onsdag 2. april 2014

நாவாய் நாட்டுக்கூத்துக்கலைஞர் அமரர் யோகராசாவின் நினைவுப்பதிவுகள்: பதிப்பவர் திரு, ஆசீர்தாசன், ஸ்காபரோ, கனடா

நாவாய் நாட்டுக்கூத்துக்கலைஞர் அமரர் யோகராசாவின் நினைவுப்பதிவுகள்:

பதிப்பவர் திருஆசீர்தாசன்ஸ்காபரோகனடா
நாட்டுக் கூத்துநாடக கலைஞர் அமரர் செல்வராசா,யோகராசா அவர்க ளின் நினைவாக எழுதப்படும் இக் கட்டுரையில்எமது ஊரின் கலை
ஞர்கள் அனைவரைப் பற்றிய என்னால் முடிந்தளவு வெளிக்கொண்டு 
வந்துள்ளேன். கலைஞர்கள் இறப்பதில்லைஅவர்கள் அவர்களின் 
கலையால் வசிகரிக்கப்பட்டவர்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்து கொண்டோ இருப்பார்கள். நாவாய் மண்ணின் மைந்தனும்சிறந்த நாட்
டுக்கூத்து கலைஞரும்மிகச்சிறந்த பண்பாளனுமாகிய அமரர் திரு. செல்வராசா யோகராசா அவர்கள் 28 . 2 . 2014 அன்று இறைபதம் அடை
ந்தார். அன்னார் ஒரு சிறந்த கலைஞர் மட்டுமல்லமிகச் சிறந்த மனி
தரும் கூட. இவரைபற்றி நான் தெரிந்து வைத்திருக்கும் தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதோடு நமது சமூகத்தின் கலைஞர்களை ஒரு மீள் பரிசீலனை செய்வதாகவே இந்த கட்டுரை அமைகின்றது.
நான் சிறுவனாய் இருந்த காலத்தில் முதல் முதலாக எனது தந்தையா
ரின் நெறியள்கையில் நாட்டுக்கூத்தில் கட்டியகாரனாக பாத்திரமேற்று நடித் தேன்அதில் இன்னொரு கட்டியகாரனாக நண்பர் எஸ்தாக்கி செல்வம் அவர்கள் என்னோடு நடித்திருந்தார். அந்த நாட்டுக்கூத்தில் 
அமரர் யோகரா சா அவர்கள் ராசா வேடமேற்று நடித்திருந்தார்கள். 
அவர் தினமும் எங்கள் வீட்டுக்கு வந்து என்னைப்போலவே என் தந்தையாரிடம் பாடல்கள் பழகுவது வழக்கமாக இருந்தது. எங்களு டைய  கட்டியகாரன் பாத்திரம் எப்போ தும் ராசாவின் பாத்திரத்தோடு பயணிப்பதாகவே இருக்கும். நீண்ட கூத்தாக இருப்பதால் மிக முக்கி
யமான கதாபாத்திரங்களை மூன்றாக பிரித்துமூவர் பாடுவதாக இரு
க்கும். அதில் எனக்கு தெரிந்த வகையில் அமரர் யோக ராசா அண்ணன் அருமைத்துரைஅண்ணன் அருமைசிங்கம் ஆகியோரே ராசாக்கள் பாத்திரமேற்று நடிப்பது வழக்கமாகும். இந்த மூன்று ராசாக்களுக்கும் கட்டியகாரர் நாங்கள் தான் என்பதால் முழு கூத்திலுமேயே கட்டியகா
ரர் காட்சியளிப்பார்கள். இது கட்டிகாரராக நடிக்கும் எங்களுக்கு சொல் லொனா மகிழ்ச்சியாக இருக்கும். இருந்த போதும் அமரர் யோகராசா 
அவர்கள் நடிக்கும் காட்சி யில் தான் ராசாவின் ஆக்ரோசங்கள் நிறை
ந்த காட்சிகள் அதிகம் இருக்கும். பழகுகின்ற காலத்திலேயே சிறிய கதிரையில் இருந்து செங்கோலுக்கு பதிலாக ஒரு தடியை வைத்துக் கொண்டு பாடும் போது நாங்கள் அவரையே மெய்மறந்து பாத்துக்
கொண்டு நின்று அரசர் கட்டளையிடுகின்ற போது அப்படியே செய்கி
றோம் ராசனே என்ற பதில் வசனம் சொல்லாமல் நானும் நண்பர் செல்வாவும் என் தந்தையாரிடம் பேச்சு வேண்டிருக்கிறோம். அமரர் அவர்களின் அந்த ஆளுமை என்னை வியக்கவைத்திருக்கிறது. ராசா
வுக்கு கோபம் ஏற்பட்டு பாடும் காட்சியில் எல்லாம் நாங்கள் இருவ
ரும் நிஜமாகவே பயந்துள்ளோம்.  அப்படி அந்த கதாபாத்திமாகவே 
மாறும் திறன் படைத்தவர். அதையும் விட மிகவும் அமைதியானவர் சிறியோர் முதல் பெரியோர் வரை மதிப்பளிக்கும பண்பு தெரிந்த   
மனிதர். எந்த காரணத்துக்காகவும் அடுத்தவரின் விடையங்களில் 
தலை யீடு செய்தமையினை நான் கண்டதே இல்லை. இந்தக் கூத்து படிக்கும் போது எனக்கும் நண்பர் செல்வா அவர்களுக்கும் வயது 
இருக்கும். நண்பர் செல்வா என்னோடு 1981ம் ஆண்டிலிருந்து 1985ம் 
வரை சவுதியில் இருந்த காலத்தில் இவைகளை பகிர்ந்து கொண்
டது இப்போதும் ஞாபகம் இருக்கின்றது. தற்போது நண்பர் செல்வா நோர்வே நாட்டில் வசிக்கின்றார். அவருக்கும் மீண்டும் பழைய நினைவுகளை இந்த கட்டுரை ஏற்படுத்தும் என்று நம்புகின்றேன்.
                            அமரர் யோகராசா அவர்களுடனான என்னுடைய அடுத்த அனுபவம்மீண்டும் என் தந்தையார் நெறியாள் கையில் மேடை ஏறிய அலசு என்ற நாட்டுக்கூத்தில் ஏற்பட்டது. இதி
லும் கட்டியகாரானவே நான் நடித்தேன். அதில் நண்பர் செல்வாவுக்கு பதிலாகபெரிய ரெத்தினசிங்கம் அண்ணன் என்னோடு கட்டியகார
னாக நடித்தார். இதிலும் அமரர் யோகராசா அவர்கள் ராசா பாத்திர 
மேற்று நடித்திருந்தார். வழமைபோல் என் தந்தையாரிடம் பாடல்க
ளின் இராகம் அறிந்து பழகுவதற்காக எங்கள் வீட்டுக்கு வருவார். 
தவறு செய்கின்ற போது என் தந்தையார் அவரை பேசுவார்அதற்கு 
அவர் ஒரு சின்ன குழந்தை போல் கேட்டுக் கொண்டு இருப்பது 
கண்டு நான் வியந் துள்ளேன். அவரின் அந்த ஈடுபாடு எனக்கு ஆச்சரியத்தை தந்தது. இந்த அலசு நாட்டுக் கூத்தில் அலசாக அமரர் வெலிச்சோர் பாக்கியம் அவர்கள் நடித்திருந்தார். என்ன அற்புதமான 
பாட கர் அவரின் பாத்திரம் மிகவும் சோகம் நிறைந்ததாக இருக்கும் அவரின் பாடலை கேட்டு அழாதார் உண்டோஇன்னுமொரு முக்கிய கதாபாத்தி ரமான பெபியான் பாத்திரத்தில் தன் மச்சானின் மகன் திரு. செபஸ்தி பெலிக்கான் அவர்களை நாட்டுக்கூத்துக் கலைக்கு அறிமுகம் செய்து வைத்தார். இன்று திரு. பெலிக்கான் அவர்கள் 
சிறந்த நாட்டக்கூத்து அண்ணாவியாராக திகழந்து என தந்தையாரு
க்கு பெருமையை சேர்த்து ள்ளார் என்பதனையும் நினைவு கூர்வது அவசியமாகும். அண்ணாவியர் திரு. பெலிக்கான் அவர்களும் மிகச்
சிறந்த பாடகர் மட்டுமல்ல அற்புதமான நடிகர். தன் நடிப்பால் மக்கள் மனங்களை வென்றவர். இந்த நாட்டுக்கூத்தி லும் எனக்கும் அமரர் அண்ணன் ரெத்தினசிங்கத்துக்கும் நிறையவே அனுபவங்கள் ஏற்ப ட்டது.  நான் கனடாவிலிருந்து 1999ம் ஆண்டு என் அம்மாவை 
பார்க்க போனபோது அமரர் ரெத்தினசிங்கம் அண்ணன் என்னோடு 
பேசும் போது இந்த கூத்தைப்பற்றியும் கதைத்தது இப்பேது என் உள்ளத்தில் பதிந்திருக்கிறது. இந்த நேரத்தில் அமரர் அண்ணன் ரெத்தனசிங்கத்துடனான என் நட்பினை சொல்வதும் சிறப்பாக இரு
க்கும் என்று  எண்ணி இதனை பகிர்ந்து கொள்ளுகின்றேன். உண்மை
யில் நல்ல ஒரு பண்பாளன்,  என் மேல் மிகவும் மரியாதை மிக்கவர். அவரின் சிறிய தகப்பனாரின் மகன் பிரான்சிஸ் (சின்ன ரெத்தினசிங்கம்) தற்போது லண்ட னில் வசிக்கிறார். நாங்கள் மூன்று பேரும் சந்தித்து கதைப்பது உண்டு. அப் போதெல்லாம் மிகவும் அன்புடனும்மரியா தையுடனும் என்னை பெயர் சொல்லியே அழைக்கமாட்டார். உரிமை
யோடு தம்பி என்று தான் அழைப்பார். அப்படி மிகவும் அன்பானவர். அவரின் இழப்பு உண்மையிலேயே சொல்லொன துயரத்தினை ஏற்படுத்தியது. இருந்தும் உங்கள் நினைவுகளை என்னிடமிருந்து 
பிரிக்க முடியாது சகோதராநீ வாழ்ந்த போது உன்னை நேசித்த
வன் நான்நீ இல்லாபோதும் உன்னை நேசித்து வாழும் சந்தர்பத்
தினை தந்த மைக்கு உனக்கு நன்றி கூறுகின்றேன்.
                                அடுத்ததாக அண்ணன் அமரர் அருமைத்துரை அவர்களைப் பற்றி சொல்லவேண்டும்நான் அவரின் பாடல்களில் 
(குரலின் இனிமையில்) மயங்கியவன். அவரும் ராசா பாத்திரத்தில் 
தான் நடித்தாலும் அவரின் அந்த பாத்திரம் அமரர் யோகராசாவின் பாத்திரம்போன்று வீராப்பு கொண்டதாக இருக்காது. அந்த பாத்திரம் 
மிகவும் அமைதியா னதாகவும் இழப் புக்களனின் துயரம் நிறைந்த பாத்திரமாக பார்வையாளர்களை கண் கலங்க செய்து விடுவார். 
என்ன அற்புதமான கலைஞர். பாத்திரமாகவே மாறி விடுவார். அண்
ணன் போன்று நான் பள்ளிக்கூட நாடகங்களில் நடி க்க முயற்சி செய்தமை இப்பேதும் ஞாபகம் இருக்கின்றது. என் தந்தையார் மீது 
அளவு கடந்த மதிப்பு உள்ளவர். எனக்கு தெரிந்த மட்டில் அண்ணன் அருமைத்துரை அவர்களைப் போல். உண்மையாகவே என்னால் 
எழுத முடியாமல் என் உணர்வுகள் அண்ணன் அருமைத்துரை அவர்
களின் நினைவுகளில் கொண்டு செல்கின்றது. என்னவென்றால் எமது மரின் னையின் இறுதிப் பாடல் அடைக்கலமே.. அடைக்கலமே 
அந்தப்பாடல் அண்ண னின் இடத்தை நிரப்ப இன்னமும் ஒருவரும் பிறக்கவில்லை. அந்த அமைதி அண்ணனின் குரல்ஐயோ இப்போது 
கூட என்னுள் எழு கின்ற அந்த உணர்வினை எப்படி எழுதுவேன். 
அந்தளவு ஊணர்ச்சி பிரவா கத்தில் மூழ்கியிருக்கின்றேன். எமது கோவிலின் முன் அமைந்த மைதானம் முழுதும் அன்னையின் பக்தர்
கள் அமைதியின் உறைவிடமாக அந்த சிம் மக் குரலோனின் பூபாளம் ஒலிபெரிக்கி வழியாக பக்தர்கள் மனங்களில் ஊடுருவிஅனைவர் 
விழிகளிளும் கண்ணீர் துளிகள்எல்லோர் விழிகளும் மூடிய நிலையே அங்குகண்டேன்,.. அந்தப்பாடலின் வழியாகவே மரியன்னை எல்லாப் பக்தர்களையும் ஆசீர்வதிக்கின்ற உணர்வினை காணலாம். அவரிடம் கேட்க இருந்த கேள்வியை ஒரு முறை கேட்டேவிட்டேன். 
                           ஒரு நாள் அண்ணன் என் தந்தையாரை சந்தி
க்க வந்தபோதுஅண்ணன் உங்களிடம் ஒரு கேள்வி கேக்கட்டுமா என்றேன். என் தகப்பனார் என்னை முறைத்துப் பார்த்தார். அதற்கு அருமைத்துரை அண்ணன் என்ன ராசா கேளுங்க. அப்படி அழகான 
பண்பு நிறைந்தவர்கள். அப்போது நான் கேட்டேன் அணணன் எப்படி அடைக்கலமே அடைக்கலமே பாடலில் எல்லா மக்களையும் கட்டி
ப்போடுகின்றிர்கள் என்று. யாரும் நம் புவீங்களோ தெரியாது ஆனால் நம்பத்தான் வேண்டும்ராசா நீயும் நம்பறியோ தெரியாது அந்த தாய். பரலோக மாதா என்னுள் இருந்து பாடுவது தான் நிஜமென்றார். 
நான் தானே முற்போக்காளன் உடனே சிரித்து விட் டேன். அதற்கு 
என் தகப்பனார் தம்பி இவங்கள் இப்படி தான் என்று என்னைக் கடி
ந்தார். அது அவரின் நம்பிக்கை என்பதனை உணர்ந்த நான் சிரித் 
தற்காக மன்னிப்பு கேட்டேன். என்ன கலைஞர்கள். என்ன மனிதர்கள். அண்ணன் உங்கள் நினைவுகள் எம்முள் தொடரும்.
                                 அந்த கால கூத்தில் பெண் வேடம் என்றாலே அமரர் தம்பித்துரை அமரர் இராசகிளிஅமரர் கபிரியோல் ஆகியோர் தான். எமது பாரம்பரிய கலையான நாட்டுக்கூத்தில்,இவர்
களின் பங்களிப்பு மிக வும் முக்கியமானது. ஒவ்வொருவரையும் என்
றும் எம் நினைவுகளில் வைத்திருப்போம்.  அதே போன்று மக்களை மகிழ்விக்கும் பாத்திரங்களில் அமரர்களான லுக்கேஸ். நுள்ளியப்பு 
என்று எல்லோராலும் அன்பாக அழை க்கப்படும் அருளப்புமற்றும் அமலசிங்கம் ஆகியோரும்மந்திரி பாத்திர மென்றா லே அமரர் நீக்கிலாப்பிள்ளையும்அலசு நாட்டக்கூத்தில் முதல் அலசாக அமரர் ஞானமுத்தது அவர்கள் நடித்திருந்தார். மேற் கூறிய அனைவருமே மிகச்சிறந்த கூத்து கலைஞர்களா வார்கள். கப்பல் காரனாகவும்
அதிக கூத்துக்களில் சேனாதிபதியாகவும் திரு. பிலிப் அவர்களும்,  அவர்களுடன் அருமைசிங்கம் அண்ணனும் மிகச்சிறந்த பாடகர் 
அவார். அமரர் செயஸ்தியாம்பிள்ளை அவர்களும் நல்ல நாட்டுக்
கூத்து கலைஞர் தான். அதுபோல் அமரர். அறுக்காஞ்சி அவர்களும் மிகச்சிறந்த நடிப்பாற் றல் மிக்கவர். அலசு நாடகத்திற்கு பின்பு அண்ணாவியர் பெலிக்கான் அவர்களின் நெறியாள்கை யில் இத்தனை கலைஞர்களும் பாடிய போதும் முக் கிய காதா பாத்திரத்தில் அமரர் மைக்கல்ராஜா அவர்களை நாட்டுக்கூத்து கலைஞராக அண்ணாவியர் 
திரு.பெலிக்கான் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார். அமரர் மைக்
கல்ராஜா அவர்களின் பங்களிப்பும் மிகவும் அளப்பரியது. இவர்களை தொடர்ந்து நாட்டுக் கூத்து பாடுவதில் மிகவம் ஆர்வம் கொண்டவராக திரு. நீக்கிலாப்பிள்ளை கிறிஸ்தோப்பர் விளங்கினார். எங்களுக்கு முந்
திய காலங்களில் கட்டியகாரராக நாட்டுக்கூத்து பாடியவர்கள் திரு. மனுவல் யேசுதாசன்அமரர் திரு. தேவசகாயம் ஞானசேகரம். மக்க
ளால் இவர் தான் உண்மையான போப் ஆண்டவர் என்று எண்ணுமள
விற்கு அந்த உருவ அமைப்பும்அழகும் இப்போதும் கண் முன்னால் காட்சி தருகின்றார் அமரர் சந்தியோ அவர்கள். எமது நாட்டுக்கூத்து 
க்கு மிருதங்க கலைஞர் அமரர் மரியாம்பிள்ளை அவர்களையும்அதன்
பின் திரு. சேவியர் அவர்களையும்தாளம் என்றாலே எல்லோருக்கும் பரிச்சிய மானவர் அமரர் மரியநாயகம் அவர்களே இப்படி முழு திறமை சாலிகளை கொண்ட ஒரு கலைச் சமூகம் நமது சமூகம்.
                              அமரர் யோகராசா அவர்களுடனான 
எனது மூன்றாவது இணைவு. நாவாந்துறை மனியாள் ஆலய பங்கு மக்களின் ஏகோபித்த ஆதரவோடு. நீ. பாலச்சந்திரனின் எழுத்துநெறி யாள்கையில் வராலறு படைத்த 'பறபாஸ்'என்ற யேசு காவியமாகும் மாதங்களுக்கு மேலாக தினமும் ஒத்திகைபார்த்து மேடையேற்றப்
பட்ட காவியம். இதில் பாரபாஸாக அமரர் மைக்கல்ராஜா அவர்கள் நடித்திருந்தார் என்பது குறிப் பிடத்தக்கது. ஏராளமான கலைஞர்கள் அத்தனை பேரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது மறக்க முடியாது. இப்படியான யேசு காவியத்தை யாழ்பாணத்திலும்ஏனைய இடங்களிலும் மேடையேற்றுவது திருமறைக் கலா மன்றமாகும். 
அதில் பல ஊர் களை சேர்ந்த கலைஞர்களும் பங்கு கொள்ளுவார்
கள். ஆனால் எமது ஊரால் மேடையேற்றப்பட்ட பரபாஸ் யேசு காவியத்தில் அமரர் யோகராசா அவர்கள் யூத தலைவர் பாத்திர 
மேற்று நடித்தார். அந்த பாத்திரம் அவரின் உடல் கட்டமைப்புக்கு 
கட்சி தமாக அமைந்தது. இந்த நாடகத்தில் நானும் அமரர் யோகராசா
வின் குழுவில் ஒருவராக பரிசேயர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தி ருந்தேன். இந்த குழுவில் முக்கிய பாத்திரங்களாக கைப்பாஸ். அன்னாஸ்யூத தலைவன்பரிசேயர் 1பரிசேயர் சதுசேயர் ஆகிய கதாபாத்திரங்கள்;.இதில் கைப்பாஸ் பாத்திரத் தில் அமரர் டானிசியஸ் அவர்களும்அன் னாஸ் பாத்திரத்தில் அமரர் மரியாம்பிள்ளை   அவர் களும்யூத தலைவர் பாத்திரத்தில் அமரர் யோகராசா அவர்களும்பரி சேயர் ஆசீர்தாசன் அவர்களும்பரிசேயர் திரு. அமலதாஸ் அவர்க
ளும் சதுசேயராக திரு. இந்திரன் அவர்களும் நடித்திருந்தனர். இந்த நாடக்தின் ஊடே அமரர் யோகராசா அவர்களோடு நெருங்கிப்பழகும் வாய்ப்பு கிடைத்தது. இந்த யேசு காவியம் என் வாழ்நாளில் மறக்க முடியாதது. இதில் நடித்த ஒவ்வொரு கலைஞர்களும் மிகவம் சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்தி யிருந்தனர். இன்றும் மக்களால் பேசப்
படும் நிகழ்வாகவும் எம் ஊரின் பெரு மையை பறைசாற் றுவதாகவும் அமைந்தது. பரபாஸாக நடித்த அமரர் மைக்கல்ராஜாபிலாத்துவாக 
நடித்த அமரர் திருச் செல்வம் இராயப் பாராக நடித்த திரு.சந்திரன். ஏரோதியாளாக நடித்த திருமதி திலகமணி,யேசுவாக நடித்த திரு. மகேந்திரன் திரு. அரிய ரூபன்,திரு. அமிர்தநாதர்மற்றும் சலோமை
யாக நடித்த திருமதி சார்மதி. புனித மரியாளாக நடித்த திருமதி சோப
னம் (மைனா) குறிப்பாக யுதாஸாக நடித்த அமரர் மரியநாயகம் கிறி
ஸ்தோப்பர் (ராசா)இன்னும் குருடனாக நடித்த திரு. அருணாவாகட்டும் இப்படி ஒவ்வொருவரின்  நடிப்பும் மறக்க முடிது. அதிசயம் ஆனால் உண்மை,  அமரர் யோகராசா அவர்களால் வாசிக்க முடியா தென்பது. ஆனால் நாட்டுக்கூத்தில் எத்தனை பாடல்கள்யேசு காவியத்தில் எத்
தனை வசனங்கள் இத்தனையையும் எப்படி பாடமாக்கினார் என்ற 
கேள்வி உங்கள் மனதில் எழுகின்றது எனக்கு புரிகின்றது.  இதே 
கேள்வி எனக்கு ள்ளும் எழுந்தது. அதை விசாரித்து தெரிந்த போது இப்படியும் அதிசயமான மனிதர்கள் இருக்கி றார்கள் என்பதை உணர்
ந்து கொண்டேன் யாதெனில் யாராவது வாசித்து காட்டினால் அமரர் யோகராசா அவர்களின் முளையில் அப்படியே பதிந்து விடும் என்ற 
அந்த அதிசயம் தான். இந்த  யேசு காவியத் தினை உருவாக்கிய நண்
பர் திரு.நீ.பாலச்சந்திரன் அவர்களுக்கும் இதனை மாபெரும் வெற்றி 
யாக்கிய எம் ஊர் மக்கள்கலைஞர்கள்குறிப்பாக முழு ஒத்துழை 
ப்பு வழங்கிய வண பிதா நேசநாயகம் அடிகளாருக்கும் இவ்வேளை
யில் நன்றி பகிர்வது என் கடமையாகும். இப்படி எத்தனை எத்தனை கலைஞர்கள் வாழ்ந் திருக்கிறார்கள்இன்றும் வாழ்ந்து கொண்டிருக்
கிறார்கள்இவர்களை எல்லாம் நம் இதயங்களில் வைத்திருப்பது  
நம் கடமையாகும் ஏன்னால் முடிந்தளவில் எல்லா பங்காளர்களை
யும் உள்வாங்கியிருக்கி ன்றேன் என்று நம்புகின்றேன். அப்படி யாரா
வது விடுபட்டிருந்தால்  எந்த தீய நோக்கமும் அல்ல என்பதனை 
தெரிவிக்க விரும்புகின்றேன். தவறு இருப்பினும் மன்னித்துக் கொள்ளுங்கள்.



Ingen kommentarer:

Legg inn en kommentar