torsdag 3. april 2014

நாவாய் நித்தியஒளிக் கிராம உருவாக்த்தின் பின்னணியும் அதன் எதிர்காலமும்

நாவாய் நித்தியஒளிக் கிராம உருவாக்த்தின்

 பின்னணியும் அதன் எதிர்காலமும்
02.04.2014

2003ல் நித்தியஒளி நிலங்களை எமது மக்கள் தமதாக்கிக்கொண்ட மறுநாள் நானும் மறைந்த திரு குணம் அவர்களும் கடை உரிமை
யாளர் திரு மணியம் (காரைநகர்) அவர்களின் உதவியுடன் அன்
றைய அமைச்சராக இருந்த மறைந்த திரு மகேஸ்வரன் அவர்
களை நல்லூரில் அவரின் அலுவலகத்தில் சந்தித்து எமது மக்க
ளின் தேவைகளை எடுத்துக்கூறினோம். அவரும் அந்த நாட்களில் கட்டிடப்பொருட்களை மக்களுக்கு வழங்கிக்கொண்டிருந்த காரண த்தால் எமது மக்களின் தேவைகளுக்காக 75 வீடுகளுக்குத் தேவை
யான கட்டிடப் பொருட்களை வழங்குவதாக எமக்கு வாக்குறுதி அளித்தார்.

ஆனால் துர்அதிஸ்டவசமாக எமது மக்கள் பின்விளைவுகள் எத
னையும் யோசிக்காது அவ்விடத்திலிருந்து வெளியேறி கலாச்சா
ரமண்டபத்திற்காக வாசிகசாலைக்கு அருகாமையில் ஒதுக்கப்ப
ட்ட சிறிய காணியில் அவர்களுக்கு வழங்கப்பட்ட தவறான 
ஆலோசனையின் அடிப்படையில் அந்நிலத்தை தமக்கென கைய
கப்படுத்தினர். இதன் காரணமாக ஏற்கனவே நித்தியஒளியில் 
வெற்று நிலங்கள் இருப்பதை எம்மூலம் தெரிந்துவைத்திருந்த அமைச்சர் திரு மகேஸ்வரன் அவர்கள் வேற்று ஊர் மக்களை அவ்விடத்தில் கொண்டுவந்து குடி யேற்றினார். அப்போதுகூட 
எமது சங்கங்கள் எம்மக்கள்தான் முதலில் அந்த நிலங்களை கையகப்படுத்தியதாக அமைச்சருக்குச்சொல்லித் தடுத்திருக்க
லாம் ஆனால் எமது மக்கள் அதனைச்செய்ய ஏனோ அன்று முன் வரவில்லை... தற்போது எமது மக்கள் ஏற்கனவே தாம் தக்கவை த்திருந்த நித்தியஒளி நிலப்பரப்பில் அரைவாசிப் பகு தியிலேயே குடியிருக்கின்றனர்.

ஏற்கனவே நிலப்பற்றாக்குறை நிலவும் எமது கிராமத்தில் நித்தி
யஒளிக் கிராமத்தின் பெரும்பகுதியை எமது மக்கள் இழந்தது 
பாரிய வரலாற்றுத் தவறாகும். இதன் தாக்கத்தை இன்னும் பல வருடங்க ளுக்கு எமது மக்கள் நிச்சயம் உணர்வார்கள் என்பது நிச்சயம்.(இதே போன்றே பல இலட்சங்கள் பெறுமதியான சாமின் பள்ளம்பிட்டி காணியையும் நாம் இழந்தது மிகவும் கவலைக்குரி
யது. இதனை மீண்டும் பெறுவதற்கு நாம் முயற்சிக்கவேண்டும்.)

ஊருக்கு மத்தியில் இருக்கும் பொதுத்தேவைகளுக்காக பயன்படு
த்தப்படக்கூடிய கடற்கரைக் காணிகளை கையகப்படுத்தும் வழக்
கத் தைக்கொண்ட எமது மக்கள் மத்தியில் குடாக்கரைக்கு அண்
மையில் ஆள் நடமாட்டம் இல்லாத அன்றய சூழலில் தமது பாது
காப் பையும் வசதிகளையும் பொருட்படுத்தாது அங்கு சென்று குடி
யேறியவர்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்களே. அம் மக்
களின் குடியேற்றத்தின் பின்னர் குடிநீர் பிரச்சனைஇ வெள்ளப்பெரு
க்கு போன்ற அனர்த்தங்களையும் தாண்டி இன்றுவரை அவர்கள் 
அங்கு தொடர்ந்து குடியிருக்கின்றனர்.

 நித்திய ஒளி மக்களின் எதிர்காலத்தேவைகள்

கடற்கரைப்பிரதேசம் கடற்தொழில் சமூகத்திற்கே சொந்தமானது. அத்துடன் குடாக்கரையில் ஏற்கனவே எமக்கென ஒரு சந்தையும் இருந்தது. இதன் அடிப்படையில் குடாக்கரையிலிருந்து சூரிய
வெளி வரையிலான கடற்கரைப் பகுதிகளில் அங்கு வாழும் மக்க ளுக்கென பொதுவான கட்டமைப்புவசதிகள்; ஏற்படுத்திக்கொடுக் கப்படவேண்டும். அக்கடற்கரைப்குதிகளில் மக்கள் குடியிருப்பதற்கு அரசு அனுமதிக் காதபோதிலும் பொதுவான ஸ்தாபனங்கள் அமைப் பதற்கு அரசாங்கம் தடை விதிக்க்காதென நான் நம்புகின்றேன்.

இதன் அடிப்படையில் எமது ஊரினை விரிவாக்கம் செய்வதனைக் கருத்திற்கொண்டு இப்பகுதிகளில் இறங்குதுறை சிறுவர்பாடசாலை வாசிகசாலை சிறுவர்விளையாட்டுமைதானம் மற்றும் ஏனைய 
தேவைகளை அரசாங்கம் மற்றும் புலம்பெயர் மக்களின் உதவியு
டன் ஊரிலுள்ள அமைப்புகள் நிறுவுவதற்கு முயற்சிகளை மேற் கொண்டால் அப்பிரதேசம் ஒளிபெற்று வளம்பெறும்.

 இப்படிக்கு
 சகோதரன்

இசிதோர் மொன்மொலின் ஜெறாட்

Ingen kommentarer:

Legg inn en kommentar