tirsdag 19. februar 2019

கண்ணதாசனின் பாடல்களில் இலக்கியப்பார்வை தொடர் மூன்று!

கண்ணதாசனின் பாடல்களில் இலக்கியப்பார்வை தொடர் மூன்று!
கண்ணதாசனின் திரை இசைப்பாடல்களில் இலக்கியப்பார்வை என்ற தலைப்பில் நான் எழுதும் மூன்றாவது தொடரில் உங்களை சந்திப்பதில் அளவிலா மகிழ்ச்சி! இன்றைய தொடரிலே பட்டிணத்தாரின் செய்யுள் ஒன்றை கவிஞர் மிக எளிதான முறையில் பாமரமக்கள் புரிந்து கொள்ளும்படியாக எழுதியதை இங்கு அவதானிப்போம்!
கவிஞர் கண்ணதாசன் ஒரு அனுபவக் கவிஞன். அனுபவ வாயிலாக அனைத்தையும் அறி ந்து கொள்ளும் ஒரு ஞானியாக கவிஞர் கண்ணதாசன் ஒருவ னால் மட்டுமே முடியும்.
“அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழியம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மியிரு
கைத்தலம் மேல்வைத்தழும்மைந்தரும்சுடு காடுமட்டே
பற்றித் தொடரும், இருவினைப் புண்ணிய பாவமுமே மட்டுமே ” என்று பட்டினத்தார் பாடியதை இரண்டிரண்டு வார்த்தைகளாய் மாலையாய் தொடுத்து ஒரு பாடல் எழுதினான். வீடுவரை உறவு/ வீதிவரை மனைவி/ காடுவரை பிள்ளை/ கடைசிவரை யாரோ?தொட்டிலுக்கு அன்னை/ கட்டிலுக்குக் கன்னி/ பட்டினிக்குத் தீனி/ கெட்டபின்பு ஞானி – என்ற வரிகளை கேட்கையில் கண்ணதாச னின் அனுபவப் பாடம்தான் நமக்கு நினைவில் வரும். இப்படி ஒரு பாடலை தமிழ் இலக்கியத்தில் யாருமே எழுதீருக்கமுடியாதது என்பது எனது வாதம்
,,,,,,,,,,,Song,,,,,
பாரசீக பெருங்கவிஞன் உமர்கய்யாம் பற்றி உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். உமர் கய்யாம் தன்னை மறந்த நிலையில் இறைவனை நினைத்து பாடிய பாடல்கள் ஏராளம். ஒவ்வொன்றுக்கும் ஒரு உட்பொருள் உண்டு. உமர் கய்யாமும் கண்ணதாசனும் ஒரே வகையை சார்ந்தவர்கள், போதையில் கீதையை தேடுபவ்ர்கள். உமர் கய்யாம் பாரசீக மொழியில் எழுதிய பாடல் பலவற்றை கவிமனி தேசியவிநாயாகம் பிள்ளை தமிழ் மொழி பெயர்த்துள்ளார்.
அதில் ஒரு பாடல் இப்படி வருகின்றது.
வெய்யிற் கேற்ற நிழலுண்டு
>வீசும் தென்றல் காற்றுண்டு;
>கையிற் கம்பன் கவியுண்டு
>கவசம் நிறைய மதுவுண்டு;
>தெய்வ கீதம் பலவுண்டு
>தெரிந்து பாட நீயுமுண்டு;
>வையம் தனில்லி இவ் வனமன்றி
>வாழும் சொர்க்கம் வேறுண்டோ?

இந்த பாடலை அடியொற்றிய கவிஞர் எழுதிய பாடல்தான்!  “ ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமகள் என் துணையிருப்பு  இசைப்பாடலில் என் உயித்துடிப்பு, நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பே” இந்த பாடல் இடம் பெற்ற படம். ரத்தத்திலகம் இந்த‌ படம் கண்ணதாசனின் சொந்தத் தயாரிப்பில் உருவானது. அவனே அப்படத்தில் தோன்றி அவனே பாடுகின்றான். கண்ணதாசனின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சாடுபவர்கள் இந்த பாடலின் வரிகளைத்தான் ஆயுதமாக முதலில் ஏந்துவார்கள்.
                                                                          கவிஞர் கண்ணதாசன் கவிதைகளும் பாடல்களும் சாகா வரம் பெற்றவை சிரஞ்சிவிதமானவை   இத்த னை குணங்களும் ஒருங்கே அமையப் பெற்றவன் கண்ணதா சன். ‘மானிட ஜாதியை ஆட்டி வைப்பேன்’ என்று அந்த காவியத் தாயின் இளைய மகன் பெருமை கொண்டதில் அர்த்தம் இருக்க த்தான் செய்கிறது. அவன் மறைந்து இத்தனை வருடங்கள் ஆன பின்பும் அவன் பாடல்களை நாம் அலசுகின்றோமே? அப்படி யென்றால் “எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்ற அவனது தீர்க்கதரிசனம் பலிக்கிறது என்றுதானே பொருள்?. “ ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமகள் என் துணையிருப்பு  இசைப்பாடலில் என் உயித்துடிப்பு, நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பே” ........

இப்போது நாம் புறநானூற்றுப்பாடலில், பாரிபாடல் (புறநானூறு:112) ஒன்றைப்பற்றிப்பார்ப்போம்
அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத்திங்கள் இவ்வெண்ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே.

இந்த பாடல் பாரி மன்னனின் அங்கவை சங்கவை என்ற‌இரு புதல்விகளால் பாடப்பெற்றது. முல்லைக்கு தேர் ஈர்ந்தானே அந்த பாரியைப்பற்றித்தான் சொல்ல்கின்றேன். பாரி மன்னன் எதிர் நாட்டு மன்னர்களினால் வீழ்த்தப்பட்டு களத்தில் இறக்கின்றான். போருக்குப்பின்னே பரம்பு மலையின் இராச்சியத்தை விட்டு ஏதிலியாக அகதிகாளாக அண்டை தேசமெமெல்லாம் அலையும் போது பாடப்பட்ட பாடல் இது. அற்றைத்திங்கள் (திங்கள் என்பது மாதம்) அவ்வெண்ணிலவில், எம் தந்தையோடு, எதிரிகள் வெற்றி கொள்ளமுடியாத மலைகளோ நாம் இருந்தோம், இற்றைத்திங்கள், இவ்வெண்ணிலவில் எதிரி மன்னர்களினால், எங்கள் மலைகளை இழந்தோம், தந்தையும் இழந்தோம்! எதிரிகளால் தன்னுடைய பறம்பு மலை சூறையாடப்பட்டு, தந்தை வீழ்த்தப்பட்டு, யாருமற்று அனாதைகளாக ஆக்கப்பட்ட மகள்களின் அவலக் குரலை, அவர்களின் கண்ணீரைத் தாங்கி நிற்கிறது அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் பாடல். முள்ளிவாய்க்கால்லில் நாம் தோற்றுப்போனதை நினவுக்கு கொண்டு வருகின்றதா? பாரியின் புத்திரிகள் பாடையது ஒரு சோகப்பாடல், சோகத்துக்கு மாறாக சங்ககால காதல் அனுபவங்களை, சங்க கால காதல் சங்கதிகளை, பாரி காலத்து அற்றை வெண்ணிலவிலே என்ற அந்த வரிகளை என் கவி ஆசான் கவிஞர் கண்ணதாசன் கையாண்டு, சங்ககால பரம்பு மலையின் காதல் உணர்வுகளை, அன்றொரு நாள், அதே நிலவில், அவள் இருந்தாள் என் அருகில்,,,, என்று பாடுவதன் மூலம், சங்ககால இலக்கியத்தை இலகுவாக சினிமா பாடலுக்குள் புகுத்தும் விதை தெரிந்தவன் கவிஞன் கண்ணதாசன், இனி பாடலை கேட்டு நீங்களும் நிலாவை காதலியுங்கள்!   இந்த நிகழ்ச்சி உங்களுக்கு பிடித்திருந்தால் சப்ஸ்கிரைப்பண்ண மறக்கவேண்டாம்அன்புடன் பேசாலைதாஸ்




Ingen kommentarer:

Legg inn en kommentar