onsdag 16. april 2014

முன்னோடிகள்!..... உயர்திரு, மனுவல்பிள்ளை

முன்னோடிகள்!..... 
உயர்திரு, மனுவல்பிள்ளை
 ஒரு சமூகத்தின் மாறுதல்களுக்கும், முன்னேற்ற த்திற்கும் சில மனிதர்களின் செயல்பாடுகள், முக்கிய காரணியாக அமைந்து விடுகின்றது. அப்படிப்பட்ட மனிதர்களை இனம் கண்டு, அவர் களை நன்றி உணர்வுடன் நினைத்துப்பார்ப்பது, நமது பண்பாட்
டின் முக்கிய அம்சம் என்று நான் கருதுகின்றேன். நன்றி மற
ப்பது நன்றன்று. நன்றி உண ர்வு பண்பாட்டின் கூறு, என்று 
சொல்வதை விட,  இறை நம்பிக்கையில் இரண்டறக்கலந்த ஒர்
விழுமியம் என்று நாம் அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும். 
இதனை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள், என நான் நம்புகின்றேன்.
                                                   முன்னோடிகள் என்ற இந்த தொடரிலே நாவாந்துறை சமூகத்தின் முன்னேற்றத்தில், அது கலையாகவோ
பொருண்மியமாகவோ, சமூக முன்னேற்றமாகவோ இருக்கலாம். 
சமூகத்தில் யார், யார் எல்லாம் முன்னேற்ற தாக்கங்களை ஏற்ப
டுத்தினார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்களோ அவர்களைப்
பற்றி நீங்கள் எழுத வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோம் 
எனவே எழுதுங்கள் நாம் அவற்றை பிரசுரிப்போம். அந்த வகை
யில் முன்னோடி என்ற இத்தொடரை திரு. மனுவல்பிள்ளை 
என்பவரோடு ஆரம்பிக்கலாம் என்று நினைக்கின்றேன். அது ஏன் 
என்பதனை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.            
                                                      1972 மற்றும் 1977 ஆண்டுகள் இலங்கை 
வரலாற்றில், அதிக மாற்றங்களை ஏற்படுத்திய ஆண்டுகள், 1972
ஆண்டு இலங்கையில் அரசியல் சாசனம் குடியரசு சாசணம் மாற்றப்பட்டது. 1977 ஆண்டு தமிழர்கள் எதிர்கட்சியாக அரசவை
யில் கால்பதித்ததுஇந்த இரு அம்சங்களும்,  தமிழர்களை இன்
னும் அதிகமாக அடக்கவேண்டும் என்ற தேவையை சிங்கள 
ஆட்சியாளரிடம் தோற்றுவித்தது, குறிப்பாக தமிழ் இளைஞர்
கள் மீதான அடக்குமுறையை தரப்படுத்தல் என்னும் ஆயுதத்
தால் அடக்க முயன்றது. அந்த தரப்படுத்தல் கல்வி மற்றும் 
வேலை வாய்ப்புகளில் தமிழ் இளைஞர்களிடம் பெரும் தாக்கத்
தினை ஏற்படுத்தியது.
                                               விரக்தியின் விளிம்புக்கு எம் இளைஞர்கள் தள்ளப்பட்டனர். அந்தவேளையில் தான் திரு. மனுவல் பிள்ளை 
அவர்கள், அவ ரது உறவினரான திரு, ராஜரட்ணம் அவர்களின் 
உதவியுடன் நாவந்துறையில் உள்ள‌ படித்த வேலையில்லமல்,
இருக்கும் இளைஞர்களை நோர்வே நாட்டுக்கு கல்வி கற்கும் 
நோக்கத் தோடு, வரவழைத்தார் அந்த கால கட்டத் தில் அரசியல் 
தஞ்சம் கோரும் நடை முறை இல்லை. இவ்வாறாக கல்வி கற்க 
வந்த இளைஞர்கள், படிப்படியாக தமது உறவுகளை நோர்வே 
நாட்டுக்கு வரவழைத்தார். இன்று நாவாந்துறையில் இருந்து 
அதிகமான மக்கள் நோர்வே நாட்டில் வாழ்கின்றார்கள் என்
றால் அதற்கு வழிகாட்டியாக அமைந்தவர் திரு மனுவல்பிள்ளை என்பதனை யாரும் மறுக்கமுடியாது. 

                          திரு.மனுவல்பிள்ளை அவர்கள் சிறந்த பண்பாளர். அதிகம் அலட்டிக்கொள்ளமல், அமைதியாக ஆக்கபூர்வ
மான காரியங்களை ஆற்றுபவர். அவ்வப் போது நல்ல ஆலோ
னை வழங்கும் அற்புத மனிதர். Tverre politikk støtte krupp என்ற அமை
ப்பின் ஊடாக ஆக்கபூர்வமான அரசியல் வேலைப்பாடுகளில் அதிக ஆர்வம் காட்டினார். ஆண்டவரின் நல்லா சிகளும், நற்சுகமும் 
பெற்று நீடூழி வாழ இணையத்தின் சார்பாக வாழ்த்துகின்றேன்-

                                                                    நன்றி.                           
             அன்புடன் தேவதாஸ்
         (தேன்தமிழ் ஓசை வானொலிமாமா)

Ingen kommentarer:

Legg inn en kommentar