tirsdag 1. april 2014

நினைக்காத நாளில் இல்லை இசைத்தட்டு வெளியீடு


Legg til bildetekst
நாவாந்துறை மண்ணில் 12 கத்தோலிக்க பாடல்களை தாங்கிய இசைத்தட்டு கடந்த மார்ச்
8ம் திகதி நாவாந்துறை சென் மேரிஸ் சனசமுக நிலையத்தில் வெளியிடப்பட்டது. செல்வி லக்சி அந்தோனிப்பிள்ளை(மேரி லூட்ஸ்) அவர்களே அனைத்து பாடல்களையும் எழுதி இசை அமைத்துள்ளார். நாவாந்துறை பங்கின் பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயசிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் நிகழ்ந்த இந்நிகழ்வில் யாழ் ஆயரின் பிரதிநிதியாக அருட் தந்தை அன்டனிதாஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். எம் மண்ணின் மைந்தன் அருட்தந்தை ஸ்டீபன் அடிகளார் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அவர் தமது உரையில் நாவாந்துறை மண் ணிலே ஏராளமான கலைஜர்கள் வாழ்ந்துள்ளார்கள், வாழ்ந்தும்
வருகிறார்கள் என அம்மண் ணின் கலைப்பெருமைதனை எடுத்துரைத்து லக்சி அந்தோனிப்பிள்ளை உடைய பாடல்கள் பற்றி பேசி அவருக்கு வாழ்த்து கூறினார். பாடல்களுக்கான ஆய்வுரையை ஈழத்து இசைக் கலைஜர் எம் . ஜேசுதாசன் அவர்கள் நிகழ்த்தி செல்வி லக்சியினை மிகவும் பாராட்டி பேசினார். அதேவேளை பாடகர்களையும் இசை வாத்தியங்களை இசைதவர்களையும் வாழ்த்தினார். எமது கிராமத்தில் பணி புரிந்து வரும் அருட் சகோதரிகளும் பங்குபற்றி வாழ்த்துரை நிகழ்த்தி னர். இறை
வேண்டுதலுக்குரிய இனிய பாடல்களை அற்புதமாய் படைத்திருக்கும் லக்சியின் இசைத்தட்டு வெளியிட்டில் நாவாந்துறை மண்ணின் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு முழு ஆதரவு கொடுத்து சிறப்பித்தனர். இவ்விசைத்தட்டில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் தமிழ் திருப்பலிகளில் பாடுவதற்கான அங்கீகாரத்தினை யாழ் மேற்றிராசனம் வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது. இச்சிறந்த இசைத்தட்டினை வெளியிட்டு இசைத்துறையில் கால் பதித்துள்ள மண்ணின் புதல்வி லக்சிக்கு எமது உளம் நிறைந்த வாழ்த்துக்கள். உங்கள் கலைப்பயணம் தொடரட்டும். 

இது போல் நாவாய் மண்ணிலும், புலம் பெயர்ந்து வேறு நாடுகளிலும் வாழும் நம் கலைஞர்கள் தத்தம் கலைத் திறமைகளை வெளி கொணர்ந்து மண்ணிற்கும், தன் மனதிற்கும் பெருமை சேர் க்க வேண்டுகின்றோம். பல்வகை துன்பங்களுக்கு மத்தியிலும், சில நல் உள்ளங்களின் உதவியு டன், இவ் இறை பாக்களை எமக்களித்த சகோதரிக்கு மீண்டும் வாழ்த்துக்களும், ஆயிரம் மலர் மாலைகளும் மனதால் சூட்டுவதுடன், இத்துடன் அவரின் பணி நின்று விடாது மேலும் தொடர வேண்டி நிற்கின்றோம்.



Ingen kommentarer:

Legg inn en kommentar