torsdag 3. april 2014

'தடி எடுத்தவனெல்லாம் சண்டியான் ஆக முடியாது தம்பி நண்பேண்டா' ஆசீர் அன்ரனி ஸ்காபரோ கனடா


நிர்வாகி
நாவாந்துறை இணையத்தளம்
நோர்வே
3 April 2014

அன்புடையீர்,
மொன்மொலின் அவர்களின் திறந்த மடல் பற்றிகருத்துக்கூறலில் நண்பேண்டா என்ற பெயரில் 
எழுதப்பட்ட கருத்தானது மிகவும் வன்மையாக கண்
டிக்கப்ட வேண்டியது. இந்த செயற்பாடானது முதுகெ
லும்பு இல்லாதவன் செய்யும் செயலாகும். இப்படிப்ப
ட்டவர்கள் தான் நிட்சயமாக சமூக விரோதிகள். இவ
ர்களை சமூகத்திலிருந்து புறம்தள்ள வேண்டும். சுய
மாக கருத்து கூறும் தைரியம் இல்லாதவர்கள் ஏன் 
இப்படி தங்களை சமூக அக்கறையாளர்களாக காட்ட எத்தனிக்க வேண்டும். மொன் மொலினைப்பற்றி 
எனது கருத்தானது யாதெனில்....
மிகச்சிறந்த சமூக சிந்தனையாளன், தான் சார்ந்த 
சமூகத்தை உண்மையாக நேசிக்கும் மனிதர், அந்த சமூகத்திற்கான விடியலை நோக்கிய பாதையை 
வகுக்க ஆவல் கொண்டவர். புலம் பெயர்ந்து வாழு
ம் நம்மவரின் சிலரில் மொன் மொலினும் ஒருவர் 
மிக நேர்மையோடு 'நாவாந்துறை சென் மேரிஸ் 
சர்வதேச அபிவிருத்தி அமைப்பில்அந்த அமைப்
பின் யாப்புக்கு அமைவாக தன் பங்களிப்பை செய்
யும் ஒரு அற்புதமானவர். அப்படிப்பட்டவரை, அவ
ரின் செயற்பாட்டை கொச்சைப்படுத்தும் பிற்போக்கு சிந்தனை கொண்டு பிறர் முதுகுக்கு பின்னால் ஒளி
ந்திருக்கும் நண்பேண்டா உனக்கு எந்த தகுதியின் அடிப்படையில், மொன்மொலினை விமர்சிக்க உரி
மையுண்டு. நானும் சவால் விடுகின்றேன் யார் சரி யானவர்கள், உண்மையாக தாங்கள் சார்ந்த சமூக
த்தை நேசிக்கிறார்கள் என்பதனை நிருபிக்க வேண் டுமாஊரில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஒழுங்கு செயயுங்கள், அதற்கு முன்பாக நீங்கள் யார் என்ப
தனை அடையாளம் காட்டுங்கள் நாங்கள் அங்கு 
வந்து நிருபித்துக் காட்டுகின்றோம்.
நாவாந்துறை இணையத்தளத்திற்கு ஒரு பணிவான வேண்டுகோள் இப்படியான பிற்போக்கு வாதிகளின் கருத்துக்களை தங்கள் இணையத்தில் பிரசுரிக்க வேண்டாம்.
'தடி எடுத்தவனெல்லாம் சண்டியான் ஆக முடியாது 
தம்பி நண்பேண்டா'
'நேர்மை இல்லாத எந்த செயற்பாடும் வெற்றி பெறாது'

நன்றி

அன்புடன் ஆசீர் அன்ரனி ஸ்காபரோ கனடா

Ingen kommentarer:

Legg inn en kommentar