lørdag 3. februar 2018

கிறிஸ்தவமும் அறிவியலும்!

கிறிஸ்தவமும் அறிவியலும்! பேசாலைதாஸ் B.A (Hones) M.A dip London.

(தேன் என்ற வலைப்பதிவில் வெளிவந்த இந்த கட்டுரை சில திருத்தங்களுடன் எழுதப்படுகின்றது.)
                                                     கிறிஸ்தவ இறையியல், கிரேக்க தத்துவத்தில் இருந்து கட்டப்பட்டது என்றால் அது மிகையாகாது!. பைபிள் தீர்க்கமான அறிவியல் எதையும் முன்வைக்கவில்லை.  மாறக கிறிஸ்தவம் பிற்போ க்கானது, அறிவியலுக்கு எதிரானது என்று வாதிடப்பட்டது. கிறிஸ்தவ மதத்தின் பெரும் பிரிவான கத்தோலிக்கத்துக்கு எதிராக, புரட்டஸ்தாந்து பிரிவினர் கடும் தாக்கத்தையும், இஸ்லாமியரின் வளர்ச்சிக்கு எதிராக, புதிய அறிவியல் கோட்பாடுகளுக்கு தடை போடவேண்டிய சூழல் அதற்கு இருந்தபடியால், அறிவியல் கோட்பாடுகளை எதிர்க்கவேண்டியதாயி ற்று, இருந்தபொதும், விவிலியத்தின் கதைகளிலிருந்தும் பாடல்கள்/கவிதைகளிலிருந்தும் எடுக்கப்பட்ட வரிகளிலிருந்து, அவை அரிஸ்டா ட்டிலின் அறிவியலுடன் இயைந்தவையாக இருந்தமையால், புவிமையக் கொள்கை (Geocentirc Model) கிறீத்துவ அறிவியல் கொள்கையாக உருவா க்கப்பட்டது. அந்த காலத்துக்கு அது பெரும் புரட்சிகர கோட்பாடாக இருந்தது. அன்றைய அறிவியலையும் பொது நம்பிக்கைகளையும் மத நம்பிக்கைகளையும் அது புரட்டிப்போட்டது. .

                                        கிறீத்துவத்தின் ஆரம்ப காலத்திலேயே அது அன்றைய அறிவியக்கத்தின் உச்சகட்ட கோட்பாடுகளை உள்வாங்கிக்கொண்டது. பிளேட்டோவும் அரிஸ்டாட்டிலும் அதன் அறிவுச்செயல்பாட்டின் பிரதான ஆதாரங்களாகினர். அலெக்ஸாண்ட்ரியாவின் கிளெமென்ட் , துவங்கி ,அகஸ்டின் , தாமஸ் அக்குவினாஸ்  போன்றவர்கள் கிரேக்க தத்துவ த்தின் மீது கிறீத்துவ இறையியல் உருவாக்கினார்கள்.. கிரேக்க தத்துவ த்தையும் இலக்கியத்தையும் ஏற்பதிலும் மறுப்பதிலும் வெவ்வேறு போ ப்புகளுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன. சிலர் கிரேக்க இலக்கிய புத்தகங்களை நூலகங்களிலிருந்து அகற்றினர். ஆயினும் கிரேக்க இல க்கியத்தையும் தத்துவத்தையும் நவீன மேற்குக்கு கொண்டு சேர்த்ததில் கிறீத்துவம் முதன்மையான இடத்தை பெறுகிறது.

                                                                                இன்றுவரைக்கும் மேற்கின் தத்துவம் கிரேக்க தத்துவத்தின் நீட்சியாகவே அடையாளம்காணப்படுகிறது. மேற்குலகில் கிறீத்துவம் அக்காலங்களில் மிக முக்கிய, கிட்டத்தட்ட ஒரே, அறிவியக்கமாக இருந்துவந்தது. . சூரிய மைய வானியல் கொள்கையை (Heliocentrism) முன்வைத்த கோப்பர்நிக்கஸ் ஒரு கத்தோலிக்க மதப்ப ணியாளர். அவரின் கோட்பாடு கிறிஸ்தவத்திற்கு, பெரும் சவாலாக் மாறியது.  அதற்காக, கத்தோலிக்க சபை, இவர் விதிமீது  தீர்ப்பெழுதி யது. இவரது கோட்பாட்டை ஆதரித்த, கோபர்நிகஸ் மற்றும்
ஜியாடர்டொனோ புரூனோ, கோப்பர்நிக்கஸின், பல அடிப்படையான கத்தோலிக்க நம்பிக்கைகளையும் கடுமையாக விமர்சித்தார், மறுத்தார். ஏற்கனவே பிரிவினையின் மத்தியில் பதட்டமடைந்திருந்த கத்தோலிக்க த்தின் ‘இன்குயிசிஷனின்’ கரங்களில் சிக்கி இவர்கள்  சிதையேற்ற ப்பட்டனர். 
                                                           இதுபோலவே. கலிலேயோ ஒரு அற்புதமான அறிவியல் வல்லுனார்  ஆரம்பத்திலிருந்தே அவருக்குப் பல எதிரிகள். அவர் அரிஸ்டாட்டிலின் அறிவியல் கொள்கைகள் பலவற்றையும் நிரா கரித்தார். அரிஸ்டாட்டிலை பின்பற்றிய அறிஞர்களுடன் நேரடியாக மோதினார். மிகப் புகழ்பெற்ற பைசா நகரக் கோபுர பரிசோதனையை செய்து கனமான பொருட்கள் பூமியை நோக்கி விரைவாகச் செல்கி ன்றன எனும் அரிஸ்டாட்டிலின் கொள்கையை பொய்யாக்கினார். அதை மறுத்த அறிஞர்களை எள்ளி நகையாடினார்.. கலிலியோ கோப்பர்நி கஸின் கொள்கையை ஆதரித்தார். சூரிய மையக் கொள்கையும் கலிலேயோ அதற்கு ஆதரவாக முன்வைத்த வாதங்களும் அன்றைய அறிவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படாததாய் இருந்தது. அதற்கு கலிலேயோவின் தனிப்பட்ட ஆளுமையும் ஒரு காரணமாய் இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். அவரது கருத்துக்களை மறுத்தவர்கள் எவரும் எளிதில் அவரது எதிரியிகளாயினர். கத்தோலிக்கம் அன்றைய அறிவியக்கத்தின் மையத்தில் இருந்தது என்பதற்கு ‘கலிலேயோ விவகாரம்’ ஒரு ஆதாரம்.
                                                                                கடந்த நூற்றாண்டில் போப் இரண்டாம் அருள் சின்னப்பர் சிலுவைப்போர்கள், அடிமை வியாபாரம், யூத இன அழிப்பு போன்ற கத்தோலிக்கத்தின் பல்வேறு வரலாற்றுப் பிழைகளுக்கும் பல தருணங்களில் வெளிப்படையாய் வருத்தம் தெரிவித்துள்ளார். அவற்றில் முக்கியமானது கலிலேயோவிற்கு கிறீத்துவம் வழங்கிய தீர்ப்புக்கானது. கத்தோலிக்க கிறீத்துவமும், பாரம்பரிய பிரிவினை கிறீத்துவ சபைகளும் பைபிளை அறிவியல் நூலாக பாவிப்பதையும் அதிலுள்ள எல்லாவற்றையும் நேரடிப் பொருள் கொள்வதையும் பல நூற்றாண்டுகளாக கைவிட்டுவிட்டன. இதற்கான விதைகள் ஆரம்பகால இறையியலர்களான அகஸ்டினிடமிருந்தும், அக்குவினாஸிடமிருந்தும் பெறப்பட்டன எனபதுவும் குறிப்பிடத் தகுந்தது.

                                                                         நவீன மரபணுவியலை உருவாக்கிய கிரெகர் மென்டேல் (Gregor Mendel) ஒரு கத்தோலிக்க பாதிரியார். அறிவுச்செயல்பாட்டிற்கு புகழ்பெற்ற பிர்னோ(Brno) ஆசிரமத்தில் வளர்ந்த பீன்ஸ் செடிகளை ஆராய்ந்து அவர் மரபணு கோட்பாடுகளை உருவாக்கினார் சார்லஸ் டார்வின் இவரது ஆய்வைக் குறித்து அறிந்திருந்தார் என்பது பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

                                                நிக்கோலஸ் ஸ்டெனோ (Nicolas Steno) எனும் பிஷப் புவியமைப்பியலை (Geology ) உருவாக்கினார். பெல்ஜியத்தை சார்ந்த பாதிரியார் ஜியார்ஜ் லெமாத்ர் (Georges Lemaître ) நவீன வானியற்பியலின் முக்கிய கோட்பாடான ‘பெரும்வெடிப்பை’ (Big Bang) முதன் முதலில் முன்வைத்தவர். இயேசுசபை பாதிரியார்கள் (Jesuits) தொடர்ந்து பல அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்துவந்தனர். ஐசக் நியூட்டன் தன்னுடன் தனிப்பட்ட தொடர்புகளில் முக்கியமானவர்களாக இயேசுசபை பாதிரியார்களை குறிப்பிடுகிறார். 

                                                                    நிலநடுக்கம் குறித்த அறிவியல் (Seismology) இயேசு சபை அறிவியல் (The Jesuit science) என அழைக்கப்படுகிறது. லாஸரோ ஸ்பலன்ஸனி (Lazzaro Spallanzani) எனும் பாதிரியாரின் மனித உடல் செயல்பாடுகள் குறித்த கண்டுபிடிப்புகள் லூயிஸ் பாஸ்டியரின் (Louis Pasteur)புகழ்பெற்ற உயிரியல் கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டன. பல நூற்றுக்கணக்கான அறிவியல் வல்லுநர்கள் கிறீத்துவத்தின் நான்கு சுவர்களுக்குள்ளிருந்தும் வெளியே பொதுக் கிறீத்துவர்களிடமிருந்தும் உருவாகி வந்துள்ளனர்.  இவர்களில் பலரும் கிறீத்துவத்திடமிருந்து நேரடியாக நிதியும், ஆதரவும் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத் தகுந்தது. 
                                                                இந்த அறிவியல் இயக்கத்தின் நீட்சியாக இந்தியாவில் யூஜின் லெஃபான்ட் (Eugene Lafont) எனும் இயேசுசபை பாதிரியார் 1869ல் அறிவியல் வளர்ச்சிக்கான இந்திய கூட்டமைப்பை மகேந்திரலால் சர்க்காருடன் இணைந்து துவங்கினார். அவரது அறிவியல் உரைகள் இந்திய இளைஞர்கள் பலரையும் அறிவியலின் மின்னீர்ப்புக்குள் இழுத்துவந்தது. இந்தியாவின் பெருமைக்குரிய அறிவியல் அறிஞர்களான சர் சி.வி இராமன், கெ. எஸ் கிருஷ்ணன் மற்றும் ஜகதீஷ் சந்திரபோஸ் போன்றொர் தந்தை. லெஃபாண்டின் மாணவர்கள் என்பது குறிப்பிடத் தகுந்தது. இந்திய நவீன அறிவியல் இயக்கத்தின் உச்சம் அதுவாகத்தான் இருந்திருக்கும்.

                                             யோசித்துப் பார்த்தால் கலிலேயோ தீர்ப்பைப் போன்றதொரு வேறொரு பிழையை கத்தோலிக்கம் செய்ததாக நாம் வரலாற்றில் காணவில்லை. இரண்டாயிரம் வருடப் பாரம்பரியம் கொண்ட ஒரு அமைப்பு அது நானூறு வருடங்களுக்கு முன்பு செய்த ஒரு தவற்றிற்காக இன்றும் தீர்ப்பிடப்படுகிறது. கலிலேயோவிற்கு 200ஆண்டு களுக்குப் பின் கிறீத்துவம் வரலாற்றின் வேறொரு சவாலை சந்திக்க நேர்ந்தது. 1859ல் சார்லஸ் டார்வின் பரிணாமக் கொள்கையை முன்வை த்தார். அவருக்கு முன்னரே முழுமையடையாத வடிவங்களில் பரிணாமக் கொள்கை முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டுவந்தது. கிறீத்துவ பாதிரி யார் கிரெகர் மென்டேல் மரபணு அறிவியலின் முன்னோடியாக கருதப்படுகிறார். டார்வினின் முன்னோடி லமார்க் ஒரு கத்தோலிக்கர். டார்வினின் கொள்கைகள் பிரபலமானபோது  பல படித்த கிறீத்தவர்க ளும் கிறீத்துவ அறிவியல் வல்லுநர்களும் டார்வினை ஆதரித்தனர். அமெரிக்காவில் அசா கிரே(Asa Grey – https://en.wikipedia.org/wiki/Asa_Gray) எனும் கிறீத்துவ தாவரவியலாளர் பரிணாமம் கடவுளின் திட்டம் என்பதை முன்வைத்ததோடில்லாமல் டார்வினின் ‘ஆரிஜின்’ புத்தகத்தை அமெரிக்காவில் பதிப்பிக்கும் முயற்சியிலும் இறங்கினார். அதிகாரபூர்வமாக ஆங்கிலிக்கன் சபை அதை எதிர்த்தது. அவருக்கு இங்கிலாந்தின் அரசி வழங்கவிருந்த அங்கிகாரத்தை தடுத்தது.. ஆனால் சில பத்தாண்டுகளுக்குள்ளேயே நிலைமை மாறியது. 1884ல் பிரெடெரிக் டெம்பிள் (FrederickTemple – https://en.wikipedia.org/wiki/Frederick_Temple ) ‘மதத்துக்கும் அறிவியலுக்குமான உறவு’ எனும் தலைப்பில் ஆற்றிய பேருரையில் பரிணாமக் கொள்கை கிறீத்துவ நம்பிக்கைக்கு எதிரானதல்ல என்பதை முன்வைத்து பேசினார். 1896ல் அவர் ஆங்கி லிக்கன் சபையின் தலைமை மதகுருவாக நியமிக்கப்பட்டார். டார்வின் இறந்து 126 வருடங்களுக்குப் பிறகு 2008ஆம் ஆண்டு டார்வினிடம் மன்னிப்புக் கோரியது இங்கிலாந்து சபை.

                                                                     கத்தோலிக்கம் மிக மிக மெதுவாகவே எதிர்வினையாற்றியது. நூறு ஆண்டுகளுக்குப் பின் 1950ல் ஹியூமனி ஜெனரிஸ் (Humani Generis ) எனும் தலைப்பிட்ட கடிதத்தில் போப் பன்னி ரண்டாம் பயஸ் மனித உடல் பரிணாமவளர்ச்சியின்படி வருவதென்றும் ஆன்மாவை கடவுள் படைக்கிறார் என்றும் நம்புகையில் கிறீத்துவ நம்பி க்கைக்கும் பரிணாமக் கொள்கைக்கும் முரண்கள் இருக்க முடியாது என அறிவித்தார். மனிதனை வெறும் விலங்காக மட்டும் காணும் அறிவி யலை மதம் ஒருபோதும் ஏற்க முடியாது அல்லவா? டார்வின் தான் தொகுத்தெழுதிய உண்மையின் கனத்தை நன்குணர்ந்திருந்தார். அதை முற்றிலும் புரிந்துகொள்ள சிரமப்பட்டார். அவர் மனதின் ஆழத்தில் ஒரு முழுமையின்மை எஞ்சி நின்றது ‘இந்தக் கொள்கை மனித மனம் சென்றடைய முடியாத அளவுக்கு ஆழமானது. (அதை முழுதாய் புரிந்து கொள்வது) ஒரு நாய் நியூட்டனின் மூளையை யூகிப்பதுபோன்ற செயல் அது.’ என்றார் அவர். அந்த வெற்றிடத்தை மதம் நிரப்பியிருக்கக்கூடும்.

                                                                  இன்றைய அறிவியலை எதிர்கொள்ளும் கிறீத்துவம் அடிப்படையில் இரு வகையானது. ஒன்று நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொண்டு அவற்றின் வழியே இறையியலை யும் ஆன்மிகத்தையும் புதுப்பித்துக்கொள்ளும் அமைப்பு. இவற்றில் சிறந்த உதாரணமாக கத்தோலிக்க கிறீத்துவத்தை சுட்டிக்காட்ட முடியும். மேற்சொன்ன பல வரலாற்று உதாரணங்களிலும் திருச்சபை அறிவி யலை உள்வாங்கும் ஒரு அமைப்பாக மட்டும் இல்லாமல் புதிய அறிவுத்து றைகளை உருவாக்கிய அமைப்பாகவே இருந்துள்ளது என்பது தெளி வாகும். இன்றும் அதே பணி தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ‘போன்டிஃபிக்கல் அக்காடமி ஆஃப் சயின்ஸ்’ (The Pontifical Academy of Sciences) அதற்கான நேரடி உதாரணம். 

                                       ஸ்டிபன் ஹாக்கிங் (Stephen Hawking) போன்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த அறிவியல் நிறுவனம் வத்திக்கா னின் நேரடி முதலீட்டிலும் பிற நன்கொடைகளின் மூலமும் செயல்படு கிறது. அதன் தலைவரை போப் முன்மொழிகிறார். 1603ல் உலகிலேயே முதன்முதலில் முற்றிலும் நவீன அறிவியலுக்கென்று மட்டுமே நிறுவப்ப ட்ட Academy of the Lynxesன் வழியொட்டி பின் வந்த பல்வேறு போப்புகளால் புனரமைப்பு செய்யப்பட்டு 1936 முதல் சீராக இயங்கிவருகிறது. அதன் இன்றைய தலைவர், நோபல்பரிசுபெற்ற வெர்னர் ஆர்பர் (Werner Arber) கத்தோலிக்கமல்லாத ‘பிரிவினை கிறீத்துவ’ சபையை சார்ந்தவர். அதன் முக்கிய உறுப்பினர்களாக இந்துக்களும், இஸ்லாமியர்களும், யூதர்களும் உட்பட பல மதத்தினரும், நோபல் பரிசு பெற்ற அறிவியல் வல்லுனர்க ளும் உள்ளனர்.
                                      தூய அறிவியல் ஆய்வுக்காகச் செயல்படும் வேறெந்த மதசார்பற்ற அமைப்புகளையும் போலவே போப்பின் அறிவியல் அக்கா டமியும் செயல்படுகிறது. இதைப்போல வத்திக்கான் விண்ணாய்வ கத்தையும் (Vatican Observatory) சொல்லலாம். அதன் தலைவர் பிரதர். கீ கொன்சால்மங்கோ (Guy Consolmagno) ஒரு ஏசு சபை துறவியும் 2014க்கான கார்ல் சாகன் விருதுபெற்றவருமாவார். இன்றைய அறிவியக்கத்தில் தூய அறிவியல் ஆராய்ச்சிக்க்த் தன்னை அர்ப்பணித்திருக்கும் வேறொரு மத அமைப்பை காண்பது அரிது.

                                                                  இன்னொருபுறம் கத்தோலிக்கம் உட்பட்ட கிறீத்துவ சபைகளின் உறுப்பினர்கள் பலரும் பல கிறீத்துவ சபைகளும் இன்றும் பைபிள் முழுமுற்றாக உண்மையானது எபதை நம்பி வருகின்ற னர். அமெரிக்காவில் இவர்கள் ஒரு இயக்கமாகவே செயல்படுகின்றனர். படைப்புவாதத்தை (Creationism) பரிணாமக் கொள்கைக்கு மாற்றாக இவர்கள் முன்வைக்கிறார்கள். புவி வெப்பமாதலை (Global Warming) அறி வியல் அல்ல என மறுக்கிறார்கள், பூமி சுமார் ஆறாயிரம் வருடங்களுக்கு முன்பு பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல படைக்கப்பட்டது என நம்புகிறார்கள், சில கிறீத்துவ சபைகள் நவீன மருத்துவத்தையே மறு க்கிறார்கள். உயிர்போகும் நிலையில்கூட மருத்துவத்தை இவர்கள் நாடுவதில்லை. இதுவும் கிறீத்துவத்தின் இன்னொரு முகமே. 

                                    நிரூபணவாத அறிவியல் கண்டிருக்கும் உச்சங்களை கணக்கில் கொண்டால் இவை அனைத்துமே மூட நம்பிக்கைகள் என்றே வரையறுக்க முடியும். ஆயினும் இவர்கள் அரசியல் மற்றும் பணபலம் கொண்ட அமைப்புகளாக இருப்பதால் இவர்களும் ஒரு தவிர்க்கமுடியாத தரப்பாக இருந்துவருகின்றனர். கிறீத்துவ இறையியலின் பிதாமக ன்களில் ஒருவரான அகஸ்டின் நான்காம் நூற்றாண்டிலேயே துவக்க நூலில் (ஜெனஸிஸ்) வரும் படைப்பு கதை உண்மையானதல்ல என குறிப்பிடுகிறார். – அவரின் நோக்கில் கடவுள் அனைத்தையும் ஒரே கணத்தில் உருவாக்கினார்.-

                                          அறச்சிக்கல்கள் கொண்ட ஆய்வுகளை அறிவியல் கைகொள்ளும்போது கிறீத்துவம் அதனுடன் நேரடியாக மோதுகிறது. தன்னை ஒரு அறிவார்ந்த அதேநேரம் அறம் பேணும் ஒரு நிறுவன மாகவும் அது அமைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு மதமாக அது அறத்தை காப்பதையே முதன்மையான பணியாக கொள்ளமுடியும். உதாரணமாய் செயற்கையாக ஆய்வகத்தில் கருத்தரிக்கச்செய்து அதைக் கொன்று குருத்தணுவை அறுவடை செய்யும் ஆய்வுகளை கிறீத்துவம் கடுமையாக எதிர்க்கிறது. அதே சமயம் பிற அறவழிகளில் செய்யப்படும் குருத்தணு ஆய்வுகளை கிறீத்துவம் கொள்கை ரீதியாக ஆதரிப்பது மட்டுமல்ல அதற்கு பண உதவியும் செய்துள்ளது. 

                                                  பெண்ணின் முட்டையும் ஆணின் விந்தணுவும் சேர்கையிலேயே ஒரு மனித உயிரும் ஆன்மாவும் உருவாகிவிடுகிறது என்பதை கிறீத்துவம் நம்புகிறது. ஒரு மனித கருத்தரிப்பு எப்போது நடக்கிறது என்பதில் அறிவியலும் இதையே நம்புகிறது. எனவே ஆய்வ கத்திலே உருவானாலும் அக்கரு மானுட இனத்தின் ஒரு பிரதிநிதி என்றே அதைக் காண்கிறது கிறீத்துவம். இதே காரணத்திற்காக கருக்கலைப்பும் தீவிரமாக எதிர்க்கப்படுகிறது. கருத்தடைகூட அறம் சார்ந்த காரணங்க ளுக்காகவே கிறீத்துவத்தால் மறுக்கப்படுகிறது. மிகக் குறைந்த விலக ல்களே கருக்கலைப்பிற்க்கு வழங்கப்படுகிறது.  அறிவியலை ஆதரிப்ப தற்கும் இவற்றிற்கும் தொடர்பில்லை. உதாரணமாய் இந்தியாவில் குழந்தை ஆணா பெண்ணா என்று அறிவதை அரசு தடை செய்துள்ளது. இது ஒரு அறம் சார்ந்த சட்டம். அது அறிவியலுக்குப் புறம்பானதல்ல மாறாக கருவின், குழந்தையின் உரிமையை பாதுகாக்கும் அறம் சார்ந்தது.

                                                     கிறீத்துவத்திற்கு இன்னொரு பக்கமும் உண்டு, அது வெறும் வழிபாட்டு மதமாக மட்டுமே இயங்கும் தன்மையும் கொண்டது. பரவலாக அறிவியல் சூழல் இல்லாத சமூகங்களில் செயல்படும் கிறீத்துவம் இப்படியானது. சமகால இந்திய கிறீத்துவத்தை இப்படி ஒன்றாக வகையறை செய்ய முடியும். அதன் அறிவுச்செயல்பாடு என்பது கல்வி நிறுவனங்களை நடத்துவதும் சில கலாச்சார ஆய்வுகளை செய்வதிலும் நின்றுவிடுகிறது.

                                                                       ‘இறைநம்பிக்கையும், அறிவும் (Reason) உண்மையை தியானிக்கும் பொருட்டு மனித ஆன்மா உயர்ந்தெழ உதவும் சிறகுகள்’ என போப் இரண்டாம் ஜான் பால் (John Paul II) கூறுகிறார். (Fides et Ratio: On the Relationship Between Faith and Reason) கடவுள்நம்பிக்கை அறிவுக்குப் புறம்பானதாய் இருக்கத் தேவையில்லை மேலும் அறிவியல் மட்டுமே நம் வாழ்வின் எல்லா பக்கங்களையும் நிரப்பிவிடுவதுமில்லை.


                                                     ஷசாம் எனும் ஒரு குறுஞ்செயலி(App) உள்ளது. நீங்கள் ஒரு பாடல் துண்டை அதற்கு போட்டுக் காட்டினால் அது அந்தப் பாடலை அடையாளம் கண்டுகொள்ளும். அப்பாடல் குறித்த எல்லா தக வல்களையும் பாடல் வரிகளையும் உங்களுக்குக் காண்பிக்கும். ஆனால் அந்தச் செயலியால் ஒருபோதும் அந்தப் பாடலை அனுபவிக்கவோ உணரவோ முடியாது. எந்த அழகிய காட்சியையும் படம்பிடிக்கும் ஒரு கருவியால் அதன் ரம்மியத்தை மதிப்பிட முடியாது. கவிதையை ஒரு இயந்திரம் பகுத்தாய்ந்து அதன் பல்வேறு கூறுகளைச் சொல்ல முடியும். அதை அசைபிரிந்த்து அர்த்தம் சொல்லலாம், அதன் வகைமை என்ன என்று கண்டுபிடிக்கலாம். அதன் மொழிபெர்யர்ப்பை, ஏன் அர்த்தத்தைக் கூட சொல்ல லாம் ஆனால் அந்தக் கவிதையை உணர முடியாது. அறிதலும் உணர்தலும் மனிதனுக்கு இரு பெரும் அனுபவங்கள். அறிதலும் உணர்தலும் ஒன்றை ஒன்று நிறைவு செய்கின்றன. அறிவற்ற உணர்தலும் உணர்வற்ற அறிதலும் முழுமையடையாதவை. தன் தாய் யார் என அறிவியலின் துணை கொண்டு ஒரு மனிதன் அறிய முடியும் ஆனால் அதை அவன் உளமாற உணரும்போதே அந்த உண்மை மழுமைபெறுகிறது. 

                                                            மதமும் அறிவியலும் உண்மையைத் தேடும் மனித ஆன்மாவின் இரண்டு சிறகுகளாய் செயல்பட முடியும் என்பது இதை முன்வைத்துதான். மனித உணர்வென்பது வெறும் நரம்புக்கூட்டு த்தொகையின் எதிர்வினைகள் என்று அறிவியல் சொல்லுமானால் அதை இயக்கும் மென்பொருளாக வரலாறும் கலாச்சாரமும், மொழியும், சிந்த னைப்போக்குகளும் உள்ளன என்பதை ஆன்மிகம் கூறும். அவற்றை தொகுக்கவும் நெறிப்படுத்தவும் மதம் செயல்படுகிறது. அறிவியலையும் ஆன்மிகத்தையும் இணைக்கும் சாத்தியங்களை கிறீத்துவம் கொண்டி ருந்தாலும் நடைமுறையில் அந்த ஒருங்கிணைவிற்கான ஒரு உலக சக்தியாக அது இன்னும் முழுமையடையவில்லை என்பதே உண்மை.

Ingen kommentarer:

Legg inn en kommentar