lørdag 10. januar 2015

இன்று பூக்களின் விடுமுறை Aj Danie


அழகு மொட்டுக்களே!
அச்சம் தவிர்அழகாய்
விரிந்திடுங்கள்
பூக்காரன் வரான்
இன்று விடுமுறை 
விழித்திடுங்கள்
வண்டுகளே ஓய்வெடுங்கள்
இன்று மட்டும் விட்டுவிடுங்கள்
பூக்களை மட்டும்....!

வண்டுகளே பூக்களின் புகழை
நான் பாடுகின்றேன்
தென்றலே பூவின் வாசனையை
நான் பிரச்சாரம் செய்கின்றேன்
நீங்கள் செல்லுங்கள்
அப்பாலே...

பூக்களே..!
உங்கள் மௌன மொழியைக்கற்றுத்தாருங்கள் உங்கள் புகழ்பரப்பி
கவி கட்டுகின்றேன்
என் சிறு விண்ணப்பம்
இன்றோடு எனைக்
குட்டிக் கவிஞனாக்குங்கள் 
இன்பத்தில் கலந்துவிடுவேன்...

வண்ண மலர்களே!
சஞ்சலம் வேண்டாம்
இனி தவிப்புகளில்லை
வாசம் வீசுங்கள் பூமியெங்கும்
இன்று மட்டும் மனிதன் மரிக்கவில்லை
கோவில் வாசல்கள் திறக்கவிலை
அர்ச்சனைப்பூக்கள் வேண்டாம்
யாரும் புஸ்பவதியாகவில்லை
இன்றுஒட்டுக்கலப்புத்திருமணமில்லை
உச்சாகம் பெறுங்கள்
உங்கள் ஆயுட்காலம்
கொஞ்சம் நீளட்டும்...

பூக்களே இன்று நான் உங்கள் விருந்தாளி எனை மகிழ்வூட்டுங்களே
இன்ப உபசரிப்பில் நெகிழ்ந்துபோகிறேன் மலர்களே
வருகின்றேன் உங்களைத்தேடி.....

அந்த மெல்லிய மடல்களில் 
படுத்துருண்டு 
இன்பமடைகின்றேன்
கம்பளம் போன்ற 
மேற்பரப்பில் துள்ளி விளையாடி
பூவின் மகரந்தத்தண்டி வழியே
தேன் குளத்துள் மூழ்கி 
தேன் குடிக்கின்றேன்
மகிழ்ச்சியினெல்லை
இன்னும் அறியவில்லை
இயற்கையன்னையின் மிகஉன்னத பிரசவிப்பு இந்தப்பூக்கள் மட்டுமே..!

பூக்களைமதிக்கின்ற 
தேசங்கள் வேண்டும்
உலகம் பூக்களால் 
நறுமணம் வீசட்டும்
மனிதா பூக்களை நேசி
வன்முறை வேண்டாம்
துப்பாக்கி பிடிக்கின்ற கைகள்
இனி பூச்செண்டு பிடிக்கட்டும்
நான் பெற்ற இன்பம்
இவ்வுலகம் பெறட்டும்..!

-Aj டானியல்-
06-Nov-2014

Ingen kommentarer:

Legg inn en kommentar