lørdag 10. januar 2015

நிலைப்பாடு கவிதை ஆக்கம் Aj Daniel


கார்த்திகை மாசம் 
கோயில் கொடியேற்றம்
அண்ணன் கனடாவில இருந்து
அக்காளுக்கு அட்டியலும்
வளையல்க்காப்பும் 2 சோடி

மாமிக்கு முறுக்குச்சங்கிலி
மச்சினிச்சிக்கு வட்டிக்காசு 
வாங்க  சிவத்த ஸ்கூட்டி பப்பு
பக்கத்து வீட்டு 
சரசு கூட வாங்கிற்றாளாம் 

பெரிய மச்சினி புள்ளத்தாச்சியாம்
7 மாசமம் சீசறியன் டாக்டர்மார் 
 சொல்லிற்றினம் ஒரு ரெண்டு லச்சம் காசு
வீட்டுக்கு பெயின்ரு நீலமும் வெள்ளயும் 

ஐயாவட செத்த நாளும் வருகுது 
சுவாமிக்குச்சொல்லணும்
பூச வச்சு வணிசு கொடுக்கணும்
மாமாவுக்கு கண் ஓப்பிரேசன் நவலோகாவில

சுண்டுக்குளியில கடசி மச்சினி
அப்பிடியே அவளுக்கு கொம்பீயூட்டர் கோசு
கலியாண வயசில மச்சான் 
வேல தேட ஜமகா எவ் சி

வைல் சாறி வெள்ளக்கலரில
 ரெண்டு அம்மாவுக்கும்
வரும்போது ரெண்டு சில்வர் தட்டு
நேஸ்டோமார்ல் சிஸ்ரர் சொன்னவே

அம்மா கைதடி முதியோர் இல்லத்தில்
ஆங்காங்கே மரங்களின் நிழல்களில்
பெருமை பேசுறா பெத்த தாய்
என்ர மோன் வாறான் 
இண்டைக்கு கனடாவில இருந்து.....

(அண்ணனையும் முதியோர் இல்லம் வரவேற்கிறது)

-AJ Danial-

Ingen kommentarer:

Legg inn en kommentar