fredag 25. april 2014

நாவாய் நாட்டுக் கூத்துக் கலையின் இராஜாதிராஜா யோகராஜா (செ. அமலதாஸ் யேர்மனி)


 நாவாய் நாட்டுக் கூத்துக் கலையின்   இராஜாதிராஜா யோகராஜா (செ. அமலதாஸ் யேர்மனி)
                                                                                         மரர் செல்வராசா யோகராஜா அவர்களோடு நாட்டுக் கூத்துக்களில் நான் பங்கேற்று நடித்தபோது நான் கண்ட அனுபவத்தை வாசகர்க ளோடு பகிர்ந்துகொள்வதில் நான் பெருமை யடைகின்றேன். அமரர் யோகராஜா அவர்கள் நாட்டுக்கூத்துக் கலையில் மிகவும் பிரபல்யமா னவர். இவருடைய பெயருக்கு ஏற்றால்போல் குரல் வளத்தோடு அபிந யத்திலும் பார்வையாளரைக் கவர்ந்தவர். 
                                                                                         குறிப்பாக அலசு செபஸ்தியார் ஊசோன்பாலந்தர் எஸ்தாக்கியார் ஞானசவுந்தரி போன்ற நாட்டுக் கூத்து க்களில் அரச பாத்திரங்களில் மேடையேறி அவற்றில் புகழ் பெற்றார். நானும் அவருடன் இணைந்து குழந்தை பாத்திரங்களில் இந்த நாட்டுக் கூத்துக்களில் பங்கேற்றதை பெருமையுடன் நினைவு கூர்கிறேன். இவர் கணீர் என்று ஒலிக்கும் குரல்வளம் கொண்டவர். இதைக்கொண்டு அவர் பாடும் பாடல்கள் எல்லாம் மிகவும் கம்பீர மான தொனியில் இனிமையாக அமைந்தி ருக்கும்.  அவரின் கல் வெட்டு மற்றும் சிந்து மெட்டுக்களில் மயங்கா தவர்கள் யாரும் இருக்கமுடியாது.
                                                                                         வர் மேடையில் தோன்றும் போது பார்ப்போர் மனதில் பெரும் ஆனந்த அக்களிப்பு தோன்றும். அவரின் பாடல்களைக் கேட்கும்போது அனைவரின் உள்ளங்களிலும் அதிர்வலைகள் தோன்றி  உற்சாகம் பிறக்கும். அமரர் யோகராஜா எனது தந்தையார் செபஸ்தியாம்பிள்ளை அவர்களுடன் சீனியப்பு என அன்புடன அழைத்து; உறவாடுவார். எனது தந்தையார் சிறுவயதிலிரு ந்தே நாட்டுக் கூத்துக்க ளில் நடித்தமை மற்றும் அவருடைய தந்தையார் வெலிச்சோர் அண்ணா வியாரிடமிருந்து பெற்ற அனுபவங்களை யும் கொண்டு தாள மெட்டுக்கள் பற்றிய  எனது தந்தையாரின் அனுபவங்களை அவருடன் பகிர்ந்து கொள்வார்.                               
                                                                                        சிலவேளைகளில் ஒருநாளுக்கு இரண்டு மூன்று தடவைகள்கூட எமது வீட்டிற்கு வந்து எனது தந்தை யாருடன் இவை சம்மந்தமாக உரையாடுவார். நாட்டுக் கூத்துக்கலை யில் அமரர் யோகராஜா ஒரு ஜம்பாவான் என்பதை எவரும் ஏற்று க்கொள்வர். அதேவேளை நிஜவாழ்விலும் அவர் எல்லோருடனும் அன்பாகப் பழகக் கூடியவர்;.  அவரிடம் தான் ஒரு சிறந்த கலைஞன் என்ற கர்வம் ஒரு போதும் இருந்ததில்லை. மற்றையோரை ஒரு போ தும் மனம்நோகும்படி செய்யமாட்டார். மரர் யோகராஜா அவர்களின் கலை உலகின் பஙகளிப்பு எம் மண்ணின் வரலாற்றில் எப்பொழுதும் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அன்புடன்
செ. அமலதாஸ்

யேர்மனி

Ingen kommentarer:

Legg inn en kommentar