mandag 31. mars 2014

மாற்றங்கள் (சிறுகதை) செதுக்கியவர் ஆசிர்தாசன் ஸ்கார்பரோ கனடா

                                         
மாற்றங்கள் (சிறுகதை) 
செதுக்கியவர் ஆசிர்தாசன் ஸ்கார்பரோ கனடா 
                                                        
          அவசர.. அவசரமாக உடைமாற்றிக்கொண்டு வெளியில் வந்த நிறஞ்சனா, அம்மா நான் போய்ட்டு வாறன் என்று குரல்கொடுத்தாள். மகளின் குரல்கேட்டு வெளியில் வந்த பார்வதி, பிள்ள எங்கயம்மா இந்த நேரம் போறாய் எனக் கேட்க,  'அம்மா நான் எத்தனை தடவை சொல்லியிருக்கின்றன் வெளியில போகேக்க இப்படி கேட்க வேண்டாமென்று' சொல்லி தாயியை கடிந்தவள், நான் சீக்கரம் வந்திடுவன் என சொன்னாள். அதற்கு பார்வதி புள்ள இந்த இரவு நேரத்தில உனக்கு என்ன  அப்படி அவசர அலுவல் ஏதெண்டாலும் நாளைக்கு காலையிலை போவன் என்றவவை, காதில் விழுத்தாமல் கதவைத்திறந்து போனாள் நிறஞ்சனா. வாசலிலேயே மகள் போகும் திசையை பார்த்துக்கொண்டு நின்ற பார்வதிக்கு மகள் மறைந்துவிட்டாள் என்ற நினைவு வர சிறிது வினாடிகள் சென்றது.

2009 ஆண்டு, அந்த அழிவின் வடுக்கள் இன்னமும் தமிழர் நெஞ்சங்களிலிருந்து மாறாதநிலை. எப்படி மறக்கமுடியும் எத்தனை இழப்புக்கள், எத்தனை பிரிவு கள், அங்கு ஒலித்த குழந்தைகளின் அழுகுரல் இன்றும் காதுகளில் கேட்டுக் கொண்டிருக்கின்றது. தந்தையை இழந்த குடும்பங்கள், தாயை பிரிந்த குழந்தை கள், ஏன் தாய், தந்தையை இழந்து நிற்கதியா நிற்கும் எம் வருங்காலத்தின் செல்வங்கள் அனாதையாக்கப்பட்ட கொடுமைகள். உலக நாடுகள் அனைத்து மே பயங்கரவாதத்தை அழிக்கின்றோம் என்று சொல்லி அப்பாவி மக்களை கொண்று குவித்து மகிழ்ந்த அந்த கொடுமைகள் பார்வதியின் நெஞ்சங்களில் அழியாமல் பசுமரத்தாணி போல இன்றும் இருக்கின்றது.  நிறஞ்சனாவை காப்பாற்றுவதற்காக பார்வதியும், அவள் கணவனும்  பட்ட துன்பங்கள், இறுதி யாக தன் பூவையும், பொட்டையும் பறிகொடுத்து விட்டு, அந்த வெறிபிடித்த அரக்கர்களிடமிருந்து இவளை காப்பாற்றி இந்த நாட்டுக்கு வந்திறங்கிய வேளை பார்வதி அடைந்த மகிழ்ச்சி, இவ்வளவு விரைவாக மறையும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று எண்ணிக்கொண்ட பார்வதி, 'என்ன இது மோட்சமென்று எண்ணி வந்த நாட்டில் இத்தனை மோசமான வாழ்க்கை யா'? என வெறுப்போடு இருந்தவவின் காதுகளில் தொலை பேசி மணியடிக் கும் சத்தம் கேட்டு, இது ஒரு பக்கம் இந்த நேரம் என கடிந்து கொண்டு ஹலோ சொன்னா, மறு முனையில் ஒரு ஆண் குரல் நிறஞ்சானா நிக்கிறாங்களா எனக் கேட்டது. பார்வது நீங்கள் யார் பேசுகிறது என்று கேட்டதும் மறுமுனை தொலைபேசி துண்டிக்கப்பட்டது. தனக்குள் தானே திட்டி தீர்த்தாள் பார்வதி. இந்த நாடுகளுக்கு வந்தும் திருந்தாத ஜென்மங்கள் என்று கோபமாக திட்டி னாள். சீ என்ன நாடு இது.... என்று திட்டியவவின் மனதில்.......

எப்படி இந்த நாட்டை நான் குறை கூற முடியும் என்ற கேள்வி எழுந்ததும், தன் னைத்தானே சுதாகரித்துக்கொண்டு இங்கு வாழுகின்ற 3 இலட்சம் தமிழர்க ளில் எத்தனை பிள்ளைகள் படிப்பில்  வேலையில், கெட்டிக்காரராகவும், இன்னும் எத்தனையோ சமூக விடையங்களில் முன்னேற்றமாகவும் எமது நாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் இளைஞர்களாகவும் வாழ்கிறார்களே, 'நான் அறிந்த மட்டத்தில் இப்படிப்பட்ட குழப்படி பிள்ளை களை விட நல்லவர்கள் தான் அதிகம்'; என்று எண்ணி தன் மகள் இப்படி ஆகி விட்டாளே என மனம் வருந்தினார். உன் நண்பனை தெரிந்தால் உன்னைத் தெரியும் என்பதுபோல் இங்கு கூடுகின்ற கூட்டத்தை பார்த்தால் தெரியும் தானே.

வாழ்வில் மாற்றங்கள் என்பவைதான் நிஜமானவை, ஒவ்வொரு நாளும் நிகழ் கின்ற இயற்கையின் மாற்றங்கள், விஞ்ஞானத்தின் மாற்றங்கள், இப்படியாக எல்லாத்துறை மாற்றங்களால் தான் இந்த உலகம் அடுத்த கட்ட பரிமாணத்தி ற்கு முன்னேறிக்கொண்டிருக்கின்றது. ஆனால் சில மனிதர்கள் மட்டும் தம் வாழ்வின் முன்னேற்றத்திற்கு தேவையான மாற்றங்களை மட்டும் தேர்வு செய்யமால் தங்கள் வாழ்வை அழிக்கும் தீய மாற்றங்களை தற்காலிக சுக த்தை, மகிழ்ச்சியை தங்கள் வாழ்வின் அவசியமாக கருதி, தேர்வு செய்து தங்களையே தாங்கள் அழித்துக்கொள்கிறார்களே இது எப்படி மாற்றமாகும். அதுவும் குறிப்பாக பிந்தங்கிய நாடுகளில் இருந்து வந்த இளைஞர்களுக்கு இங்கு கிடைக்கின்ற சுதந்திரம் அவர்களின் வாழ்வை எப்படியெல்லாம் சீரழி;கின்றது என்ற எண்ணங்களோடு இருந்த பார்வதியின் கதவு தட்டும் சத்தம் கேட்டு சுய நினைவுக்கு வந்த பார்வதி சென்று கதவை திறந்த போது இரண்டு இளைஞர்கள் தன் மகள் நிறஞ்சனாவை கைத் தூக்கலாக வைத்திரு ந்த காட்சி கண்டு ஒரு கணம் தன்னை மறந்தவவாக இது என்ன? என் பிள்ளை க்கு என்ன நடந்தது? என கத்தினார். தாயின் சத்தம் கேட்டு குடிபோதையில் இருந்த நிறஞ்சனா அம்மா கத்தாத என உளறினாள். திறந்த கதவுக்குள்ளால் அந்த இரண்டு இளைஞர்களும் அவளைக் கைத் தூக்காக கொண்டு சென்று அவளின் பெட்டில் வளர்த்தி விட்டு அவசர அவசரமாக வெளியேறினார்கள்;. வெளிக்கதவை தாழிட்டு வந்த பார்வதி தலை தலையென அடித்து அழுது தன்னையும் வருத்தினார்.

என்ன வாழ்க்கை, இவளுக்காக தன் கணவனையும் பறிகொடுத்து இவளைக் காப்பாற்றி உலகிலேயே சிறந்த நாடாக பேசப்படும் இந்த நாட்டுக்கு தன் சொத்து பத்தெல்லாம் விற்று இங்கு வந்தால், எவ்வளவு நல்வாழ்க்கை இருக்க தீய கூட்டத்தோடு சேர்ந்து இவள் கெட்டுபோனதை எண்ணி எண்ணி வேதனைப்பட்ட பார்வதி இதை விட இவளை அந்த சண்டையிலேயே சாக விட்டிருக்கலாம் என எண்ணி வேதனைப்பட்டார். இந்த உலகம் பல காரணிகளின் மாற்றங்களால் வளர்ச்சியின் பரிமாணத்திற்கு  நோக்கிப் போக்கொண்டிருக்கினற வேளை இந்தப்பிள்ளைகள் இப்படி கெட்டு சீரழிந்து போகிறார்களே என்ற பெருமூச்சோடு படுக்க சென்றார். துயரங்களால் சூழப்பட்டிருந்த பார்வதியின் இதயம் இன்றைய நிறஞ்சனாவின் வருகை கண்டு மேலும் மிகச்சோர்வடைந்ததை அவரால் உணர முடிந்தது. படுப்பதற்கு முன் இறைவா என் குழந்தையை காப்பாற்று என்று வேண்டிக் கொண்டார்.

இந்த உலகத்தில் வாழும் மனிதர்கள் மட்டும் தான் மாற்றங்களை புரிந்து கொள்ளக்கூடியதாக இருப்பவர்கள். அவர்களில் கூட இந்த உலக மாற்றத்தின் நல்ல விடையங்களை விடவும் அதிகமாக கெட்ட மாற்றங்களையே சிலர் விரும்புவர்களாகவும், எம்மி;ல் சிலர் தங்களின் பிள்ளைகள் இந்த நாட்டு;க்கு வந்ததால் தான் கெட்டு விட்டதாகவும் எண்ணுகின்றார்கள். இப்படியாக கெட்டுப்போறவர்கள் எங்கிருந்தலும் கெட்டுப்போவார்கள் என்பதனை, நாம் உணர மறுக்கின்றோம். இப்படியானவர்களில் தங்கள் வாழ்வில் ஏற்படுகின்ற பெரும் தாக்கத்தினுடேயே மாற்றம் பெறுவர்கள். இவர்களுக்கு பெற்றோர், உறவினர்களி;ன் அறிவுரைகள் எப்போதும் வேண்டாததாகவே இருக்கும். இந்த வளர்;ச்சி கண்ட நாடுகளில் தனி மனித சுதந்திரம் நிறைவாக கிடைப்பதானல் தான் இவர்கள் இப்படியாக மாறுகின்றனர் என்ற வாதம் தவறானது என்பது மட்டும் உண்மை.

விடியலின் ஒளித்தெறிக்கைகள் யன்னல் வழியே தன்னை திணித்துக் கொண்டு சோர்வோடு படுத்திருந்த நிறஞ்சனாவின் கண்களைத் துளைத்தது. கண்ணில் பட்ட சூடு தாங்காமல் அசதியாக இன்னமும் போதை முறியாதவளாக சிணிங்கிக்கொண்டு கண் திறக்க முயற்சித்தவளை ஒளித்தெறிக்கைகள் விடாமல் தடுத்தது. சற்று அசைந்து ஒளித்தெறிக்கையை விலகி கண்ணைத்திறந்தவவுக்கு அட நன்றாக விடிந்து விட்டதே என எண்ணிக்கொண்டு எழும்ப முயற்சித்தவேளை அவளால் தன் தலையை தூக்க முடியாமல் பாரமாக இருந்தது. தனக்கு இரவு என்ன நடந்தது என்றே தெரிந்து கொள்ள முடியாதவளாக மீண்டும் படுத்தாள். பூமி சுற்றுகின்றது என்பதனை மீண்டும் நிருபிக்கும் விதமாக ஒளித்தெறிக்கையிலிருந்து விலகி சென்ற நிறஞ்சனாவை மீண்டும் வெயில் சுட்டது. முன்பை விட அதிகமாக சுட்டதனால் பாய்ந்து எழும்பினால். இப்போது போதையும் சற்று குறைந்து இருந்ததை உணர்ந்தாள். இருந்தம் எனக்கு என்ன நடந்தது, ஏன் நான் இப்படி ஆனேன் என்ற குற்ற உணர்வு நிறஞ்சனா மனதில் கேள்வஜ தொடுத்ததை உணர்ந்தவளாய்....

அம்மா... அம்மா என கூப்பிட்டுக்கொண்டு ஹால், மற்றும் குசினி என தேடி னாள். ஒரு இடமும் அம்மாவைக் காணாதது சற்று பயத்தினை கொடுத்ததது. என்ன இது என்று தன்னைத்தானே கேள்வி கேட்டவள் தாயின் அறையை நோக்கி போனாள், அப்போது கூட அம்மா இவ்வளவு நேரம் தூங்கமாட்டா ங்களே என எண்ணிக்கொண்டு கதவைத் திறந்தவளுக்கு, அவள் கண்ணில் பட்டது அம்மாவம், ஆப்பாவும் சிரித்த முகத்தோடு இருந்த படம் தான். அதை பார்க்கும் போது நிறஞ்சனாவின் குற்ற உணர்வு மேலும் அதிகரித்தது. தன்னை ப்பார்த்து கேவலாமாக சிரிப்பது போல் உணர்ந்தாள்.  அந்த அறையில் காணப்ப ட்ட  அமைதி, அம்மா எங்கே என்று தேடும் வேகத்தையும் அதிகரித்தது. தன் னை சுதாகரி;தக் கொண்டு தாய் படுத்திருக்கும் கட்டிலின் மேல் தன் பார்வை யை திருப்பியவளுக்கு, பார்வது தூங்கிக்கொண்டிருந்தது அதிர்ச்சியைக் கொடுத்தது.  என்ன இது இவ்வளவு நேரமாகியும் அம்மா எழும்பவில்லையே என பயந்தவளாக கிட்டே போய் கூப்பிட்டதற்கு எந்தவித பதிலும் இல்லாமை மேலும் பயத்ததை அதிகரிக்க செய்தது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தொட்டு எழுப்பிய நிறஞ்சனாவின் பயம் உண்மையாகிப் போனது. ஐயோ என் அம்மா என்னை விட்டு போய்டாங்களே என கதறினாள். நிறஞ்சனாவின் கதறல் சத்தம் கேட்டு யாரும் அங்கு வரவில்லை. தன் தனிமையை உணர்ந்த வள், இது தான் நம்மட ஊர் இல்லையே கத்திய சத்தம் கேட்டு அயலவர்கள் ஓடி வாறதற்கு. நிறஞ்சனா தனிமையிலேயே கதறினாள். அந்த கதறல் யாரை யும் வரவழைக்கவில்லை. என்ன செய்வதென்றே தெரியாமல் உறவினர்க ளுக்கு தொலைபேசியில் தாயின் இழப்பை பற்றி சொல்லி அழுதாள். அவர்கள் வந்து தான் என்ன செய்ய வேண்டுமோ அவைகளை செய்தனர். தாயின் இழப் பின் கொடுமையை நிறஞ்சனாவின் தனிமை உணர்த்தியது. யார் அம்மாவின் இறப்பிற்கு காரணம் என யோசித்தாள்.  தனத இந்த கெட்ட பலக்கங்களால் என் அம்மைவை கொன்று விட்டேனே என எண்ணி எண்ணி வேதனைப்பட்டவள்,...


தன்னைப்போன்ற பெண்களின் மாற்றங்கள் எத்தனை அம்மாக்களை செத்து க்கொண்டிருக்கிறார்கள். என்று எண்ணிப்பார்த்தாள். நாங்கள் மூத்த குடிமக்கள் என்று உலகம் முழுவதும் சொல்லிக் கொண்டு வாழ்பவர்களுக்கு, வளர்ச்சி கண்ட நாடுகளுக்கு வந்ததும் நமது கலாச்சாரம், பண்பாடு எல்லாவற்றையும் மறந்து விடுகிறோமே ஏன் என தன்னைத்தானே கேளவி கேட்டாள். தனது தவறான நட்பு தான் காரணம் என்பதனை உணர்ந்தாள். இந்த நாடு எங்களுக்கு எவ்வளவு சுதந்திரம் தந்துள்ளது. அந்த சுதந்திரத்தினை நாங்கள் தவறாக பாவி த்து கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகின்றதனால் தானே எங்கள் அம்மாக்கள் இறக்கிறார்கள் என்று எண்ணிய நிறஞ்சனாவின் மனதில் தனக் காக தன் அம்மா பட்ட கஸ்ரங்களை எண்ணி, அந்த அம்மாவின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டுமென்று எண்ணினாள். அதற்காக தனது அத்தனை கெட்ட பழக்கங்களையும, கெட்ட நண்பர்களையும்; விடவேண்டுமென்று சபதம் எடுத்து, தாயின் படத்திற்கு முன் மௌனமாக நின்றாள். அப்போது நிறஞ்சனாவின் உள் உணர்வில், தாயின் குரல்... நிறஞ்சனா எனக் கூப்பிட்டது. என் மகளே உன்னில் என் மரணம் மாற்றத்தை தந்ததென்றால் அதற்காக நான் இந்த மரணத்தை மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளுகின்றேன். இந்த சத்தம் கேட்டு கண் திறந்த நிறஞ்சனாவிற்கு அங்கு யாருமே இல்லாததும், அம்மா தன்னோடு தான் இருக்கிறார் என்ற உணர்வுகளோடு புது பெண்ணாக மாற்றம் கண்டாள், இப்படி எத்தனை நிறஞ்சானக்கள் வாழ்கிறார்கள்? நிறஞ்சனாக்கள் மட்டுமல்ல எத்தனை ஆண்கள் உங்கள் வாழ்கையை இழந்திருக்கிறீர்கள் என்பதனை உணர்ந்து தாயின் இழப்பில் நிறஞ்சனா மட்டுமே மாறியவளாக இருக்கட்டும். இனிவரும் மாற்றங்கள் எந்த இழப்பையும் பரிசளிக்காது இருக்க நாங்கள் மாற்றம் காண்போம்... மாற்றங்கள் நம் வாழ்வை, நம் சமூகத்ததை உயர்த்துவதாக அமையட்டும்


என் அன்பு வாசகர்களே! இந்த சிறுகதையின் பெயர்கள் மட்டும் பொய்யானவை. இந்த கதை என் நண்பரின் உறவினர் குடும்பத்தில் நடந்த நிஜ சம்பவமாகும். வாழ்வில் மாற்றங்கள் ஒன்றுதான் என்றும் மாறாதவை. அந்த மாற்றங்கள் நம் வாழ்வில் ஏற்படுகின்ற நல்ல மாற்றங்களாக இருக்க வேண்டும் என்ற நட்பாசையின் ஆதங்கத்தினாலும். நமது சமூகம் புலம் பெயர்ந்த நாடுகளில் சிறப்பாக வாழவேண்டும் என்பதனை இன்றைய இளைஞர், யுவதிகள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்த உண்மை சம்பவத்தை ஒரு சிறு கதையாக தந்துள்ளேன

ஆசீர் அன்ரனி
ஸ்காபரோ


1 kommentar:

  1. எழுத்தாளரின் கதை நல்லதோர் படிப்பினை!

    SvarSlett