tirsdag 8. april 2014

கனவுகள் (முடவனும் கொம்புத்தேனும்) ஆசீர் அன்ரனி ஸ்காபரோ, கனடா



பூஞ்சோலை கிராமம். பசுமை நிறைந்த வயல்களும், செழிப்பு நிறைந்த


 தென்னை மரங்களும் கொண்ட கிராமம். அங்கு வாழும் மக்களுக்கு 

இறையருளைப்பொழியும் தெய்வங்கள் பல உள்ளன. அந்த கோவில்க

ளின் கலை அம்சத்தினை பார்த்து தெய்வங்களின் அருளைப்பெறுவதற் 

காகவே மக்கள் அந்த கிரமத்தை தேடி வருவதுண்டும். பூஞ்சோலை கிரா

ம  வடமகாணத்தின் நுழைவாயில் அமைந்துள்ள சிறிய அழகான கிராமம். 

இங்குள்ள மக்களின் தொழில் விவசாயம். நடுத்தர மக்களின் வாழ்வியல் 

என்றும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கே போதாததாக இருப் 

பதனை யாவரும் அறிவோம். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்தவன் 

தான் கபிலன். ஆனால் அவனின் கனவு என்பது மிகப்பெரியது. ஆம் 

கபிலன் தான் வளர்ந்து பெரியவனானதும் ஒரு டாக்டராக வரவேண்டு 

மென்ற கனவை தன்னுள் வளர்த்துக்கொண்டு அதற்காக மிக கடுமை

யாக படித்து வருபவன்.  சிறு வயது முதலே கபிலனிடம், உறவினர்கள் 

கேட்பார்கள், நீ பெரியவன் ஆனதும் என்னவாக வரப்போகின்றாய், அத

ற்கு அவன் உடனே சொல்லிப்போடுவான், நான் டாக்டராக வருவன்

 என்று. பலரின் மனங்களில் ஏளனம் தொனிக்கும்.  முதுகுக்கு பின்னால் 

கபிலனின் அந்த இலட்சியத்தை, அலட்சியமாக கதைப்பார்கள். 

அப்பட யான வார்த்தைகள் பல வேளைகளில் அவனின் காதுகளுக்கும்

 கேட்டிருக்கிறது. அதனால் சில நேரங்கள் துன்பமடைந்தும் இருக்கின்

றான். ஆனால் என்றும்  அவனின் சிந்தனைகள் யாவும் டாக்டராவது

பற்றியே இருக்கும்.  கபிலன் நிறையவே வாசிக்கும் பழக்கம் கொண்

டவன். பஸ்சில் பாடசாலை செல்லும் போது எல்லாப்பிள்ளைகளும் 

கொய்யா, மய்யா எண்டு ஒரே கத்தலும், கூச்சலுமாக இருப்பார்கள், 

ஆனால் கபிலன் மட்டும் ஏதாவது ஒரு புத்தகம், அல்லது பேப்பர்

 வாசித்துக்கொண்டே இருப்பான். இப்படி வீட்டில் சாப்பிடும் போதும்

 வாசிப்பதால் சாப்பிட அதிக நேரம் எடுத்து அப்பாவிடம் பேச்சு வேண்

டுவான். அம்மா தான் எப்போதும கபிலனின் பக்கம் பேசுவாங்க.



அந்த ஊர் மக்கள் இரண்டாம் போக விதைப்புக்காக தங்கள்... தங்கள்

 வயல்களை ஆயத்தம் செய்துகொண்டிருந்தனர். செல்லையாவும் 

காலையில் வயலுக்கு போனவர் தன்னடைய நிலத்தினையும் உழுது 

கொண்டிருந்தார். கலப்பையில்  கைகளை பிடித்திருந்தவரின் எண்ண

ங்கள் எங்கோ.... அவரையும் அறியாமல் தன் மகள்களின் வாழ்கையை

 பற்றி எண்ணிக்கொண்டிருந்தது. கடவுளே எனக்கு நல்ல உடற்சுகத்

தினை தந்து என் பிள்ளைகளுக்கு நல்லவாழ்கை அமய உதவி செய்தரு

ளும்  என்று வேண்டிக்கொண்டார். வெய்யிலி;ன் சூடு தாங்க முடியாமல் 

மாடுகளையும் புல்தரையில் மேய விட்டுவிட்டு. அருகிலிருந்த மர நில

லில் வந்து இருந்தவர் தன்னையே மறந்து தூங்கிப்போனார். யாரோ 

செல்லையா.. செல்லையா எனக்கூப்பிடும் சத்தம் கேட்டு எழுந்தவர்

 ஐயய்யோ என்று சொல்லிக்கொண்டு சுற்றப்புறமெங்கும் பார்த்தார். 

யாரையும் காணல்ல. என்ன யாரோ கூப்பிட்டது போல் இருந்துதே என 

தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டவர், அட கனவு என்று சொல்லி 

மாடுகளை தேடிப்போனார். தற்போது செல்லையாவின் மனஓட்டங்க

ளில் மகள்கள் இருவரும் அடிக்கடி வந்து நாங்கள் கல்யாண வயதுக்கு 

வந்து விட்டோம் என்பதனை நினைவூட்டினர். நிலானியும், கனிமொழி

யும் முறையே 21, 19 வயதுக்கு வந்ததை எண்ண... எண்ண  அவர்களின் 

வயது செல்லையாவுக்கு பயத்தினை உருவாக்கியது. நிலானிக்கு 

வயது குறைந்தவன் கபிலன். இந்த பயல் எப்ப படிச்சு உழசை;சு என் 

பிள்ளைகளுக்கு நல்லது நடக்கப் போகுதோ என்ற பெருமூச்சுடன் வீட்டி

ற்கு வந்தார்.


காலை எழுந்ததும் பாடசாலை மாணவர்கள் மத்தியில், குறிப்பாக 12ம் 

வகுப்பு மாணவர்கள் மத்தியில் பரபரப்பு. அதிமான மாணவ மாணவிகள் 

தங்கள் தங்கள் கடவுள்களை மன்றாடினார்கள். சிலர் கோவில்களுக்கு 

சென்று நேத்தியெல்லாம் வைத்னர். பிள்ளைகளின் பரபரப்பில் பெற்ரோ

ரும் இணைந்துகொண்டனர்..எதையுமே பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் 

வழமைபோல் தன் காரரியங்களை செய்து கொண்டு இருந்தான் கபிலன். 

அங்கு வந்த அக்கா கனிமொழி, ... என்னடா கபிலன்  இண்டைக்கு  உங்கட 

எக்சாம்ஸ் ரிசல்ட் வருகிறது தெரியும் தானே? ஓன்றும் தெரியாதவன் 

போல் இருக்கிறாய். ஊரெல்லாம் பிள்ளைகள் அங்கும், இங்கும் ஓடித்தி

ரியுது என்றாள். அதையும் தன் காதில் வேண்டிக்கொண்டவன் போல் 

காட்டிக்கொள்ளாமல் இயல்பாய் இருந்தான். இதை தான் தன்னம்பிக்

கையோ என எண்ணிக்கொண்டு பேனாள் கனிமொழி. பாடசாலை வளவு 

எங்கும் கூட்டம் கூட்டமாக மாணவர்கள் தங்கள் தங்கள்  நண்பர்கள், 

நண்பிகளுடன் சிரிப்பும், கும்மாளமுமாக ஒரே பரபரப்பாக காணப்பட்ட 

னர். சிலரின் மனதில் ஏன் இந்த தபால் காரன் இவ்வளவு சுணங்கிறான். 

இரயில் வந்திருக்குமே என்றெல்லாம் ஆராச்சியில் இருந்தது. சிரிப்புக்

கும், கலகலப்புக்கும் நடுவில் சிலரின் சிந்தனைகள் என்ன நடக்குமோ, 

எப்படி முடிவு அமையுமோ என்ற பதட்டத்தில் முகம் சஞ்சலித்தமை

யினை அடக்கமுடியாமல் தவித்தனர். உண்மையிலேயே பரிட்சை முடி

வுகளை அறிவதென்பதில் உள்ள பதட்டம் வித்தியாசமானது தான். கார

ணம் எதையும் உதாசீனம் செய்பவர்கள் கூட பரிட்சை முடிவின் நிலை

யறிந்து  தங்களின் வாழ்வில் பல மாற்றங்களை கண்டுள்ளனர். சிலர் 

தோல்விகளை தாங்க முடியாமல் தற்கொலை கூட செய்ததை அறி

வோம்.

பாடசாலையின் வெளிக்கதவு திறக்கும் சத்தம் எல்லா மாணவ மாணவி

 களையும் எந்தவித அறிவிப்பும் இல்லாமலே அமைதியாக்கியது. கார

ணம் அந்த கதவை  திறந்தவர் வேறு யாருமல்ல இவ்வளவு நேரமும் 

யாருக்காக காத்திருந்தார்களோ அவரே தான் அந்த கதவை திறந்தார்.  

அவரின் சீருடையில் மாணவர்கள் அவர்தான் தபால் காரன் என்பதனை 

தெரிந்து கொண்டு எமக்கான விதி வந்தடைந்து விட்டது  என்று அமைதி 

யாகினர். சில வினாடிகளில் வெளியில் வந்த தபால் காரனும் மாவணர்  

களை ஓரு மாதிரி பார்த்து சென்றார். அவரின் அந்த பார்வையே படியாத 

வர்களின் மனங்களில் ஏளனமாக தெரிந்தது. அதிபரின் காரியாலயத்தில் 

இருந்து மாணவர்களை உள்ளே வருமாறு அறிவிப்பு வந்தது. அதிபரின் 

காரியாலயம் சில மணித்துளிகள் பரபரப்பாக காணப்பட்டது. அதிபர் 

கபிலன் பெயரை கூப்பிட்டார். எல்லோரும் என்னத்துக்கு எள்று ஆவ

லோடு இருக்கையில் மாணவர்களே நமது பாடசாலையின் பெயரை

யும், மதிப்பையும் உயர்தியுள்ளார் கபிலன். அவரின் மதிப்பெண்கள்

 தான் வடமகாண பாடசாலைகளின்  அதிகூடிய மதிப்பெண்களாக வந்

துள்ளது என்று சொன்னது தான் தாமதம் கபிலனின்  நண்பர்களான 

சிவாவும், சரவணனும் கபிலனை தூக்கி சுத்தினர், மாணவர்கள் எல்

லோருமே தங்களின் வெற்றியாக நினைத்து கரவொலி எழுப்பி மகிழ்

ச்சி தெரிவித்த பின்பே தங்களின் பரிட்சை முடிவுகளை தெரிந்து 

கொண்டனர். பலர் மகிழ்ச்சியாகவும் சில தங்களின் தவறே தோல்லி

க்கு காரணம் என்பதனையும்  உணர்ந்தவர்களாக காரியாலயத்தை

 விட்டு வெளியேறினர். எங்கும் கபிலனுக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. 

ஆனால் கபிலனால் எதுவும் பேச முடியாது இருந்தான். தன்னை மறந்து 

அழுதே விட்டான். மகிழ்ச்சி மழையில் நனைந்து வீட்டுக்கு வந்தவன்... 

அம்மாவைக் கட்டிப்பிடித்து, அம்மா... அம்மா எங்கட பள்ளிக்கூடத்தி

லேயே நான் தான் மிகவம் திறமைச்சித்தியடைந்துள்ளேன் என்று 

சொன்னவனை பெத்தவ கட்டித்தழுவி நீ என்ர பிள்ளையடா என்று  

முத்தம் கொடுத்தா.அப்போது சிவா சொன்னான் அம்மா அவன் பொய் 

சொல்லுறான் என்டு. அதுக்கு வள்ளி, என்னடா  சொல்லுறே சிவா எண்

டதும் சரவணன் சொன்னான் ஆமாம்மா அவன் சொல்வது பொய் தான்

 எங்கட பாடசாலையிலே முதலிடம் என்டது பொய் தான் வடமகாண 

பாடசாலைகளிலேயே இவன் தான் முதலிடமென்றான். சொல்லமுடி

யாத ஆனந்தத்தில் அம்மா, அக்காக்கள் திழைத்தனர். 



வள்ளி அடுப்படியை தேடி ஓடினார், உள்ளே போய்  சீனி எடுத்து மக 

னின் வாயில் போட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள நினைத்தவளு 

க்கு ஏமாற்றமாக இருந்தது. சீனி அங்கு இல்லை. ஏமாற்றத்துடன் 

வெளியில் வந்த அம்மாவை கபிலன் கட்டிப்பிடித்து, அம்மா நான் டாக்

டருக்கு படிக்கலாம் தானே? என்றான். அதற்கு வள்ளி ஓம் ராசா நீ படிக்

கலாம். இந்த அம்மா எப்பிடியும் உன்ன படிப்பிப்பன்  என்றா. நிலானியும், 

கனிமொழியும் தம்பியை பாராட்டினார்கள்.  வயலில் நின்று களைத்து 

போய் வீட்டுக்கு வந்த செல்லையாவுக்கு நிலானி ஓடிவந்து சொன்னாள் 

அப்பா.. அப்பா... கபிலன் தான் வடமகாண  பாடசாலையிலேயே முதல் 

மாணவனாய் சித்தியடைந்துள்ளான் என்றாள்.  அவனுக்கு பல்கலைக்

கழகம் கிடைக்கும். அவன் டாக்டருக்கு படிக்கப் போறான் என்று மகிழ்ச்சி 

பொங்க சொன்னாள். இதைக்கேட்ட செல்லையாவுக்கு மகிழ்ச்சியாக 

இருந்தாலும் தன் நிலைக்கு அப்பாற்பட்டது என்றதை உணர்ந்தவர் 'முட

வன் கொம்பு தேனுக்கு ஆசைப்படாலாமா' என்று சொன்னார். சொன்ன

து மட்டுமல்லாமல் உன்ர படிப்புக்கு ஏற்ற வேலையொன்றை பார் என்று 

சொன்னது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. கபிலனின் உள்ளம் 

சில வினாடிகள் சுக்குநூறாகியது போல் இருந்தது. அப்போது வள்ளி 

கேட்டாள் ஏன் என்ர புள்ள கொம்புத்தேனுக்கு ஆசைப்படக்கூடாது. நீ 

டாக்டருக்கு படியடா ராசா அம்மா நானிருக்கிறேன். நீ படி ராசா  என்றா. 

ஆவனின் ஆசைபோல் கண்டி பேராதனை பல்கலைக்கிழகத்தில் அனு

 மதி கிடைத்து கடிதமும் வந்தது. அதை அம்விடம் கொணடத்தான். 

அக்கடிதத்தினை வள்ளி குல தெய்வத்தின் பாதத்தில் வைத்துவேண்டிக்

கொண் டாள். யாவும் நல்ல படியாக நடக்கவேண்டுமென்று.கபிலனின் 

பரிட்சை முடிவுகளை அறிந்த அவனின் உறவினர்கள் பலர் மகிழ்சியை 

விட அட அந்தப்பயல் சொன்னது போல் செய்திட்டானே என்  பெருமூச் 

சிட்டனர்.கபிலனின் பொறுமையும் விடா முயற்சியும் தான் இந்த அவற்

றிக்கு காரணம் என்றும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.


பேராதனை பல்கலைகழகத்திற்கு போகவேண்டிய நாளும்  நெருங்கிக் 

கொண்டிருந்தது வள்ளியோ அங்க இங்க என சொந்த பந்தங்கள், அயல

வர்கள் என்று ஒருவாறு பத்தாயிரம் ரூபா மாறி மகனை அனுப்ப ஆயத்

தங்கள் செய்து, தன்னாலான அனைத்தையும் ஆயத்தப்படுத்தி வைத்தார். 

கபிலனின் மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் சிறகடித்துக் கொண்டிருந்

தது. அவனாலேயே சொல்லமுடியாத இன்ப உணர்வுகள் கபிலனை அங்

கும், இங்குமாக கொண்டு சென்றபோதும் அப்பாவின் அந்த வார்த்தைகள் 

அவனின் மனதில் வந்து பயமுறுத்தியது. இருந்தும் அவன்  அந்த வார்த்

தைகளை சவாலாக எடுத்துக்கொண்டான். இந்த உலகம் ஒவ்வொரு 

நிமிடமும் ஆயிரம், ஆயரம்..... அதிசயங்கனை உற்பத்தி செய்துகொண்டி 

ருக்கிறது.  அப்படிப்பட்ட அதிசயம் தன்வாழ்விலும்  நடக்குமெண்ட நம்பி

க்கை யினை மனதில் உறுதியாக வைத்திருந்தான். தன் இலட்ச்சியம் நிஜ

மாக போவதை எண்ணி மகிழ்ந்தான்.  நண்பர்கள், உறவினர்கள் எல்லோ 

ருக்கும் சொல்லி விட்டு வீட்டுக்கு வந்து பிரயாணத்திற்கு ஆயத்தமாகி 

தந்தையிடம் சென்று போய்ட்டு வாறன் அப்பா என்றவனை கட்டித் தழுவி 

ஆசீர்வாதம் போட்டு, கவனமாக  பார்த்து நடந்துக்கோ. புது இடம் புது 

மனிதர்கள் எல்லோரோடும் அன்பாக பழகிக்கொள்.  அடிக் கடி கடிதம் போடு 

என சொன்னவரின கண்கள் கலங்கியது. தன்னை சமாளித்துக் கொண்டு 

எல்லோருக்கும் பிரயாணம் சொல்லி புறப்பட்டான். வீடே சிறிது  நேரம்

மௌனித்து இருந்தது.


பேராதனை வளாகத்தில் மாணவர் விடுதியில் தனக்கான அறைக்கு 

சென்ற போது அங்கு கபிலனின் அறை நண்பர் இருந்தார். தன்னை கபில 

னெண்டு அறிமுகம் செய்து கொண்டவனை, வெல்கம்.... வெல்கம் என்று 

மனம் நிறைந்து வரவேற்றதனை கண்ட கபிலனுக்கு, தான் நினைத்து

 வந்ததனை விட நல்லவராக தான் அறை நண்பன் இருப்பதாக  உணருவ

தற்து அவகாசம் எடுப்பதற்கு முன்பாகவே கபிலன் எப்படி உமது பிரயாண 

மெல்லாம் என்று கேட்டவர், எனது பெயர் பெரேரா என்று சொல்லி தன்

னை அறிமுகம் செய்தான். பரஸ்பரம் தங்களை அறிமுகம் செய்து கொணட 

வர்கள் நாளை வகுப்புக்கு போவதற்கான ஆயத்தங்களை செய்யலாகினர்.




அன்றைய இரவு கபிலனுக்கு ஒரு யுகமாக மாறியிருந்தது. எப்படி இன்

றைய  இரவோடு பயணிக்கலாம் என்று எண்ணியவனின் நினைவுகள் 

தன் நண்பன் சிவாவை நோக்கி சென்றது. 8ம் வகுப்பு படிக்கின்ற போது, 

கபிலன், சரவணன், சிவா ஆகிய மூவரும் பந்து விளையாடிக்கொணடி

ருந்த போது தான் அந்த சம்பவம்  நிகழ்ந்நது.. சரவணம் பந்தை இறு

க்கி அடிச்சதும், அது வயல் வெளியில் போய் விழுந்தது. அந்த பந்தை 

எடுக்கப்போன சிவா கத்திய சத்தம் கேட்டு ஓடிப்போன கபிலனும், 

சரவணனும், சிவாவின் அருகாமையில் பெரிய பாம்பு ஒன்றை கண்டு  

பயந்தே போய்விட்டனர். அன்று இரவு முழுவதும் சிவாவை நித்திரை

 கொள்ள விடாமல் விசக்கடி வைத்தியர் சொன்னது போலவே 

நடந்து கொண்டனர். இருவரின் பயமும், நண்பன் சிவாவுக்கு ஏதும் 

நடந்திடுமோ என்ற கவலை தான். அந்த நிகழ்வின் பயத்திலிருந்து 

விடுபடுவதற்கு இருவருக்கும் நீண்ட நாட்கள் சென்றது... சிவாவின் 

அந்த சம்பவத்தை நினைத்துக்கொண்டிருக்கையில், எலாம் மணி அடித்

தது. என்ன  நேரம் 6 மணியாகிவிட்டதென மனதுக்குள் சொல்லிக்கொ

ள்ள, குட்மோனிங் என்று சொல்லிக்கொண்டு பெரேரா எழுந்து வந்தான், 

என்ன கபிலன் நீர் இரவு நெத்திரை கொள்ளவில்லையா எனக்கேட்டான். 

புது இடம் என்றவன், அது தான் என இழுத்தான்.... முதல் நாள் வகுப்புக்கு 

இருவரும் சென்று கொண்டிருந்தனர். வளாக பகுதிக்குள் வந்தவர்களை

 சில இளைஞர்கள், யுவதிகள் ஒன்றாக நின்று இங்க வாங்கட என்று 

கூப்பிட்டார்கள், அப்போது தான் தெரிந்தது புதிய மாணவ, மாணவிகளை 

ராக்கிங் செய்கிறார்கள் என்பது. கபிலனும் பெரேராவும் அவர்கள் கூப்பிட்ட 

இடத்திற்கு போயினர். சில மணித்துளிகள் அவர்கள் சொன்னதெல்லாத்

தை யும் இருவரும் ஒத்துழைத்து செய்தமை கண்டு இருவரையும் போகு 

மாறு பணித்தார்கள்.பாடசாலையில் படிக்கின்ற போது ராக்கிங் பற்றி 

ஆசிரயர் சொன்னபோது பெரிதாக எடுத் துக்கொள்ளாத கபிலனுக்கு 

இன்றைய சம்பவங்கள் யாவும் புது அனுபவமாக இருந்தது. 


அந்த புதிய அனுபவத்தோடு தன் அறை நண்பன் பெரேராவைப்பற்றி

யும் தெரிந்து கொண்டான். தனக்கு மொழி தெரியாதென்பதனை உணர்

ந்து தனக்கு செய்த உதவிகளுக்கு நன்றி கூறினான். உண்மையாகவே 

முதல் நாள் நிகழ்வுகள் யாவையும் ரசித்தான் கபிலன். அந்த இனிமை

யான நினைவுகளோடு தன்னை மறந்து தூங்கிப்போனான். மறு நாள் 

வகுப்புகள் வழமைபோல் ஆரம்பமாகின, கபிலனும், பெரேராவும் 

தங்களின் பாடத்தில் கவனம் செலுத்தியமையைக் கண்டதும்,  விரிவு 

ரையாளருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இப்படி சில மாணவர்கள் 

அமை வது எவ்வளவு பெரிய விடையம் என்று விரிவுரையாளர் 

எண்ணிக்கொண்டார். அந்த முதல் நாளிலிருந்தே விரிவுரையாளருக்கு 

கபிலன், பெரேரா மீது பிடிப்பு ஏற்பட்டது. அன்றைய வகுப்புகளை  முடித்

 து  க்கொண்டு விடுதிக்கு வந்த கபிலன் வீட்டுக்கு கடிதம் எழுதினான்.

பேராதனை

மாசி 16, 1976

அன்புள்ள அப்பா, அம்மா, அக்காக்களுக்கு!

நான் நலமாக இருக்கின்றேன். அது போல் நீங்களும் இருக்க இறை

வனை வேண்டுகின்றேன். எனக்கு வகுப்புகள் நேற்று தொடங்கிவிட்டது. 

எனது அறை நண்பனாக பெரேரா என்ற சிங்கள மாணவன் இருக்கின்றார்.  

மிகவும் நல்லவர். என்னுடனே தான் இருப்பார். முதல் நாள் வகுப்புக்கு 

போகும் போது நிறையவே உதவி செய்தவர் எனக்கு இந்த சூழல் புதியது 

தானே, போகப் போக பழகிவிடும். 


அப்பா! எப்படி இருக்கிறீங்க? அப்பா நான் நீங்கள் விரும்பும் பிள்ளையாக 

வருவனப்பா எனக்கு தெரியும் நம்மட ஊரில் உங்களுக்கு இருக்கும் மரி 

யாதை, அதுக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக நடக்கமாடN;டனப்பா. 

அப்பா எனக்கு சரியான வருத்தம் நீங்கள் இன்னமும் எங்களுக்காக 

உழைப்பது. என் படிப்பு முடிந்ததும் நம் வாழ்க்கை மாறிவிடும் அப்பா. 

கவலைப்படதீங்க நான் அடிக்கடி கடிதம் போடுவன்.

அம்மா எப்படியம்மா இருக்கிறீங்க? உங்களைப்பிரியும் போது எனக்கு

அந்த பிரிவுத்துயர் தெரியவில்லை, ஆனால் இப்போது இந்த தனிமை 

எனக்கு ஒரு விதமான வருத்தத்தை தருகின்றது. எனக்கு கிடைத்திருக்

கிற றூம் நண்பர் நல்லவரம்மா.. நீங்கள் கவலைப்பட வேண்டாம். என்

னம்மா. ஹாய் நிலாக்கா எப்படி இருக்கிறீங்க? என்ர அக்காவட சப்போ

ட்டை என்னால என்றுமே மறக்கமுடியாது. இந்தத்தம்பி உங்களையெ

ல்லாம் நிட்சியம் சம்தோசமாக வைச்சருப்பன் கவலைப்படாதீங்க அக்கா. 

என்னவாம் என்ர நண்பர்கள் சரவணனும், சிவாவும். அவங்க கிட்ட சுகம் 

கேட்டதாக கூறவும். ஹலோ கனியக்கா எப்படி உங்கட நண்பிகளோட 

அரட்டை போகுது. அம்மாவுக்கு உதவிகள் செய்து கொடுக்கவும். நான் 

இல்லாதது உனக்கு தான் வசதி, அம்மாவை  ஏமாற்றி உடுப்புகள் வேண்டு    

வாய். என்னவாம் உன்ர நண்பி சாந்தி? நான் சுகம் கேட்டதாக   சொல்ல 

 வும். நமது உறவுகள், நண.பர்கள் அனைவருக்கும் சுகம் கேட்டதாக கூற

வும். வேறு என்ன பதில் போடவும். அன்புடன் கபிலன்

கடிதத்தை உடனே போடவேண்டுமென்று பெரேராவுக்கு சொன்னான், 

அதற்கு பெரேராவும் தானும் வருவதாக சொல்லி கபிலனுடன் சென்றான். 

இருவரும் தபால் கந்தோர் வரை பல விடையங்களை உரையாடிக்கொண்டு 

போனார்கள். பெரோவின் பொது அறிவை அறிந்து வியந்தான். அப்போது

 தான் எண்ணிக்கொண்டான் தான் வாசித்ததின் பயனை. இல்லையென்றால் 

பெரேரா தன்னை பொது அறிவில்லாதவன் என்று நினைத்திப்பான். வள்ளி 

விடிய காலை 5 மணிக்கெல்லாம் எழுந்திட்டா. எழந்தவவின் மனதில் 

மகன் கபிலனின் நினைவு வந்தது, என்ர புள்ள புது இடம், சிங்களம் தெரி

யாது என்ன பாடுபடுகுதோ என தனக்குள்ளேயே கதைத்துக்கொண்டிருந்த 

வின் மனதில் தன் மகன் டாக்டராக வந்து அந்த ஊரில் தன் மக்களுக்களு

க்கு சேவை செய்வதை எண்ணிப்பார்த்துக் கொண்டு இருந்த வவின் பின்

னால் வந்த கனிமொழி அம்மா என கட்டிப்பிடித்ததும், தன் கனவு கலைந்து 

விட்டுதே என்ற ஆதங்கத்தில்இவ ஒருத்தி நேரம் தெரியாமல் வந்து விளை 

யாடுவா போடி அங்கால என்று மகளின் மேல் கடிந்து கொண்டா. என்னம்மா 

என்னோட கோபிக்கறாய் என மகள் கேட்டதும் தான் தன் கோபத்தை உண

ர்ந்த வள்ளி இல்லையம்மா தம்பியபற்றி சோசிச்சண்டு இருந்தனான், 

அவனட்ட இருந்து ஒரு கடிதமும் இன்னும் வரரேல்ல அதுதான் என்று

 இழுத்த அம்மாவை, அம்மா நீ ஒண்டுக்கும் பயப்படாத கபிலன் கெட்டிக் 

காறன் அவன் நல்லா இருப்பான் என்று தாயை தேற்றினாள்.வாசலில் 

மணிச்சத்தம் கேட்டு வள்ளி குசுனிக்குள் இருந்து கத்தினா, புள்ள கனி பார் 

வாசலில தபால் காரர் மணிச்சத்தம் கேக்கிற போல இருக்கு, உடனே 

கனி வாசலைத்தேடி ஒடினாள். வாசலில் தபால் கார அண்ணே கடிதத்தை 

நீட்டினார். அம்மா... தம்பியட்ட இருந்து தான் கடிதம் வந்திருக்கு எண்டு 

கத்திக்கொண்டு தின்னைக்கு வந்தாள். தாயும் அடுப்ப டியிலிருந்து வந்து 

புள்ள உடைச்சு படியம்மா எண்டதும் கடிதத்தை உடைத்து படித்தாள். ஏல்

லோர் மனமும் மகிழ்ச்சியில் திழைத்தது. நிலா சொன்னாள் கனி பார்த்தியா

 தம்பியட எழுத்து முறையை. பொதுவாக கடிதம் என்பது எல்லோரையும் 

ஒன்றாக இணைத்துதான் எழுதுவது. கபிலன் எல்லோரையும் தனித்தனி

யாக பிரித்து அவர்கள் பற்றிய விடையங்களை பகிர்ந்துள்ளமை என்னைக் 

கவர்ந்துள்ளது. அது போல் கபிலனின் எழுத்துக்கள் முட்டை, முட்டையாக 

அச்சடித்ததை போல் இருக்கிறது என்று புகழ்நதாள் நிலா. சில மணித்திய 

லங்கள் அங்கு சொல்ல  முடியாத மகிழ்சி காணப்பட்டது.எத்தனை எத்

தனை யுகங்கள்;, இன்பமாக, துன்பமாக மாறி மாறி வாழ்க்கையின் மாற்ற

ங்களில். இரண்டாம் ஆண்டு பரிட்சையை முடித்துக்கொண்டு கபிலன் 

வீட்டுக்கு வந்திருந்தான். வீடே அமைதியாக இருப்பது போல் தெரிந்தது. 

அறிமுகம் இல்லாத ஒருவர் வீட்டுக்குள் இருந்து வருவதும், அறைக்குன் 

போவதுமாக இருப்பதனை கண்ட கபிலனுக்கு யார் இவர்? இவர் எங்கட 

வீட்டில என்ன செய்கிறார்? எல்லோரும் ஒன்றும் பேசாமல் இருக்கிறார்

களே, என்றெல்லாம் எண்ணிக்கொண்டிருந்த கபிலலுக்கு தேனீர் கொண்டு 

வந்தாள் கனிமொழி. வந்தவ என்னடா கபிலன் பல்லு விளக்கிற்றியா? என 

கேட்டுக்கொண்டு வந்தா,  அக்கா இஞ்ச வா என தன் அறைக்குள் இழுத்து 

க்கொண்டு போனவன், யாரு ஒருத்தர் அக்காட அறைக்குள்ள இருந்து 

வாறர், என்னைப் பார்க்கிறேர் போறேர் என்று பெரிய சத்தமாக கேட்டவன்ற

 வாயை பொத்திய கனமொழி, டே அது அக்காட அத்தான்டா என்றாள். ஓன்

றும் புரியாமல் முளித்தவனை பார்த்து சொன்னாள் அக்காவுக்கு கலியாணம் 

ஆச்சுதெண்டு.அதைக்கேட்டதும் ஓவென கத்திய கபிலனின் சத்தம் கேட்டு 

வீட்டின் ஒவ்வொரு பகுதிகளில் நின்ற அப்பா, அம்மா, அக்கா, அத்தான் 

எல்லோரும் என்னாச்சு என்று ஒரே குரலில் கேட்டுக்கொண்டு கபிலனின் 

அறைக்குள் வந்தனர். வள்ளி ராசா கபிலன் என்னாச்சு எனக் கேட்டுக்

கொண்டு கிட்ட வந்தா, கபிலன் தொடர்ந்து கத்தினான்.  கூட பிறந்த அக்கா 

வின் திருமணத்திற்கே எனக்கு சொல்லவில்லை என எண்ணி எண்ணி 

குழந்தை போல் அழுதான். கபிலன்... என்னடா சின்ன பிள்ளை போல 

ஆழகிறாய் என அப்பா அதட்ட  அழுகையை நிற்பாட்டினான். அப்பாவே 

நிலமையை புரிந்து கொண்டவராக விசயத்தை சொன்னார். திடிரென்று

 நல்ல இடத்து சம்மந்தம் வந்தது. அப்ப உனக்கு பரிட்சை நடப்பதாக அறி

ஞ்சன் அது தான் ஏன் உன்ர படிப்பை குழப்ப வேணாமெண்டு சொல்லேல்ல 

என்றாஎன்ன செய்ய முடியும் அப்பா எப்போதும் இப்படி தான் என்றவன 

மௌனமா கிப்போனபன்.நாட்கள் பல பரிமாணங்களை பகிர்ந்து கொண்டு 

வருடங்களாக மாறியதை கபிலனும், பெரேராவும் தங்கள் படிப்பின் இறுதி 

பரிட்சையை முடித்துக்கொண்டு தங்களின் அறைக்கு போகும் வழியில் 

கடந்த ஐந்து வருடத்தில் நிகழ்ந்த சம்பங்கள் யாவும் இருவரின் எண்ணங்

களில் மறு ஒளிபரப்பாகியது.துக்கம் நெஞ்சை அடைப்பது போன்று தோன் 

றியது.  இருவரின் நடையில் ஒரு வகையான சோர்வும், என்றுமில்லாத 

வாறு மௌனம் அவர்களின் நடைபாதை எங்கும் தொடர்ந்தது. நட்பின் 

இலக்கணங்களாக கடந்த ஐந்து ஆண்டுகள். எத்தனை சோதனைகள், 

எத்தனை தடுமாற்றங்கள் கபிலன் இல்லையென்றால் என் வாழ்க்கை 

எப்படியெல்லாம் சீரழிந்திருக்கும். காதல் போதையில் சிக்குண்டு படிப்பில்

 கவனம் செலுத்தாமல் இருந்த என்னை ஒரு தாயைப்போல அரவணைத்து 

வழிமாற்றி இந்த நிலைக்கு கொண்டு வந்த அந்த நண்பனை பிரியப் போகி

ன்ற நாட்கள் நெருங்குவது பெரேரா மனதுக்கு தாங்க முடியாதாததாக 

இருந்தது.


மறு பக்கம் என் கனவு, என் இலட்சியம் யாவும் நிறைவேறும் நாள் நெருங்கு 

கின்ற மகிழ்ச்சிக்கு காரணம் என் நண்பன் பெரேரா தான். 1977ம் ஆண்டு 

ஏற்பட்ட  கலவரத்தில் நிட்சயமாக நான் செத்திருக்க வேண்டியவன். எத்த

னை பேர் இன்று எம்மோடு இல்லை. அரச காடையர்களின் இனவெறி தாக்கு 

தலில் கொல்லப்பட்ட, கற்பளிக்கப்பட்ட தமிழ் பெண்கள் எத்தனை... எத்தனை. 

இந்த நேரத்தில் தான் செத்தாலும் உன்னை சாக விட மாட்டேன் என்று 

சொல்லி என்னைக்காப்பாற்றுவதற்காக பெரேரா பட்ட துன்பங்களை 

எண்ணி;ப்பார்த்தான் கபிலன். எப்படி மறக்க முடியும். அழகழகான பல 

நாட்களில் இப்படி மறக்க முடியாத கறுப்பு நாட்களும் இருப்பததை இருவ

ரும் தங்கள் மன தொலைக் காட்சியில் மறு ஒளிபரப்பாகிகொண்டிருந்த 

போது, அறைக்கதவை திறந்து கொண்டுஉள் வர தொலைபேசி மணி ஒலி

த்தது ஹலோ நான் பெரேரா பேசுகின்றேன் என சிங்ளத்தில் சொல்லவும் 

மறுமனையில் நான் கனிமொழி பேசுகிறன் தம்பி கபிலனோடு பேசலாமா? 

என்று தமிழில் கேட்க பொறுங்கோ அக்கா கொடுக்கிறன் எண்டு சொல்லி 

கொடுத்தான். கபிலன் ஹலோ சொல்ல தம்பி அப்பாவும். அம்மாவும் புறப் 

பட்டிட்டினம் என்றா. ஓகே அக்கா நான் விடிய போய் கூட்டிவாறன் என்டு 

சொல்லி முடித்தான். தொலைபேசியை வைத்து விட்டு திரும்பியவனின் 

கண்களில் அந்த படம். அந்த படத்தின் மீது கண்கள் இரண்டும்அசையாமல் 

நின்றது. அந்த நொடிப்பொழுது கபிலனின் மனம் அந்த துன்பமான நாட்களை 

அசைபோட்டது.பெரேரா காதல் தோல்வியால் மனமுடைந்து தன் வாழ்வே 

முடிந்து விட்டதென்ற முட்டாள் தனமான எண்ணத்தில் எதிலும் பிடிப்பில்

லா மல் சாவதற்கே துணிந்திருந்தான். எப்படி இந்த சூழலிருந்து காப்பாற்ற 

போகிறேன் என்று தெரியாமல் கஸ்டப்பட்டுக்கொண்டிருந்த நேரம். காதல் 

இவ்வளவு வலியை ஏற்படுத்துமா? பெண்கள் மென்னையானவர்கள்  என்கி 

றார்களே, ஒரு அப்பாவியை இவ்வளவு துன்பத்திற்கு ஆளாக்கி விட்டு 

ஒன்றுமே தெரியாதவள் போல இன்னொருத்தனோடு எப்படி உல்லாசமாக 

திரியமுடிகிறது என்றெல்லாம் எண்ணிக்கொண்டு, வேண்டாம்டா சாமி 

நமக்கிந்த காதலும், கத்தரிக்காயும் எண்டு இருந்தவனை தீடிரென வந்து 

சுற்றிய புயல் காற்று தான் கலா. சும்மாவா கண்ணதாசன் பாடி வைத்தார் 

மனமொரு குரங்கு மனித மனமொரு குரங்கு என்று. பெரேராவின் அனுபவம் 

எனக்கான நல்ல பாடமாக இருக்கும் எண்டு  எண்ணிக் கொண்டிருந்த என் 

மனதுக்குள் கலா புரிந்த மாற்றங்கள் சொல்லிலடங்கா.... பெண்கள் மதுவை

 விட போதை தரக்கூடியவர்கள் என்பதை நண்பன் பெரேரா சொல்ல அலட் 

சியம் செய்த நானா இப்படி இருக்கிறேன் என்று தன்னையே கேள்வி மேல் 

கேள்வி கேட்டு...பல நாட்கள் கஸ்டப்பட்டு காதல் எனக்கு வேண்டாம் என்ற 

பலமான முடிவிற்கான காரணமாக அக்கா கவியை மனதில் நிலையாக 

நிறுத்தி கலாவிடமிருந்து விடுபட்டுக்கொண்டான். இருந்தும் கலாவின் 

நினைவு தன் மனதில் இருக்கிறது என்பதனை அந்த படம் தோற்றிவிட்ட

தனை ஏற்றுக்கொண்டான். ஒன்றுமே நிகழாத எனக்கே இப்படியென்றால்.. 

பாவம் பெரேரா என்று பெமூச்சு விட்டு, எங்கோ இருக்கும் இன்னொருவ

னின் சொந்தக்காரியை நான் வைத்திருப்பதின் தவறை உணர்ந்து கலாவின் 

படத்தை கிளித்து குப்பைத் தொட்டியில் போட்டான்.


இருவரின் பெற்ரோரும் ஓரே புகையிரதத்தில் வந்து சேர்ந்தனர். எப்படி 

முதல் முதலாக கபிலனும், பெரேராவும் சந்தித்தது போல் பெற்ரோரின் 

நிலமையும் அமைந்தது. இருந்தும் பெரேரா தமிழிலும், கபிலன் சிங்களத்தி

லும் கதைத்தது, அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தங்களைப்போல்

 தங்கள் பெற்ரோர்களும் அன்பாக பழகியமை பெருமையாக இருந்தது. 

மறுநாள் மாலை 5மணி பேராதனை வளாகம் விழாக்கோலம் பூண் டிருந்

தது. எங்கும் மாணவர்கள், அழகழகான உடைகளுடனும், மகிச்சியோடும் 

காணப்பட்டனர். கபிலனின் அப்பா வேட்டியும் சேட்டும். அம்மா சாறியுட

னும் அதேபோல் பெரேராவின் பெற்ரோரும் தங்கள் கலாச்சாரத்தை பிரதி

ப்பது போல் அழகான உடையணிந்துவிழா மண்டபத்துக்குள் தங்களுக்

கென ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் அமர்ந்தனர்.மண்டபத்தின் தோற்றமே

 செல்லையாவுக்கு புது உணர்வுகளை தோற்றுவித்தது. இதனால் தான்

 கற்றார்க்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பெண்டனரோ. என் மகன்... 

என் மகன்.. என வாய் ஏதேதோ உச்சரித்தது. கபிலனை நினைத்து பெரிமிதம் 

கொண்டார். வள்ளி தன் நிலை உணர்ந்தவளாக 'பெற்ற பொழுதில் பெரிது 

வக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்' என்ற வள்ளுவரின்

 வாக்கிற்கொப்ப தன் மகன் கபிலனால் பெருமை கண்டார்.


விழாவின் பிரதம அதிதீதியாக கல்வி அமைச்சர் கலந்துகொண்டார். விழா 

ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் தொகுத்து வளங்கப்பட்டதனால் செல்லை 

 யாவுக்கும், வள்ளிக்கும் விளங்கவில்லை. இருந்தபோதிலும் அந்த அரங்

கமே குதுகலத்தில் துள்ளியது . ஆடல், பாடல் என மாணவர்களின் கலை 

நிகழ்ச்சிகள் மூன்று மொழிகளில் எல்லோரையும் கவர்ந்தது. மாணவர்க

ளின் பட்டமளிப்பபு நிகழ்ச்சி ஆரம்பமாகியது கபிலனுக்கு முன் பெரேராவு

க்கு பட்டமளிப்பு நடைபெற்றது. பெரேரா தனதுரையில் நான்  இன்று டாக்

டராக வந்தமைக்கான முழு காரணமும் என் பெற்ரோரையே சேரும் இந்த 

வேளையில் அவர்களுக்கு என் நன்றிகள். அதே போன்று என் பாதையை 

வழிநடத்தி இன்றைய பட்டத்தை பெற வைத்த என் ஆருயிர் நண்பன் கபில 

னுக்கும் நான் என்றும் நன்றி கூறவேண்டும்கபிலன் இல்லையென்றால் 

என் வாழ்க்கை எங்கோ தொலைந்திருக்கும் என்று கண்கள் கலங்க நன்றி

 கூறி தனதுரையினை நிறைவு செய்தார். மண்டபமெங்கும் கரவொலி சில 

விடாடிகள் தொடர்ந்தது.அடுத்ததாக கபிலனை மேடைக்கு வருமாறு நிகழ்

ச்சி தொகுப்பாளர் அழைத்ததும்... மேடைக்கு சென்றவனுக்கு என்ன நடக் 

கிறதென்டே புரிந்து கொள்ள முடியவில்லை. தன்னை எங்கோ தொலைத்து 

விட்டது போல் உணர்வில் இருந்தவனின் செவிகளில் நிகழ்ச்சி தொகுப்பா

ளர் கபிலன் சில வார்த்தைகள் பேசுவார் என்ற அழைப்பின் ஒலி  கேட்டு 

சுயநினைவுக்கு வந்தவன் ஒலிபெரிக்கியை தேடி நடந்தான். 



எல்லோருக்கு மாலை வணக்கம் செலுத்தியவனின் வாயிலிருந்து வார்த் 

தைகள் வெளிவராமால், அவனையும் அறியாமல் கண்களிலிருந்து கண்

ணீர் ஆறாக ஓடியது. சில மணித்துளிகளில் தன்னை சுதாகரித்துக் கொண்ட 

வன், கை குட்டையால் தன் கண்களை துடைத்துக்கொண்டு மீண்டும் ஒலி 

பெரிக்கு முன் வந்தான்.என் சிறுவயது கனவு....  பல தடைகளை தாண்டி

 இன்று நிஜிமாகியுள்ளது. என் தகப்ப னார் 'முடவன் கொம்பு தேனுக்கு ஆசை

ப்படலாமா'? என்று கேட்ட நேரம் என் இலட்சியத்தின் வீச்சு இன்னும் அதிக 

மாகியது. அப்போது என் அம்மா உன்னால் முடியும் என்றும், நானிருக்கிறேன் 

பயப்படா என்று எனக்கு தந்த அந்த தைரியம், இன்று இந்த முடவன் என் 

அப்பா சொன்ன, பறிக்க முடியாதளவு உயரத்தில் இருந்த அந்த கொம்புத்

தேனை பறித்துள்ளேன். இதற்கு காரணம் என் அம்மா தான். என் கனவுகளை 

நிஜமாக்கிய அந்த தெய்வத்துக்கு நான் என்றும் நன்றியுடையவனாக இரு 

ப்பேன்.  அதே போல் என் அப்பாவின் அந்த சவால் நிறைந்த வார்த்தையும் 

எனக்கு இன்னும் என் இலட்சியம் மேல் பற்றை உருவாக்கியது. என் அப்பா 

விற்கும் மனமார்ந்த நன்றிகள். அதைப் போல் 1977 ஆண்டு ஏற்பட்ட இனக்

வரத்தில் நான் இறந்திருக்க வேண்டியவன், அதையும் தாண்டி இன்று 

நான் டாக்டராக வந்துள்ளேன் என்றால், என் கனவை நெஜமாக்கியவர் 

நண்பர் பெரேரா தான். இந்த வேளையில் என் நண்பனுக்கு  மனதார்ந்த 

நன்றிகள். எமது நட்பு தொடரும்.இறுதியாக இந்த நாடு இரண்டு மொழி

பேசும் மக்களை கொண்டது. இந்த இரண்டு மொழி பேசும் மக்களின் சுய 

நிர்ணய உரிமையினை மதிக்க வேண்டியது அரசின் கடமை. ஆந்த வகை

யில் இன்னுமொரு 1977ம் ஆண்டு வராமல் தடுப்பது ஆட்சியிலிருக்கும் 

ஒவ்வொருவரின் கடமையாகும். ஏன்னையும் பெரேராவையும் பாருங்கள் 

நாங்கள் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு சகோதரர்களாக வாழுகின் 

றோம். இந்த நிலை எங்கும் உருவாகவேண்டும். மனிதம் மதிக்கப்படவேண்

டும். ஏன் நான் சிங்களத்திலும், பெரேரா தமிழிலும் பேசினோம் என்றால் 

நாங்கள் ஒற்றுமையாக வாழ தயாராக உள்ளோம் என்பதை ஆணித்தரமாக 

உணர்த்தவே என்பதற்காகத்தான். என்னை இந்தக்கருத்தை சொல்ல வைத் 

ததே என் நண்பன் பெரேரா தான். ஆகவே நாம் ஒற்றுமைக்காக பாடுபடு

வோம் என்று கேட்டு எனதுரையினை நிறைவு செய்கிறேன் என்று கூறி 

மேடையை விட்ட இறங்கிய நண்பனை பெரேரா ஓடிச்சென்று கட்டிய

ணைத்து பாராட்டினான். குரவொலி நிற்க சில மணித்துழிகள் சென்றன. 

வள்ளியின் கண்களில் ஆனந்தக்கண்ணீர். வள்ளியின் மனதுள் பெற்ற 

பொழுதினில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய் 

என்ற வாக்கு ஒலித்துக்கொண்டிருந்தது. செல்லையாவும் தன்னை மறந்து 

கட்டித்தழுவி பெருமிதம் அடைந்தார். அதேபோல் அம்மாவும் தன் மகனை 

கட்டியணைத்து பெரிமிதம் கொண்டார்.பட்டமகளிப்பு விழா மகிழ்வுடன் 

நிறைவுற்றது. மறு நாள் காலை, பெரேராவும், கபிலனும் தங்கள், தங்கள்

 ஊருக்கு போவதற்கான ஆயத்தங்களை செய்தனர். இரவு புகையிரத்தில் 

பயணம் செய்வதற்கான ஒழுங்குகள் யாவும் நிறைவுற்றிருந்தது. மாலை

 வானம் இருண்டு மழை வரும் போல் இருந்தது. இவர்கள் இருவரின் 

பிரிவு இயற்கைக்கும் தெரிந்து விட்டதோ, அவர்களும் பிரிவு துயர் தாங்

காமல் அழுகின்றார்களோ என எண்ணத் தோன்றியது. மழைத்தூறலின்

 நிழலில் தங்களின் கண்ணீர் துளிகளை மறைத்துக் கொண்டு புகையிரத 

நிலையம் சென்றனர். பிரிவின் நேரம் வந்தது. நண்பர்கள் தங்களை கட்டி 

தழுவிக்கொண்டு பெற்ரோரிடம் ஆசி பெற்றனர். அந்த பெற்ரோரும் மொழி 

தெரியாவிட்டாலும் சமிக்கை மொழியால் தங்கள் அன்பை பரிமாறிக் கொ

ண்ட னர். இரண்டு பக்க துருவத்தை நோக்கி புகையிரதம் புறப்பட்டது. 

புகையிரதம் தான் அவர்களின் கண்களில் இருந்து மறைந்ததே ஒளிய 

அவர்களின் எண்ணங்களில் அல்ல..கபிலன் தாயின் மடியில் குழந்தை

யைப் போல் படுத்தான் இன்னொரு கனவுடன்.அந்தக் கனவை வளர்ப்பது 

போல் வள்ளியும், கபிலனின் தலையை வருடினாள். புகையிரமும் வேக 

மெடுத்து நகர்ந்தது.....

ஆசீர் அன்ரனி

ஸ்காபரோ, கனடா              

           

Ingen kommentarer:

Legg inn en kommentar