onsdag 9. april 2014

குருசடித்தீவின் மறுபக்கத்தின் மறுபக்கம் இசிதோர் மொன்மொலின் ஜெறாட் 09.04.2014

குருசடித்தீவின் மறுபக்கத்தின் மறுபக்கம்

ஷகுருசடித்தீவின் மறுபக்கம் ' என்கின்ற முகநூல் கட்டுரையின்படி குருசடித்தீவின் புனரமைப்பு விடயத்தில் மக்களின் உடல் உழைப்பு பற்றி யாரும் எங்கும் குறைத்து மதிப்பிடவில்லை. நாவாந்துறை.கொம்இல் குருசடித்தீவு பற்றி எழுதப்பட்டது ஓரு சுருக்கமே தவிர முழுமையான வரலாறு இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எமது முன்னோர்கள் மற்றும் ஆவணங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகள் அடிப்படையில் பல வருடங்களுக்கு முன்னரே தீவின் ஆரம்ப வரலாறுபற்றி தொகுத்து வைத்துள்ளோம் அவை பின்னர் வெளியிடப்படும். அதில் இத்தீவின் வளர்ச்சிக்காக பாடுபட்ட எமது ஊர் மற்றும் வெளி ஊர் மக்கள் பற்றியும் எழுதப்படும்.

இருப்பினும்.... 2012 ல் அருட்சகோதரி ஒருவரும் 23.02.14 ல் திரு யோ. புpரான்சீஸ் அவர்களும் பாதுகாவலன் பத்திரிகையில் ஆரம்ப வரலாற்றிலிருந்து கோவில் புனரமைப்பு வரை ஓரளவு குறிப்பிட்டுள்ளனர். கோவில் திறப்பு விழாவிலும் இவை பற்றி பங்குக்குரு குறிப்பிட்டிருந்தார் ஷகுருசடித்தீவின் மறுபக்கத்தின் ' கட்டுரையாளர் இதனை அறியவில்லையா?

அடுத்து .. நிதிப் பங்களிப்பு பற்றி கட்டுரையாளர் குறிப்பிடுடிருந்தார். எமக்கு இனாமாக யாரும் பணம் கொடுப்பதில்லை நாமும் சிரமங்களுக்கு மத்தியில்தான் பணத்தை அனுப்பினோம். தீவில் பல வேலைத்திட்டங்கள் இருந்தன ஒவ்வொருவர் ஒவ்வொன்றைச் செய்திருக்கலாம். ஆனால் எமது தந்தையாரின் பெயரைச் சரித்திலிருந்து அகற்றுவதிலிலேயே பலர் குறியாக ஆரம்பத்திலிருந்தே செயற்பட்டனர் என்பதுதான் உண்மை.

மக்களின் உடல் உழைப்பு பற்றி கட்டுரையாளர் குறிப்பிடுகின்றார். மக்களின் உடல் உழைப்பை நாம் என்றும் மதிப்பவர்கள். அதே வேளை 1947 ம் ஆண்டுகாலப் பகுதியில் இன்னுமொரு ஊருக்கு சொந்தமான தீவை தனியொரு மனிதனாக நீதிமன்றத்தில் நின்று பிரபல வழக்கறிஞர்களை வைத்து வழக்காடி வெளிநாட்டு உதவிகள் மற்றும் இயந்திரப்படகுகள் இல்லாத காலத்தில் ஓரஞ்சியார் கிணற்றிலிருந்து தண்ணீரைத் தோளில் சுமந்து சென்று இருமுறை புயலினால் சேதமடைந்த கோவிலை மீண்டும் கட்டியெளுப்பிய எமது தந்தையின் தியாகத்தை ஒரு பக்கச் சார்புடைய இக் கட்டுரையாளர் என்றுமே நினைக்கப்போவதில்லை.

இக் கட்டுரையாளரைப் பொறுத்தமட்டில் குருசடித்தீவுதான் மக்களின் இன்றைய முக்கிய பிரச்சனை என்று பார்க்கிறார்போலும். எமது ஊரில் இன்று வேறு பல முக்கிய பிரச்சனைகள் உள்ளன. ஏன் இந்த சீர்திருத்தவாதியென தன்னை அடையாளப்படுத்த முனைபவருக்கு இப் பிரச்சனைகள் கணக்களுக்குப் புலப்படவில்லை?

ஊரைக் கட்டியெளுப்பவென பலவருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட சர்வதேச அமைப்பினால் ஏன் இன்றுவரை குறிப்பிடத்தக்க அளவு அபிவிருத்தி எதனையும் செய்ய முடியாதுள்ளது? மக்களின் வேலைவாய்ப்புகளுக்காக பல வருடங்களுக்கு முன் கொண்டவந்த தொழிற்சாலைத்திட்டம் ஏன் முறியடிக்கப்பட்டது? நித்திய ஒளி நிலங்கள் பறிபோனமைக்குரிய காரணங்கள் எவை? ஊரின் அவிவிருத்திக்கென பாவிக்கப்படவேண்டிய நிலங்கள் ஏன் ஒருசிலரால் கையகப்படுத்தப்படுகின்றன? ஊரிலுள்ள அமைப்புகள் ஒருசிலரின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து செயற்படுவதும் ஏனையோரின் கோரிக்கைகளை புறம் தள்ளவதும் ஏன்? இப்படிப்பட்ட மக்கள் நலம் சார்ந்த பிரச்சனைகளை இக்கட்டுரையாளர் மக்கள் முன் வைத்து கருத்துக்களை அறிய முன்வருவாரா?

ஏற்கனவே நாவாந்துறை இணையத்தளத்திற்கு வந்த ஒரு சில மொட்டைக் கடிதங்களுக்கும் ஷகுருசடித்தீவின் மறுபக்க' கட்டுரைக்கும் பின்னால் யார் இருக்கிறார் என்பதை எம்மால் ஓரளவு ஊகிக்கமுடியும். உண்;மையில் சமுகத்தை சீர்திருத்த நினைப்பவர்களை நான் மதிக்கிறேன். ஆனால் மக்கள் என்கிற போர்வைக்கள் ஒளிந்திருந்து தமது பெயர்களை மறைத்து தவறுகளுக்கு துணைபோய் ஒரு சிலருக்கு எதிராக மாத்திரம் வியாக்கியானம் செய்பவர்களை ஒருபொழுதும் சீர்திருத்தவாதிகளாக ஏற்றுக்கொள்ள முடியாது தம்பி!

சமுகம் சம்மந்தமான கட்டுரைகளை தமது முகநூல்களில் பிரசுபிப்பவர்களின் நோக்கம் உண்மையிலேயே சமுக விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதுதான் என்றால் கட்டுரைகளின் உரிமையாளர்களையும் குறிப்பிட்டுப் பிரசுரியுங்கள். அப்படிச் செய்யம்போது ஏனையோரும் அது சம்மந்தமாக தமது கருத்தக்களை முன்வைப்பார்கள். இல்லையெனில் நீங்களும் உள்நோக்கங்களுடன் செயற்படுவதாகத்தான் கருதவேண்டியுள்ளது.

இசிதோர் மொன்மொலின் ஜெறாட்
09.04.2014

Ingen kommentarer:

Legg inn en kommentar