fredag 31. mars 2017

அதுதான் கண்ணதாசன் That Is Knnadasan.

   அதுதான் கண்ணதாசன் That Is Knnadasan.                                                               கவியரசு கண்ணதாசனை கவிஞன் என்று அழைப்பதைவிட  கஞ்சன் என்று அழைப்பதை நான் பெருமை யாக கொள்கின்றேன். வார்த்தைகளையும், சொற்களையும் மிக நேர்த்தியாக, ஓரிரு வரிகளுக்குள் தத்துவத்தை, அழகியல் அம்ச த்தை அள்ளிச் சொருகும் சொற் சிக்கனம், கவியரசு கண்ணதா சனை விட வேறு யார் இருக்கு முடியும் சொல்லுங்கள்! பேசுவது கிளியா? இல்லை பெண்னரசி மொழியா? கோயில் கொண்ட சிலையா இல்லை கொத்து மலர் கொடியா?  “பாடுவது கவியா? – இல்லை பாரிவள்ளல் மகனா? சேரனுக்கு உறவா? செந்தமிழர் நிலவா?” இரண்டிரண்டு வார்த்தைகளாய், எதுகை மோனை யாய், கேள்வி பதிலாய், சந்தத்தின் விந்தை தோய்ந்த அந்த பாடல் அப்பப்பா கேட்டுக்கொண்டே இருக்கலமல்லவா.....
                                                                     

                                                 கண்ணதாசனின் கவிதை எழுதும் பாணி  அலாதியானது. அவன் ஒரு எழுத்துச் சித்தன், வார்த்தைகளில் அவனுக்கு முடிச்சு போடவும் தெரியும். போட்ட முடிச்சுக்களை  அவிழ்க்கும் கவிப்பக்குவமும்  அவனுக்கு கைவந்த கலை. கேள்வியும் எழுப்பி பதிலும் சொல்வதில் அவன் கில்லாடி. “ இந்த‌ புன்னகை என்ன விலை?” என்ற கேள்விக்கு அருமையான பதில் " என் இதயம் சொன்ன விலை"  என்று கவிஞன் விடை தருகி ன்றான். ஒரு அனுபவமிக்க சந்தை வியாபாரி போல இதய ங்களை விற்கவும், வாங்கவும் இவனை விட யாரால் முடியும்? இதயத்தை மட்டுமா விலை பேசினான்? கன்னியின் கண்ண ங்களை, கண்களை எல்லாவற்றையும் கூறு போட்டு விற்கும், கசாப்புக்கடை வியாபாரி போல, கவிஞன் இங்கே மாறுகி ன்றான். 
                                                         
  பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை தமிழ்மொழியில் பெயர்த்த தலையாய கவிஞருள் கண்ணதாசன் குறிப்பிடத்தக்கவன். அவன் கம்பனையும், பாரதியையும், பட்டி னத்தாரையும் மட்டும் அறிந்து வைத்தவனில்லை; அதற்கு மேலாக பாரசீக மேதைகளையும், மேலை நாட்டு அறிஞர்களை யும் அவர்தம் படைப்புகளையும் கரைத்துக் குடித்தவன் என்ற உண்மை புலப்படுகிறது கவிஞர் கண்ணதாசன் ஆங்கில இலக்கியத்தை கற்கவில்லை ஆனாலும் பிரான்ஸிஸ் வில்லியம் போர்டிலோன் (Francis William Bourdillon) என்ற ஆங்கிலக் கவிஞ னின்கவிதையடிகளை ஒத்த அதே கவிதையை கவிஞர் எழுதினார். ஆங்கில கவிஞன் எழுதிய கவிதை இது! 

                           The night has a thousand eyes, And the day but one; Yet the light of the bright world dies With the dying sun. The mind has a thousand eyes, And the heart but one: Yet the light of a whole life dies. When love is done. 

                                              அந்த கவிதை தமிழில் இதோ,,,,,,, “இரவுக்கு ஆயிரம் கண்கள், பகலுக்கு ஒன்றே ஒன்று அறிவுக்கு ஆயிரம் கண்கள், உறவுக்கு ஒன்றே ஒன்று” குலமகள் ராதை என்ற படத்திற்காக கண்ணதாசன் எழுதிய பாடலிது:

                                                                                   கவிஞர் கண்ணதாசன் ஒரு உளவியல் கவிஞன் உள்ளத்தின் உணர்வுகளை தெட்டத்தெளி வாக உணர்ந்தவன். உள்ளத்தின் ஆழ் மன பதிவுகள் மனிதனின் நடவைக்கைகளை பாதிக்கின்றது என்ற உளவியல் தந்தையான சிக்மன்ட் ஃப்ரைட்டின் உளவியல் தத்துவத்தை மிக எளிதாக தனது பாடலில் வெளிப்படுத்தினார்..உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை என்றுரைத்த கவிஞன் “தெய்வம் என்றால் அது தெய்வம் – அது சிலையென்றால் வெறும் சிலைதான்உண்டு என்றால் அது உண்டு – இல்லை என்றால் அது இல்லை” என்ற வரிகளில் மிகப்பெரிய சூட்ச மத்தை எளிமையான வார்த்தைகளில் உணர்த்தியிருக்கின்றார் கவிஞர் கண்ணதாசன்.  “உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்கு  உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை   உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்கு உள்ளத்தும் இல்லை புறத்தில்லைதானே?” திருமூலரின் திருமந்திரத்தில் காணப்படும் இந்த வாழ்க்கை சித்தாந்தத்தை பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் சொல்வதற்கு கண்ணதாசனால் மட்டுமே முடிந்தது.
                                                                                கவிஞர் கண்ணதாசன் அனுபவக் கவிஞன். அனுபவ வாயிலாக அனைத்தையும் அறி ந்து கொள்ளும் ஒரு ஞானியாக கவிஞர் கண்ணதாசன் ஒருவ னால் மட்டுமே முடியும்.  “அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே” என்று பட்டினத்தார் பாடியதை இரண்டிரண்டு வார்த்தைகளாய் மாலையாய் தொடுத்து ஒரு பாடல் எழுதினான். வீடுவரை உறவு/ வீதிவரை மனைவி/ காடுவரை பிள்ளை/ கடைசிவரை யாரோ?தொட்டிலுக்கு அன்னை/ கட்டிலுக்குக் கன்னி/ பட்டினிக்குத் தீனி/ கெட்டபின்பு ஞானி – என்ற வரிகளை கேட்கையில் கண்ணதாச னின் அனுபவப் பாடம்தான் நமக்கு நினைவில் வரும். 

                                               கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என்று சொல்வதைப்போல, கெட்ட பின்புதான் கண்ணதாசனுக்கு ஞானமே பிறந்தது. அனுபவப் பள்ளி அவனுக்கு பயிற்றுவித்த பாட’மது’.  “ஒருவன் எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்ப டியெல்லாம் வாழ்ந்தவன் நான். ஆகவே இப்படித்தான் வாழ வேண்டுமென்று சொல்கிற யோக்கியதை எனக்குத்தான் இரு க்கிறது” என்று உரைத்தவன் அவன்.


                                                          சித்தாந்தத்தையும், வேதாந்தையும் ஐயம் திரிபற,  கவிஞன் கண்ணதாசன் ஒருவனே அன்றி வேறு யாரல் தெளிவாக சொல்ல முடியும். உன் உள்ளத்தை தோன்டி ஞானத்தை தேடு. அப்படி  தன்னைத்தானே தோண்டி தோன்டி  ஞானத்தெளிவு கண்டவன் கவிஞர் கண்ணதாசன்  ‘தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம், அது தெரியாமல் போனாலே வேதா ந்தம்’ என்று சொல்லும் போதும், ‘கள்ளிக்கேது முள்ளில் வேலி போடி தங்கச்சி, காட்டுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி’ என்று புலம்பும்போதும் ஒரு பாம்பாட்டிச் சித்தனா கத்தான் நமக்கு காட்சி தருகிறான் அவன்.
                                           

                                                                   ஒளிவு மறைவு இல்லாதவன் என்று சொன்னால் அது கண்ணதாசனுக்குத்தான் பொருந்தும். உள்ளதை உள்ளதுபோல் சொல்வதற்கு ஓர் அசாத்திய துணிச்சல் வரவேண்டும். இந்த வெளிப்படைத்தன்மையால் கண்ணதாசன் பெற்ற ஆத்மார்த்த ரசிகர்கள் ஆயிரமாயிரம்.. “போற்றுபவர் போற்றட்டும் புழுதிவாரித் தூற்றுபவர் தூற்றட்டும்” என்று தைரியமாக‌   அவைகளை உதறித் தள்ளிவிட்டு அவன் மனதுக்கு சரியென்று பட்டதைச் செய்து முடிப்பது கவிஞர் கண்ணதாச னின் அசாத்திய துணிச்சலாகும் அந்த துணிச்சல் திராவிட பாசறையில் இருந்து தன்னைத்தானே புடம் போட்டுக் கொண்ட கண்ணதாசனிடம் சற்று மிகுதியாகவே காணப்பட்டது.  “நான் கவிஞனும் இல்லை/ நல்ல ரசிகனும் இல்லை/ காதலெனும் ஆசையில்லா/ பொம்மையும் இல்லை” இந்த வாக்குமூலத்தில் அவனது தன்னடக்கத்தை மட்டுமின்றி அவனது அந்தரங்க இயல்பையும் அவன் பிரகடனப்படுத்தி இருப்பதை நம்மால் காணமுடியும்.
                                                  

                                                                            கண்ணதாசனின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சாடுபவர்கள் இந்த பாடலின் வரிகளைத்தான் ஆயுதமாக முதலில் ஏந்துவார்கள்.  “ ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமகள் என் துணையிருப்பு” இந்த பாடல் இடம் பெற்ற படம். ரத்தத்திலகம் இந்த‌ படம் கண்ணதாசனின் சொந்தத் தயாரிப்பில் உருவானது. அவனே அப்படத்தில் தோன்றி அவனே பாடுகின்றான். . பாரசீக பெருங்கவிஞன் உமர்கய்யாமின் சுவையான வரிகள் இந்த பாடலில் வருகி ன்றது. உமர் கய்யாம் தன்னை மறந்த நிலையில் இறைவனை நினைத்து பாடிய பாடல்கள் ஏராளம். ஒவ்வொன்றுக்கும் ஒரு உட்பொருள் உண்டு. “கோப்பையிலே என் குடியிருப்பு” என்பது தாயின் கருவயிற்றில் குடியிருந்ததைக் குறிக்கும், “கோலமகள் என் துணையிருப்பு” என்பது தாயின் அரவணைப்பை குறிக்கும்  பாடலை இங்கே கேளுங்கள். 

                                                             கவிஞர் கண்ணதாசன் கவிதைகளும் பாடல்களும் சாகா வரம் பெற்றவை சிரஞ்சிவிதமானவை   இத்த னை குணங்களும் ஒருங்கே அமையப் பெற்றவன் கண்ணதா சன். ‘மானிட ஜாதியை ஆட்டி வைப்பேன்’ என்று அந்த காவியத் தாயின் இளைய மகன் பெருமை கொண்டதில் அர்த்தம் இருக்க த்தான் செய்கிறது. அவன் மறைந்து இத்தனை வருடங்கள் ஆன பின்பும் அவன் பாடல்களை நாம் அலசுகின்றோமே? அப்படி யென்றால் “எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்ற அவனது தீர்க்கதரிசனம் பலிக்கிறது என்றுதானே பொருள்?.   இரண்டாம் பாகத்தில் தொடரும்,,,,,,

                                                                                       பேசாலைதாஸ்        


Ingen kommentarer:

Legg inn en kommentar