lørdag 25. juli 2015

நீதியை நிலைநாட்டுங்கள்


நீதியை நிலைநாட்டுங்கள் அப்பொழுது எல்லாம் நமக்கு கிடைக்கும்!
உறவுகளே! இது இயேசுவின் பொன்மொழியாகும். நமது தமி ழனத்தின் நியாயமான  கோரிக்கைகள், அநியாயமாக நசுக்கப்ப ட்டுள்ளது. அதை நசுக்கும் கைங்காரியத்தில் மகிந்தாவின் அரசு க்கு, சர்வதேசம் முழுவதும், யுத்த தார்மங்களை மீறி, நச்சு வாய்வு பிரயோகித்தாவது விடுதலைப்புலிகளை அழிக்கும் நோக்கில் அப்பாவி பொது மக்களை இலட்சக்கணக்கில் கொ ன்று குவித்ததை  நாம் அறிவோம், மஹிந்தரை எப்படியாவது திருப்திபடுத்தி, இலங்கை அரசாங்கத்தை, தமது மேற்குலக தாராண்மை வாத பொருளாதார ஒழுங்கு முறைக்குள் கொண் டுவந்துவிடாலாம் என்ற கனவில் மேற்குலகு தமிழினஅழிவை கவனத்தில் எடுக்கவில்லை. மஹிந்தர் தாம் நினைத்தவைக்கு மாறாக விடாது சீனாவைப்பற்றிகொண்டபடியால், மஹிந்தா வை ஆட்சியில் இருந்து இறக்கி, அவரை பழிவாங்க சர்வதேச விசாரனையை கையில் எடுத்தது. ஆனால் தமது ஆட்டத்திற்கு ஏற்ப ரனில் அரசாங்கம் வாளைந்து கொடுத்தால், சர்வதேச நீதிவிசாரனை புஸ்வானமாகிவிடும். தென் இலங்கையில் எந்த அரசாங்கம் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும், நீதியான நியாய மான தீர்வை ஒருபோதும் தரப்போவதில்லை. ஆட்சி மாற்றம் பேசுவதற்கு வாய்ப்பை, அல்லது குறைந்த பட்ச தீர்வுக்கு வர லாம், ஆனால் முழுமையான விடுதலையை நாம் அனுபவிக்கப் போவதில்லை. தமிழனம் இப்போது வேண்டுவது சுயமான சுய பாதுகாப்போடு கூடிய ஒரு ஆட்சி வடிவம், அது ஒற்றை ஆட்சி க்குள் என்றாலும் பரவாயில்லை  என்ற‌ நிலைக்கு வந்துவிட்டா ர்கள். அதைக்கூட நாம் பெறப்போவதில்லை. எனவே சர்வதேச விசாரனை மூலமே ஒரு தீர்வுக்கு வர மேற்குலக நாடுகள் நிர்ப் பந்திக்கப்படலாம். அதற்கு தமிழர்காளின் ஒருமித்த குரல், செய ல்பாடுகள் மிக மிக முக்கியம். தமிழர் தரப்புக்குள் தற்போது மும்முனைப்போராட்டம் தொடங்கியுள்ளது. இந்த மும்முனை போராட்டத்திற்கு அப்பால் ஒரு சிங்கள அரசியல் கட்சியை வட க்கு கிழக்கு மக்கள் ஆதரிப்பார்கள் என்றால் அவர்கள் எடுக்கும் தீர்மானங்களை நாம் ஏற்பவர்கள் ஆகிவிடுவோம். சூதாட்டத் தில் பாண்டவர்கள் நாடு ஆட்சி உரிமை இழந்த கதையாக, ஒரு சூதாட்டமாக இந்த தேர்தல் அமையப்போகி ன்றது. ஒரு சிங்கள கட்சியை எக்காரணத்திற்காகவும் நாம் ஆதரிக்ககூடாது. அது வும் வீரம் செரிந்த நவாந்துறை மக்களுக்கு அழகல்ல! புலம் பெயர் நாவாய் மக்கள் யாவரும் சர்வதேச விசாரணை அதன் பின் வருகின்ற தீர்வின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். எனவே உங்கள் வாக்குகள் தமிழர் தரப்பையும் சர்வதேச விசாரணையும் பலப்படுத்துவதாக அமையட்டும். நன்றி

Ingen kommentarer:

Legg inn en kommentar