காம் நாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபய ராஜபக்ஸ படுகொலை முயற்சியிலிருந்து மயிரிழையில் தப்பினார்.
ராஜபக்ஸ சகோதர்கள் குறித்து மேற்குலக ராஜதந்திரி ஒருவர் தெரிவிக்கையில் பஸில் நேரடியாக எதையும் பேசுபவர். தினசரி அரசியலை நீண்ட நோக்குடன் நட்புறவுடன் பேசுபவர். அவருடன் இலகுவில் பேச முடியும். ஆனால் அவர் மிகவும் தந்திரமாக பேசுபவர். அத்துடன் இலகுவில் உணர்ச்சி வசப்படுவார்.
கோதபய மிகவும் இறுக்கமானவர். மாற்றமடைவதற்குத் தயங்குபவர். பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அல்லது பேச தயங்குபவர். ஓன்றை அவர் தீர்மானித்துவிட்டால் அதனை விளங்கப்படுத்தும் மனநிலைக்கு அவர் சென்றுவிடுவார்.
அவர் மற்றவர் சொல்வதைக் கேட்பதை விட பேசுவதே அவரது நடைமுறையாகும். இது ஒரு வழியில் வெற்றியை இட்டுச் செல்வதற்கான வழிமுறையாக கொள்ளக்கூடும்.
22th-opedmahinda_-photo-n-ram  கூட்டமைப்பு உறுப்பினர் ரவிராஜ் படுகொலை இன உறவுக்கு பாதகமாக அமைந்தது!!  (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 34) -சிவலிங்கம் 22TH OPEDMAHINDA  Photo N Ram
மகிந்த அரசியலில் கவரக்கூடியவர். ஆனால் கபடம் நிறைந்தவர். பகிடியாக அவர் காணப்படுவார் ஆனால் அவர் பல விதங்களில் குழப்பம் நிறைந்த மனிதர்.
அவரது சகோதர்கள் இல்லாமல் அவரால் முன்னேற முடியுமா? என்பது சந்தேகமே.
ஆனால் அவரை யாராவது அவமானப்படுத்தினால் அல்லது அவரது சகோதர்ர்கள் மீது கைவைக்க எண்ணினால் அது அவரது தனிப்பட்டதாகிவிடும். அதற்கு ஓர் அர்த்தம் இருக்கும்.
நான் 2005ம் ஆண்டு பிரபாகரனுக்கு எனது நேசக் கரத்தை நீட்டினேன். ஆனால் அவர் எனது சகோதரரை படுகொலை செய்ய முயற்சித்துள்ளார். சரி. நான் யார்? என்பதை அவருக்கு காட்டுகிறேன் என்பது போன்று சிந்திப்பவர்.
இத் தருணத்தில் நோர்வே விசேட தூதுவர் ஜொன் ஹன்சன் பவர்  ( Jon Hanssen Bauer ) இலங்கை திரும்பினார்.
சமாதான முயற்சிக்கான வாய்ப்புகள் மிகவும் மோசமான நிலையிலிருந்தது. புதிய பேச்சுவார்த்தை முயற்சிகளைக் கண்டறிவதை விட போரிலேயே அரசின் கவனம் சென்றது.
அவரது வருகைக்கு முன்பதாக இலங்கையிலிருந்து வெளியாகும் டெய்லி நியூஸ் பத்திரிகை கருணா இன் செவ்வி ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில் எரிக் சோல்கெய்ம் பாரிய அளவிலான தொலைக்காட்சி ஒன்றினை பிரபாகரனுக்கு வழங்கியதாகவும், அத்துடன் பாலசிங்கத்திடம் 16 மில்லியன் நோர்வே குரோன் பணம் கொடுக்கப்பட்டதாகவும்  பதிலாக புலிகள் தரப்பினர்   ஒஸ்லோவில் எரிக் சோல்கெய்ம் இற்கு வீடு வாங்கி கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இவற்றை நோர்வே நிராகரித்திருந்தது.
( மீண்டும் அடுத்த வாரம் தொடரும்)
Erik Solheim அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள். தொகுப்பு : வி. சிவலிங்கம்
தொடரும்… (Thanks… ILAKKIYAA Inaiyam…) -தொகுப்பு… கி.பாஸ்கரன், சுவிஸ்.